கோட்டையில் முதல்வர் விஜய்யின் தினசரி வேலை இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள்
பொதுவாகவே அரசியல் தலைவர்களின் வருகை என்பது நேரத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்பது ஒரு எழுதப்படாத விதி. ஆனால், முதல்வர் விஜய் அதனை உடைத்தெறிந்துள்ளார். காலை 10 மணி அடித்தால் போதும், முதல்வரின் கார் தலைமைச் செயலகத்தின் வாசலில் வந்து நிற்கிறது. சரியாக 10 மணிக்குத் தனது இருக்கையில் அமர்ந்துவிடும் அவர், மாலை 5 மணி வரை இடைவிடாது மக்கள் பணிகளில் மூழ்கிவிடுகிறார்.
இதில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த விஷயம் என்னவென்றால், அவரது மதிய உணவு இடைவேளைதான். பல மணி நேரம் மதிய உணவிற்காகச் செலவிடும் வழக்கமான நடைமுறையை மாற்றி, வெறும் 30 நிமிடங்களில் தனது மதிய உணவை முடித்துக் கொள்கிறார். அதுவும் வெளியில் எங்கும் செல்லாமல், அலுவலகத்திலேயே எளிமையாகச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் கோப்புகளைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறார்.
முதல்வரின் இந்த அதிரடி மாற்றத்தைக் கண்டு அமைச்சர்களே வாயடைத்துப் போயுள்ளனர்.
ஆனால், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் சி.இ.ஓ போல, இவ்வளவு துல்லியமாக நேரத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு முதல்வரை இப்போதுதான் பார்க்கிறோம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் உழைப்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு முன்பு எந்த முதல்வராவது இப்படி செயல்பட்டு இருக்கிறார்களா?" என அவர்கள் வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முதல்வரின் இந்த 'ஷார்ப்' டைமிங், அரசு அதிகாரிகளையும் சுறுசுறுப்பாக்கியுள்ளது. முதல்வர் இவ்வளவு சீக்கிரம் அலுவலகம் வரும்போது, நாமும் நேரத்திற்கு வர வேண்டும் என்ற கட்டாயம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தலைமைச் செயலகமே ஒரு புதிய உத்வேகத்துடன் இயங்கத் தொடங்கியுள்ளது.
"நேரம் என்பது மக்களுக்குச் சொந்தமானது, அதை வீணடிக்கக் கூடாது" என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இந்த 'புதிய கலாச்சாரம்' தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. !
#தாய்கிழவி - Count 2 ❣️❣️ Enjoyed the last 1 hour & the emotion, more this time.
@Dir_SivakumarM:
யாருய்யா நீயி.. 🙏 13 புள்ளைகளை பெத்து, காடு மேடுன்னு திரிஞ்சு 85 வயசு வரை வாழ்ந்த என் பாட்டியையும்..
9ஆம் கிளாஸ் மட்டுமே படிச்சிருந்தாலும், தனியாளா கஷ்டப்பட்டு பசங்க 3 பேரையும் இன்ஜினீயரிங் MBAன்னு படிக்க வெச்சு கரை சேர்த்த என் அம்மாவையும் கண்ணு முன்னால நிறுத்திட்டய்யா ❤️
#ThaaiKizhavi
அடிவயிறு நொந்துவிடும் என்று
அந்த மூன்று நாட்களும்
தொட்டியில் தண்ணீர் நிறைத்து வைக்கும் அப்பாக்கள்!!!
கிணற்றடியில் குளிக்கும் போது
யாராவது எட்டிப்பார்த்தால்
இரண்டு ஓலை கிடுகு வைத்து வேலியை உயர்த்தும் அண்ணன்மார்!!!
அயர்ந்து தூங்கும் போது சற்று ஆடை விலகியிருந்தால் போர்வையை போர்த்திவிட்டு செல்லும் தம்பிகள்!!!
பள்ளிக்கு நேரம் சென்றால்
தம்பி பிள்ளையை ஒருக்கா அதில் இறக்கிவிடு என நம்பி ஏற்றிவிடும் அம்மாக்கள்!!!
பிள்ளை பெற்ற காலங்களில் மனைவியை வெந்நீர் வைத்து குளிப்பாட்டி பத்தியம் அரைத்து பார்த்த ஆருயிர் கணவன்மார்!!!
நன்மை தீமை நேரங்களில் மாமா மச்சான் உறவினர்கள் என்று எல்லோரும் ஓர் குறுகிய இடத்தில்
கால்மாடு தலைமாடு என உறங்கிய காலம்!!!
எங்களை கூடிச்செல்ல முடியாத இடங்களுக்கு போகும் போது, பக்கத்து வீட்டில் நான்கு ஆண்பிள்ளைகள் இருந்தாலும் நம்பி ஒப்படைத்து விட்டு செல்லும் அம்மா!!!
பிரத்தியேக வகுப்புக்கள் முடிந்து வரும்போது இருட்டாகிவிட்டால் வீடுவரை சேர்ந்து வந்து விட்டுபோகும் ஆண் நட்புகள்!!!
ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அடித்துப்பிடித்து விளையாடுவதும் உறவுகளைக் கண்டால் அவர்கள் தோள் மீதும் மடிமீதிருந்தும் செல்லம் கொஞ்சுவதுமாய்...
எந்த வக்கிரமும் இலாத உலகில் வாழ்ந்த கடைசி தலைமுறை
(80's, 90's Kids) தான்..
வோல்வோ கார் நிறுவனம் தான் இன்றைக்கு நாம் நம் கார்களில் பயன்படுத்தும் Three Points Seat Belt System என்பதைக் கண்டறிந்தவர்கள்.ஆனால் அதற்கு அவர்கள் காப்புரிமையைப் பெறவில்லை.
ஏன் என்று கேட்டதற்கு,"நாங்கள் காப்புரிமை பெற்றால் வேறு எந்த கார் நிறுவனமும் இப்படியான சிஸ்டமில் சீட் பெல்ட்களை டிசைன் செய்ய முடியாது.எங்கள் டிசைனை பயன்படுத்த எங்களுக்குப் பணம் தர வேண்டும்.பணத்தை விட மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்.அதனால் தான் காப்புரிமையை நாங்கள் பதிவு செய்யவில்லை..." என்று பதில் தந்தார்கள்.
இதைப் போன்றே இன்னும் சொல்லப் போனால் இதை விட அற்புதமான ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடித்து அதற்கு காப்புரிமையைப் பெறாமல்,பணத்தை விட மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என்று மிக பெருந்தன்மையாக நடந்து கொண்ட ஒரு நிறுவனம் இருக்கிறது.
அதுவும் அந்த நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம்.
ஆச்சர்யமாக இருக்கிறதா?
இன்றைக்கு எளிதாக சமையல் செய்வதற்கு பெரிதும் பயன்படும் பொருள் பிரஷர் குக்கர்.உலகில் இது இல்லாத சமையல் அறைகளே இல்லை எனலாம்.பிரஷர் குக்கர் இயங்குவது அதன் உள்ளே உருவாக்கப்படும் அழுத்தத்தால் தான்.அப்படிபட்ட அந்த பிரஷர் குக்கர் அது தயாரிக்கப்பட்ட புதிதில் அதிக அழுத்தம் காரணமாக பல இடங்களில் வெடித்துச் சிதறியது.இதனால் அச்சம் காரணமாக மக்களிடையே குக்கர் பயன்பாடுகள் குறையத் தொடங்கின.குக்கரை பயன்படுத்தவே மக்கள் பயந்தார்கள்.இதை எப்படி சரி செய்வது என்று இந்தியாவின் பல குக்கர் நிறுவனங்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தன.
பாதுகாப்பான குக்கர் என்பதை இலக்காக வைத்து மேற்படி ஆராய்ச்சியில்,தமிழ்நாட்டைச் சேர்ந்த குக்கர்கள் மற்றும் சமையல் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான டிடிகே நிறுவனமும் களத்தில் இறங்கியது.
அது அந்த நிறுவனம் வணிக ரீதியில் தள்ளாட்டத்தில் இருந்த காலகட்டம்.அதை சமாளிக்க சென்னை ஐஐடியில் இன்ஜினியரிங் படித்து விட்டு,பேராசிரியராகும் கனவில் அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பு படித்துக் கொண்டிருந்த "அவரை" அவரது தந்தையும்,டிடிகே நிறுவனத்தின் அப்போதைய தலைவருமான நரசிம்மன் அழைத்து வந்து பிசினஸில் இறக்கி விட்டார்.
"அவர்" தொழிலில் நுழைந்த அந்த காலத்தில் அவர்களது டிடிகே நிறுவனம் கடுமையான நெருக்கடியில் இருந்தது.அதோடு இந்த குக்கர் பிரச்சனையும் சேர்ந்து கொண்டது.
குக்கர் பிரச்சனையை தீர்த்தால் மட்டுமே இந்த மார்க்கெட்டில் நிற்க முடியும்.அது தான் தன் நிறுவனத்தையும் காப்பாற்றும் என்பதை அவர் மிக நன்றாகப் புரிந்து கொண்டார்.தன் பொறியியல் அறிவையும்,ஆராய்ச்சி அனுபவத்தையும் ஒன்றாக சேர்த்து வைத்து அதற்கு ஒரு தீர்வையும் கண்டுபிடித்தார்.
அது தான் கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம் (Gasket Release System).
அவர் கண்டுபிடித்த அந்த கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டத்திற்கு அவர் காப்புரிமையை பெறவில்லை.
ஏன் என்று அவரிடம் கேட்டதற்கு,
"நான் கண்டுபிடித்த இந்த பாதுகாப்பை காப்புரிமை செய்தால் எங்கள் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் லாபம் வரும்.ஆனால் அதை வேறு யாரும் பயன்படுத்த முடியாது.எனவே வேறு எந்த நிறுவனத்தின் குக்கர் வெடித்தாலும்,அதனால் ஒட்டுமொத்த குக்கர் என்ற கருவிக்கும் கெட்ட பெயர் உண்டாகும்.அதனால் தான் செய்யவில்லை..." என்ற பதிலைத் தந்தார்.
வீட்டில் இருக்கும் குக்கர் மூடியை எடுத்துப் பாருங்கள்.அதில் ஒரு சிறு துளை இருக்கும்.அதுதான் கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம்.குக்கர் மூடியில் "அவர்" போட்ட அந்த சிறிய ஓட்டை தான் குக்கரை பாதுகாப்பாக மாற்றியதுடன்,டிடிகே நிறுவனத்தையும் காப்பாற்றித் தந்தது...
அந்த "அவர்" தான் டி.டி.கே.ஜெகந்நாதன்...
இன்றைக்கும் கோடிக்கணக்கான வீடுகளில் பாதுகாப்பான குக்கர் சமையல் என்பதற்கு வித்திட்ட அந்த மாபெரும் மனிதரான டி.டி.கே.ஜெகந்நாதன் தன் 84 வது வயதில் பெங்களூருவில் இன்று காலை காலமானார்.
அவருக்கு குக்கர் பயன்படுத்தும் கோடிக்கணக்கான வீடுகளுள் ஒருவர் என்ற கடமையில்,
குக்கரை பாதுகாப்பான ஒன்றாக மாற்றித் தந்த நன்றியில்,
என் நெஞ்சார்ந்த அஞ்சலிகள்......
அவ்ளோ பரபரப்புலயும் கடைசில தண்ணி கொடுக்கிற வரைக்கும் வீடியோ எடுத்து இன்ஸ்டா கன்டென்ட்டாவே எடுத்து வச்சிருக்காப்டி மனுஷன் !! 🙄
பைக் ஓட்டுறதுல இருந்து உயிர் தப்பிச்சு வெளியே வர வரைக்கும் ரீல்ஸ் மோகம் 😕
https://t.co/E82Zg3PnkX
மைக்கேல் ஜாக்ஸன். இசையுலகின் முடிசூடா மன்னன். 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று கனவு கண்டார்.
அதற்காக...
அவரது தலைமுடி முதல் விரல் நகங்கள் வரை தினமும் பரிசோதிக்க 12 மருத்துவர்களை வீட்டில் நியமித்திருந்தார்.
ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும் ஆய்வகத்தில் அந்த உணவு சோதிக்கப்படும்.
படுக்கையறையில் ஆக்ஸிஜனை ஒழுங்குபடுத்தும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அவருக்காக உடல் உறுப்புகளை தானம் செய்ய நன்கொடையாளர்கள் தயாராக இருந்தனர். அவர்களும் சிறப்பு மருத்துவர் குழுவினரின் கண்காணிப்பில் இருந்தனர்.
மருத்துவர்கள் ஆலோசனையின்றி ஓர் அடிகூட அவர் எடுத்து வைப்பதில்லை.
இவை எல்லாம் 150 ஆண்டுகள் உயிர்வாழ வேண்டும் என்ற கனவை நனவாக்க அவர் செய்திருந்த முன்னேற்பாடுகள்.
ஆனால்...
2009, ஜூன் 25 அன்று 50-வது வயதில் திடீரென அவரது இதயம் வேலை செய்ய மறுத்தது.
12 மருத்துவர்கள் சோதித்தனர். உடனடியாக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியாவில் இருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
எப்பயனும் ஏற்படவில்லை. இத்தனை ஏற்பாடுகளையும் மீறி மரணத்தின் பிடியில் அவர் அகப்பட்டார்.
அவரது மரணம்தான் அவரது கடைசி நேரடி நிகழ்ச்சி. அதை உலகம் முழுவது 2.5 மில்லியன் மக்கள் நேரலையில் பார்த்தனர். அது கொண்டாட்ட நிகழ்ச்சி அல்ல. மாறாக அதுவொரு பிரியாவிடைப் பயணம்.
மைக்கேல் ஜாக்ஸன் மரணத்துக்கு சவால்விட முயன்றார். ஆனால் மரணமோ அவருக்கு சவால் விட்டது.
பாடம் என்ன..?
உண்மையில் இந்த உலகில் நமக்குச் சொந்தமானது என்று எதுவுமில்லை. ஏன்..? நம் உயிர்கள்கூட நமக்குச் சொந்தமானவை அல்ல.
பணம் சேர்ப்பது பாவமல்ல! ஆனால் பணம் வைத்திருப்பதால் மட்டுமே பணக்காரர் என்று நினைப்பதுதான் பாவம்.
மனநிறைவு, திருப்தி, ஆரோக்கியம், நன்றியுணர்வு ஆகியவைதான் உண்மையான செல்வம்.
எதுவரை வாழ்கிறோமோ அதுவரை பிறருக்கு பயன்தரும் வகையில் வாழ்வோம்!