யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?
எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் எம் நெஞ்சம் நிறைந்த #திராவிடத்தலைவர்@mkstalin அவர்களுக்கே உரித்தானது!🖤❤️🌄
#DMK#DMK4TN#MKStalinEra
கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா?
பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போராடும் செவிலியர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திட மனம் வராத துரோக த.வெ.க. அரசுக்கு, ஈவு இரக்கமின்றி அவர்களைக் கைது செய்ய மட்டும் எப்படி மனம் வந்ததோ?
போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகரே குற்றம்சாட்டியிருக்கிறார். தொடர்ந்து, போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு;
தேர்தல் வந்தபோது பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி;
ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்தால் காவல்துறை நடவடிக்கை!
முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதலமைச்சர் விஜயும், அவரது நிர்வாகத் திறனற்ற துக்ளக் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அதிமேதாவி அமைச்சர்களும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?
போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’? இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா?
போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்குவாரா? அல்லது, செவிலியர்களை மிரட்டி குண்டுகட்டாகக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை “சிங்கப்பெண் in action” என Reels செய்து தனது virtual abuser-கள் மூலம் trend செய்து விளம்பரம் தேடுவாரா?
#NursesProtest #MedicalWorkersProtest
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் முதலமைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#TNAssembly
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற்றை எழுதுவோம்!
@Udhaystalin@dmk_youthwing
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
ஜெயிக்கப்போவது உதயசூரியன் தான். நம் தலைவர் தான் என்ற உறுதியோடு களப்பணியாற்றுவோம்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான, மதநல்லிணக்கத்திற்கு எதிரான ஆதிக்க சக்திகளை நமது வாக்குகளின் மூலம் வீழ்த்திக்காட்டுவோம்!
#Vote4DMK#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்
முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர், ஆற்காட்டார் ஆகியோர் நின்று வென்ற பெருமைமிகு தொகுதியான அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியில் இன்று மாலை கழகத்தின் வெற்றி வேட்பாளர் @nchitrarasu அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட தமிழ்நாட்டை தன் விடியல் ஆட்சி மூலம் ஏற்றம் பெறச் செய்த மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் சாதனை திட்டங்களை எடுத்துக்கூறினோம்.
திரளாக கூடி அன்பு நிறை வரவேற்பை வழங்கிய அண்ணாநகர் மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டோம்.
தலைவர் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்!
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
#VoteForDMK
ICC Under-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2026-இல் கோப்பையை வென்ற நம் இந்திய அணியில், இடம்பெற்று இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான தம்பிகள் அம்ப்ரிஷ் மற்றும் தீபேஷ் ஆகியோரை இன்று நாம் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தங்களது சிறப்பான திறமையினை வெளிப்படுத்தி வருவது நம் அனைவருக்கும் பெருமை!
இந்த இளம் வீரர்களுக்கு நம் திராவிட மாடல் அரசு எல்லா வகையிலும் துணை நிற்கும். @SportsTN_
தன்னையே மெழுகாய் உருக்கி தமிழ்நாட்டிற்கு வெளிச்சம் தந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று.
அண்ணாவின் புகழ் ஓங்குக!
#RememberingAnna#PerarignarAnna
கழக இளைஞர் அணி நடத்திய #திமுக75_அறிவுத்திருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற #இருவண்ணக்கொடிக்கு_வயது75 கருத்தரங்கத்தின் பத்தாவது அமர்வில், ‘திராவிட அடையாளத்தில் தமிழர் அரசியல்' என்ற தலைப்பில், தந்தை பெரியார் திராவிடர் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் சீனி.விடுதலை அரசு அவர்கள் ஆற்றிய உரை தொகுக்கப்பட்டு ‘முரசொலி’யில் வெளியாகியுள்ளது.
சுயமரியாதை உணர்வை அளிக்கும் ‘திராவிட’ அடையாளத்தின் தேவை என்ன, திராவிட இயக்கச் சாதனைகள் என்ன என்பதை விளக்கி அதன் தனித்தன்மையைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய அண்ணன் அவர்களுக்கு அன்பும் நன்றியும்!
#DMK75 @dmk_youthwing
கழக இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர-ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளை-வார்டு-பாகம் என 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்பாளர்- துணை அமைப்பாளர்கள் அடங்கிய வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
🌄'ஆதிக்கத்திற்கு அடிபணியாது தமிழ்நாடு' என்பதை விளக்கிய ‘என்றும் வெல்லும் திராவிடம்’ மேடை நாடகம்
🌄சகோதரர் @SuriyaKML அவர்களின் சமூக வலைதளம் பற்றிய உரை
🌄S.I.R குறித்து கழக சட்டத்துறை செயலாளர் அண்ணன் @nrelango_dmk ஆற்றிய விளக்கவுரை
🌄இளைஞர் அணியின் ஆக்கப்பணிகள் குறித்து, கழகத் துணை பொதுச் செயலாளர் அண்ணன் @dmk_raja அவர்களின் உரை
🌄இளைஞர் அணியைப் பாராட்டி பணிகள் சிறக்க வாழ்த்திய கழக பொதுச் செயலாளர் @katpadidmk மாமா
இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் இளைஞர் அணி தொடங்கப்பட்ட சமயத்தில் இருந்த அதே துடிப்புடனும் எழுச்சியுடனும் உற்சாகத்துடன் கழகத் தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்கள் ஆற்றிய உரை New Dravidian Stock இடையே மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது!
இந்த நிர்வாகிகள் சந்திப்பு 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெல்ல அடித்தளம் அமைத்துள்ளது, இதன் மூலம் சங்கிகளுக்கும் அவர்களின் பழைய புதிய அடிமைகளுக்கும் சொல்லும் செய்தி ஒன்று தான் WE WILL NEVER ALLOW YOU.. WILL FACE THE CONSEQUENCES!
#Youth4DMK2026 @evvelu
கழகத் தலைவர்,மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி வடக்கு ஒன்றியம்
பாகம் எண்-200,201 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டத்தில் வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம்.
@arivalayam