கரூரில் தங்களை கான வந்த 41பேர் இறந்த பின் ஓடி ஒழிந்தது ஏன் என்ற விசாரணைக்குச் சென்று திரும்பும்வதை எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் எதையோ சாதித்ததைப்போல இப்படி கை காட்டி உற்சாகமாக வெளிக்காட்டி கொள்ள முடிகிறது என்றால் உங்கள் @TVKVijayHQ மனதில் எவ்வளவு குரூரம் இருக்க வேண்டும்.
உங்கள் மூளையில் எவ்வளவு அழுக்கு இருக்க வேண்டும்.
அரசியலில் மாற்றுக் கருத்து இருந்தால் கொள்கை ரீதியில் விவாதிக்கலாம், சண்டையிடலாம். ஆனால் பொய்யான குற்றச்சாட்டுகள் உருவாக்கி அண்ணனை வீழ்த்த நினைப்பது கேவலம். தொழில்நுட்பம் வளர்ச்சிக்காகவே, அழிவிற்கல்ல. போராட்ட குணம், கொள்கை பிடிப்பு, நேர்மை - இதுவே அண்ணனின் அடையாளம். 🔥
@rajiv_dmk
அரசியல் மாற்றுக் கருத்து இருப்பின் கொள்கை ரீதியில் விவாதிக்கலாம், சண்டையிடலாம். ஆனால், என்னை வீழ்த்த இவ்வளவு கீழ்த்தரமாக ஒரு பொய் செய்தியை 10 டாலர் கிரிப்டோ செலுத்தி உருவாக்கும் அளவிற்கு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?
தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு தானே தவிர அழிவிற்கு அல்ல
யாருக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் வந்து கொலை கூட செய்யுங்கள் .
பொய்யான குற்றச்சாட்டுகளை வாரி வீசி வீழ்ந்த நினைப்பது அதைவிட கொடூரமானது
இதை எல்லாம் வைத்து யார் பேசியமாதிரியும் உருவாக்கலாம் .
நான் ஒருபோதும் ஒருவரிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை .
யார் ஒருவரையும் இப்படி வீழ்த்தி மகிழ நினைப்பது கேவலம்.
இந்த அவதூறு என்னை வீழ்த்தாது தொடர்ந்து ஒலிக்கும் என் பெருங்குரல்.
இதோ போலியாக உருவாக்கும் தளம்:
https://t.co/20ki3BhkXO
இதில் வருவதையும் பரவும் screenshot- ஐயும் பாருங்கள் . அப்படியே வரும்.
தீ பரவட்டும்!!
தீ பரவட்டும்!!
தமிழ்த்தீ பரவட்டும்!!
மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம்!!
எம்மொழி காக்கும் போரில்
இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் !!
#தீ_பரவட்டும்
கோவை சிங்கையில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொது கூட்டத்தில் தமிழின் தனித்துவம் காத்து நின்ற தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி உறையாற்றினேன்!!!
உடன் மாவட்ட பொறுப்பாளர் செந்தமிழ் செல்வன், மாணவர் அணி துணை செயலாளர் V.G.கோகுல் ,பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் ராஜ்குமார்,இளம் பேச்சாளர் சுகன், மாநில நிர்வாகிகள் அண்ணன் நா.கார்த்திக்,வழக்கறிஞர் அருள் மொழி, அக்கா மீனா ஜெயக்குமார், அண்ணன் மு.ரா.செல்வராஜ்,அண்ணன் lPF தமிழ்ச்செல்வன்,Dr.கோகுல்,மாவட்ட அமைப்பாளர் சிவபிரகாஷ் ,துணை அமைப்பாளர்கள் பைந்தமிழ்,பாண்டி,நந்து,ஜெகதீஸ், சுருதி உள்ளிட்ட பகுதி மாணவர் அணி தம்பிகள் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள்!!
#தீ_பரவட்டும்
தலைவிரித்தாடிய இந்தி ஆதிக்கத்துக்கு முடிவு கட்டிட தன்னுயிரை ஈந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரமிகு தொண்டர்களின் தியாகத்தைப் போற்றுவோம்!
#தீ_பரவட்டும்
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!
மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.
இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.
தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.
மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
#LanguageMartyrsDay #StopHindiImposition
இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
மொழி என்பது ஒரு இனத்தின் பன்னெடுங்கால வரலாற்றையும், சிந்தனை வளர்ச்சியையும், பண்பாட்டையும் தன்னகத்தே கொண்டுள்ள உயிர்ப்புள்ள கருவூலம். பல நூறு மொழிகள் பேசப்படும் ஒரு நாட்டில், ஒற்றை மொழியைத் திணிப்பது மக்களின் தனித்துவத்தையும், சுயமரியாதையையும், முன்னேற்றத்திற்கான நம்பிக்கையையும் சிதைக்கும் செயல்.
இந்தப் பேருண்மையை மிகத் தெளிவாக உணர்ந்து, தாய் தமிழ் மொழியைப் பாதுகாக்க துப்பாக்கி ரவைகளுக்கும், வெந்தழலுக்கும் தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப்போர் வீரர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை உளமார நினைவுகூர்வோம்.
எக்காலமும், எந்தச் சூழலிலும் நம் மொழி உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற உறுதியை நம் தலைமுறையைத் தாண்டி வாழச் செய்வோம்.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்!
எண்ணில்லா போராட்டங்களும், விலை மதிப்பில்லா உயிர்த் தியாகங்களும் செய்து அன்னைத் தமிழைக் காத்த தியாகிகளின் நினைவைப் போற்றிடும் நாள் இன்று. இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடிய அவர்களின் வழியில் என்றும் நம் மொழியுரிமையைக் காத்து நிற்போம்.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!
எம் இனத் தலைவரோடும்,
எங்கள் இளந்தலைவரோடும்
எம் தாய் மொழியாம் தமிழை காக்க உயிர்தியாகம் செய்திட்ட மாவீரர்களின் நினைவிடத்தில் கழக மாணவர் படை!!!
#தீ_பரவட்டும்
தமிழர் திருநாளை முன்னிட்டு #தமிழ்நாடு இயல் இசை நாடகம் மன்றம் சார்பில் நடைபெற்ற மாபெரும் பட்டிமன்றத்தை தொடங்கி வைத்து பேரூரையாற்றியபோது
@mkstalin@arivalayam@DMKITwing