அரசு வாங்கிய கடன் எல்லாம் எங்கே போனது என்று தெரியாமல் அருமையான நிர்வாகத் திறன் ஆட்சி நடத்திய ஸ்டாலின் சார் தன் ஆட்சியை வேஸ்ட் வேஸ்ட் என்று ஆட்சி போன பிறகு அறிக்கை விட்டுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் வரை தூங்கிவிட்டு அறிவித்ததை மறந்துவிட்டு ஸ்பீட் முதலமைச்சர் போல ஃபேக் நரேட்டிவ் செய்ய முற்படுகிறார்.
ஆட்சி முடியும்போது அவசர அவசரமாக ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின் சார் ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப் வழங்கப்படப் போவதைப்பொறுக்காமல் சொந்தமாக யோசிக்கத் தெரியாத அரசு தன் அரசு என்பதை சுரத்தே இல்லாமல் ஒரு சூப்பர் சொதப்பல் அறிக்கை விட்டிருக்கிறார்.
எங்கே தான் நடத்திய ஊழல் மாடல் உதார் ஆட்சியின் ஊழல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை விட்டு தடுமாறி இருக்கிறார்.
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept