தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்களின் பல ஆண்டுகால போராட்டத்திற்கு, இறுதியாக விடிவு கிடைத்துள்ளது👌👌
விஜய் மாமாவுக்கு நன்றி❤️🔥❤️🔥
TVK அரசுக்கு நன்றி🙏❤️
தேர்தல் பிரச்சாரத்தின் போது மட்டும் வீதிகளில் காணமுடியும் அரசியல்வாதிகள் மத்தியில் இப்படியும் சிலர்…
அமைச்சர் @BussyAnand முதல் பல தவெக-வினர் மக்களோடு மக்களாக சாலையோரத்தில் அமர்ந்து பேசுவது, கடைகளுக்கு சென்று குறைகளைக் கேட்பது என களத்தில் இறங்கி பணியாற்றுகிறார்கள்.
அரசியல் என்பது பதவியில் அமர்வது மட்டுமல்ல…
மக்களோடு அமர்வதும் தான்! ❤️
இது நிச்சயம் ஒரு நல்ல மாற்றம்.
இப்படியே தொடரட்டும்! 🙌
#TVK #Vijay
என்னைப் போன்றே சமீப காலத்தில் @TVKVijayHQ கட்சியில் இணைந்தவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நம்மைவிட முன்பே இந்த இயக்கத்திற்காக களத்தில் நின்று, பல ஆண்டுகள் உழைத்து, கட்சியை வளர்த்த மூத்த நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும்.
எனக்கு பல ஆண்டுகளின் அரசியல் அனுபவம் இருந்தாலும், TVK-வில் நான் ஒரு புதியவர்தான். எனவே, நமக்கு முன்பாக உழைத்தவர்களின் அனுபவத்தையும் அர்ப்பணிப்பையும் மதிப்பது நமது கடமை.
மூத்த நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற @BussyAnand அவர்களின் முயற்சியை
நான் வரவேற்கிறேன்.
புதியவர்களின் ஆற்றலும், மூத்தவர்களின் அனுபவமும் இணைந்தால்தான் TVK வலிமையான இயக்கமாக வளரும்.
தனிப்பட்ட முன்னுரிமையை விட இயக்கத்தின் நலன் முக்கியம்.
அனைவரையும் அரவணைத்து, ஒன்றுபட்டு செயல்படுவோம்.
#TVK #GenZTVK_Model
அனைவருக்கும் வணக்கம்!
நிறைய பேர் தங்கள் ஊரில் உள்ள ஏரி, குளம், குட்டை, கண்மாய் போன்ற நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும் என்று என்னைத் தொடர்புகொண்டு வருகிறீர்கள். உங்கள் அக்கறைக்கும், நம்பிக்கைக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும். ❤️
என்னுடைய நிலைமையையும் நான் வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறேன்.
என்னால் முடிந்த இடங்களில், என்னால் செல்ல முடிந்த பகுதிகளுக்கு நேரில் சென்று, தொடர்ந்து என்னுடைய முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் நான் ஒருவர்தான். என்னால் ஒரு குறிப்பிட்ட அளவில்தான் பணிகளை முன்னெடுக்க முடியும்.
ஒரு ஊரில் உள்ள ஏரி அல்லது குளத்தை சீரமைக்க வேண்டும் என்றால், முதலில் அதற்கான அனுமதிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை அந்தந்த ஊர் மக்கள் மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், அந்தப் பணியைச் செய்வதற்கு ஊர் சார்பில் என்னென்ன உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள் தேவை, என்னுடைய சார்பில் என்னென்ன விஷயங்களை செய்ய முடியும் என்பதை தெளிவாகப் பேசிக்கொண்டால், பல விஷயங்களை நம்மால் ஒன்றாகச் செய்ய முடியும்.
நீங்கள் ஒரு சில முயற்சிகளை எடுத்துக்கொள்ளுங்கள்,
என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்.
நாம் இருவரும் சேர்ந்து செய்தால், பல நீர்நிலைகளை மீட்டெடுக்க முடியும். 💧🤝
மழைக்காலத்தில் ஆறுகளில் தண்ணீர் வருவதற்கு முன்பாகவே, முடிந்த அளவுக்கு ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் அனைத்தையும் தயார்படுத்த வேண்டும்.
எனவே, என்னைத் தொடர்புகொள்பவர்கள் ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்:
ஊர் சார்பில் உங்களால் செய்யக்கூடிய முயற்சிகளை முதலில் தொடங்குங்கள்.
அதன்பிறகு என்னால் முடிந்த உதவிகளையும் ஒத்துழைப்பையும் நிச்சயம் செய்ய முயற்சி செய்கிறேன்.
நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால், இன்னும் நிறைய நீர்நிலைகளை மீட்டெடுக்க முடியும்.
நீரின்றி அமையாது உலகு;
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
நன்றி,
நிமல் ராகவன்.
Sir @aperumalmani, லஞ்சம் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக தெரியவில்லை என்பதே தவெகவுக்கு வெற்றிதான்
50 வருட திமுகவால் லஞ்சம் வாங்குனதுக்கு ஆதாரமா ஒரு video,audio 100 நாட்களா தரமுடியவில்லை என்பது மகாவெற்றி
அமைச்சர்,அதிகரிகளை control ஆக வைக்கும் தளபதியின் தலைமை பண்பு 👏 ❤️