Sony is currently charging $70 for God of War Ragnarok digitally. It is $32 at Wal-Mart. The game is 4 years old.
People will no longer have options after 2028 and will HAVE to go directly to Sony’s digital storefront and pay whatever PlayStation says.
i can listen to a 100 other artists but at the end of the day, it’s just me & my raja songs against the rest of the world. the peace that it gives … 🥹🤍
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதல் தமிழக அமைச்சராக அதுவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக
பொறுப்பேற்கும் அன்பு இளவல் பெருமதிப்பிற்குரிய தோழர் மாண்புமிகு வன்னியரசு @VanniTamizhVCK அவர்கட்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
அர்ப்பணிப்பும் ஆளுமையும் கண்ணியமான தோழமைப்பண்பும் நிறைந்தவர். சாதிய எதிர்ப்புக்களத்தில் காயங்களையும் ரணங்களையும் சுமந்தவர். தலைவரின் நம்பிக்கைக்குரிய முன்னணி தளபதி தோழர் வன்னியரசு அவர்கள். அவரும் அவரது இணையரும் கட்சிக்கும் தலைமைக்கும் ஆற்றியப்பணிகள் எந்நாளும் நன்றிக்குரியன. தகுதியானவருக்கு அமைச்சர் பதவியை பரிந்துரைத்த தலைவருக்கு நன்றி.
இந்த தருணத்தில் இந்த துறை சார்நதும் நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்தவும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட நம் தலைவரும் மக்களும் தந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் @mkstalin அவர்கட்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன். தலைவர் திருமாவிடம் கற்று உறுதி செய்துகொண்ட பாடம் எனவும் நம்புகிறேன்.
இந்த சாதனைகளில் நினைவில் இருக்கும் சிலவற்றைமட்டும் பதிவிடுகிறேன்.
யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தத் தலைமுறை தியாகத்தலைமுறையாக இருக்கட்டும் என தலைவர் @thirumaofficial விடுத்த அறை கூவலை ஏற்று எதிர்பார்ப்பு ஏதுமின்றி தம் வாழ்வையே அர்ப்பணித்த எண்ணற்ற தோழர்களுக்கு இது சமர்பணம்.
இந்த சாதனைகளை பலமடங்கு விஞ்சக்கூடிய வகையில் தோழர் வன்னியரசு பணியாற்றி வரலாறு படைப்பார் என உறுதியாக நம்புகிறேன்.
தூய்மையான உள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன்.
மாண்புமிகு புதிய முதல்வருக்கும் தமிழக அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துக்கள்.
கடந்த 2021 - 26 கால கட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்ட எமது முயற்சிகளும் , சாதனைகளும். ….
எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.
அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில்
SC/ST பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதை சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதை போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
SC/ST பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy)
பெரும் வகையில் (அதிகபட்சம் 1.5 கோடி )
ஆண்டுக்கு 200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்.
சர்வதேச பல்கலைக்கழகங்களில் நம் மாணவர்கள் பயில 36 லட்சம் முதல் 24 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆண்டுக்கு 200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும், பழங்குடியினருக்கு தொல் குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன.
மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியல் வகுப்பார் பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு என குறைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் 200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச்சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
புதிய அரசாங்கமே!
இதுவல்ல
இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு...
ஜோதிடம்
தீர்மானிக்குமா
நல்ல நிர்வாகத்தையும்
வளர்ச்சியையும்...
அரசியலை
அறிவியல் பூர்வமாக
அணுகுங்கள்...
அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.
அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல!
இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல.
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
முதல் கையெழுத்தே மோசடி!
“அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்” என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 200 யூனிட் இலவசம் என விஜய் கையெழுத்திட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, 500 யூனிட்டை தாண்டி மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு இதுவரை இருந்த 100 யூனிட் இலவச மின்சார சலுகையும் இனி கிடையாது.
மோசடியிலிருந்து தொடங்குகிறது விஜய் சர்கார்
இவர் பேசியதை வச்சு திமுக மீது சலங்கைக் கட்டி ஆடிய நடுநிலைகள், ஊடகவியலாளர்கள் குறைந்தபட்சம் மனசாட்சி இருந்தாலும் இப்போது மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால், அடுத்த வதந்தியை endorse பண்ண தாவிடுவாங்க.
@kalyanasc According to @nscwrites story in The Hindu today, only one SC candidate (Congress) won from general constituency. TVK has 23 MLAs from seats reserved for SCs and one from a seat reserved for ST.
https://t.co/i0KXGkpMye
Everyone deserves a friend like IUML to DMK in their life😭
Unshaken, loyal and still standing by you when everyone else starts leaving at your lowest point in life. Absolute cuties of coalition politics!