போட்டி ஆரம்பித்தது முதல் இறுதி நொடி வரையில், களைப்பின்றி அதே வேகத்தோடு ஆட்டத்தை தங்களின் கால்களுக்குள் வைத்திருக்கிறார்கள். எதிரி அணியின் நிலை பரிதாபமாக இருக்கிறது. இன்றைக்கு ஸ்வீடனின் நிலை அதை உணர்த்தியது. #FRAvsSWE
உலகக் கிண்ணத் தொடரில் வேகமும் விவேகமும் கொண்ட அணிகளில் முதன்மையானது பிரான்ஸ். அவர்களிடம் எந்தப்பதற்றமும் இல்லை. #Mbappé கால்களுக்குள் பந்து சென்றுவிட்டால்,அது கோல்தான் என்கிற அளவுக்கு முன்களத்தில் அவர் 'தீ'யாக படர்கிறார். அவர் அடிக்கும் ஒவ்வொரு கோலும் அவ்வளவு நளினமானது. #FRAvsSWE
இறுதியாக நூலிழையில் தப்பி வெற்றியைத் தொட்டது பிரேஷில். ரொனால்டோ, கஃபு, கார்லோஸ் காலத்து பிரேஷில் அணியை இப்போதுள்ள அணி எட்டிப்பிடிக்க நாளும் பொழுதும் தலையால் நடக்க வேண்டும். #BRAvsJPN
சத்யராஜின் பேச்சு, உடல்மொழியைப் பார்த்தாலே எரிச்சல் வரும். இவரையெல்லாம் என்ன நம்பிக்கையில் திமுக மேடையேற்றி வாக்குக் கேட்டது?
காலம் காத்திருந்து பலரின் காதுகளில் பதில் சொல்லியிருக்கிறது. கதறலும் புலம்பலுமாக இருக்கிறார்கள். #DMKFailed
எளியோருக்கான 'ஆட்சி அதிகாரம்' எனும் பெருங்கனவை மூன்று தசாப்த காலமாக தூக்கிச் சுமந்த திருமா அண்ணனும், அவரோடு தோள் நின்ற சிறுத்தைகளும் நெகிழ்ச்சியுறும் இந்தத் தருணம், வரலாற்றின் பெரும் தடம். சமூக நிதித்துறை அமைச்சரான வன்னி அரசு அண்ணனின் போராட்ட குணமும், ஈழத் தமிழர்கள் மீதான அவரின் அன்பும் எப்போதுமே தொப்புள்கொடி பந்தமானது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாட்டின் புதிய அரசாங்கம் 'அனைவருக்குமானது' என்ற காட்சிகளை நாளும் பொழுதும் காட்டிக் கொண்டிருக்கின்றது. அந்தக் காட்சிகளின் முக்கிய அங்கமாக திருமா அண்ணனும், சிறுத்தைகளும் இருக்கிறார்கள் என்பதே நிறைவான மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்!
@TVKVijayHQ@thirumaofficial@VanniTamizhVCK@AadhavArjuna
தேர்தல் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத திமுக, ‘வெறி நாய்கள்’ மாதிரி எல்லோரையும் கடிக்கத் தொடங்கிவிட்டது. சமூக நீதி, விடுதலை, பெண்ணுரிமை பற்றியெல்லாம் வகுப்பெடுக்கும் திமுகவின் ஆ.ராசா தொடங்கி அனைத்து உபிகளும் முன்னாள் கூட்டணிக்கட்சிகளை நோக்கி ‘விபச்சாரிகள்’ என்று வசைபாடுகிறார்கள். கூட்டணிக் கட்சிகள் என்றால் தங்களின் ‘அடியாட்கள்’ என்கிற எண்ணம் திமுக இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. அவர்களினால் மற்றவர்களின் அரசியல், அதிகார உரிமைகள் குறித்த நடவடிக்கைகளை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதிக்க வன்மவாதிகள். #dmk @thirumaofficial
பண்ணையார் கட்சிகளுக்கும், அதன் தலைமைகளுக்கும் எளியோருக்கான 'அதிகாரப் பங்கீடு' என்பது எப்போதுமே கசப்பானது. அவ்வாறான உரையாடல்கள் எழும்போதெல்லாம் சாக்குப்போக்குச் சொல்லி தட்டிக்கழித்து விடுவார்கள். இது, 'சமூகநீதி' பேசி வளர்ந்த திராவிடக் கட்சிகளுக்குள்ளேயே வாடிக்கையாகிப் போய்விட்ட ஒன்று. காங்கிரஸ் என்கிற பண்ணையார் கட்சிக்கு எதிராக எழுந்த எளிய மக்களின் திராவிடக் கட்சிகள் (திமுக, அதிமுக), இன்றைக்கு பண்ணையார் கட்சிகளாக மாறிவிட்ட தருணத்தில், விஜய் என்கிற ஒற்றை மனிதன் மீதான தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை எளிய மக்களுக்கான அதிகாரத்தை பகிர வைத்திருக்கின்றது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு எளியோருக்கான - குறிப்பாக தாழ்த்தப்பட்டோருக்கான அதிகாரம் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் கணிசமாக (20 சதவீதமளவில்) பகிரப்பட்டிருக்கின்றது. சமூகநீதி பற்றிய பேசுவது இலகுவானது. அதனை செயற்படுத்துவது அவ்வளவுக்கு இலகுவானது அல்ல. அதுவும் சாதிய வன்மங்கள் ஊறிப்போன தேசத்தில், ஒன்றை மனிதன் அதனைத் தாண்டி நின்று சாதிப்பது பாராட்டப்பட வேண்டியது. விஜய், அதனை சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார். அதனை ஜீரணிக்க முடியாமல் பண்ணையார் கட்சிகளின் வாரிசுகள் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
@TVKVijayHQ #TNCabinet
'அனைவருக்குமான ஆட்சி' என்பதை விஜய் தலைமையிலான தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவை அனைவருக்கும் உறைக்கும் வகையில் வெளிப்படுத்துகிறது. தாழ்த்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவத்தை இதற்கு முந்தைய தமிழ்நாட்டின் எந்த அரசாங்கமும் 20 வீதமளவில் வழங்கியதில்லை. விஜய், அதனை நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கிறார். காலங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம்தான், ஜனநாயகத்தின் உச்சமும் நல்கூறுமாகும். விஜய்க்கு வாழ்த்துக்கள்...!
@TVKVijayHQ #TNcabinet
அர்ச்சுனா இராமநாதன் எனும் காரியவாதி, தமிழக முதல்வராக விஜய் பெற்றிருக்கும் வெற்றியை வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான முதலீடாக மடைமாற்ற முயற்சிக்கிறார். பாராளுமன்றத் தேர்தல் காலத்தில், மருத்துவத்துறைக்குள் புரட்சி செய்வதாக காண்பித்துக் கொண்டு மக்களிடம் சென்ற அர்ச்சுனா, அதனை வெற்றியாக அறுவடை செய்தார். இப்போது, விஜய் என்கிற வெற்றி முகத்தை தன்னோடு சேர்த்துக் கொள்ள நினைக்கிறார். அதனை, பாரம்பரிய தமிழ்த் தேசியக் கட்சிகள் புரிந்து கொள்ளாவிட்டால், மீண்டும் மண்கவ்வும் காட்சிகளை அவர்கள் தரிசிக்க வேண்டி வரும். @ITAKOrg@TNAmediaoffice@TnpfOrg
The souls of those who were killed in Mullivaikkal, and those who mourn them all ask in one raised voice for ‘Justice’. Justice is not only about compensation and apologies. It stands for rights, and for a ‘just’ solution. It stands for the ‘humanity’ to punish for the genocide which occurred. Without these, the word ‘Justice’ is bereft of meaning. Anything that is meaningless cannot pacify the bleeding hearts of the Tamil people.
I pay my respectful condolences for our departed kin..!
#May18 #முள்ளிவாய்க்கால்நினைவேந்தல்
முள்ளிவாய்க்காலில் பலிவாங்கப்பட்ட ஆன்மாக்களும், அவர்களை அஞ்சலிப்பவர்களும் ஒரே குரலில் ஓங்கிக் கோருவது நீதியையே. ‘நீதி’ என்பது நஷ்டஈடுகள், மன்னிப்புக்கோரல்கள் சார்ந்தது மட்டுமல்ல. உரித்துக்களையும், உரிமைகளையும் உறுதிப்படுத்தும் ‘தீர்வு’ சார்ந்தது. நிகழ்த்தப்பட்ட இன அழிப்பினை தண்டிப்பதற்கான ‘மனிதம்’ சார்ந்தது. இவை சாத்தியப்படாமல், ‘நீதி’ என்கிற சொல் அர்த்தம் பெறாது. அர்த்தமற்ற எதுவுமே தமிழ் மக்களின் மனங்களை அமைதிப்படுத்தாது.
உறவுகளுக்கு அஞ்சலிகள்…!
#May18 #முள்ளிவாய்க்கால்நினைவேந்தல்
முள்ளிவாய்க்காலில் பலிவாங்கப்பட்ட ஆன்மாக்களும், அவர்களை அஞ்சலிப்பவர்களும் ஒரே குரலில் ஓங்கிக் கோருவது நீதியையே. ‘நீதி’ என்பது நஷ்டஈடுகள், மன்னிப்புக்கோரல்கள் சார்ந்தது மட்டுமல்ல. உரித்துக்களையும், உரிமைகளையும் உறுதிப்படுத்தும் ‘தீர்வு’ சார்ந்தது. நிகழ்த்தப்பட்ட இன அழிப்பினை தண்டிப்பதற்கான ‘மனிதம்’ சார்ந்தது. இவை சாத்தியப்படாமல், ‘நீதி’ என்கிற சொல் அர்த்தம் பெறாது. அர்த்தமற்ற எதுவுமே தமிழ் மக்களின் மனங்களை அமைதிப்படுத்தாது.
உறவுகளுக்கு அஞ்சலிகள்…!
#May18 #முள்ளிவாய்க்கால்நினைவேந்தல்