Digital India Award winning Tech Entrepreneur lost $25M biz due to govt corruption, now fighting my way back from homeless to global biz again. Never Give Up🔥
பல மிரட்டல்கள் மத்தியில் நானும் என் மகளும் அறிவாலயத்தில் ஒரு நாள் முழுதும் இருந்து இந்த கலைஞர் டிவி பேட்டி அளித்தோம். அன்று தளபதி அவர்கள் இதை பார்த்து, திரும்ப சில முறை ஒளிபரப்ப சொன்னது ஆறுதல்.
@IPeriyasamymla @mkstalin
விடியல் வரும் என அன்றே நம்பினோம், இன்று வந்துவிட்டது.🙏🙏🙏
தமிழ்நாட்டுக்கு 100 பில்லியன் (10 லட்சம் கோடிகள்) வெளிநாடு முதலீடுகள் கொண்டு வருவோம்.
மாண்புமிகு முதல்வர் விஜய் மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகலந்த வணக்கம்.
உங்களது 150 நாட்கள் ஆட்சியில் 'ஊழலுக்கு ஆதரவு இல்லை' என்பது தெளிவாக தெரிகிறது. அடிமட்ட நிலையில் ஊழல் ஒழிக்கப்பட்டு வருவதையும் மக்களாகிய நாங்கள் உணரமுடிகிறது.
ஊழலை மட்டுமே பிரதானமாக கொண்டு கடந்த ஐம்பது வருடங்களாக திராவிட கட்சிகளால் கட்டமைக்கப்பட்ட நமது தமிழக அரசாங்கத்தை சீரமைக்கும் பணிகள் நம்முடைய மாண்புமிகு முதல்வர் விஜய் தலைமையில் அனைத்து துறைகளிலும் நடைபெற்று வருவதை பார்த்து நான் மிகவும் பெருமை அடைகிறேன். அரசாங்கம் வேறு அரசியல் வேறு - யாராய் இருந்தாலும் ஊழல் செய்ய விடமாட்டேன் என்கிற முதல்வரின் உறுதியான கொள்கை எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நன்றி மாண்புமிகு முதல்வர் அவர்களே.
ஊழலால் அழிந்து கடந்த பத்து வருடங்களாக போராடி வரும் என்னை பற்றி உலகம் எங்கும் வாழும் சில கோடி தமிழர்கள் அறிவார்கள். நம்முடைய மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் கூட ஊடகங்களில் என்னை பற்றி வந்த பிரபலமான செய்திகளை பார்த்து இருக்க வாய்ப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.
ஊழலை ஒழிக்க விஜய்க்கே நான் வாக்களிப்பேன் நீங்களும் விஜய்க்கு வாக்களிங்கள் என்று நான் ஏப்ரல் 19 அன்று வெளியிட்ட விடியோவை இங்கு நீங்கள் பார்க்கலாம். தங்களது தற்போதைய ஊழல் ஒழிப்பு நடவடிக்கையால் நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம். மனமார்ந்த நன்றிகள் முதல்வரே.
மாண்புமிகு நிர்மல் அவர்களுக்கு என்னை கடந்த எட்டு வருடங்களாக தெரியும். போன வருடம் நான் ஒரு புது தொழில் ஆரம்பித்த போது உடனடியாக வாழ்த்து செய்து அனுப்பி ஊக்குவித்தார்கள். தேர்தலுக்கு முன்பு மாண்புமிகு புஸ்ய் ஆனந்த் அவர்களை சந்தித்த போதும் நாங்கள் ஜெயித்தவுடன் எங்களை கோட்டையில் வந்து பாருங்கள் உங்களுக்கு ஐந்து பைசா செலவு இல்லாமல் நீங்கள் இழந்ததை மீட்டு தருகிறோம் என வாக்குறுதி கொடுத்தார்கள். மாண்புமிகு ஆதவ் அர்ஜுனா அவர்களை சந்தித்த போதும் கனிவுடன் என்னுடைய புதிய தொழிலுக்கு உதவுவதாக சொன்னார்கள். போன மாதம் ரெடிபிக்ஸ் பீலிக்ஸ் என்னை நேர்காணல் எடுத்து ஒளிபரப்பினார்கள். உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் ஐயா.
ஆனாலும் இன்றைய நாள் வரை எனக்கு எந்தவிதமான சமூகநீதியும் கிடைக்கவில்லை என்பதே ஒரு சோகமான உண்மை. இருந்தாலும் நான் விடாமுயற்சிகளுடன் என் பயணத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன். இதுவரை என் மேல் நம்பிக்கை வைத்து தங்களால் முடிந்த ஆதரவுகளை கொடுத்து வரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என்னுடைய அன்பார்ந்த நன்றிகள்.
கடந்த 30 வருடங்கள் ஆராய்ச்சிகள் பண்ணி கோல்ப் விளையாட்டில் அறிவியல் உலகம் இதுவரை கண்டுபிடிக்காத ஒரு மிக முக்கியமான மெட்ரிக்கை கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையை (Patent) பெற்றுள்ளேன். கோல்ப் விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற பல ஆண்டுகள் ஆகும் என்ற இப்போதைய நிலையில் என்னுடைய கண்டுபிடிப்பான நவகோல்ப் மூலம் அனைவரும் சில மணித்துளிகளில் சிறப்பாக விளையாட முடியும் என்பதே என்னுடைய கண்டுபிடிப்பின் சிறப்பு.
அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் அனைத்து உலக தலைவர்களும் தொழிலதிபர்களும் முதலீட்டார்களும் மிகவும் ஆர்வம் செலுத்தும் விளையாட்டு கோல்ப். அனைத்து மேலைநாடுகளிலும் மிகவும் பிரபலமான கோல்ப் விளையாட்டின் இந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம் அவர்களின் கவனத்தை தமிழ்நாட்டுக்கு ஈர்க்க முடியும் என்பதே என்னுடைய ஆழமான நம்பிக்கை. இந்த என்னுடைய அரிய கண்டுபிடிப்பு நவகோல்ப் மூலமாக தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவர முடியும் என்பதை பற்றி நான் எழுதினதே இந்த கட்டுரை. இந்த முயற்சி தமிழ்நாட்டுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்து தரும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களே நான் உங்களை நேரில் சநதித்து இந்த கட்டுரையை உங்களிடம் சமர்ப்பிக்க ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்ளுகிறேன். அல்லது ஒரு அமைச்சரோ அதிகாரியோ நேரில் சந்திக்க நேரம் கொடுத்தால் கூட நலம் அய்யா. மிக்க நன்றி.
நவமணி
@CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay@BussyAnand@AadhavArjuna@CTR_Nirmalkumar@Keerthana4VNR@arunraajkg@imrajmohan@VigneshTvkCbe@RameshOffcl@MarieWilson_TVK@Viswanathan_INC@vinothravi11@JCDPrabhakar@TVKPartyHQ@redpixnews@TVKHQITWingOffl@FelixGerald_TVK
2016 டிசம்பர் மாதத்தில் ஊழலால் டெண்டர் நாங்கள் அனைத்தையும் இழந்த அந்த சமயத்தில் முதல் முதலாக நாங்கள் அணுகியது அறப்போர் இயக்கம் தான்.
ஏன் என்றால் அப்பொழுது நாங்கள் எழும்பூரில் அறப்போர் இருந்த அதே அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் நூறுக்கு மேற்பட்ட பொறியாளர்கள் கொண்டு இயக்கி வந்தோம். ஊழல் அராஜகம் ரொம்ப கொடூரம் நண்பரே.
@RDSINGH234@CMOTamilnadu@JayaramArappor@Arappor நன்றி அய்யா. இன்று நான் மாண்புமிகு அமைச்சர் நிர்மல் அவர்களை சந்தித்த பிறகு தான் நடைபயணம் பற்றிய இறுதி முடிவு எடுக்கலாம் என்று இருக்கிறேன் அய்யா. 🙏
Dear Officers, please read the below article once. I have given all the details. And I am available to come and present it to you all. And in fact I can give you all a live session and make you strike like a professional golfer in that same session. Seeing is believing.
I am truly looking forward to hearing from you. @Keerthana4VNR@CMOTamilnadu@BussyAnand@CTR_Nirmalkumar@AadhavArjuna@OfficeOfNAnand
Respected Hon'ble Governor, I have presented the below article to our Tamilnadu Government. To begin with, the government is seriously considering implementing our NavaGolf patent-pending SportsTech invention in Tourism to primarily boost up the topline revenue by attracting Foreign Travelers. I am yet to have any discussions on FDI mobilization.
Sir, the same can be made available to all the states in India to uplift Tourism. There are many countries like Dubai and Thailand that thrive on golf tourism. I would be honoured if I can meet up with you and present our invention on a live session with you, Sir. If you strike the golf ball like a professional in that session, I am sure you would take me to our Hon'ble Prime Minister Modi Ji. It is my dream to make Modi Ji to play a round of golf with President Trump, and many other powerful political and business leaders around the world.
I look forward to meeting with Sir.
மாண்புமிகு அமைச்சர் நிர்மல்குமார்...
நண்பர்களே, இவர் ஒரு மனிதாபம் மிக்க பண்பான மனிதர். எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு பாஜக வக்கீலை எங்கள் வழக்கு விஷயமாக நானும் என் மகளும் சந்திக்க சென்ற இடத்தில நிர்மல் அவர்களை சந்தித்தோம்.
ஊழலால் அழிந்த எங்கள் கதையை கேட்டு மிகவும் வருத்தப்பட்டார். உடனே எங்கள் விபரங்களை எடுத்து சென்று அன்றைய முதல்வர் அலுவலகம் சென்றார். ஒன்றும் முடியாது என மிகவும் வருத்தத்துடன் அடுத்த நாளே எங்களை மீண்டுமாக நேரில் சந்தித்து சொன்னார்.
எங்களை யார் என்றே தெரியாத போதிலும் எங்களுக்கு அவர் அவுளவு பெரிய முயற்சி எடுத்ததை நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
அதன் பிறகும் அவர் என்னுடன் தொடர்ந்து இணைப்பில் தான் இருந்தார். எப்போதும் உதவ முனைவார். போன வருடம் கூட நான் புது தொழில் ஆரம்பித்த பொது எனக்கு வாழ்த்து சொன்னார். அவ்வுளவு எளிமை, அன்பான ஒரு மனிதர்.
நான் அவரை சிலமுறை அவருடைய போராட்டமான பயணங்களில் சந்தித்து இருக்கிறேன். எப்பொழுதும் சிரித்த முகமாக தான் இருப்பார். இப்பொழுது மாண்புமிகு அமைச்சர் நிர்மல் அவர்களாக அவருடைய அலுவலகத்திற்கு சென்று சந்தித்தேன். அந்த அறையில் பின்னால் நின்று அவரை இந்த உயர்ந்த நிலைமையில் பார்க்க எனக்கு மிகவும் சந்தோசமாகவும் மனநிறைவாகவும் இருந்தது.
சட்டசபை முடிந்து சில நாட்கள் கழித்து என்னை வர சொல்லி இருக்கிறார். அவர் இதை சொன்னதே பெரிய விஷயம், வேலைப்பளு மிகுந்த அமைச்சர் அவர். தொந்தரவு செய்ய மனது இல்லை, இருந்தாலும் பார்க்கலாம். மிக்க நன்றி நிர்மல் அவர்களே.
கண்டிப்பாக அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள் முதல்வர் விஜய் அவர்கள் பெருமைப்படும் அளவுக்கு தனது கடமையை நேர்மையாக செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பல லட்சம் குடும்பங்களுக்கு கண்டிப்பாக உதவுவார்.
ஆண்டவன் அவரையும் அவரது குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்.
@CTR_Nirmalkumar@CMOTamilnadu@BussyAnand@TVKVijayHQ@voiceofctr_tvk@TVK_TPK
@CoreyJMick1 My research outcome says, the clubhead should spin like a boomerang. I have given all the information in my channel. It's all about Cognitive Learning. One can strike like a pro instantly. Pleaee let me know your feedback.
https://t.co/vxPxFVircs
2016இல் அஇஅதிமுக அரசு காலத்தில் நடந்த முக மோசமான டெண்டர் ஊழலால் நூற்றுக்கும் மேல் கணினி மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்த எங்கள் நிறுவனம் மூடப்பட்ட ஒரு சோகமான நிகழ்வை நீங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி மூலம் அறிந்து இருப்பிர்கள். கலைஞர் டிவி நிகழ்ச்சி. /1
https://t.co/qpacQPswYU
@JCDPrabhakar The room is filled with love, grace, respect and sweet memories. Thank you Mr. Speaker for taking efforts to reach out to madam L.R. Eswari. ♥️
@Keerthana4VNR The most interesting fact is that golf clubhead is nothing but a boomerang, in tamil it's called valari. Guess what, boomerang was invented by ancient Tamils. Read on...
https://t.co/xJ5zauA9X3