குறை கூறுபவர்கள் எல்லாம் இதை இப்படி செய்தால் இதை விட நல்ல மாற்றம் வரும் என்று கூறுங்கள்.
அதுவே மாற்றத்திற்கு அறிகுறி.
அதை விட்டுவிட்டு இது சரி வராது அது வராது என்று பொதுவாக சொல்ல வேண்டாம்.
மாற்றம் நடக்கவில்லை என்றால் ஏமாற்றம் நமக்குத்தான் என புரிந்தால் சரி🙏🙏
பாவம் மனுசன் ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்காரு போல. உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கானுங்க.
மக்கள் கருணையானவங்களா, முட்டாள்களா என்பது தான் கேள்வியா இருக்கு.
1 மணிநேர இண்டர்வியூல இயக்குனர் H.Vinoth பொய்களால கட்டமைக்கப்படுற அரசியல் சூழல், Ukraine war, Spirituality, Science, சினிமால information vs drama, Modern warfare போர்க்கருவிகள்ன்னு எல்லாத்தையும் பத்தி அவ்ளோ தெளிவா விரிவா பேசுறாரு மனுஷன்.. 👌🏻👌🏻
ஆனா, 'ஜனநாயகன்' படத்தோட censor பிரச்சினை பத்தி கேட்டா மட்டும் சட்டுனு பச்சப்புள்ள modeக்கு போய்.. "யாரு பிரச்சினை பண்ணாங்கன்னே தெரியல.. அப்படிலாம் யாரையும் பேர் சொல்லி, குறை சொல்ல முடியாது"ன்னு சொல்றார் 🚶🏻♂️
ஆதார் பதிவை வைத்தே மரணத்தை பதிவு செய்ய மத்திய அரசின் புதிய முயற்சி!
மருத்துவமனைகளில் ஆதார் விவரங்களை பயன்படுத்தி, மரணப் பதிவை எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்ளும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முயற்சியின் மூலம்:
✅ மரணப் பதிவு செயல்முறை எளிமையாகும்.
✅ ஆவணச் சரிபார்ப்பு விரைவாக நடைபெறும்.
✅ தேவையற்ற தாமதங்கள் குறையும்.
✅ அரசு பதிவுகளில் துல்லியமான தகவல்கள் பராமரிக்கப்படும்.
இந்த புதிய நடைமுறை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு எளிதான சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
👉 Follow @மக்கள் சேவை – அரசு திட்டங்கள் மற்றும் முக்கிய அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள.
#Aadhaar #DeathCertificate #GovernmentUpdate #DigitalIndia #TamilNadu #மக்கள்சேவை #ஆதார் #மரணபதிவு #அரசுஅறிவிப்பு #தமிழ்செய்திகள்
TVK government issued an order renaming the Chief Minister's Breakfast Scheme, which provides morning meals to students studying in government and government-aided schools, as the Perunthalaivar Kamarajar Breakfast Scheme.
இரயில்வே மூலம் இறந்த உடலை எடுத்துச் செல்லலாம் – பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல்
ஒருவர் சென்னை போன்ற நகரப்பகுதியில் மரணம் அடைந்தால், அவரின் உடலை கன்னியாகுமரி போன்ற தூர இடங்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும்போது பல நேரங்களில் மிகவும் அதிக செலவு ஏற்படுகிறது. சில சமயங்களில் இது ₹75,000 வரை கூட செல்லக்கூடும்.
ஆனால், பலருக்கும் தெரியாத ஒரு மாற்று வழி உள்ளது.
இரயில்வே மூலம் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி உள்ளது.
இதன் மூலம் சுமார் ₹1,000 முதல் ₹2,000 வரை செலவில் உடலை மாற்றிச் செல்ல முடியும்.
துயர நேரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய உதவியாக இருக்கும்.
மனவேதனையுடன் இருக்கும் அந்த நேரத்தில், தேவையற்ற பணச்சுமையை குறைக்க இது ஒரு நல்ல வழிமுறை.
தேவையான நடைமுறைகள்:
1. இறந்தவர் தொற்றுநோயால் மரணம் அடையவில்லை என்பதற்கான மருத்துவர் சான்றிதழ் பெற வேண்டும்.
2. உடலை காற்று புகாதவாறு, முறையாக sealed செய்யப்பட்ட நிலையில் பேக்கிங் செய்ய வேண்டும்.
3. உடலுடன் குறைந்தபட்சம் ஒருவர் பயணம் செய்ய வேண்டும்.
4. ரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்பே நிலையத்திற்கு வர வேண்டும்.
5. உடல் சுமார் 100 கிலோ சரக்காக கணக்கிட்டு, அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
6. உடன் வரும் நபருக்கு தனியாக பயணச்சீட்டு எடுக்க வேண்டும்.
மொத்த செலவு:
சுமார் ₹1,000 – ₹2,000 மட்டும்
சமூகப் பொறுப்பு:
நாம் அறிந்த ஒரு பயனுள்ள தகவலை, அதைப் பற்றி அறியாதவர்களுடன் பகிர்வது ஒரு நல்ல மனிதநேய செயல்.
இது பல குடும்பங்களுக்கு கடினமான இறுதி நேரங்களில் பணச்சுமையை குறைக்க உதவும்.
அறிந்ததை பகிர்வோம்.
துயரத்தில் துணை நாமே.
மனிதம் வாழ்க!
சத்தமில்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தியமாக புகார்: மின்வாரியம் விளக்கம் திருநெல்வேலியில் மீட்டர் மற்றும் பில்லிங் குறைபாடுகளால் வீட்டு மின்நுகர்வோருக்கு கூடுதல் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது என்பதை நெல்லை மின்வாரிய தலைமை பொறியாளர் ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக, அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் அவர் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில்,மீட்டர் கணக்கீடு (Meter Reading) அல்லது பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளே இந்த அதிகப்படியான கட்டணத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் இந்த அசாதாரண பில்லிங் முறையால் பொதுமக்களுக்கு தேவையற்ற நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து மேற்பார்வை பொறியாளர்களும் மின் கட்டண கணக்கீட்டை காலமுறைப்படி திடீர் ஆய்வு (Surprise Inspection) செய்ய வேண்டும். விரைவான மற்றும் பிழையற்ற மின் கட்டண கணக்கீட்டை நுகர்வோருக்கு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு மின்வாரியத்தின் 24×7 இலவச உதவி எண்ணான 1912-ஐ மக்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகாரின் போது உங்கள் நுகர்வோர் எண் (Consumer Number), தற்போதைய மீட்டர் ரீடிங் மற்றும் கட்டண விவரங்களை வழங்க வேண்டும். உங்கள் புகார் பதிவானதும் அதற்கான குறிப்பு எண்ணை (Reference Number) கண்டிப்பாக கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். புகாரின் பேரில் அதிகாரிகள் உங்கள் மீட்டரை ஆய்வு செய்து, தவறு இருக்கும் பட்சத்தில் கட்டணத்தை திருத்தம் செய்வார்கள்
#Census2026
மக்கள் தொகை (சுய கணக்கெடுப்பு) - Ist phase - தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டது.
✍️இணைய தளம் மூலம் பதிவு செய்யும் முறை ஜூலை 17 தொடங்கியது, ஜூலை 31ஆம் தேதி முடிவடையும்.
✍️ https://t.co/R1bh2l6NJG என்ற இணையதளம் மூலம் உங்கள் சுய விவரங்களை பதிவு செய்யலாம்
கீழே சில குறிப்புகள் 👇
இதை ஒரு முறை படித்தால் படிவத்தை பூர்த்தி செய்ய எளிதாக இருக்கும்
✍️ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு மட்டுமே, நேரடியாகச் செல்லவும் (Census Self-Enumeration Portal) மேலே link உள்ளது ☝️
✍️ உங்கள் முழு வீட்டிற்கான பதிவுக்கும் ஒரே ஒரு மொபைல் எண்ணையே பயன்படுத்துங்கள்.
✍️ உங்கள் இருப்பிடத்தை கணக்கெடுப்பாளர்கள் எளிதாகக் கண்டறியும் வகையில், உங்கள் வீட்டின் சரியான இருப்பிடத்தை துல்லியமாகக் location map ல் குறிப்பிடவும்
✍️ விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு, 11 இலக்கங்கள் கொண்ட சுய-பதிவு அடையாள எண் (SE ID) உங்களுக்கு SMS அல்லது மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும்.
✍️ சரிபார்ப்பிற்காக அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பாளர்கள் உங்கள் வீட்டிற்கு வரும்போது, அவர்களிடம் உங்கள் 11 இலக்க SE ID-யை மட்டும் வழங்கினால் போதுமானது.
✍️ இதை மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லை.
இந்த முதல் கட்டப் படிவம் வீட்டு விவரங்கள், வீட்டு வசதிகள் (நீர், மின்சாரம், கழிப்பறை வசதி) மற்றும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது. தனிநபர் சார்ந்த விவரங்கள் பிப்ரவரி 2027-இல் சேகரிக்கப்படும்.
✍️ குடும்பத் தலைவரின் பெயரைப் பதிவு செய்த பிறகு மாற்ற முடியாது என்பதால், அப்பெயரை கவனமாக உள்ளிடவும்.
இடையூறு ஏற்பட்டால் உள்நுழைவுத் தகவலை (login context) இழக்காதீர்கள். இடையில் நிறுத்த வேண்டியிருந்தால், விண்டோவை (window) மூடுவதற்குப் பதிலாக "Save as Draft" (வரைவாகச் சேமித்தல்) வசதியைப் பயன்படுத்தவும். இதன் மூலம் நீங்கள் இதுவரை செய்துள்ள விவரங்களை இழப்பதைத் தவிர்க்கலாம்.
#Census2026
#NationalFilmAwards for year 2024:
Total 10 Awards for Tamil Cinema :
#Amaran (3)- Best Direction, Best Editing & Best BGM 🏆
#CaptainMiller (2) - Special Mention for -#Dhanush & Best Film on National & Social Values 🏆
#Maharaja (2) - Best Action Choreography & Best Supporting Actress 💐
#Raayan - Best Tamil Film
#Meiyazhagan -Best Sound Mix 💐
#Blue (non-feature) - Best Sound Design 👍
Hearty congratulations to all the winners of the prestigious Awards 💐🏆
மின்வாரியத்துக்கு வழங்கப்படும் நில தானத்திற்கு பதிவு கட்டணம் விலக்கு: பதிவுத்துறை உத்தரவு பொது நோக்கத்திற்காகத் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு (TANGEDCO) நிலத்தை தானமாக (Gift) வழங்கும் போது, அரசு முத்திரைத் தீர்வை (Stamp Duty) மற்றும் பதிவுக் கட்டணங்களிலிருந்து (Registration Fee) முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது டான்ஜெட்கோ மறு சீரமைப்பு செய்யப்பட்டு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் ஆகிய இரண்டு நிறுவனங்களாக செயல்படுகின்றன். டான்ஜெட்கோ போல இந்த இரு நிறுவனங்களுக்கும் பதிவு கட்டணம் விலக்கு பொருந்தும் என்று பதிவுத்துறை தெளிவுபடுத்திஉள்ளது. எனவே துணை மின் நிலையம் உள்ளிட்ட பிற பணிகளுக்காக மின்வாரியத்துக்கு தானம் செய்யப்படும் நிலத்தக கட்டண விலக்கு அடிப்படையில் பத்திர பதிவு செய்ய அனைத்து சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரி நில தானப் பத்திரம் (Gift Deed) தயாரிக்கும் முன்பாக, அந்தந்தப் பகுதி மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் (Superintending Engineer) இடத்தை நேரில் ஆய்வு செய்து தொழில்நுட்பப் பொருத்தத்தை உறுதி செய்ய வேண்டும். பொது நோக்கத்திற்காக அரசு அல்லது அரசு நிறுவனங்களுக்குத் தானமாக வழங்கப்படும் நிலங்களுக்கு, பதிவு மற்றும் முத்திரைக் கட்டணச் சலுகை வழங்கும் அரசாணையை (GO Ms No. 107) சார்-பதிவாளர் (Sub-Registrar) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.: பட்டா, சிட்டா, அசல் மூலப்பத்திரம் (Parent Document), மற்றும் மின்வாரிய அதிகாரியின் ஒப்புதல் கடிதம் ஆகியவை பத்திரப் பதிவிற்குத் தேவைப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் சாட்சியங்களுடன் நில தானப்பத்திரம் கட்டாயம் பதிவு செய்ய ஐஜி அருண் சுந்தர் தயாளன் அறிவுரை..
#NewsUpdate | தமிழ்நாட்டில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், அதற்கான கேள்விகள் வெளியீடு
முதற்கட்ட கணக்கெடுப்பில் வீடுகள் மற்றும் வீட்டில் உள்ள வசதிகள் குறித்து விரிவாக பதிவு செய்யப்பட உள்ளது.
#SunNews | #Census | #TamilNadu
Major IAS reshuffle in the Tamil Nadu government.
Senior IAS officers J. Radhakrishnan, Pradeep Yadav, and Supriya Sahu have been transferred as part of the latest administrative changes announced by the state government.
தத்தெடுப்பு பதிவு இனி கடுமையான சட்ட ஆய்வுக்கு உட்படும்!
தமிழக பதிவுத்துறையின் புதிய சுற்றறிக்கை (03.07.2026) – தத்தெடுப்பு ஆவண பதிவு குறித்து விரிவான விளக்கம்
தமிழ்நாடு பதிவுத்துறையின் Inspector General of Registration (IGR) அவர்கள் 03.07.2026 அன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் 1261/C1/2025, தத்தெடுப்பு (Adoption Deed) ஆவணங்களை பதிவு செய்யும் நடைமுறையில் முக்கியமான சட்ட வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இந்த சுற்றறிக்கை, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய WP(MD) No.18174/2018 தீர்ப்பின் அடிப்படையிலும், அரசின் அறிவுறுத்தல் மற்றும் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரின் (Additional Advocate General) சட்டக் கருத்தின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின் நோக்கம்
இந்தியாவில் தத்தெடுப்பு என்பது அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டத்தின் கீழ் நடைபெறுவதில்லை. ஒவ்வொரு மதத்தினரும் அவர்களுக்கு பொருந்தும் தனிப்பட்ட சட்டங்களின்படி அல்லது Juvenile Justice Act-ன் கீழ் மட்டுமே தத்தெடுப்பு செய்ய வேண்டும். இந்த சட்ட விதிகளை மீறி எந்த தத்தெடுப்பு ஆவணமும் பதிவு செய்யப்படக் கூடாது என்பதற்காகவே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
⸻
முக்கிய அறிவுறுத்தல்கள்
1. இந்து தத்தெடுப்புகள் (HAMA, 1956)
Hindu Adoption and Maintenance Act, 1956 (HAMA)-ன் கீழ் சட்டபூர்வமாக நடைபெறும் தத்தெடுப்புகளுக்கு:
✔️ CARA (Central Adoption Resource Authority) அனுமதி தேவையில்லை.
✔️ Child Welfare Committee (CWC) அனுமதியும் தேவையில்லை.
✔️ Juvenile Justice Act, 2015 நடைமுறைகளும் பொருந்தாது.
HAMA-வின் அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
⸻
2. பிற மதத்தினரின் தத்தெடுப்பு
இந்து சட்டத்திற்கு உட்படாதவர்கள் (முஸ்லிம், கிறிஸ்தவர், பார்சி உள்ளிட்டோர்) குழந்தையை தத்தெடுக்க விரும்பினால்,
✔️ Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015-ன் நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
✔️ CARA மூலம் அங்கீகாரம் பெற்ற நடைமுறையில் மட்டுமே தத்தெடுப்பு செய்ய வேண்டும்.
✔️ Child Welfare Committee (CWC) மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதிகள் கட்டாயம்.
⸻
3. பதிவாளர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம்
சார்பதிவாளர்கள்:
* தத்தெடுப்பு ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
* எந்த சட்டத்தின் கீழ் தத்தெடுப்பு நடைபெறுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* சட்டத்திற்கு முரணான ஆவணங்களை பதிவு செய்ய மறுக்க வேண்டும்.
⸻
4. கண்காணிப்பு
மாவட்ட பதிவாளர்கள் (District Registrars) மற்றும் துணை பதிவுத்துறை தலைவர்கள் (DIG Registration),
* அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இந்த சுற்றறிக்கை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
⸻
சட்ட ரீதியான முக்கியத்துவம்
இந்த சுற்றறிக்கை மூலம் பதிவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது:
* பதிவு அலுவலர் வெறும் ஆவணத்தை பதிவு செய்யும் அலுவலர் மட்டுமல்ல; சட்டப்படி தகுதியான ஆவணமா என்பதை சரிபார்க்கும் பொறுப்பும் அவருக்கு உள்ளது.
* எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு பொருந்தும் சட்டத்தை மீறி தத்தெடுப்பு ஆவணங்கள் பதிவு செய்யப்பட முடியாது.
* தவறான அல்லது சட்டவிரோத தத்தெடுப்பு ஆவணங்களை பதிவு செய்வதை இந்த சுற்றறிக்கை தடுக்கிறது.
⸻
பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது
🔹 இந்துக்கள் HAMA சட்டத்தின் கீழ் தத்தெடுப்பை மேற்கொள்ளலாம்.
🔹 HAMA-க்கு உட்படாதவர்கள் CARA மற்றும் Juvenile Justice Act நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
🔹 தத்தெடுப்பு ஆவணம் பதிவு செய்யும்போது தேவையான அனைத்து சட்ட ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
🔹 சட்ட நடைமுறைகளை பின்பற்றாத தத்தெடுப்பு ஆவணங்களை சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்க அதிகாரம் பெற்றுள்ளார்.
இந்த சுற்றறிக்கை, தத்தெடுப்பு ஆவணப் பதிவில் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் முக்கிய நிர்வாக நடவடிக்கையாகும். குறிப்பாக, Hindu Adoption and Maintenance Act, 1956 மற்றும் Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015 ஆகியவற்றின் வரம்புகளை தெளிவுபடுத்தி, அனைத்து பதிவாளர்களும் சட்டப்படி மட்டுமே தத்தெடுப்பு ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக பதிவுத்துறை வலியுறுத்தியுள்ளது.
Tamil Nadu government announced that the public can file complaints via WhatsApp on the number 9498180936 if they are asked to pay bribes in government offices
CS instructions copy