Indian community unites for a noble cause in Riyadh!
Ambassador Dr. Suhel Khan inaugurated a blood donation camp organized by the All India Steering Committee, with support from the Saudi Ministry of Health @SaudiMOH. Senior officials of Saudi Ministry of Health, community volunteers, and representatives of various community organisations graced the occasion. The response has been incredible—nearly 1000 volunteers registered to donate!
A powerful example of community spirit and service 👏
@MEAIndia@diaspora_india@SecretaryCPVOIA
VIDEO | Chennai: Manithaneya Makkal Katchi (MMK) chief MH Jawahirullah (@jawahirullah_MH) says, “We strongly oppose the Election Commission’s Special Intensive Revision (SIR) of the electoral roll. The term ‘special’ has never been used before in such revisions, including those in 2002 and 2005. Neither the Constitution nor the Representation of the People Act mentions any such category. For the first time, the Election Commission is testing citizens’ citizenship credentials, something not empowered under Article 324.”
#SIR
(Full video available on PTI Videos - https://t.co/bIyFWTfmBd)
Towards a noble cause! Extending our helping hand during the #SevaPakhwada
A mega Blood Donation Camp is organized by the Indians Welfare Forum (IWF) in collaboration with King Saud Medical City (KSMC) at Shumeisy, Riyadh, today. Mr
Praveen Kumar, Second Secretary (Consular) from the Embassy, inaugurated the Camp. He commended their
efforts and expressed Embassy’s solidarity in such welfare initiatives.
@MEAIndia@diaspora_india@SecretaryCPVOIA
பத்திரிகை அறிக்கை
சிறுபான்மையின மாணவர்கள் வெளி நாடுகளுக்குப் பட்ட மேற்படிப்பு பயிலக் கல்விஉதவித் தொகைக்கான அரசாணை !
மனிதநேய மக்கள் கட்சி நன்றி!!
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்
.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
கடந்த ஏப்ரல் மாத நிதிநிலை கூட்டத் தொடரில், மாண்புமிகு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அவர்கள், சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பட்ட மேற்படிப்பு பயிலக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் இத்திட்டத்திற்கான அரசாணை இன்றுவரை வெளியிடப்படாத காரணத்தால் தமிழ்நாட்டில் பல சிறுபான்மை மாணவ, மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பைப் பயில முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாகக் கடந்த 7.8.2025 அன்று கடிதம் வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு நான் எடுத்துச் சென்றதின் அடிப்படையில் நேற்றைய தினம் முஸ்லிம் சிறுபான்மை மாணவ மாணவியர் 10 பேர் வெளிநாடுகளுக்குச் சென்று பட்ட மேற்படிப்பு பயிலக் கல்வி உதவித்தொகை ரூ.3.60 கோடி ஒதுக்கி அத்திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று விரைந்து அரசாணை வெளியிட உதவிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
05/09/2025
#minorityscholarship
@CMOTamilnadu@DinakaranNews@dinathanthi@TheHindu@News18TamilNadu@news7tamil@sathiyamnews@sunnewstamil@thatsTamil@SamayamTamil@PTI_News@timesofindia@TamilTheHindu
வழக்கறிஞர் எஸ். வாஞ்சிநாதனுக்கு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அநீதி இழைத்திருக்கிறார்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் மீது புகார் மனு அளித்திருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தன் முன் ஆஜராக வேண்டும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் சம்மன் அனுப்பித் திடீரென விசாரணைக்கு அழைத்தது அநீதமானதாகும். யார் மீது புகார் கொடுத்தாரோ அந்த நீதிபதியே அவரை விசாரித்ததும் நீதி பரிபாலனம் செய்வதற்கு முரணான செயலாகும்.
முன்பு ஆஜரான வழக்கிலிருந்து விலகிய பிறகு அவ்வழக்கில் ஆஜராகுமாறு வழக்கறிஞருக்குச் சம்மன் கொடுத்து அழைத்தது எவ்வகையிலும் நியாயம் இல்லை. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே நீதிமன்றத்தில் வழக்கறிஞரை நீ ஒரு கோழை என்று குறிப்பிட்டிருப்பது அநீதமான அணுகுமுறை ஆகும்.
மக்கள் நீதிமன்றத்தையும் நீதியையும் தங்களது இறுதி அடைக்கலமாக நம்பி வருகின்றனர். சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் கடமையைச் செய்வேன் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி உறுதியேற்ற ஒரு நீதிபதி அதற்கு நேர் எதிராக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது முரணானது.
மாண்புமிகு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்களின் பல்வேறு தீர்ப்புகள் சார்பு நிலைகொண்டதாக இருப்பதைப் பல வழக்கறிஞர்களும் முற்போக்கு சிந்தனையாளர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
நீதிமன்றம் அல்லாத பொது வெளிகளிலும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர் சார்ந்திருக்கும் சிந்தனை அமைப்பின் கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் பேசி வந்திருக்கிறார் என்பதை ஊடகம் வழியாக அறிய முடிகிறது.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கொள்கைகள் இருக்கலாம். ஆனால் அவை நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் குறுக்கிடாமல் இருக்க வேண்டும். ஆனால் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இதற்கு விதிவிலக்காக இருக்கிறார்.
தன் மீது புகார் அளித்தவரை அழைத்து மிரட்டும் தொனியில் பேசுவது நீதிபதியின் நம்பகத்தன்மையைப் பொதுமக்கள் எப்படிப் புரிந்து கொள்வார்கள்?
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அளித்த புகாரின் மீது உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கைகளைத் தொடங்கிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.
இப்படிக்கு.
எம்.எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
#Vanchinathan
#JusticeGRSwaminathan
@sunnewstamil@PttvNewsX@PTI_News@ThanthiTV@dinathanthi@sathiyamnews@News18TamilNadu@news7tamil@ZeeTamilNews@the_hindu@timesofindia@TamilTheHindu@bbctamil@DinakaranNews@NewIndianXpress
பாஜக ஆட்சி செய்யும் அசாம் மாநிலம் பிலாசிப்பாரா மாவட்டம் துபிரி கிராமத்தில் 7000 ஏக்கர் நிலப்பரப்பில் அதானி மின் கட்டுமானத்திற்கு பாஜக அரசாங்கம் நிலத்தை கொடுத்துள்ளது. இந்தப் பகுதி முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் குடும்பம் மட்டும் வசித்து வருகின்றனர்.
திடீரென்று ஜூலை 8ம் தேதி காலை எந்த முன்னறிவிப்பும் இன்றி இந்த நிலத்தை அதானிக்கு கொடுத்து விட்டதாக கூறி அதிரடிப்படை இந்த பகுதிக்குள் நுழைந்து மக்களை கொலை வெறியுடன் அடித்து தாக்கி புல்டோசர்களை வைத்து 2000 வீடுகளை ஒரே நாளில் இடித்து தரைமட்டமாக்கியது ஆளும் பாஜக அரசு. மேலும் அங்கே இருந்த 6 மசூதிகள், குடிநீர், இஸ்லாமியரின் கல்லறை, தண்ணி டேங்கிகள், என்ற அனைத்தையும் இடித்து தள்ளினர்.
அசாம் மாநிலத்தில் தற்போது பருவமழை காலம் தொடங்கி விட்டதால் கடும் மழையில் சுமார் 8000 இஸ்லாமியர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் மழையில் நனைந்தபடி தவித்து வருகின்றனர்.
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி
இன்று காலை திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மமக வின் மதுரை எழுச்சி பேரணி மாநாட்டின் முக்கிய தீர்மானமாக இருந்த முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து உறுதியளித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி!!