அவதூறுகள், ஆபாசப் பதிவுகள், பொய்ச் செய்திகள் பரப்புவோர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
பட்டப்பகலில் நட்டநடு வீதியில் ஓட ஓட விரட்டிப் படுகொலைகள் நடக்கின்றன. அவற்றைத் தடுக்கவும் துப்பில்லை, வக்கில்லை.
தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டினால் மக்கள் நள்ளிரவு முழுவதும் சாலையில் அமர்ந்து போராடினால் கேட்க நாதியில்லை.
ஆனால், இவர்களின் ஊழல்களையும் உண்மை முகங்களையும் வெளிக்கொணர்ந்து பதிவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். விமர்சனத்தை முடக்குவதில் மட்டும்தான் இந்த அரசு proactive-ஆகச் செயல்படும் போல.
இது பாசிசமா, இல்லை பாயாசமா? ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திலேயே இப்படி அடக்குமுறைகளை அவிழ்த்து விடும் இவர்கள் போகப் போக இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறார்களோ?
என்ன CM Sir, உங்களை எதிர்த்தால் இதுதான் கதி என மிரட்டிப் பார்க்கிறீர்களா?
#TVKFails
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து!
பதிவுத் துறையில் இணைய வழியில் ஆவணப் பதிவை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தியிருப்பது போல செய்திகளை வெளியிட்டு, நேரில் வருகை தராமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யலாம் என்ற வீண் விளம்பரத்தை ஊடகங்கள் மூலம் பரப்புகிறது சோபா மாடல் அரசு.
பத்திரப்பதிவுத் துறையை கணினிமயமாக்கி, பொதுமக்களுக்கு எளிமையாக்கும் முறையை 6-2-2000ஆம் நாளன்றே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தின் மூலம் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக பத்திரப்பதிவுப் பணிகள் கணினிமயமான நிலையில், திராவிட மாடல் ஆட்சியில், 2026 ஜனவரி 23 அன்று ஸ்டார் 3.0 என்ற திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் மூலமாக, காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு களப்பணியின்றி அன்றே ஆவணங்களை திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் எளிய முறையில் வில்லங்கச் சான்றிதழ் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை, ஜூன் மாதத்தில் புதிய அரசின் திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கு வெட்கமாக இல்லையா விஜய் அரசே? இந்த அற்பத்தனத்துக்கு End Card-ஏ கிடையாதா joker cards அமைச்சரவையே?
We have received several reports of morphed images of the great Dr.Kalaignar by cheap tvk IDs. Cases are being filed on all of them as promised by our legal wing.
The dmk legal wing will ensure that we leave no stone unturned to make sure that every single person behind these IDs are brought to court and that they are punished in accordance with the law.
Whoever protects or instigates such acts and however high they may be, must realise that the law is above everyone.
@DMKITwing@arivalayam@mkstalin
பெரம்பலூர் மாவட்ட தி.முக. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருமை உடன்பிறப்பு திரு.ரமேஷ் ராஜேந்திரன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு, கழகத் தகவல் தொழில்நுட்ப அணி கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. திரு.ரமேஷ் ராஜேந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு உடல்நலன் குறித்து விசாரித்தபோது, உள்ளத்தில் உறுதிமிக்க தி.மு.க.காரனாக அவர் இருப்பதை உணர முடிந்தது. ஜனநாயகக் களத்தில் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவோர் மீது வன்முறையை ஏவுவது தீர்வாகாது, வெட்ககேடானது. உரியவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறோம்.
மே 15-ம் தேதியே ஒன்றிய அரசின் எரிபொருள் விலை ஏற்றத்தைக் கடுமையாகக் கண்டித்து மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் போட்ட பதிவு இந்த 'பண்ணையாருக்கு' கண்ணில் படலையா? இல்லை நடிகருடன் சேர்ந்து நடிக்கிறாரா?
எல்லாத்துக்கும் "மேலிடத்தைக் கேட்டு சொல்றோம்"னு முடிவெடுக்கத் திராணியில்லாத இந்தச் சுயநல சாம்பிராணிகளுக்கு, மற்றவர்களைப் பார்த்துக் கேள்வி கேட்க எந்தத் தகுதியும் இல்லை!
முதுகுக்குப் பின்னால் குத்தும் புத்தி கொண்ட 'ஒட்டுண்ணி' காங்கிரஸ் கட்சி, புதிதாக ஒட்டிக்கொண்ட கட்சியின் இரத்தத்தை உறிஞ்சும் தங்களின் வழக்கமான வேலையை மட்டும் பார்க்கவும்.
அதைவிட்டுவிட்டு, அடிப்படை உண்மை கூடத் தெரியாமல் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து இப்படி வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம்!
கழகத்தின் OG சம்பவக்காரர்கள் களமிறங்கி விட்டார்கள். அவதூறுச் செய்தி பரப்பும் social media mafia அல்லு சில்லு எல்லாம் ஓரமா போங்க. 🔥
இது எச்சரிக்கை! ⚠️
#DMK
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது,
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.
ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.
ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.
இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.
இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?
A Criminal Complaint has been submitted to the DGP @tnpoliceoffl and the Commissioner of Police Greater Chennai against these two offenders involved in various criminal and unlawful activities, including forgery and creating fabricated photos and content. The complaint requests urgent criminal action, identification of conspiracy networks, custodial interrogation, preservation of digital evidence, and the immediate removal of all unlawful content. Additionally, separate civil actions for damages in their personal capacity against each individual are also contemplated.
@mkstalin@Udhaystalin@DMKITwing@arivalayam
Several of you have been tagging the @dmkitwing and posting clips of the TVK IDs which have as usual been putting out completely false and baseless allegations against the DMK and its leadership in a desperate attempt to cover up the present governments massive failures. All such posts have been forwarded to the DMK Legal Wing and Arivalayam. We are confident that the Legal Wing @arivalayam will take necessary steps now to curb this fake news menace in the society. Please note that we have always taken all such malicious fake news to the knowledge of HQ and the Legal Wing Advocates. Please forward all such clips to @DMKLegalWing 🙏🏾
Breaking 🚨
People are protesting…..💯💔
but the cheap media is not even addressing this issue. Instead, they are busy talking about meaningless things like the CM removing his coat😑
Please spread this video. The CM must answer🙏🏼
#TVK | #TVKVijay | #TVKVijayFails
நேர்லயும் சோஷியல் மீடியாக்கள்லயும் உடன்பிறப்புகளான நீங்க வெளிப்படுத்துற உணர்வுகளைக் கவனிக்குறேன். தேர்தல் முடிவுகளைக் கடந்து, தலைவர் கலைஞர் ஊட்டிய உணர்வோட பயணிக்குற நமக்கு, புத்தெழுச்சி ஊட்டக் கூடிய நாளா, தலைவர் கலைஞரின் பிறந்தநாள் வருது!
ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கி, தலைவர் கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடுற அதேவேளையில், சோஷியல் மீடியாவுலயும் தலைவர் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளைப் பரப்புவோம்! இளைய தலைமுறைக்கு நம்மோட வரலாற்றையும் – தேவையையும் எடுத்துச் சொல்வோம்!
தமிழ்நாட்டின் எதிர்காலம் சிறக்கணும்னா அதுக்கு தி.மு.க.தான் தேவை என்பதை இளைஞர்களுக்குச் சொல்ல தலைவர் கலைஞரின் பிறந்தநாளில் உறுதியேற்று உழைக்கத் தொடங்குவோம்!
#LetterToBrethren #Kalaignar103 #KalaignarForever