உங்களுக்கு எந்த அரசு வேலை 100% செட் ஆகும்? – ஒரு தெளிவான வழிகாட்டுதல்!
அரசு வேலை வாங்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கிறது. ஆனால், எடுத்தவுடனே ஏதோ ஒரு எக்ஸாமுக்கு படிக்க ஆரம்பித்துவிட்டு, பின்னர் அது செட் ஆகாமல் பாதியிலேயே விட்டுவிடுவதுதான் பலரும் செய்யும் தவறு.
நேற்று நம்ம ட்விட்டர் DM-ல் ஒரு நண்பர், அரசு வேலை வாய்ப்புகள் குறித்து ஒரு கேள்வி கேட்டிருந்தார். நான் நினைத்திருந்தால், "சரிங்க, பணத்தை அனுப்புங்க, நான் டீடைல்ஸ் தர்றேன்" என்று உடனே காசு வாங்குவதில் குறியாக இருந்திருக்கலாம். ஆனால், என் கொள்கை அதுவல்ல! நாம் வாங்கும் பணத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும், முறையான சர்வீஸ் செய்ய வேண்டும்.
அதனால்தான் அவரிடம் சில விவரங்களைக் கேட்டேன். இதே குழப்பம் உங்களில் பலருக்கும் இருக்கும் என்பதால் அதை இங்கே பொதுப் பதிவாகப் போடுகிறேன். உங்களுக்கு 100% எந்த அரசு வேலை செட் ஆகும் என்று கணித்து, ஒரு தெளிவான பாதையை
(Perfect Roadmap) உருவாக்க வேண்டுமென்றால், முதலில் இந்த 6 கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்க வேண்டும்:
மதிப்பெண் சதவீதம் (Marks %): 10th, 12th மற்றும் பட்டப்படிப்பில் (Degree) தோராயமாக எத்தனை சதவீத மதிப்பெண் வாங்கியிருக்கிறீர்கள்?
ஆர்வம் (Interest): உங்களுக்குக் கணிதம் (Maths) / கணக்குப்பதிவியல் (Accounts) நன்றாக வருமா? அல்லது பொது அறிவு (GK/Tamil/English) போன்ற தியரி பாடங்கள் படிப்பது எளிதா?
நேரம் (Time Management): ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் உங்களால் படிக்க ஒதுக்க முடியும்?
முயற்சி: இதற்கு முன்னால் ஏதேனும் அரசுத் தேர்வுக்குத் தயாராகிய அனுபவம் உண்டா?
மொழி: எந்த மொழியில் தேர்வு எழுத விரும்புகிறீர்கள்? (தமிழ் அல்லது ஆங்கிலம்).
இலக்கு: கொஞ்சம் கடினமாக இருந்தாலும் 'உயர் அதிகாரி' வேலை வேண்டுமா? அல்லது கொஞ்சம் எளிதாகப் படித்து 'உடனே கிடைக்கக்கூடிய' வேலை வேண்டுமா?
இதே மாதிரிதான் நாளைக்கு நீங்கள் என்னை அணுகினாலும், சும்மா மேலோட்டமாகப் பார்க்காமல், நீங்கள் கொடுக்கும் இந்த விவரங்கள் அனைத்தையும் முழுமையாக அலசி ஆராய்ந்து (Analyze) தான் உங்களுக்கான சரியான பாதையை நான் சொல்வேன்.
நமது வழிகாட்டுதல் (Consulting Package):
உங்களுடைய தகுதிக்கு எந்தத் தேர்வு சரியாக இருக்கும்? அதை எப்படி அப்ளை செய்வது? எங்கு, எப்படிப் படிக்க வேண்டும்? என்ற முழுமையான பிளான் உங்களுக்கு ஒரு பேக்கேஜாகத் தயார் செய்து தரப்படும்.
இதற்கான ஆலோசனைக் கட்டணம்: ₹300 மட்டுமே. இது உங்களுக்காக நான் உட்கார்ந்து, திட்டமிட்டு, உழைத்து உருவாக்கிக் கொடுக்கும் என் உழைப்பிற்கு நீங்கள் கொடுக்கும் ஒரு சிறிய அங்கீகாரம்.
உங்கள் அரசு வேலை கனவை நிஜமாக்க, உங்களுக்கான தெளிவான பிளான் தேவை எனில் உடனே என்னை DM செய்யவும்! 🤝
எல்லா பெற்றோர்களாலும், தங்கள் பிள்ளைகளை சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்க இயலாது.
ஏனென்றால் தற்போது கிராமப்புற பகுதிகளில் கூட ஒரு பொறியியல் டிகிரி வாங்குவதற்கு எல்லா செலவுகளும் சேர்த்து ஏழு முதல் 10 லட்சம் வரை ஆகிறது.
சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் இன்னும் அதிகமாகிறது .
ஆனால் தற்போதைய டிஜிட்டல் உலகில் கல்லூரியை பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை.
ஒரு மாணவனுக்கு தேவை கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிற Attitude மட்டும்தான்.
எந்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாலும் அங்கு தரப்படும் கல்வியை படித்துக் கொண்டே
IIT Madras போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், ஏராளமான கோர்ஸ்களை நடத்துகின்றன. அதற்கு செலவுமே கூட மிக குறைவுதான். அவற்றில் சேர்ந்து படித்து தங்களது அறிவை விரிவாக்கிக் கொண்டே வரலாம். AI, Semiconductor என அனைத்து முன்னணி துறைகளிலும் இந்த Knowledge Transfer நடைபெறுகிறது.
அது தவிர, தனியார் நிறுவனங்கள் நிறைய Hackathon போன்றவற்றை நடத்துகின்றன. அவற்றில் தொடர்ச்சியாக பங்கு கொள்வதன் மூலம் internship அதன் பின்னர் வேலைவாய்ப்பு என கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த கால மாணவர்களுக்கு தேவை ஒரு நல்ல லேப்டாப், இணையத்திற்கான வசதி, வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்கிற ஆர்வம். அவ்வளவுதான்.
அத்தனை கதவுகள் தற்போது திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.