அன்பிற்குரிய மாவட்ட அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், அர்ப்பணிப்புள்ள காவி சொந்தங்களுக்கும்
வணக்கம் 🙏
நாம் அனைவரும் ஒரு அரசியல் இயக்கத்தில் பயணிப்பவர்கள் மட்டுமல்ல; ஒரு தேசிய சிந்தனையையும், ஒரு நீண்டகால இலட்சியத்தையும் தாங்கிச் செல்லும் பணியாளர்கள்.
இன்றைய அரசியல் சூழலில் பல்வேறு மாற்றங்கள், கருத்து வேறுபாடுகள், புதிய இயக்கங்கள் உருவாகுவது இயல்பான ஒன்றாகும்.
எந்த ஒரு பெரிய அரசியல் இயக்கத்திலும் தலைவர்கள் வரலாம், செல்லலாம்; ஆனால் கொள்கையும், இயக்கத்தின் அடிப்படை நோக்கமும் நிலைத்திருக்க வேண்டியது அவசியம்.
தமிழகத்தில் மரியாதைக்குரிய திரு.K. அண்ணாமலை அவர்கள் உருவாக்கிய அரசியல் எழுச்சியும், அவரின் உழைப்பும் மறுக்க முடியாத ஒன்று.
அதே நேரத்தில், ஒரு தனிநபரைத் தாண்டி நாட்டின் நலனுக்காக, தேசிய முன்னேற்றத்திற்காக, பல தலைமுறைகள் கட்டியெழுப்பிய அமைப்பே பாரதிய ஜனதா கட்சி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு இயக்கத்தின் வலிமை என்பது:
“ஒரே ஒருவரின் புகழில் இல்லை,
தற்கால அரசியல் உணர்ச்சிகளில் இல்லை,
அடித்தட்டு தொண்டர்களின் அர்ப்பணிப்பிலும்,
ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு பணியிலும் தான் இருக்கிறது.”
இன்று சிலர் உணர்ச்சியின் அடிப்படையில் வேறு பாதையைத் தேர்வு செய்யலாம். அது அவர்களின் ஜனநாயக உரிமை.
ஆனால் நாம் எடுக்கும் முடிவு, தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் அல்ல; நாட்டின் எதிர்காலம், தமிழகத்தின் அரசியல் திசை, மற்றும் அமைப்பின் நீண்டகால பயணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இருக்க வேண்டும்.
எனவே நாம் அனைவரும் கட்டுப்பாடுடன் உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பான பாரதிய ஜனதா கட்சியில் தொடர்ந்து பயணிப்போம் என்று உறுதி ஏற்போம்.
என்றும் தேசப்பணியில்,
Adv.C. ஜெகதீசன் ML.,
மாவட்ட தலைவர் - புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
பாரதிய ஜனதா கட்சி.
சட்டமன்றத்தில் பாஜக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்எல்ஏக்களுக்கு தக்க பதிலடி கொடுத்த உதகமண்டலம் பாஜக எம்எல்ஏ திரு.போஜராஜன் அவர்கள்!
2013-ல் தங்கம் வாங்க வேண்டாம் என ப. சிதம்பரம் சொன்னபோது மௌனம் காத்த ராகுல் காந்தி, இன்று அதே வேண்டுகோளைப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் விடுத்தால் மட்டும் எதிர்ப்பது ஏன்?
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் துணையோடு அச்சத்தை வென்று, அநீதிக்கு எதிராகப் போராடி, புதிய பொற்காலத்தை நோக்கிப் புறப்பட்டது மேற்கு வங்காளம்.
இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்காகப் நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள் கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்திற்கும், உள்நோக்கத்தோடு முட்டுக்கட்டை போடுவதே காங்கிரஸின் இழிவான அரசியலாகிவிட்டது. நாட்டின் முன்னேற்றத்தை விட, தன் அரசியல் சுயநலமே முக்கியம் எனச் செயல்படும் காங்கிரஸின் போக்கை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்!
பிரதமர் திரு.@narendramodi அவர்களின் உஜ்வாலா திட்டத்தால் சமையலறைகளை ஒளிரச் செய்தது மட்டுமல்லாமல், சுமார் 10.55 கோடி குடும்பங்களின் எதிர்காலத்தையும் பிரகாசமாக்கியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பிலும், பொருளாதாரத்திலும் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தப்போகும் 'கிரேட் நிக்கோபார் திட்டத்தை' அந்நிய சக்திகளுக்கு ஆதரவாக நிறுத்த நினைக்கும் காங்கிரஸ் கட்சியின் அரசியல் சதியை முறியடிப்போம்.
நமது தேசிய ஜனநாயக கூட்டணியின்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் – திருமயம் சட்டமன்றத் தொகுதியின்
வெற்றி வேட்பாளர், மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் திரு. வைரமுத்து அவர்களின் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர்களின் வெற்றிக்கான உறுதியான ஆதரவை வெளிப்படுத்திய தருணம்.
இந்த புனித நாளில் பழைய கசப்புகளை மறந்து, ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து கொள்ளும் தூய உள்ளத்தைப் பெற்றிடுவோம். அனைவருக்கும் புனித வெள்ளி நல்வாழ்த்துகள்!
புரட்சி தமிழரின் எழுச்சி பயணத்தின் ஓர் பகுதியாக,
நேற்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார பயணத்தில் கலந்து கொண்ட தருணம்.
மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது!
#NDA#NDA4TN#BJP
தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினருக்கு எதிராகவும் குற்றங்களை செய்துள்ளது திமுக அரசு - தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர், மத்திய அமைச்சர் திரு.PiyushGoyal அவர்கள்!
2026-க்குள் நக்சலிசம் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற உள்துறை அமைச்சர் திரு. AmitShah அவர்களின் சபதம், பிரதமர் திரு. @narendramodi அவர்களின் வழிகாட்டுதலின் மூலம் இன்று நடந்தேறிவிட்டது..!