"ஜாதி, மதங்களை ஒழித்துவிட்டோம்" என பெருமை பேசும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களே... உங்கள் வாடகை கால் அரசு இயங்குவதே IUML என்ற மதவாத கட்சியையும், விசிக என்ற ஜாதி கட்சியையும் நம்பித்தானே?
சட்டசபையில் "அப்பாவை காணோம்" என சினிமா கிளைமேக்ஸ் போல் வசனம் பேசுவதை விட்டுவிட்டு, சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கு, தலைவிரித்தாடும் போதைப்பொருள், தொடர் மின்வெட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றில் உடனடியாகக் கவனம் செலுத்துங்கள்.
தமிழகத்திற்குத் தேவை உங்கள் 'நடிப்பு' அல்ல, 'நல்லாட்சி'!
@BJP4TamilNadu
Getting stronger everyday 😊 I thank each and everyone for showering unconditional love towards me. It is your hope that makes me want to give back love, respect and everything positive. I’ll be working tirelessly in cinema industry for everyone who wants me to grow. Grateful for life to have received all of it from my fans, industry friends, press and media and the divine light that is guiding me 🙏🏼 ❤️Swamiye Saranam 🙏🏼
என் உயிரினும் மேலான #காஞ்சனா அம்மா இன்று(18.06.2026) அதிகாலை 1.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார். தாத்தா இறந்து 2 மாதம் கூட நிறைவடையாத நிலையில் என்னை இவ்வுலகில் அனாதையாக்கி விட்டு அம்மாவையும் அழைத்து சென்று விட்டார்.
என்னை பெற்ற தாயின் உயிர் என் மடியிலேயே என் கண் முன்னே “நான் போகிறேன்” என சொன்னபடியே பிரிந்த காட்சி என் உயிர் போகும் வரை கண் முன்னே இருக்குமே.
கடந்த ஒரு வார காலமாக அம்மாவுடனே இருந்த நாட்கள் இனி வாழும் என் வாழ்க்கையை வழி நடத்தும்.
போய் வாருங்கள் காஞ்சனா அம்மா!
தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு சகோதரர் @Actor_Mahendran அவர்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது.
கெடுவாய்ப்பாக, அது நிகழாமல் போய்விட்டது.
குறைந்தது, தவெகவின் செய்தித்தொடர்பாளராக மாறி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று தமிழ் கூறும் நல்லுலகுக்கு தனது அரிய கருத்துக்களை வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்துக்களின் கைகளில் உள்ள கயிறு மட்டும் ஏன் எல்லோரது கண்களையும் உறுத்துகிறது?
கல்விக்கூடங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை அனுமதிக்க மாட்டோம் என்று வீர வசனம் பேசிய கல்வி அமைச்சர் திரு. @imrajmohan அவர்கள், “கையில் எந்தக் கயிறும் கட்டக் கூடாது” என்று இறுதியில் தனது இந்து மத வெறுப்பைக் கக்கியதன் மூலம் தாங்கள் திமுகவின் "B team" என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார். பல நூறு ஆண்டுகளாக இந்துக்கள் பின்பற்றி வரும் மத நம்பிக்கைகளில் மூக்கை நுழைக்க எந்த அரசுக்கும், கட்சிக்கும், அமைப்பிற்கும் உரிமையில்லை என்ற அடிப்படை நாகரிகத்தை கல்வி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும்.
சுத்தமான குடிநீர், போதிய கழிவறைகள், தரமான கட்டிடங்கள் இன்றி முடங்கிக் கிடக்கும் அரசுப் பள்ளிகளை தெப்புத் தேற்றுவது எப்படி என்று ஆராயாமல், இந்து மாணவர்களின் அடையாளங்களை அழிப்பதில் ஆர்வத்துடன் செயல்படுவது தான், தவெகவின் அனைவருக்குமான அரசியலா? “மதச்சார்பின்மை” என்ற போர்வையில் இந்து மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மட்டும் தவெக அரசு பறிக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் தைரியத்தில் இந்துக்களின் மத அடையாளங்களை அழிப்பதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் ஆட்சிக்கு வந்த வேகத்தை விட அதிவேகத்தில், திரு. @TVKVijayHQ அவர்கள் தனது அதிகாரத்தை இழக்க நேரிடும்!
@CMOTamilnadu