தமிழ்நாட்டு மக்களுக்கு உருப்படியா ஒரு திட்டமும் தரல, ஆனா வாயில மட்டும் நல்லா வந்துருமாம் என்ன வரும்னு மக்கள் கேக்குறாங்க..
கழக இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
வந்தே மாதரம் பாடலுக்கு முதன்மைத்துவம்:
---------------------
தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்!
----------------------
விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை!
-----------------------
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் மற்றும் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்ட ஒன்பது பேருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமுவந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போதை ஒழிப்பு, மகளிர் பாதுகாப்பு, 200 யூனிட் வரை மின் கட்டணம் இல்லை என மூன்று அறிவிப்புகளை இன்று முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இதை வரவேற்கிறோம்.
தமிழ்நாடு அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், 10 இலட்சம் கோடி கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதுகுறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமெனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடன் அளவு ₹10 இலட்சம் கோடி என்று வெறுமனே குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும்; ஏனெனில், கடனை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவுகோலோடு ஒப்பிட்டே மதிப்பிட வேண்டும். கடனை மதிப்பிடுவதற்கான சரியான முறை, அதனை மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியோடு (GSDP) ஒப்பிட்டுப் பார்ப்பதே ஆகும்.
தமிழ்நாட்டின் கடன் அளவு, 15-ஆவது நிதிக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள்ளேயே உள்ளது. கடனின் முழுமையான அளவுகளை மட்டும் சுட்டிக்காட்டி அச்சமூட்டுவது, அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படும்.
இன்றைய நிகழ்வில் 'தமிழ்த்தாய் வாழ்த்து'ப் பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக, அரசு விழாக்களின்போது தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்தினை' ஒலிக்கச் செய்வது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டுவரும் ஒரு மரபாகும். ஆனால். இன்று அம்மரபினை மீறி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவதாகப் பாடியுள்ளனர். அதாவது, வழக்கத்திற்கு மாறாக 'வந்தே மாதரம்' பாடலை முதலாவதாகவும், தேசிய கீதத்தை இரண்டாவதாகவும் இசைத்த பின்னரே, கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடியுள்ளனர். இந்த அணுகுமுறை மிகவும் அதிர்ச்சயளிப்பதாக உள்ளது. இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நிகழ்ந்ததாகக் கருத இயலவில்லை. மாறாக, மாண்புமிகு ஆளுநரின் விருப்பப்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கவோ செய்யப்பட்டதா என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இது குறித்து விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும்.
இனிவரும் காலங்களிலும் அரசு விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்படுமா? அதுவும் முதலில் இடம்பெறுமா? அல்லது அப்பாடல் இனி ஒலிக்கப்படாமல் தவிர்க்கப்படுமா? அடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு வழக்கம்போல முதலிடம் தரப்படுமா? இது தொடர்பாகவும் அரசு விளக்கமளிக்க வேண்டும்.
மதசார்பற்ற அரசமைக்கவே காங்கிரசு, இடதுசாரிகள், முஸ்லீம் லீக் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவைக் கோரியதாக தவெக தரப்பில் சொல்லப்பட்டது. அதனடிப்படையில்தான் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் அக்கட்சிகள் ஆதரவளிக்க முன்வந்தன. ஆனால், மதசார்புடைய கருத்தைக் கொண்டது என்கிற விமர்சனத்துகுள்ளாகும் வந்தே மாதரம் பாடலை பதவி ஏற்புவிழாவில் இசைக்கச் செய்த நிகழ்வு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இது ஆதரவளித்த கட்சிகளுக்கும் எதிரான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. எனவே, இதற்கு உரிய விளக்கமளிக்க வேண்டியது தவிர்க்க இயலாததாக மாறியுள்ளது.
'மாற்றம்' என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி மக்களின் பேராதரவைப் பெற்று முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்கள், அவரது அரசு மதச்சார்பற்ற அரசாகவே இருக்கும் என்ற உறுதிமொழியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
I purchased a 2Ton AC but the product that I got was 1.5Ton. It is very common that people forget to check the serial numbers unless there is any issue. Sadly the return window has expired and Amazon is not ready to help on this. #Amazonscam@amazonIN@amazon@JeffBezos
@flipkartsupport The only resolution your team gave through call was to wait till 4th of July and how to navigate in the Flipkart Home Screen. Sarcasm apart, your team couldn’t even tell me what is the reason behind the status change or any info about the refund!
@flipkartsupport@Flipkart If I call the customer service and ask the reason for moving it to cancel requested. They say all this info can be updated only by backend team and there is no way to contact them.
If they can’t resolve our query then why do you have this team in the first place?
@Flipkart
@realmecareIN There is no reply in email for past 2 days. There is no proper response in call as well. After some time they put us on mute and then disconnect the call. That’s the reality of the service provided by Flipkart.
@flipkartsupport@Flipkart@realmecareIN@realmeIndia
@realmecareIN Yes I know it is exclusive to Flipkart. I have been following them for a week with zero updates from them. It is time for you to realise it’s your brand name that gets destroyed for being partnered with them.
Next stop is handling legally I guess
#realme_techlife_ac
@sathiq_a@Gabbar0099 Did I ever say it is permitted??
I meant we are humans and we don’t know why he did except The Almighty (the all knowing) and the sin he may have committed or not is totally between him and Allah.
@sathiq_a@Gabbar0099 Indeed we belong to Allah and to him we return!
Brother, we cannot comment without knowing his intentions. He may or may not have known it is a sin. We don’t know that other than Allah.
Allah knows best.