இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அறிமுகமான கொடி. அடர்சிவப்பு - மஞ்சள்- அடர்சிவப்பு நிறத்துடன் இரட்டைப் போர் யானைகள், வாகைப்பூ மற்றும் 28 நட்சத்திரங்களுடன் அரசியல் உலகை அதிர வைத்த கொடி.
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் உறுதி எனும் உயிர்க் கயிற்றில் உயர்ந்த கொடி அன்று. உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உற்சாகத்துடன் உயர்ந்து பறக்கும் கொடி இன்று.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நிகழ்த்திக் காட்டி இருக்கும் கொடி மட்டுமன்று இது, தன் படபடக்கும் பட்டொளி வீசிப் பறத்தலால், மக்களை ஆண்டாண்டுக் காலமாக வாட்டி வதைத்த லஞ்ச ஊழல் அழுக்குகளை அடித்து விரட்டிய அசாத்தியக் கொடி. ஒவ்வோர் உயிரின் கனவையும் சாத்தியமாக்கவே பறக்கும் நித்தியக் கொடி. உழைக்கும் வர்க்கத்தினரின் சத்தியக் கொடி.
ஆட்சி அதிகார அரசியலுக்கான கொடியாக மட்டும் அறிமுகமாகாமல் அகிலமெங்கும் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவால் விண்முட்டப் பறக்கும் விஜயக் கொடி. வீரக் கொடி. வெற்றிக் கொடி. தொடர் வீர வரலாற்றுக் கொடி.
சீரிளமையுடன் திறன் வியக்கப் பறக்கட்டும் இக்கொடி. கூர்நுட்பத்துடன் உலகத் தமிழர் ஒவ்வொருவருக்கும் திசைகாட்டியாய்ச் சிறக்கட்டும் இக்கொடி. சிறகடிக்கட்டும் இக்கொடி என நெஞ்சார வாழ்த்துகின்றனர் எதிர்வரும் இளந்தலைமுறையினரும். இதயமார ஆசிர்வதிக்கின்றனர் இன்னும் பல்லாண்டு வாழத்துடிக்கும் எல்லாத் தலைமுறையினரும்.
எல்லோரும் ஒற்றைக் குரலில் உரக்கச் சொல்கின்றனர்.
நம் வெற்றித் தலைவன் கொடி உயரட்டும்.
நம் தவெக கொடி பறக்கட்டும்.
இத் தரணி எங்கும் தமிழர் மானம் தழைக்கட்டும்.
32 லட்ச ரூபாய் சொத்து இருக்குன்னு காட்டிய எம் எல் ஏ ஆட்டோவில் வருவது எப்படின்னு கேக்கத்தெரிந்த மீடியா டாபர்களுக்கு , வெறும் 10000 ரூபாய் ரொக்கம் இருக்குனு காட்டிய ஸ்டாலின் எப்படி மீசை முளைக்காத பேரன் பேர்ல வாங்கப்பட்ட 2.5 கோடி ரூபாய் டிபெண்டர் காரில் வந்தார்னு கேக்கத்தெரியல பார்த்தீங்களா
A complaint has been registered against this account for sharing a 3-year-old video as a new one to defame the current government. Action will be taken soon.
நேஷனல் ஹைவேஸ்ல 100 km-க்கு மேல ஸ்பீட் போகக்கூடாது, ஸ்டேட் ஹைவேஸ்ல 80 km-க்கு மேல ஸ்பீட்ல போகக்கூடாது - இதுதான் சட்டம்.
இந்த சட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் கடுமையாக அமல்படுத்த சொல்லியிருக்கிறார்.
@TVKVijayHQ 🙏🏻
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்.
தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்!
#CMJosephVijay
‘பைபிளின்படி நடந்ததால் தான் தவெக ஆட்சி அமைந்துள்ளது’ என்று கூறியது சரியான அணுகுமுறை இல்லை. @JCDPrabhakar
தவெக ஆட்சி அமைவதற்கான காரணம் என்றால் அது விஜய் அண்ணாவின் உழைப்பு, தொடர்ச்சியான முயற்சி, களப்பணி, மக்கள் ஆதரவு அதோடு திமுக ஆட்சியின் மீதான அதிருப்தி என பல காரணிகள் ஒன்றாக இணைந்ததன் விளைவு.
ஒரு உவமைக்காகக்கூட அரசியல்வாதிகள் மத அடையாளங்களை அரசியல் வெற்றியுடன் இணைத்துப் பேசாமல் இருப்பதே நல்லது.
அரசியல் என்பது அனைவருக்குமானது. மதம் தனிநபரின் நம்பிக்கை. இரண்டையும் கலக்காமல் இருப்பதே அழகு.🙏
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கலாம். மத நம்பிக்கை இருக்கலாம். அது உங்கள் தனிப்பட்ட உரிமை.
ஆனால் அனைத்து மக்களும் பங்கேற்கும் சட்டசபை, பொதுமேடைகள், கட்சி நிகழ்ச்சிகள் போன்ற பொது இடங்களில், மத அடையாளங்களை முன்னிறுத்தி எந்தக் கருத்தையும் பேசாமல் இருப்பதே ஒரு அரசியல்வாதியின் பொறுப்பு.
தவெக அனைத்து மக்களுக்குமான கட்சி; அரசியலமைப்பின் வழியில் நடக்கும் கட்சி.
எனவே, வெளிப்படுத்தும் ஒவ்வொரு கருத்திலும் இந்த நிலைப்பாடு பிரதிபலிக்க வேண்டும் என்று கட்சியின் நலன் கருதி கேட்டுக்கொள்கிறோம். 🙂🙏
@TVKVijayHQ | @CMOTamilnadu
13.08.2026 அன்று, @Michel_Offl என்ற 'X' (முன்னர் ட்விட்டர்) தளத்தின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவானது மதம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை புண்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி புகார் ஒன்று பெறப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து Cr. No 38/2026, U/s. 192, 196(1)(a)(b), 299, 352, 353 BNS ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
On 13.08.2026, a complaint was received regarding a certain post made on X (formerly Twitter) by the handle @Michel_Offl, alleging that the content was derogatory and communally offensive. Based on the complaint, a case has been registered at Cyber Crime Police Station, Thiruvallur, Cr. No 38/2026 and u/s 192,196(1)(a)(b),299, 352,353 BNS 2023 and further investigation is underway.
அந்தியூர் அருள்மிகு குருநாதர் சுவாமி ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு மக்கள் அனைவரும் இறைவன் அருள் பெற்று சிறப்புடன் வாழ, தமிழக வெற்றி கழகத் தலைவர்,மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உயர்திரு. சி.ஜோசப் விஜய் அவர்களின் வாழ்த்துகளுடன், எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்!
புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்!
உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்!
கனவுகள் நனவாகட்டும்!
சாதனைகள் தொடரட்டும்!
#CMJosephVijay
#InternationalYouthDay