தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா?
அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க?
உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
கழகத் தலைவர் மாண்புமிகு திரு @mkstalin அவர்கள்
#MKStalin #TNGovernment
TN 10 லட்சம் கோடி கடன்ல உள்ளது.
~ அய்யா ,அதைதான் 2026 TN பட்ஜெட்ல பிப்ரவரி 17, 2026 லயே வெளியிட்டாங்களே, அதுக்கு அப்புறம் தானே நீங்க 2500 ரூ திட்டம், தாய்மாமன் திட்டம், அண்ணன் சீர் திட்டம் எல்லாம் அறிவிச்சீங்க
இந்தியாவில் பெரிய மாநிலங்கள் எல்லாமே மிகப்பெரிய கடன்ல தான் ஓடிக்கிட்டு இருக்கு.
உதாரணத்துக்கு மகாராஷ்டிரா ரூபாய் 8 - 9 லட்சம் கோடிக்கு மேல், உத்தர பிரதேசம் ரூபாய் 7–8 லட்சம் கோடிக்கு மேல், தற்போது பி.ஜே.பி பதவியேற்று இருக்கற மேற்கு வங்காளம் - ரூபாய் 7 லட்சம் கோடிக்கு மேல்
அதனால் “கடன் இருக்கிறது” என்பது பிரச்னை இல்ல. அந்த கடன் நீடித்த வளர்ச்சியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துது, பொருளாதாரம் வளருதா, அரசுக்கு வருவாய் உற்பத்தி செய்யறதா இருக்கா, பெற்ற கடன் எதற்காக பயன்படுத்தப்படுகிறது இதுதான் முக்கியம்.
பொருளாதார வல்லுநர்கள் பொதுவா பார்க்குறது மொத்த கடன் தொகை (total debt amount) மட்டும் இல்ல. அந்த மாநில பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது அந்தக் கடன் சமாளிக்கக் கூடியதா இருக்கா? (Is the debt manageable?) என்பதுதான்.
தமிழ்நாட்டின் கடன் - மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதம் (debt-to-GSDP ratio) தற்போது சுமார் 26.35 சதவிகிதம் என சொல்லப்படுகிறது. இது தமிழ்நாட்டின் முந்தைய அரசுகளின் சராசரியை விட உயர்வுதான்.
இப்போது TVK கொடுத்த welfare promisesக்கு வருவோம். தேர்தல் வாக்குறுதிகளால் வருடத்துக்கு மட்டும் சுமார் ரூபாய் 1 லட்சம் கோடி செலவாகும் என கணிக்கப்படுகிறது. திமுக 2025–26ல் நலத்திட்டங்களுக்கு செலவிட்டது சுமார் ரூபாய் 65,000 கோடி.
TVK வாக்குறுதிகளில் சில
- பெண்களுக்கு மாதம் ரூபாய் 2,500
- விவசாயிகளுக்கு வருடம் ரூபாய் 15,000 நிதி ஆதரவு
- வருடத்திற்கு 6 கட்டணமில்லா சமையல் எரிவாயுக்கள்
இதற்கு புதிய வருவாய் ஆதாரம் உருவாக்காமல் போனால், மாநிலத்தின் fiscal deficit , அதாவது ஒரு அரசு சம்பாதிக்கிற பணத்தை விட அதிகமா செலவு பண்ணும்போது வரும் சூழல், இன்னும் அதிகரிக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் ஏற்கெனவே எச்சரிக்கை கொடுத்தாங்க.
வருவாய் ஆதாரம் உருவாக்காமல் இந்த திட்டங்களைச் செயல்படுத்தினால், அதாவது விஜயின் ஆட்சிக்குப் பிறகு இப்போது இவர் சொல்லும் 10 லட்சம் கோடி கடன் இன்னும் இரட்டிப்பாகும் சாத்தியம் உண்டு.
திமுக தலைவர் ஸ்டாலின் ரூபாய் 2500/- என்பது சாத்தியமில்லாதது. ஆனால் ரூபாய் 1000/- என்பதிலேயே நிச்சயம் நீடிக்க முடியும் எனக் குறிப்பிட்டார். இதற்கிடையே கடந்த ஆட்சியில்தான் மொத்தம் 631 தொழில்துறை சார்ந்த ஒப்பந்தங்களில் பல தொழிற்சாலைகளுடன் அப்போதைய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் கையெழுத்திட்டு இருந்தார். அதில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட அதாவது 80 சதவிகித ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு கடந்த ஆட்சியிலேயே வந்துவிட்டது. மீதம் தற்போது விஜய் ஆட்சியில் அமலுக்கு வந்தாக வேண்டும். அதாவது விஜய் ஆட்சிக்கான கடன் சுமையை இது கணிசமாகக் குறைக்க வாய்ப்பிருக்கிறது.
For full post
https://t.co/nJCa2qsg1T
2021இல் ₹5.85 லட்சம் கோடி கடனிலிருந்து 2026இல் ₹9.59 லட்சம் கோடியாக உயர்ந்தாலும் Debt-to-GDP ratio அதே 26%க்குள் இருந்தது என்பதை இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது.
கோவிட், வெள்ளம், ஒன்றிய அரசின் நிதி ஓரவஞ்சனை இத்தனைக்கும் நடுவில் மக்கள்நலத் திட்டங்கள், முதலீடுகள், வருவாய் உயர்வு சகலமும் நடந்தது. கஜானா காலி என்ற பழைய அரசியல் நாடகத்தை முளையிலேயே கிள்ளியதற்கு வாழ்த்துக்கள்.
மாதம் 200 யூனிட் கட்டணமில்லை என்று சொல்லி முதல் கையெழுத்தே மோசடி கையெழுத்து போட்டு இருக்கிறார் விஜய்.
501 யூனிட்க்கு மேல் பயன்படுத்தினால் மின் கட்டணத்தில் எந்த சலுகையில் கிடைக்காது. இது மறைமுக மின் கட்டண உயர்வே ஆகும்
#TVKFails