@EPSTamilNadu அவர்களுக்கு, கடந்த 2-3 வாரங்களாக அதிமுக அல்லாத மாற்றுத் தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் அதிமுகவுக்கு சாதகமாகப் பேசி வருகிறார்கள்.
💻 **ஆன்லைன் மெம்பர்ஷிப்:** அவர்கள் விரும்பினால் கட்சியில் இணைய எளிதான ஆன்லைன் மெம்பர்ஷிப் வசதியை ஏற்படுத்துங்கள். இது கழகத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்தும்.
🎯 **தகுதிக்கேற்ற பணி:** இணையும் இளைஞர்களின் படிப்புக்கு ஏற்ப கட்சிப் பணிகளை வழங்கினால் சிறப்பாகச் செயல்படுவார்கள். ஒவ்வொரு ஓட்டும், ஒவ்வொரு ஆதரவும் முக்கியம் என்பதால் இந்த நல்வாய்ப்பைத் தவறவிட வேண்டாம்! ⚡️
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா?
இந்த லட்சணத்தில், நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப் படுகிறார்.
இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும்.
காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு! இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார்.
மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம்.. கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழகப் பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா?
“ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா?
ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை!
தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்கள்? ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்?
இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்?
தான் வசிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும் Responsibility எடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
"படிக்கட்டில் பயணிக்காதீர்" என்ற எச்சரிக்கை அனைத்து அரசுப் பேருந்துகளிலும் எழுதப்பட்டுள்ளது. சாமானியர்களுக்கு இருக்கும் இந்த விதி, CM மற்றும் பிரபலங்களின் வாகனங்களுக்குப் பொருந்தாதா?
வாகனத்திற்கு வெளியே தொங்கிப் பயணிப்பது சட்டப்படி தவறு. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நீதி, சாமானியர்களுக்கு ஒரு நீதி என்றால் அது "சட்டத்தின் ஆட்சி" ஆகாது.
தவறு யார் செய்தாலும் சட்டம் பாய வேண்டும். இந்த விழிப்புணர்வும் மாற்றமும் அடுத்த தலைமுறையிலாவது சாத்தியமாகுமா? ⚖️🛑 #SafetyFirst #RuleOfLaw #Equality #TNTrafficRules
" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “
- அம்மா
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை...
இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..
நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!
நாளை நமதே!
தமிழ்நாடும் நமதே!
#என்றென்றும்_அதிமுககாரன்
நாங்கள் மட்டும் 'தூய சக்தி', மற்றவர்கள் எல்லாம் 'ஊழல்/தீய சக்தி' என்று சொல்லி வாக்கு கேட்டார்கள். ஆனால் தனிப்பெரும்பான்மை இல்லாததால், ஆட்சியைத் தக்கவைக்க அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலில் வெல்லலாம் என குதிரைப் பேரத்தில் இறங்குகிறார்கள்.
சோதனையான சூழலிலும் உண்மையாக இருப்பவன்தான் 'அரிச்சந்திரன்' போன்ற உண்மையான தூய சக்தி! ஆனால் இவர்கள் அதிகாரப் பேராசையால் தாங்களும் 'தீய சக்தி' என்பதை நிரூபித்துவிட்டார்கள். மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தர்மம் வெல்லும்!
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
ஒரே ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், இருமுறை விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்து, தமிழக உழவர்களின் வாழ்வாதாரத்தை அரணாக இருந்து காத்த வரலாற்றுச் சாதனை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு மட்டுமே உரியது!
“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை!
எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் செயல்.
ஆனால் இன்றைய அரசு செய்துள்ளது என்ன?
தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.
2021-ல் நாம் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததையும், இவர்கள் இப்போது 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதையும் பார்த்தாலே விவசாயிகளுக்கு புரிந்துவிடும், இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று!
மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்- விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை!
சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன்! அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்தச் செய்யுங்கள் @CMOTamilNadu!
@AIADMKOfficial
@PttvNewsX "தீய சக்தி" என அடுத்தவரை விரல் நீட்டுபவர்கள், தாங்களும் அதே தவறு செய்யும் போது மீதி 3 விரல்கள் தங்களைச் சுட்டுவதை மறக்கிறார்கள். தவறு யாருடையதும் தவறே. மக்கள் உணர்ந்தால் ஏமாற்று விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி.
எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைகளை மட்டும் சபாநாயகர் இன்னும் பரிசீலனையில் வைத்திருக்க, இந்த 3 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை TVK கட்சிக்குச் சாதகமாக முடியும் என்பதால் உடனே ஏற்றுக்கொண்டுள்ளார்.
நடுநிலையாக இருக்க வேண்டிய சபாநாயகர் பதவி, ஆளும் கட்சியின் அரசியல் கணக்குகளுக்கு ஏற்பப் பக்கச்சார்பாக மாறுவது அப்பட்டமாகத் தெரிகிறது.
@News18TamilNadu காதல் 2 மனங்களின் தொடர்பு. ஒருதலை காதலோ, விருப்பமில்லா பெண்ணை கட்டாயப்படுத்துவதோ காதல் அல்ல. "இல்லை" என்பதை புரியாதவர்களே வன்முறை & தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில் பெண் மறுப்பை ஏற்காத ஈகோ காரணமான தாக்குதல்கள் சமூகத்தின் பெரிய சாபக்கேடு.
திட்டமிட்ட ராஜினாமா:
அதிமுகவின் 3 உறுப்பினர்கள் சபாநாயகரின் விதிகளுக்கு உட்பட்டு, தங்கள் கைப்படவே கடிதம் எழுதி நேரில் கொடுத்துள்ளனர். சபாநாயகரும் அதை உடனடியாக அங்கீகரித்துள்ளார். இந்த வேகம், இது ஆளும் கட்சியின் பின்னணியோடு முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட நகர்வு என்பதைத் தெளிவாக்குகிறது.
அரசியல் முரண்:
3 உறுப்பினர்களின் ராஜினாமாவை மின்னல் வேகத்தில் ஏற்ற சபாநாயகர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அளித்த கொரடா விவகாரம் குறித்த கடிதத்தை இன்னும் பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார்.
“ஆபத்தில் துணை நிற்பவனே உண்மையான நண்பன்”
கட்சிக்கு நெருக்கடி நேரத்தில் மாண்பையும் ஒற்றுமையையும் காப்பாற்ற, குறைகளை பொது வெளியில் பேசாமல் “நான்கு சுவருக்குள்” பேசித் தீர்வு காண்பதே உண்மையான விசுவாசம்!
கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் வாக்குகளால் 53 இடங்களைப் பெற்றாலும், ஊடகங்களின் எதிர்மறைப் பிரச்சாரங்கள் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறாததாலும் இளைஞர்கள் மற்றும் நடுநிலையாளர்களின் வாக்குகளை நாம் தவறவிட்டுள்ளோம்.
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஈர்க்கப்பட்டு மாற்றுப் பாதைக்குச் சென்றதே வாக்குகள் பிரிவதற்குக் காரணம்; இது நாம் பாடம் கற்க வேண்டிய இடம்.
இனி ஊடகங்களின் சதிவலைக்கு இடம் தராமல், "அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நன்மை?" என்பதை இளைஞர்கள் மற்றும் நடுநிலையாளர்களிடம் டிஜிட்டல் தளங்கள் மூலம் கொண்டு சேர்த்து கட்சியைப் பலப்படுத்துவோம்! 📈🔥
இன்று DMK, TVK போன்ற கட்சிகள் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் ரீச் பெறும் போது, ADMK பதிவுகள் அதற்கு இணையாகச் செல்வதில் சவால்கள் உள்ளன. இதை மாற்றுவது காலத்தின் அவசியம்.
சமூக ஊடகங்களில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் ஈடுபாட்டை அதிகரித்து, டிஜிட்டல் தளத்தில் நாம் முன்னிலை பெற்றாலே நம்முடைய பாதி வெற்றி உறுதியாகிவிடும்! மக்களைச் சென்றடைய இதே பாதையில் களம் காண்போம்! 📈🔥
#Admk
#EPS
@EPSTamilNadu
நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள்.
எல்லா கட்சிகளிலும் பிரச்சினைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சினை இருப்பின் அதை நாமே பேசித் தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
இதயதெய்வம் அம்மாவின் வழியில்... நாம் மீண்டும் எழுவோம்! 🌿⚡
234 தொகுதிகளிலும் எடப்பாடியார் அண்ணன் சூறாவளிப் பிரச்சாரம் செய்தும், நம் வெற்றி வாய்ப்பு தட்டிப்போனது ஒவ்வொரு தொண்டனுக்கும் ஆறாத வடு.
நாம் கவனிக்க வேண்டிய கசப்பான உண்மைகள்:
1.டிஜிட்டல் அரசியல்: பழைய காலம் மாறிவிட்டது. இன்று 'ஸ்மார்ட்போன்' தான் போர்க்களம். புதிய வரவுகள் சமூக ஊடகங்களை வைத்து இளைஞர்களைக் கவர்ந்துவிட்டனர். நாமும் களப்பணியோடு, டிஜிட்டல் தளத்திலும் விஸ்வரூபம் எடுக்க வேண்டும். 📱🦾
2.வாக்குகள் சிதறல்: இருமுனைப் போட்டியாக இருந்திருந்தால் இரட்டை இலை இன்று கோட்டையில் இருந்திருக்கும். ஆனால் வாக்குகள் மூன்றாகப் பிரிந்ததால், ஆளுங்கட்சிக்கு எதிரான அலை சிதறிவிட்டது. இது யாருடைய குறையும் அல்ல, தற்போதைய அரசியல் சூழல். 🗳️📉
3.ஒற்றுமையே ஒரே வழி: எம்.ஜி.ஆர், அம்மா காட்டிய வழி 'ஒற்றைத் தலைமை' மற்றும் 'ஒற்றுமை'. இன்று நாம் பிரிந்து நிற்பது நம் எதிரிக்கே பலம் சேர்க்கிறது. தனித்தனியாக நின்றால் நாம் பலவீனம், அனைவரும் தாய் கழகத்தில் ஒன்றிணைந்தால் நாம் ஒரு பெரும் சக்தி! 🤝🛡️
4.சட்டமன்ற கண்ணியம்: சட்டமன்றத்தில் நம் தலைவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதைக் காணும்போது, ஒரு தொண்டனாக மனம் வலிக்கிறது. அம்மா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, கட்சியே பெருசு என அனைவரும் கைகோர்க்க வேண்டிய நேரமிது. ⚖️✨
தொண்டர்களின் விருப்பம் ஒன்றுதான்:
அனைத்து அதிமுகவினரும் ஒன்று சேர வேண்டும்! பிளவுபடாத அதிமுக, பழைய கம்பீரத்தோடு மீண்டும் வீதிக்கு வர வேண்டும். காலம் கனிந்து வரும்... சிதறிய வாக்குகள் மீண்டும் இரட்டை இலைக்கே திரும்பும்! 🌿
#ADMK #AIADMK