நேற்று ஆய்வு – இன்று நடவடிக்கை! 👇
சைதாப்பேட்டை எம்.சி. ராஜா மாணவர் விடுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து, மாணவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
✅ தரமான உணவு வழங்க புதிய உணவுப் பட்டியல்
✅ நிறுத்தப்பட்டிருந்த இட்லி, சப்பாத்தி மீண்டும் வழங்க உத்தரவு
✅ வாலிபால் மைதானம் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
✅ இரவு 12 மணி வரை விடுதிக்குள் நுழைய அனுமதி
✅ உணவுத் தரத்தை உறுதி செய்ய கண்காணிப்புக் குழு அமைப்பு
மாணவர்களின் குரலுக்கு மதிப்பளித்து, கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு!🙏 @CMOTamilnadu
எம்.சி ராஜா விடுதியில் நேற்று முதல்வர் ஆய்வு - இன்று அதிரடி நடவடிக்கை
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலை மாற்ற உத்தரவு
பகுதி நேர பணிக்கு சென்று மாணவர்கள் இரவு 12 மணி வரை விடுதிக்கு வர அனுமதி
உணவு குறித்து ஆய்வு செய்ய இரண்டு பேர் நியமனம்
@CMOTamilnadu@VanniArasu_VCK
Indian Cricket Player & Gujarat titans Opening Batsmen “SAI SUDHARSHAN” Met Honourable @CMOTamilnadu At his residence with his mother & conveyed his wishes 🤍🔥
பக்ரீத் திருநாளுக்கு முதல் நாள், மாடுகளை பலியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நமது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீடு வழக்கு நேற்று (13.07.26) நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விலங்குகளை பலியிடவும் அப்பணியை ஒழுங்குபடுத்துவதற்கும், மேலும் விலங்குகளை பாதுகாப்பதற்கும் மாநில அரசால் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் தடை உள்ளதாக தமிழ்நாடு அரசு வாதாடியது.
இவ்வாதத்தை ஏற்று, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதே அமர்வின் கீழ், நாடு முழுவதும் பசுவதை தடை சட்டத்தை கொண்டுவரக்கோரி நேற்று (13.07.26) வந்த வழக்கை விசாரிக்க மறுத்து, சட்டத்துக்கு உட்பட்டு வேறு வழிகளில் இதற்கு தீர்வு காணுமாறும் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மத நம்பிக்கைக்குள்ளாகும் இம்மாதிரியான செயல்பாடுகளில் மதவெறியூட்டப்படும் தீர்ப்புகளை திருத்தி எழுத வைத்து, மதச்சார்பின்மையை காக்கும் அரசாக மாண்புமிகு முதல்வர் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு செயல்படுவது பாராட்டுக்குரியது.
- வன்னி அரசு
சமூகநீதித் துறை அமைச்சர்
தமிழ்நாடு
@CMOTamilnadu