#சிதம்பரம்
ரயில் நிலையம் முற்றுகை!
திரளான மஜகவினர் பங்கேற்பு!
தலைவர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கைது!
அக்டோபர்.30.,
சிதம்பரம் பகுதி மக்களின் நெடுநாளைய ரயில்வே கோரிக்கைகளை முன்வைத்து இன்று சிதம்பரம் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் சிதம்பரம் வர்த்தகர் சங்கம் சார்பில் அனைத்து கட்சிகள் பங்கேற்ற ரயில் நிலையம் முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலையிலிருந்து மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் அனைத்து கட்சி தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
முற்றுகை அணிவகுப்பு சிதம்பரம் ரயில் நிலைய வளாகத்திற்குள் நுழைந்ததும், காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் நடைபெற்ற இந்த முற்றுகைக்கு பிறகு அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
நீதி கேட்டால் கைது நடவடிக்கையா?
....................................
தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மையை - நடுநிலைத்தன்மையை வலியுறுத்தி பேரணி நடத்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை கைது செய்திருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்தியா கூட்டணியின் நியாயமான கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் பதில் அளிக்க வேண்டுமே தவிர தப்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
................................
மு.தமிமுன் அன்சாரி
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி
11.08.2025
#votechoriexposed
நேதாஜி -
ஜனவரி 23
இந்திய
தேசிய ராணுவத்தை
கட்டமைத்து
ஆயுத போராட்டத்தின் வழியாக
இந்திய
விடுதலையைப் பற்றி
கனவு கண்டவர்
நேதாஜி.
அவரை
தீவிரவாதி என்றார்கள்
இன்று
வரலாறு
சுதந்திரப்
போராட்டவாதியாக
புகழ்கிறது
அவரது
கடைசி நேரத்தில்
அவரோடு
விமானத்தில் சென்ற
உற்ற தளபதிகளான
ஃபெரோஸ் கான்,
ஷா நவாஸ் கான்
ஆகியோரையும்,
அவருக்கு
பர்மா -ரங்கூனில்
அக்காலத்தில்
இரண்டு லட்ச ரூபாய்
ராணுவ நிதி அளித்த
அபிராமம். அமீர் அம்சா
அவர்களையும்
மறக்க முடியுமா?
தென் தமிழ்நாட்டிலிருந்து
அவரது படையில்
அணி அணியாய்
சேர்ந்த தமிழர்களை
வரலாறு போற்றுகிறது
அடுத்த
பிறவி இருப்பின்
தமிழனாக பிறக்க
விரும்புகிறேன்
என்று சொன்ன
நேதாஜியை
தமிழ்நாடு
என்றும் போற்றுகிறது.
#NetajiSubhasChandraBose
#AbiramamAmeerAmsha
நியுஸ் தமிழ் 24x7 செய்தி வாசிப்பாளர் தங்கை சௌந்தர்யா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நியூஸ் தமிழ் 24x7 தொலைக்காட்சி ஊடக உறவுகளுக்கும்,
மஜகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
#SowndaryaAmudhamozhi
இன்று
தமிழ்நாடு
சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் தளபதி @CMOTamilnadu அவர்கள்,
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து
கொண்டு வந்த தனித்தீர்மானம்
ஒரு மனதாக நிறைவேறியுள்ளது.
இதற்காக முதல்வரை வாழ்த்துகிறோம்.
ஒற்றை சமூக
ஏகாதிபத்தியம் வீழட்டும்!
100 சதவீத
சமூக நீதி மலரட்டும்!
அரசியலில் அனைவரின் கருத்துகளும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
எனவே பரப்புரைகளில் கவனம் தேவை
விமர்சனங்களும், கருத்துகளும் நாகரீகமாகவும், ஜனநாயகப்பூர்வமாகவும் இருக்க வேண்டும்.
வலைதளங்களில் தனி நபர் தாக்குதல்கள் ஆரோக்கியமற்றது.
எல்லைகளை தாண்டினால் தொல்லைகள் வரும்.
வழிகளை கூறுபவன் அல்ல உண்மையான தலைவன்...
களத்தில் நின்று வழிநடத்துபவனே உண்மையான தலைவன்...
மு.தமிமுன் அன்சாரி அவர்களை தலைவராக ஏற்றுக் கொண்டதில் பெருமிதம் அடைகிறேன்...💙
வழிகளை கூறுபவன் அல்ல உண்மையான தலைவன்...
களத்தில் நின்று வழிநடத்துபவனே உண்மையான தலைவன்...
மு.தமிமுன் அன்சாரி அவர்களை தலைவராக ஏற்றுக் கொண்டதில் பெருமிதம் அடைகிறேன்...💙