நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம்.
வரலாற்றில் முதன்முறையாக கிராமசபையில் முதல்வர் பங்கேற்பு. மகிழ்ச்சி. இதை சாத்தியமாக்கியதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் கணிசமாக பங்களிப்பு இருந்திருக்கிறது! சமூக அமைப்புகள் பேசிவந்த விவகாரத்தை அரசியல் தளத்தில் பேசுபொருளாக்கியது மய்யத் தலைவரின் முன்னெடுப்பே!!
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது.
9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே.