2016இல் அஇஅதிமுக அரசு காலத்தில் நடந்த முக மோசமான டெண்டர் ஊழலால் நூற்றுக்கும் மேல் கணினி மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்த எங்கள் நிறுவனம் மூடப்பட்ட ஒரு சோகமான நிகழ்வை நீங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி மூலம் அறிந்து இருப்பிர்கள். கலைஞர் டிவி நிகழ்ச்சி. /1
https://t.co/qpacQPswYU
Dr M #Karunanidhi was a scientists’ scientist. Among his numerous contributions to Tamil Nadu's development are outstanding universities like Anna University as well as the State Biotechnology Council and gender-sensitive institutions like the Women’s Biotechnology Park.
திராவிட மாடல் திட்டங்கள் மிக எளிமையானவை. அவை Rocket Science கிடையாது. ஆனால், ��வற்றை மற்ற மாநிலங்களில் உடனே நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம்.
எடுத்துக்காட்டுக்கு,
உத்தரப்பிரத��சத்தில் உள்ள பத்து கோடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் தர வேண்டும் என்றால் அரசிடம் மாதம் 10,000 கோடி ரூபாய் வேண்டும். ஏற்கனவே தென்னிந்திய மாநிலங்கள் தான் அவர்களுக்கு உழைத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டைப் போல் குஜராத்தில் பெண்களுக்கு இலவசப் பேருந்துகள் விடலாம். ஆனால், அதற்கு முதலில் ஊருக்கு ஊர் செல்லும் பேருந்துகள் வேண்டும். கலைஞர் 1969ல் பேருந்துகளை நாட்டுடைமை ஆக்க��யது போல் ஆக்கினால் கூட, குஜராத் பெண்கள் பயன் பெற இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்.
தமிழ்நாட்டைப் போல் மற்ற மாநிலங்களில் காலை சத்துணவு தரலாம். ஆனால், அதற்கு முதலில் அரசு பள்ளிக்கூடங்கள் இருக்கோணும். அதற்குப் பிள்ளைகள் போகோணும். சமைத்துப் போட சத்துணவுத் திட்ட கட்டமைப்பு இருக்கோணும். யார் சமைத்துப் போட்டாலும் எல்லா சாதிக்காரனும் திங்கோணும்.
தமிழ்நாட்டைப் போல் மற்ற மாநிலங்களில் அரசு ��ருத்துவமனைகளைக் கட்டினால் கூட, அவற்றில் பணி புரிய மருத்துவர்கள் முன்வர வேண்டும். அப்படி அவர்கள் முன்வர, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு சாதிகளில் இருந்தும் ஆட்கள் வர வேண்டும். அவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும். தமிழ்நாடு 1920கள் தொடங்கி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஆக, தமிழ்நாட்டைப் போல் மற்ற மாநிலங்கள் மாற இன்னும் 100 ஆண்டுகள் கூட ஆகலாம்.
ஆனால், இவற்றை எல்லாம் மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று கனவு கண்ட பெரியார், அண்ணா, கலைஞரைப் போன்ற தலைவர்கள் ஒவ்வொரு நாளும் பிறக்க மாட்டார்கள்.
ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று கலந்து கொண்ட போது, இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு என்ற புத��தகத்தை வெளியிடக் கேட்டுக் கொண்டார்கள்.
விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யாத நிலையில், மிகப்பெரிய அளவில் இருந்த அந்தப் புத்தகத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. அப்படி என்னதான் பங்களிப்பு செய்தார்கள் என்று திறந்து பார்த்தோம். முதல் பக்கத்திலேயே ஆங்கிலேயர் காலணியை நாவால் வருடுகிற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
அடுத்து காந்தியார் கொலையை குறிக்கின���ற வகையிலான சித்திரம் வந்தது. அடுத்தடுத்த பக்கங்கள் அனைத்தும் காலியாக இருந்தன. ஏனென்று கேட்ட போது, நீங்களும் அந்த வரலாற்றை நிரப்பலாம் என்று கையில் பேனாவைத் தந்தார்கள். மூன்று பெரிய பூஜ்ஜியங்களை வரைந்தோம்.
இப்படிப்பட்ட பூஜ்ய வரலாற்றைக் கொண்ட சனாதனவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்திய த.மு.எ.க.ச தோழர்களுக்கு வாழ்த்துகள். தேர்தல் களத்தில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி சனாதனத்தை ஒழிப்போம்.