💥 தேர்தலுக்கு முன்பு ஊடகங்களிடம் திரு விஜய் அவர்களுக்கு கிடைத்த இதுபோன்ற Positive privileged வெளிச்சம்
திரு. எடப்பாடி பழனிச்சாமி, திரு .சீமான் போன்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு கிடைக்கவில்லை
ஊடகங்கள் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கிய பத்திரிகையாளர் திரு @arnoldkote4 அவர்கள் 🔥🔥
அடேய் @polimernews@NewsTamilTV24x7@galattadotcom@behindwoods கேட்டுச்சா ��😂
20 நாள்ல
*சட்டம் ஒழுங்கை சரி பண்ண முடியாது
*கொ*லை, பாலியல் வன்கொடுமைகள் எதையும் தடுக்க முடியாது
*மின்வெட்டை சரி செய்ய முடியாது
*பாட்டிலுக்கு 10 ரூ வாங்கறத உடனே நிறுத்த முடியாது
*முதலீடுகள் ஆந்திராவுற்கு செல்வதை தடுக்க முடியாது
ஆனால் அதே 20 நாளில்
*ஏற்கெனவே திருக்குறளை அச்சிட்ட பள்ளி பைகளில் மறுபடியும் அச்சடிக்க முடியும்
*ஏற்கெனவே உருவாக்கிய புதிய சிலபஸை மீண்டும் உருவாக்கி பிரிண்ட் போட முடியும்
*புத்தகங்களில் அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் பக்கத்தை திடீர்னு சேர்க்க முடியும்
*டாஸ்மாக்ல வருவாய் அதிகரிக்க 1200 கோடி ஊழல்னு உருட்ட முடியும்
*அரசாணை இல்லாம 717 டாஸ்மாக் கடைகளை மூட முடியும், ஏற்கெனவே மூடிய கல்குவாரிகளை மூட முடியும்
*ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பஸ் பாஸ் இல்லாம மாணவர்கள் அரசுப்பேருந்துகளில் பயணி��்க முடியும், * ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான இலவச சிறப்பு பேருந்துகளை இயக்க முடியும்
*ஏற்கெனவே அறிவித்த ஆளில்லா பத்திப்பதிவை புதுசா அறிவிக்க முடியும்.
*ஏக்கெனவே வந்த முதலீடுகளை உரிமை கொண்டாட முடியும்
*ஏற்கெனவே அறிவித்த மின்சார ஊழியர்கள் பதவி உயர்வை சொந்தம் கொண்டாட முடியும்
20 நாள்ல எத்தனை பொய்கள், பித்தலாட்டங்கள்?
எப்பா டேய் அடுத்த தேர்தல் எப்படா வரும், டைம் மெஷின் இருந்தா அங்க கொண்டுபோய் நிப்பாட்டுங்கடா.
~ என்ன டா நம்ம விஜய் அண்ணா தான் CM ஆகிட்டாரே ,
இன்னும் எதுக்கு MLA, Minister ல இருந்து இருந்து நம்ம CM Vijay அண்ணா வரைக்கும் பாவர்கட் ல இருந்து க்ரைம்ஸ் வரைக்கும் DMK தான் காரணம் nu எலக்சன் campaignபிரச்சாரம் மாரி பேசிட்டு இருக்காய்ங்க nu பாத்த ,
இன்னும் 8 மாசத்துல la கவுன்சிலர் எலக்சன் வருது nu போட்டுருக்கு ...!!! 🤐🤐🤐
#பெரம்பலூர்
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுப்படுத்தி
அமித்ஷா வெறுப்பு பேச்சு!
தமிழ்நாடெங்கும் இன்று விடுதலைச் சிறுத்தைகளின் போராட்டம் நடைபெற்றது!
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுப்படுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பதவி விலகக்கோரியும்; நாட்டு மக்களிடம் வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று பெரம்பலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
Dear Home Minister Amit Shah
The Insult of Baba Sahab Bhimrao Ambedkar Ji will charge on BJP heavily.
This is not only an insult of #Ambedkar but also constitution and millions of backward people in India.
Apologize to SC, ST, OBCs
"Samvidhan is not Sanghvidhan"
#Ambedkar
அமித்ஷாவின் வெறுப்பு பேச்சு:
------------------------
புரட்சியாளர் அம்பேத்கர் மீதான வெறுப்பை வெளிப்படுத்தினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் சங்பரிவார்களின் முகத்திரை கிழிந்தது!
நாட்டு மக்களிடம் வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்!
----------------------------
அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆவது ஆண்டை நினைவுகூர்ந்திடும் வகையில் மாநிலங்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், காங்கிரசை விமர்சிக்கும் பெயரில் புரட்சியாளர் அம்பேத்கர் மீதான தனது வெறுப்பை வெளிப்படுத்தினார். இதன்மூலம் சங்பரிவார்களின் முகத்திரை கிழிந்துள்ளது. அவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது.
அமித்ஷா அவர்கள் பேசும்போது,
"அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்..என்று சொல்வதே ஃபேஷன் ஆகிவிட்டது. அதற்குப் பதிலாக கடவுளின் பெயரைச் சொன்னால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்”
என்று எதிர்க்கட்சியினரைக் கேலி செய்து பே��ியிருக்கிறார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைக் கேலி செய்வதற்க���க அவர் அம்பேத்கரை இழிவுபடுத்தியிருக்கிறார். இது புரட்சியாளர் அம்பேத்கர் மீது மிகுந்த மதிப்பு கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.
திரு. அமித்ஷா அவர்கள் இன்று அமைச்சராக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசமைப்புச் சட்டம் தான். பிரதமர் மோடி, தான் ‘பிரதமர் பதவி வகிப்பதற்கு அம்பேத்கர் வகுத்துத் தந்த அரசமைப்புச் சட்டமே காரணம்’ என்று பலமுறை பேசியிருக்கிறார். அவ்வாறு இருக்கும்போது அமித்ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரது இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
புரட்சியாளர் அம்பேத்கர் மீதான அவரது வெறுப்புப் பேச்சுக்கு அவர் நாட்டுமக்களிடையே வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
அடுத்து, அரசமைப்புச் சட்டம் குறித்த விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் மீது இரண்டு குற்றச்சாட்டுகளை பாஜகவினர் வைத்தனர். புரட்சியாளர் அம்பேத்கர் 1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டபோது அவரை காங்கிரஸ்காரர்கள் தான் தோற்கடித்து விட்டனர் என்பது அவர்களின் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும். ஆனால், அம்பேத்கரைத் தோற்கடித்தது காங்கிரஸ் அல்ல; பாஜகவின் தாய் அமைப்பான
ஆர்.எ��்.எஸ் அமைப்பு உருவாகக் காரணமான சாவர்க்கரே ஆகும். இதைப் புரட்சியாளர் அம்பேத்கரே தெரிவித்திருக்கிறார். 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் அவர் கமலகாந்த் சித்ரே என்பவருக்கு எழுதிய கடிதத்தில், ‘தான் காஷ்மீரைப் பிரிக்க வேண்டும் என்று சொன்னதனால் ஆத்திரப்பட்டு டாங்கேவும் சாவர்க்கரும் இணைந்து சதித்திட்டம் தீட்டி தன்னைத் தோற்கடித்தனர்' என குறிப்பிட்டிருக்கிறார். சாவர்க்கரின் இந்த சதித் திட்டத்தை மூடி மறைப்பதற்காகவே பாஜகவினர் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் மீது பழி போடுகிறார்கள்.
பாஜகவினர் கூறும் அடுத்த குற்றச்சாட்டு, 'அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு காங்கிரசே காரணம்' என்பதாகும். ஆனால் அதுவும் உண்மை அல்ல.
புரட்சியாளர் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தபோது 'இந்து சட்டத் தொகுப்பு மசோதாவை' சட்டமாக்க மு���ற்சித்தார். அதற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் இருந்த சனாதன பிற்போக்குவாதிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 100 க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்கள�� நடத்தி அம்பேத்கரை அவதூறு செய்தது. சனாதனிகளின் எதிர்ப்பின் காரணமாகவே அந்த சட்டத் தொகுப்பை சட்டமாக்குவதற்கு ஜவஹர்லால் நேரு தயங்கினார். இந்நிலையில், சனாதன பிற்போக்கு சக்திகளின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். பின்னர் நேரு அவர்கள் அதே இந்து சட்ட மசோதாவைப் பல பிரிவுகளாகப் பிரித்து சட்டமாக்கினார் என்பது வரலாறு.
1952 இல் பாரதிய ஜன���ா கட்சி இல்லை. அது 1980 இல் உருவானது. எனவே, பாஜகவின் முன்னோடிகளான பிற்போக்குவாதிகள் காங்கிரசுக்குள் பதுங்கியிருந்து அப்போது அரசியல் செய்தனர். அவர்களாலேயே அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியைத் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையும் மூடி மறைத்து இன்று பாஜகவினர் காங்கிரஸ் கட்சியை வசை பாடுகின்றனர்.
(1/2)
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசு���ளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?
எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை #அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.
அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம்.
சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள்.
புரட்சியாளர் அம்பேத்கர் "விசுவரூபம் " எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்!
@AmitShah @PMOIndia @RahulGandhi #Constitution #DrAmbedkar
கோயிலுக்குள் நுழைந்தால் அக்கோயிலுக்குரிய "கடவுள்" பெயரைச் சொல்லுவது தான் வழிபடுவோரின் வாடிக்கை.
அதேபோல- நாடாளுமன்றத்துக்குள்ளே நுழைந்தால் புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரைத் தானே சொல்லமுடியும்?
கோயிலில் கடவுள் ! நாடாளுமன்றத்தில்
அம்பேத்கர்!
இதனையெல்லாம் அறியாதவரா என்ன
உள்துறை அமைச்சர்?
அவ்வளவு வெறுப்பு அவருக்கு புரட்சியாளர் அம்பேத்கர் மீது.
சங்பரிவார் அமைப்பினரின்
ஆழ் நெஞ்சில் என்னவுள்ளது என்பதை அவரே இன்று அம்பலப்படுத்திவிட்டார்.
சனாதனத்தில்
ஊறிய நெஞ்சு!
சமத்துவத்துக்கு
எதிரான நஞ்சு!
#சனாதனம் #சனநாயகம்
#சாவர்க்கர் #அம்பேத்கர்