காற்றாலை மின்சாரம் எதிர்பார்த்ததை விடவும் குறைவாக கிடைத்தது
காற்றாலை மின்சாரம் 1500 மெகாவாட் பற்றாக்குறையை சீர் செய்ய வெளித் தொகுப்பில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது
மின்விநியோகம் சீராக நடைபெற தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது
- @CTR_Nirmalkumar
புதுச்சேரி
தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு
தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு ❤️
அக்டோபர் 6 தேதி நடைபெற உள்ள தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு
_ தவெக
மயிலாப்பூர் போதைப்பொருள் தடுப்புப் பணிக்குழு (ANTF) நடத்திய நடவடிக்கையில்,
மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்ட போதை மாத்திரைகளை கடத்தி வந்து வைத்திருந்த திருநங்கை
ஒருவர் கைது.
25,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- மயிலாப்பூர் போதை பொருள் தடுப்பு பிரிவு
அண்ணா!
இந்த மூன்றெழுத்து தமிழ் நிலத்தில் புது சரித்திரம் படைத்தது. மாநிலக் கட்சிகள் ஆட்சியமைத்து ஜனநாயகத்தைப் பரவலாக்க முடியும் என்று இந்திய அரசியலுக்கு புதிய அத்தியாயத்தை எழுதியது. கூட்டாட்சி தத்துவமே இந்திய நாட்டின் அடையாளம் என்று அரசியலமைப்பு சிறப்பை முழுமைப்படுத்தியது. சாமானியர்களும் ஆட்சியாளர்கள் ஆகலாம் என்ற மக்களாட்சி புரட்சியை நிலைநாட்டியது.
சமத்துவத்தை முன்னிறுத்திய தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தேர்தல் அரசியலில் வென்றெடுத்தார்; சமூகநீதியை அரசின் திட்டங்களில் அமல்படுத்தினார்; 'மாநில சுயாட்சி' என்ற வலிமையான அரசியலின் மூலம் 'தமிழ்நாடு' தனித்துவத்தோடு தலைநிமிர வழிகாட்டினார்.
'மக்களிடம் செல்', 'உன்னால் முடியும் தம்பி', 'அரசியல் ஆர்வம் குன்றிடும் நாளே ஜனநாயக முறை அழிந்திடும் நாள்' ஆகிய அண்ணாவின் பிரசாரங்களே என்னைத் தேர்தல் அரசியல் சிந்தனை நோக்கிப் பயணிக்க வைத்தன. அரசியல் அறிவியல் மாணவனான எனது ஆசிரியர்களில் மூத்தவரான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவே எப்பொழுதும் எனது வழிகாட்டி.
'அண்ணாவின் கொள்கை வழியில் அர்ப்பணிப்புடன் பயணிப்போம். அண்ணாவின் மாபெரும் கனவுகளை மீட்டுருவாக்குவோம்' என்று அவரது பிறந்தநாளான இன்று உறுதியேற்போம்.
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்த வழக்கு
அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்தது உயர் நீதிமன்றம் 🔥🔥🔥
ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதில்அளிக்க உயர் நீதிமன்ற உத்தரவு
போதை பொருள் வழக்கில் கைதான ஜான் பிரிட்டோ ஆதவ் அர்ஜினாவின் உறவினர் என
முன்னாள் முதலமைச்சரே
தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டு இருந்தார் அந்த பதிவை நீங்கள் கூறியும் ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டும் வழக்கு
தொடுத்திருந்தார்
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா 🔥🔥
விநாயகர் சிலையை அவமதித்த தவெகவினரைக் கைது செய்க!
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களின் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தை, தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் இவ்வாறு உருமாற்றுவது மக்களின் ஆன்மிக உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயலாகும்.
புனிதமான விழாவை அரசியல் சுயலாப மேடையாக்கி, இறை வழிபாட்டைத் தேர்தல் பிரச்சாரமாகத் தரம் தாழ்த்தும் தவெகவினரை முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் மௌனம் காத்ததே இத்தகைய எல்லை மீறிய செயல்கள் தொடர்வதற்குக் காரணமாகும்.
எனவே, மக்களின் மத உணர்வுகளையும் வழிபாட்டு மரபுகளையும் சீர்குலைக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள இத்தகைய சிலைகளை @TVKPartyHQ அரசு உடனடியாக அகற்ற வேண்டும். இறை உருவங்களைத் தங்களின் சுய விளம்பரங்களுக்குப் பயன்படுத்திய தவெக நிர்வாகிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் பேராதரவோடு ஆட்சிப்பொறுப்பேற்று, தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
“கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு”, "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" போன்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்!
#CMJosephVijay