I watched the whole inspection video of மாண்புமிகு அமைச்சர் Keerthana
there is more in that video.
the students were reading the passage from the book. Minister stopped it and said these students are just doing மனப்படாம் and didn’t know the meaning of it.
went ahead and asked the kids “what is the meaning of TENDERNESS”
students answered it.
went on and asked “our love is everlasting-னா என்னது?”
the girl from the 1st bench stood up and answered the question.
minister just nod the head and went on to ask “everlasting மட்டும்”
the girl brilliantly answered for this one too.
minister just nod her head and looking at the last benches. some other girl from the last bench answered as well.
NOT EVEN A SINGLE APPRECIATION GIVEN by the minister. No claps. No encouraging words.
shifting goal post maathiri went ahead and asked about spoken English and what is your dad question.
sigh!
what is their actual intention? they answered her question but got a name that they didn’t even understand a simple question.
Just look at the eyes of that child. ஒரு சிறிய பாராட்டு would have boosted the moral of those kids and the image of the minister.
the kid would’ve remembered the whole incident as “got claps from minister” memory. but reality 💔🥺
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
நேற்று திருச்சியில் முதல்வர் விஜய் அவர்கள் செய்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், திமுக வெறுப்பு, திமுக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை, அதாவது, ஆயிரம் முறை அரைத்த மாவை விடுத்துப்பார்த்தால், அவருடைய பேச்சு சில இடங்களில் ஏற்புடையதாக இல்லை.
இவ்விமர்சனத்தை அவர் பார்வைக்கு யாரேனும் கொண்டுபோனால், மாற்றுக்கருத்து உள்ளவர்கள் காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார்கள், அவர்கள் பேசப்பேச நமக்கு நல்லதுதான் என்பது போன்ற கற்பனையில் அவர் திளைக்கக்கூடும். விமர்சனம் அனைத்துமே, காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில்தான் வருகிறது, constructive criticism அல்லது தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கான ஆக்கப்பூர்வமான விமர்சனமாகக்கூட இருக்கலாமென்று எப்பொழுது ஏற்றுக்கொள்வார் என்பது தெரியவில்லை.
அவரது பேச்சின் சில பகுதிகள் ஏன் அருவருக்கத்தக்க வகையில் இருந்தன என்று எனது பார்வை:
1. “கவர்ச்சியால் மக்கள் எனக்கு ஓட்டு போட்டார்களாம். கவர்ச்சினா நான் என்ன….” என்று அந்த முடிக்காமல் விட்ட வாக்கியம். கவர்ச்சி அல்லது glamour என்ற சொல், திரைக்கவர்ச்சி, ஈர்ப்பு, ஒருவகையான ஆதர்ஸ மனநிலையை(யும்) (adoration) குறிப்பது ஆகும். இந்த contextஇல் ஒரு நடிகக்கவர்ச்சியால் மக்கள் ஒரு நடிகர் அல்லது நடிகைக்கு மனதிலோ சமூகத்திலோ ஒரு இடத்தை, அங்கீகாரத்தைக்கொடுப்பதை குறிப்பதாகும். இந்த அடிப்படைப்புரிதல் கூட இல்லாத முதல்வரின் மேடைப்பேச்சுக்களை எழுதுபவர் எப்படி இப்படி ஒரு வக்கிரமான, அதாவது கவர்ச்சி என்ற சொல்லுக்கு உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சியென்று அர்த்தப்படுத்தி, அதற்கு விளக்கவுரைக்கொடுக்கும் வகையில் “அப்போ கவர்ச்சினா நான் என்ன…” என்று சொல்லச்சொல்லி எழுதிக்கொடுத்தார்கள் என்பது புரியவில்லை.
அப்படியே அவர்கள் பொருள்படுத்தி எழுதிக்கொடுத்தாலும், முதல்வர், தான் ஒரு நடிகராக இத்தனை ஆண்டுகள் இருந்த நிலையில், இப்படி அர்த்தப்படுத்துவது, ஆண் உடலையோ பெண் உடலையோ objectify செய்யும் விதமாக இருக்கிறது என்று உணர்ந்து, அவ்வாறான பேச்சை தவிர்த்திருக்க வேண்டாமா?
என்னுடைய இரண்டாவது பிரச்சனை.
2. வாயில் நல்லா வருது, எதாவது சொல்லிடப்போறேன், என்று சொல்கிறார்.
ஐயா, இதெல்லாம் நீர் வீற்றிருக்கும் பதவியின் மாண்பைக்குறைக்கும் வார்த்தைப்பிரயோகம் ஐயா. எழுத்தாளர்களே, தயவுசெய்து இப்படியெல்லாம் எழுதிக்கொடுக்காதீர்.
மக்களைப்பார்க்கும்போதெல்லாம் கடுங்கோபத்திலேயே பேசும் முதல்வருக்கு, மக்களிடையே அவர் தன் மனதில் (ஏனோ) சுமந்திருக்கும் வெறுப்பு மற்றும் பிரிவினைவாதத்தை விதைக்கும்போது அவ்வெறுப்பின் ஒவ்வொரு துகளுக்கும் கூக்குரலிட்டு ஆர்ப்பரிக்கும் மனித ஓசைக்கு மத்தியில், என்போன்றோரின் அமைதிவாத (pacifist) குரல் கேட்குமோ இல்லையோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஆனால், அவருக்கும் சேர்த்து நாம் பிரார்த்திப்போம்.
திரும்பவும் சொல்கிறேன். இங்கு யாரும் தூயவரோ தீயவரோ கிடையாது. அப்படி மக்களை black and white ஆக, without grey shadesஓடு பிரிப்பது, பார்ப்பது, over simplification, reductionist approach.
மத்தியில் பாஜக இதைத்தான், ஹிந்துக்கள் vs ஹிந்துக்கள் அல்லாதோர், ஹிந்துக்கள் கஷ்டத்தில், ஆபத்தில் இருக்கின்றனர் (hindu khatre mein hai) போன்ற பிரிவினைவாத மனநிலையை மக்களிடையே பரப்ப ஆரம்பித்து, இன்று வரை அந்த பொய்யை உண்மை என்று வெகுஜன மக்களை நம்பவைத்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆட்சியைத்தக்க வைத்தலுக்காக எடுத்த ஆயுதம் இன்று உபியிலும் பிஹாரிலும் மதக்கலவரத்தைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் சகோதரத்துவத்திற்கும் இந்தியக்குடி என்ற ஒற்றுமை மனோபாவத்திற்குமே பங்கம் விளைவித்திருக்கிறது.
இன்று மக்களாகிய நாம், தீய சக்திகளாகவும், தூய சக்திகளாகவும், இண்டெலெக்சுவலாகவும் தற்குறிகளாகவும், வாரிசுகளாகவும், தன்னந்தனி ஆளு ஆகவும், மற்றும் பலராகவும் பிரிந்து நிற்கிறோம். முகம் தெரியாத நபர்களால் இது நடக்கவில்லை. நமக்கு நம் வீட்டில் அண்ணன் போல், தம்பி போல், அப்பா போல், மாமா போல், பெரியப்பா போல் வலம் வந்த பிம்பம் நம்மை உள்ளிருந்து உடைத்திருக்கிறது.
இல்லை முதல்வர் அவர்களே, தமிழ்நாட்டின் ஒரே பிரதிநிதி நீங்கள் மட்டும் கிடையாது. உங்களை விமர்சித்தல் உங்களை மட்டும் விமர்சிப்பதாகும். தமிழ்நாட்டு மக்களை விமர்சிப்பதாகாது. மோடி என்றால் இந்தியா, இந்தியா தான் மோடி என்ற பொய்யையெல்லாம் இந்தியர்கள் இனம் கண்டு பல காலம் ஆகிறது. தமிழ்நாடுனா விஜய், விஜய்தான் தமிழ்நாடு என்பதெல்லாம் ஏற்புடையதல்ல. விஜய் என்பவர் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர். அவ்வளவே. சேவகன் என்ற உச்சாணிக்கொம்பை மக்களாகிய நாங்கள் தரவேண்டும். தங்கள் பணி சிறக்கும்பொழுது நாங்களே தருவோம்.
அதுவரை, தங்கள் பணிசிறக்க, blackஉம் அல்லாத whiteஉம் அல்லாத பழுப்பு நிற சுமார் சக்தியின் வாழ்த்துக்கள். @CMOTamilnadu