Birthday greetings to Captain Cool Thiru. @msdhoni.
Whether on the field or away from it, your composure, leadership and enduring charisma continue to inspire millions. The anticipation of watching you in action again remains as strong as ever.
Wishing you good health, happiness and many more years of success.
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?
சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக 2006ஆம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்போது, உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார். 2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு. ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?
நம் உயிரோடும் – உணர்வோடும் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை தென் மேற்கு மாவட்டக் கழகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சென்ற ஜுன் மாதம் முழுவதும் சுமார் 256 நலத்திட்ட நிகழ்ச்சிகளை கழக நிர்வாகிகள் நடத்தி இருக்கிறார்கள்.
அவர்களுக்கான பாராட்டு விழா அடையாறு முத்தமிழ் மன்றத்தில் இன்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்றோம்.
ஆட்சிப்பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் மக்களுக்கான களத்தில் தி.மு.கழகம் முன்வரிசையில் நிற்கும் என்பதை உறுதி செய்கிற வகையில் கலைஞர் பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை தென் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளைப் பாராட்டி உரையாற்றினோம்.
கலைஞர் புகழ் ஓங்கட்டும்
@mylaivelu@ThamizhachiTh
Ed யை வைத்து பாஜக செய்ததை காவல்துறையை வைத்து தவெக செய்கிறது குதிரை பேரத்தில் ஈடுபட்ட விஜய் அரசின் மூக்கு அறுபட்டது தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன், Ex.M.L.A., பேட்டி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குதிரைபேர குற்றச்சாட்டை சுமத்தி மக்கள் மத்தியிலே திமுக மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற தவெக அரசின் முயற்சி முறியடிக்கபட்டுள்ளது. நேற்று எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் வழக்கின் மூலமாக நீதிமன்றத்தால் திரு விஜய் அரசினுடைய மூக்கு அறுக்கப்பட்டிருக்கிறது. இது பொய்யான வழக்கு இந்த வழக்கில இவரை கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டிய முகாந்தரம் இல்லை என்ற அடிப்படையில் நேற்றைக்கு திரு.அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் மூலம், முதல் முறையாக இந்த குதிரைபேர சர்க்கார் மூக்கறுக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து 55 நாட்களைக் கடந்தும் நிர்வாகத்தைப் பற்றி கவலைப்படாத தவெக அரசு தினந்தோறும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது எந்த குற்றங்களை சுமத்தலாம் என்று சிந்தித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையை அரங்கேற்றி வருகிறார்கள். அந்த வகையிலதான் திரு.அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் மீது ஒரு அவதூறு வழக்கு. அவதூறு வழக்கு போடுவதில் கைது செய்ய வேண்டிய அவசியம் கிடையவே கிடையாது. முன்ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே காரணத்திற்காக அவசர அவசரமாக ஓடி வந்து திரு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை காவல்துறை கைது செய்வதனுடைய பின்னணி என்ன.? எதற்கு ஒரு அவதூறு வழக்கில் கைது செய்தவரை 6 மணி நேரம் 7 மணி நேரம் காவல்துறை விசாரணை செய்தது.? அது என்ன மர்மம்.?
அந்த விசாரணையின் போது திரு.அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை எம். எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யுங்கள் தவெக வில் இணைய பணம் தருகிறோம்” என கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு. 6 மணி நேர விசாரணை இதற்காக தான் நடந்துள்ளதா.?
பாஜக எப்படி ED யை விட்டு மிரட்டி கட்சியில் சேர்க்கிறார்களோ அதேபோல தான் காவல்துறையை வைத்து மிரட்டி கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையை தவெக அரசு செய்கிறது.
இந்த உண்மை வெளிப்பட்ட உடன் பதறிப்போய் நேற்று இரவு 9 மணிக்கு மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.நிர்மல் குமார் அவர்கள் ஒரு பேட்டி கொடுக்கிறார். பேட்டியில் முறையான விளக்கம் கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் அவர் என்ன சொல்கிறார் தனி நபர் அவதூறு செய்கிறார். உடல் கேலி செய்கிறார். எங்களின் எம். எல். ஏ வை ரௌடி என கூறுகிறார். இப்படி எல்லாம் சொல்லும் நிர்மல் குமார் மீது உக்கரபாண்டியன் என்பவர் உசிலம்பட்டியில் நில மோசடி செய்தார் நிர்மல் குமார் என 420 புகார் கொடுத்துள்ளார். இந்த 420 நிர்மல் குமார் வந்து திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்து ரவுடி என்றெல்லாம் சொல்ல எந்த அருகதையும் இல்லை.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு மக்களை கொன்று குவித்த கட்சி திராவிட முன்னேற்ற கழகம், கொன்று குவித்தவர் என்று எங்க தலைவருடைய பெயரை சொல்றார். இது எந்த விதத்தில நியாயம்? இப்படி அவதூறா பேசக்கூடிய இந்த ஆதவ் அர்ஜுனா ஏன் கைது பண்ணாம இன்னும் வேடிக்கை பார்த்திட்டு இருக்கிறது காவல்துறை.
யாரை ரவுடின்னு சொல்றாரு திரு.நிர்மல் குமார் நிதித்துறை அமைச்சராக இருக்கிறாரே மரிய வில்சன் அவர் மீது வீடு புகுந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வழக்கு உள்ளது. அந்த வழக்கு தொடர்பாக இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் அவரை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பட்டுள்ளது. அதேபோல ஒரு மினிஸ்டர் மேல பவுடர் குற்றச்சாட்டு இருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மேல பாதிக்கபட்ட பெண் அளித்த குற்றச்சாட்டு இருக்கிறது. அமைச்சர் திரு.நிர்மல் குமார் மீது 420 புகார் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தலைமை அமைச்சரா இருக்கக்கூடிய திரு. விஜய் அவர்கள் மீது குதிரைபேர ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி இருக்கிறோம். இப்படி கிரிமினல் பின்னணி கொண்ட கேபினட்டாக, குற்றவாளிகள் நிரம்பிய கேபினட்டாக தவெக அமைச்சரவை இருக்கிறது. இப்படிபட்ட தவெக அரசாங்கம் திராவிட முன்னேற்ற கழகத்தை பார்த்து கேள்வி கேட்பதற்கு துளியும் அருகதை இல்லை.
நேற்றைக்கு அதிமுகாவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முன்னால் அமைச்சர் ஓஎஸ் மணியன் 'விஜய பாஸ்கர் அமைச்சர் பதிவி வாங்கிதருவதாக பேரம் பேசினார்' என கூறி இருக்கிறார். யார் இந்த குதிரை பேரத்தை செய்து கொண்டு உள்ளார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
திராவிட முன்னேற்ற கழகம் வென்று இருக்கிறது 59 இடங்கள். ஒரு எம்எல்ஏ, இரண்டு எம்எல்ஏ வை விலைக்கு வாங்கி எப்படி ஆட்சி அமைக்க முடியும் இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தவெக அமைச்சர்கள் எல்லாம் பேசுவது வடிகட்டியே பொய். திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்த வேண்டிய நோக்கத்திற்காக மட்டுமே கூறப்படும் குற்றச்சாட்டு.
ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்து தினம் தினம் அரசு நிர்வாகத்தை கவனிக்க துப்பில்லை. நிர்வாகம் தேங்கி கிடக்கிறது. ஆட்சிக்கு வந்து 56 நாளாவது இதுவரைக்கும் மக்களுக்கான வேலை என்ன செய்துள்ளது இந்த அரசு.?
குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்க துப்பில்லை சமூக வலைதளத்தில் அரசின் குறைகளை சுட்டிக்காட்டி செயலாற்றி கொண்டிருக்கக்கூடிய ஆர்ஜே.சரண் ஜெயராமன் போன்ற தம்பிகளை எல்லாம் பொய் காரணம் சொல்லி கைது செய்து கொண்டுள்ளனர். திமுக மீது அவதூறுகளை பரப்பி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து , மேயர் பிரியா உள்ளிட்ட கழக மகளிர் நிர்வாகிகளை கொச்சையாக பேசிவரும் தவெக ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தீர்களா.?
மாற்றம் கொடுப்போம் என்று சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்து அதிமுக கட்சியில இருப்பவரை தவெக கட்சியில சேர்க்கும் கட்சி மாற்றம் தான் நடந்துள்ளது. இன்னும் பலரை ராஜினாமா செய்ய வைத்து ஆளும் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தான் இந்த அரசு உள்ளது. இவற்றை எல்லாம் விட்டுவிட்டு வரக்கூடிய திங்கட்கிழமையில் இருந்தாவது மக்கள் பணியில் ஈடுபடுங்கள்.
இந்தியாவிற்கு முன் மாதிரியாக இருந்த தமிழ்நாட்டு அரசியலின் மாண்பை சிதைத்து, ஒரு மோசமான அரசியலை முன்னெடுத்து வருகிறது இந்த தவெக அரசு. ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் தவெக.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் இன்று (04-07-2026), கழகத் தொண்டர்களின் வாழ்த்துகளுடன் இருவாரகாலப் பயணமாக அயலகத்துக்குப் புறப்பட்டார்.
“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.
அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!
#LetterToBrethren
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடிதம்.
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
பொழுது புலர்ந்தாலே, எல்லோருக்கும் புத்துணர்ச்சி பிறக்கும். எனக்கோ, அந்தப் புத்துணர்ச்சியோடு புது உற்சாகமும் ஊக்கமும் கிடைக்கிறது. அதற்கு உடன்பிறப்புகளான நீங்களன்றி வேறு காரணமில்லை. தேர்தல் தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை என்றாலும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய தலைமைப் பொறுப்பு என்னிடம் உள்ள கடமையை உணர்ந்து, நாள்தோறும் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்திற்கு வரத் தொடங்கினேன்.
“மக்கள் பணியே எல்லாவற்றையும் விட மகத்தானது. மக்களுக்காக உழைப்பதே நம் கடமை” என்று அங்கு திருவுருவச் சிலையென நிற்கும் பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் கலைஞரும் நிதமும் அறிவுறுத்துகின்றனர்.
“சோதனைகள் நமக்கென்ன புதிதா? அந்த நெருப்பாறுகளை நீந்திக் கடப்போம் வா” என்று கம்பீரமாய் எழுந்து நிற்கும் கற்கோட்டையான அறிவாலயத்தின் வாயில் தினமும் வரவேற்கிறது.
உள்ளே நுழைந்ததும், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் உன்னை இயக்குவது நாங்கள்தான்; நீ இயங்குவது எங்களுக்காகத்தான். நம் பயணத்தின் வேகம் கூட வேண்டும். அதற்குப் புதிய பாதையில் நாம் பயணிக்கத் தொடங்க வேண்டும்” என்று விழிகளின் வழியே அன்புக் கட்டளையை இட்டவாறு உடன்பிறப்புகளான உங்களில் பலர் வரவேற்கின்றனர்.
கழக நிர்வாகிகள் - கழக முன்னோடிகள் தொடங்கி, கழகத்தின் மீது பற்றுக்கொண்ட ஆதரவாளர்கள் எனக் குழந்தைகள் - மாணவர்கள் - இளைஞர்கள் - பெண்கள் - முதியோர் என நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் என்னைக் காண வருகின்றனர். அப்படி வரும் ஒவ்வொருவரிடமும் பேசி, அவர்களது எண்ணங்களையும் - உணர்வுகளையும் நான் அறிந்து வருகிறேன். ஒவ்வொருவரின் குரலும் சொற்களும்தான் வேறுபடுகிறதே தவிர, அனைவரது உணர்வும் ஒன்றுதான். அவர்கள் என்னிடம் சொல்வதெல்லாம், “நாங்க இருக்கோம். நாம மீண்டும் வருவோம்!”. இந்தச் சொற்கள் போதுமே, எதிரிகளை ஒருசேர வீழ்த்தும் வலிமையைக் கொடுக்க!
இந்த வலிமையை நீங்கள் கொடுப்பதால்தானே 75 ஆண்டுகளைக் கடந்தும், கம்பீரமாக நிற்கிறோம்!
வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள்… நம்மைப் போல் வெற்றி பெற்றவர்களும் இல்லை; தோல்வியைக் கண்டவர்களும் இல்லை. வெற்றியை நாம் தலையில் ஏற்றிக்கொண்டதுமில்லை; தோல்வியை இதயத்தில் தாங்கிக்கொண்டதுமில்லை! அதனால்தானே ஃபீனிக்ஸ் பறவையென மீண்டெழுகிறோம்.
இன்று நாட்டில் நடக்கும் காட்சிகளைப் பாருங்கள்… ஒரு சில இயக்கங்களால் ஒரு தோல்வியைக்கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
ஆனால் நாம், கொள்கை உறவாலும் - உடன்பிறப்பு எனும் நேசத்தாலும் பிணைக்கப்பட்டு, ஒரு குடும்பம் என ஆல் போல் வேரூன்றி வளர்ந்து நிற்கின்றோம்.
அப்படிப்பட்ட நம் இயக்கம் அடுத்த நூறாண்டுகளுக்குப் பயணிக்க வேண்டிய திசையைத் தீர்மானிக்க வேண்டியதும், உங்கள் உணர்வுகளை உள்வாங்கி அதில் புதிய பாதையை அமைக்க வேண்டியதும் தலைமைத் தொண்டனான என் கடமையல்லவா!
அதனால்தான், 38 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்து, ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று, உங்களின் உள்ளங்களை அறிந்து வந்து, ஒளிவுமறைவின்றி என்னிடம் வழங்கச் சொன்னேன். அதுமட்டுமின்றி, உங்கள் குரல் ஒலித்திட எவ்வித தயக்கமும் கூடாதென “உடன்பிறப்பின் குரல்” என்ற இணையதளத்தையும் உருவாக்கினேன்.
நீங்களும் உங்கள் எண்ணங்களை உரிமையோடும் அக்கறையோடும் எடுத்துச் சொன்னீர்கள். என் கண்களும் காதுகளுமாய் வந்தவர்கள், அவற்றை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தனர்.
காலை அறிவாலயத்தில் உங்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்பதும், மாலை தொடங்கி இரவு வரை நீங்கள் பதிவு செய்த கருத்துகளைப் படிப்பது எனவும் அன்றாடம் உங்களின் எண்ணங்களை ஆய்ந்தறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். உங்களது எண்ணங்களின் அடிப்படையில், கழகத்தின் மறுசீரமைப்பிற்காக - மறுகட்டுமானத்திற்காக, இளமையும் அனுபவமும் கலந்த “மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு”வையும் இப்போது அமைத்திருக்கிறேன்.
இந்தக் குழு, கழக மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுவரையறை, கழகத்தின் சார்பு அணிகளின் மறுசீரமைப்பு, தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள், கிளை முதல் தலைமை வரை மறுசீரமைப்பு குறித்த பரிந்துரைகளை என்னிடம் வழங்கிட அறிவுறுத்தியுள்ளேன்.
“தி.மு.க.வைப் போல் அமைப்புரீதியான பலம் கொண்ட வேறு கட்சி, இந்தியாவிலேயே கிடையாது” என்பதை நான் பல்வேறு மேடைகளில் சொல்லி இருக்கிறேன். நான் மட்டுமல்ல, பிற இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் - பிற மாநிலத் தலைவர்களும் - அரசியல் நோக்கர்களும்கூட இந்த உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அத்தகைய பலம் பொருந்திய அமைப்பு எழும்போது மலையென நிற்க வேண்டும்! கதிரவன் என ஒளி வீச வேண்டும்! அந்த ஒளியில் அடுத்த ஒரு நூற்றாண்டுக்கான நமது வரலாற்றையும் தமிழ்நாட்டின் புது வரலாற்றையும் நாம் ஒருசேர எழுத வேண்டும்!
இந்தப் பணிகளை எல்லாம் ஒப்படைத்துள்ள நிலையில்தான், நான் இன்று அயலகப் பயணம் மேற்கொள்ளவுள்ளேன். இருவாரங்கள் அயலகத்தில் இருந்தாலும், அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்; அங்கு நாள்தோறும் வரும் உங்கள் முகங்கள் தான் என் நெஞ்சில் நிழலாடும்!
அன்புடன்,
மு.க.ஸ்டாலின்
ஒன்றிய பா.ஜ.க அரசின் மக்கள்விரோத, மாநில உரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகளை உறுதியாக எதிர்த்து நின்றது கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு. ஆனால் இப்போது அமைந்துள்ள குதிரைபேர சோபாமாடல் அரசோ ஆளுநரின் அழுத்தங்களுக்குப் பணிவதுடன், ஒன்றிய பா.ஜ.க அரசிடம் முழுமையாகச் சரணடைகிறது.
‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்’ என்னும் பெயரை மதச்சாயத்துடன் ‘வி.பி. ஜி ராம் ஜி திட்டம்’ என்று பெயர் மாற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு. மேலும் நூறுநாள் வேலை திட்டத்தின்போது ஒட்டுமொத்த நிதி பகிர்வு 90:10 என்ற விகிதத்தில் இருந்தது. அதாவது ஒன்றிய அரசு 90 சதவீத நிதியை வழங்கும். மாநில அரசு 10 சதவீத நிதியை வழங்கும். ஆனால், ஒன்றிய அரசால் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள ‘விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத இயக்கம் - கிராமின்’ (விபி-ஜி ராம்-ஜி) திட்டத்தின்படி, ஒன்றிய அரசு 60 சதவீத நிதியை மட்டுமே வழங்கும். 40 சதவீத நிதியை மாநில அரசு வழங்கவேண்டும்.
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்த ‘விபி-ஜி ராம்-ஜி’ திட்டத்திற்கு எதிராக, கடந்த ஜனவரி 23ம் தேதி, கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நம் அரசு தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் தற்போது இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் முறைப்படி அமல்படுத்துவதற்கான தடைகளை சோபாமாடல் அரசு நீக்கியுள்ளது.
ஒன்றிய அரசுக்கு பணிந்ததால் தமிழ்நாட்டுக்கு ரூ.5,057 கோடி நிதிச்சுமை ஏற்படும் என்ற நிலையில் சோபாமாடல் அரசு ஒன்றிய பா.ஜ.க அரசுக்குப் பணிந்துள்ளது. பெயருக்கு நிதிச்சுமை பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் பொம்மை முதலமைச்சர்.
‘மீனவர் பிரச்சினைக்கு கடிதம் எழுதினால் போதுமா?’ என்று பொதுக்கூட்டங்களில் வாய்கிழிய பஞ்ச் டயலாக் அடித்தவர், இப்போது மட்டும் கடிதம் எழுதுவது ஏன்?
#VB_GRAMG #MGNREGA #TVK
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (03.07.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், ம.தி.மு.க.வைச் சேர்ந்த அரியலூர் மாவட்டம், மாவட்ட பொருளாளர் வீர.புகழேந்தி அவர்கள், தலைமையில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் கோ.பழனிவேல், மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர் அ.ஜாகிர்உசேன், நகர துணைச் செயலாளர் இளங்கோவன், ஜெயங்கொண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் எ.இரவி, ஜெயங்கொண்டனம் நகரம், வட்டச் செயலாளர்கள் நெடுஞ்செழியன், வேல்முருகன், ஜெயங்கொண்டம் நகர இளைஞர் அணி புருசோத்தமன், நகர மாணவர் அணி ராஜா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், அரியலூர் மாவட்ட செயலாளர் - முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஜெயங்கொண்டம் நகரச் செயலாளர் வெ.கொ.கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
முன்னாள் அமைச்சர் அண்ணன் @ARROffice அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது #SofaModel அரசு.
அவதூறு பேசி - பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொய் வழக்காலும் - கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.
மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.
அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த #SofaModel அரசிற்கும் கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்.
ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம்.
அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.
ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களின் பேட்டி.
முதல்வர் விஜய் கரூர் செல்வதற்கு முன்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு பொய் வழக்கு போட்டுள்ளனர்
குதிரைபேரத்திற்கு எடுத்துக்காட்டு தவெக. 108 என்பதை 120 ஆக்க வேண்டும் என்பது தான் அவர்கள் இலக்கு அதற்காக குதிரைபேர அரசியலிலே ஈடுபட்டு வருகிறார்கள்.
“வாஷிங் பவுடர் நிர்மா”ன்னு ஒரு பாட்டு வரும். அதுபோல ஊழல்கரை உள்ளவங்களுக்கு எல்லாம் வாஷிங் பவுடர் விஜய்
குதிரைபேர அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் 2017 லேயே நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியும். ஆனால் அதை எங்கள் தலைவர் விரும்பவில்லை மக்களை சந்தித்து தான் ஆட்சிக்கு வந்தோம். எனவே குதிரை பேரத்திற்கு எதிரானது தான் திமுக.
அதிமுக எம்.எல்.ஏ கள் பலரும் தவெக விற்கு தாவி வருகின்றனர். குதிரைபேரத்திற்கு எடுத்துக்காட்டே தவெக தான். மதிமுக வின் பொதுக்குழு கூட்டத்தில் இரண்டு எம்.எல்.ஏ களையும் ராஜினாமா செய்ய சொல்லுங்கள் நானே அவர்களை வெற்றி பெற வைக்கிறேன் என முதல்வர் விஜய் உறுதியளித்தாக வைகோவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தவெக தரப்பில் இருந்து குதிரை பேரம் , யானை பேரம் என எல்லாம் நடந்துள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் அந்த குதிரை பேரத்தின் மீது தமிழ்நாடு காவல்துறை, லஞ்ச ஒழிப்பு துறை எந்த ஒரு வழக்கும் பதியவில்லை.
ஆனால் யாரோ ஒரு சட்டமன்ற உறுப்பினர் திடீரென்று ஒரு புகார் கொடுக்கிறார் அதன் மீது முழு விசாரணை மேற்கொள்ளாமலேயே நடவடிக்கை தொடங்குகிறது. அந்த புகார் அளித்த எம். எல். ஏ வின் பின்புலம் என்ன தெரியுமா.? அவர் ஊத்தங்கரை தொகுதியில் சீட் வாங்கவே முறைகேடு செய்ததாக அந்த கட்சியின்ரே குற்றம் சாட்டுகின்றனர். அதுதான் அவரது தகுதி. இப்போது அவர் சொல்கிறாராம் , திருநாவுக்கரசு என்பவர் அவரை தொடர்பு. . ‘உங்களோட தனியா பேசணும் வாங்கன்னு கூறினாராம் இவர் எதற்கு என கேட்டாராம். சபாநாயகர் மேல நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர போறோம். அதற்கு ஆதரவா வாக்களிக்கணும் என்று திருநாவுக்கரசு சொன்னாராம்.’ இப்படி ஒரு கதையை புனைந்து புகாராக கொடுத்துள்ளார். அதன் பேரில் திருநாவுக்கரசை கைது செய்து அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றதாக கூறி இன்றைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கார்த்தி உள்ளிட்டவர்கள் மீது அவர்கள் ஏவி விட்ட அம்பு பாய்ந்து கொண்டுள்ளது. இப்படி அவசரவசரமாக ஒரு புகாரை பெற்று அவர்களுக்கு விருப்பட்ட வாக்குமூலத்தை பெற்று தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் முதல்வர் விஜய் கரூருக்கு போவதற்கு முன்னால் செந்தில் பாலாஜியை கைது செய்துவிட்டு செல்ல வேண்டும் என்கின்ற நோக்கமாக இருக்கலாம் என்றுதான் இன்றைக்கு நினைக்கத் தோன்றுகிறது. எனவே குதிரை பேரம் இங்கே நடந்ததற்கு எந்த ஆதராமும், அடையாளமுமே கிடையாது காவல்துறை அங்கே வழக்கு பதிவு செய்ததே முதலில் தவறு. அதுவும் ஒரு புகார் அடிப்படையிலே விசாரணை கூட செய்யாமல் அவர்கள் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
குதிரைபேரத்தின் மீது தான் தவெக அரசே நிற்கிறது. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக எம். எல். ஏ கள் நான்கு பேர் ராஜினாமா பண்றாங்க. அடுத்த நிமிஷம் சட்டமன்றத்திலேயே தவெக வில் இணைகிறார்கள். எனவே அவர்கள் நோக்கம் எல்லாம் 108 என்பதை 120 ஆக்க வேண்டும் என்பது தான். அந்த இலக்கோடு அவர்கள் குதிரைபேர அரசியலிலே ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது இன்றைக்கு வெளிப்படையாக தெரியும். எனவே ஒன்றிய அரசு இதற்கு உரிய விசாரணையை நடத்த வேண்டும்.
முன்பு எல்லாம் வாஷிங் பவுடர் நிர்மான்னு ஒரு பாட்டு வரும். அதுல அந்த பவுடர போட்ட உடனே கரை போயிடும்னு சொல்லுவாங்க. அதுபோல ஒரு ஊழல்கரை உள்ளவங்களுக்கு எல்லாம் வாஷிங் பவுடர் விஜய். இப்போது தவெக வில் இணைந்துள்ள விஜயபாஸ்கர் மேல நாலு கேஸ் நிலுவையில இருக்கு, அந்த எம்.ஆர் விஜய பாஸ்கருக்கு மூணு கேஸ் நிலுவையில இருக்கு. வேலுமணி போன்றவர்கள் அடுத்தடுத்து போக இருப்பதா சொல்றாங்க அவங்க மேலயும் கேஸ் நிலுவையில் இருக்கிறது. இதை எல்லாம் வெறும் பவுடர் போட்டு துவைக்க முடியாது. அதனால மெஷின்ல போட்டுதான் துவைக்கணும். அந்த மெஷினுக்கு பேரும் விஜய்ன்னு தான் வச்சிருக்காங்க. விஜய் வாஷிங் மெஷினில் வாஷிங் பவுடர் விஜயை போட்டு துவைத்தால், யார் யார் மீதெல்லாம் ஊழல் குற்ற வழக்குகள் இருக்கிறதோ அவர்கள் எல்லாம் புனிதர்களாக, தூய சக்திகளாக மாறிவிடுவார்கள் சொல்ல முடியாது அவங்களுக்கு கோயில் கட்டி கூட கும்பிட்டாலும் கும்பிட்டுருவாங்க எனவே அப்படிப்பட்ட நிலைமைதான் இன்றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கிறது. நாங்கள் பொறுப்பான எதிர்கட்சியாக இருக்கிறோம் எங்களுடைய தலைவர் குதிரைபேர அரசியலில் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் 2017லேயே செய்திருக்க முடியும். அன்றைக்கு எங்களிடத்திலே 109 எம்எல்ஏக்கள் இருந்தார்கள். ஆனால் குதிரை பேரம் கூடாது நான் கொள்ளைப்புறம் வழியாக வர விரும்பவில்லை. மக்களை சந்தித்துத்தான் நான் ஆட்சிக்கு வருவேன் என்று சொன்ன தலைவர் எங்களுடைய தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். எனவே கொள்ளைப்புற அரசியல், குதிரைபேரம் என்பது எல்லாம் எங்களுக்கு பிடிக்காது. குதிரைபேர அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்திருந்தால் அன்றைக்கே வந்திருக்க முடியும். எனவே குதிரை பேரத்துக்கு எதிரானது தான் திராவிட முன்னேற்ற கழகம் ஜனநாயகத்தை தான் நாங்கள் நம்புகிறோமே தவிர பணநாயகத்தை நம்பவில்லை.
திமுக மீது அவதூறு பரப்பிவரும் தவெக அரசுக்கு எதிராக சட்டத்துறை இணைச்செயலாளரும் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் @iparanthamen அவர்களது பேட்டி.
குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான். விஜய் சர்க்கார் ஒரு குதிரை பேர சர்க்கார்
குதிரைபேர குற்ற செயலில் ஈடுபட்டு வருகிற விஜய் அரசு. ஆட்சி பொறுப்பு ஏற்று இந்த 50 நாட்களாக ஒரு அவல ஆட்சியை நடத்திக்கொண்டு வருகிறது. அப்படி பட்ட சூழலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது குற்றம சுமத்துவதற்கும் பழி போடுவதற்காக, குதிரைபேர அரசியலை திமுக
முன்னெடுத்திருக்கிறது என்கின்ற ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யை நேற்றைக்கு அமைச்சர் திரு. நிர்மல் குமார் அவர்கள் தனது பேட்டியின் வாயிலாக தெரிவித்திருக்கிறார்.
மாண்புமிகு விஜய் அவர்களுடைய அரசு என்பது 150, 160 தொகுதிகளில் இமாலய வெற்றி பெற்று அமைந்த ஆட்சி அல்ல இது ஒரு மைனாரிட்டி ஆட்சி. 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜய் அரசு தனது ஒரு தொகுதியை ராஜினாமா செய்த பிறகு 107ஆக குறைந்து, பிறகு நீதிமன்றத்தினுடைய தடை உத்தரவால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் வாக்களிப்பதற்கு தடை விதித்த பின் 106 ஆக குறைந்தது. சபாநாயகருடைய ஒரு வாக்கை கழித்தால் 105 தான். வெறும் 105 இடங்களை வைத்துக்கொண்ட விஜய் அரசு மிக பலமான ஒரு அரசு போன்றும் இந்த அரசை சீர்குலைப்பதற்கு, இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் சதி செய்வதாக ஒரு நகைச்சுவையை அரங்கேற்றி வருகிறார்கள். விஜய் அரசாங்கம் என்றைக்கும் கவிழக்கூடிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறது என்று ஒரு சாதாரண பாமர மக்களுக்கு கூட தமிழ்நாட்டில் இன்றைக்கு தெரியும். அரசியல் புரிதல் உள்ளவர்கள் எல்லோருக்கும் தெரியும். அது ஒன்னும் ஒரு பெரிய எக்கு கோட்டையில் இருக்கக்கூடிய ஒரு கோபுரம் அல்ல. ஒரு சீட்டு கட்டு போலதான் விஜய் அரசு இன்றைக்கு இருக்கிறது. ஒரு காத்து அடித்தால் கூட சரிகின்ற நிலையில் தான் இருக்குதே தவிர வலுவான ஆட்சியோ அதிகாரமோ அவர்களுக்கு இல்லை. எனவே அதை மறந்து தினம் தினம் இவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
குதிரை பேரத்தை செய்கிறது யார்? இன்றைக்கு விஜய் சர்க்கார் குதிரை பேர சர்க்கார் என்று நாங்கள் குற்றம்சாட்டுகிறோம். ஆட்சி பொறுப்பு ஏற்பதற்கு முன்பு மே 4 ஆம் தேதி ரிசல்ட் வந்ததில் இருந்து, 10ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்கின்ற வரை இதற்கிடையில் தங்களுக்கான பலத்தை பெருக்குவதற்காக எத்தனையோ பேரங்களை நடத்தினார்கள். அதில் ஒன்றுதான் மே 7 ஆம் தேதி அமமுக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை முகத்தை மூடிக்கொண்டு இனோவா காரில் வரவைத்து சந்தித்தது. அது உண்மையா இல்லையா என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அதை பற்றி இன்றுவரை வாய் திறந்து பேசாமல் இருப்பது விஜய் அரசாங்கம். எனது கட்சி சட்டமன்ற உறுப்பினரை கடத்தி சென்றிருக்கிறார்கள். எங்களுடைய கையெழுத்தை போலியாக பயன்படுத்தி கடிதம் கொடுத்திருக்கிறார்கள் என்று திரு. டிடிவி தினகரன் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாரே அந்த புகாரை இன்றுவரை பதிவு செய்யவில்லை காவல்துறை. ஆனால் நேற்றைக்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றி திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த முன்னாள் அமைச்சர் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்பது போலவும் மூன்று பேரை கைது செய்து இதோ பார் திமுகா குதிரை பேரம் செய்வதற்காக முயற்சி செய்தார்கள் என்று ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக எங்களுடைய அமைப்பு செயலாளர் மேதகு ஆளுனரிடத்திலே கடிதம் கொடுத்திருக்கிறார். லஞ்ச ஒழிப்பு துறையிடத்திலே கடிதம் கொடுத்திருக்கிறார். என்ன காரணம்? 7 ஆம் தேதி அமமுக கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினரை நீங்கள் வழுக்கட்டாயமாக கடத்தி சென்றிருக்கிறீர்கள் அது ஒரு குற்றச்சாட்டு. அதன் பிறகு சட்டமன்றத்தில் 144 வாக்குகளை எப்படி பெற முடிந்தது எல்லா கட்சியினுடைய தலைவர்களையும் போய் விஜய் சந்தித்த விஜய் அதிமுக வில் மட்டும் அதன் தலைமையுடன் முரண்பட்ட எம். எல். ஏ களை சந்தித்தார். கட்சி தலைமையுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கக்கூடிய ஒரு குழுவை சென்று சந்தித்தது குதிரை பேரமா இல்லையா? அதிமுக கட்சி தலைவர் கொடுத்த அந்த கொறடா உத்தரவை மீறி 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்களே அதன் பின்னால் நடந்த பேரம் என்ன.? தலைமையை மீறி அந்த 25 பேர் வாக்களித்ததற்கு கைமாறியது என்ன என்பதை விஜய் விளக்க வேண்டும். யார் குதிரை பேர அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். 10 பேருக்கு அமைச்சர் பதவி. 20 பேருக்கு வாரிய தலைவர் பதவி என பொய் வாக்குறுதியை கொடுத்து திரு விஜய் அவர்கள் அதிமுகவின் ஒரு குழுவிடம் பேரம் பேசி சட்ட சிக்கல் ஏற்பட்டுவிடும் என்ற ஒரே காரணத்திற்காக பின்னங்கால் பிடரியில் அடிக்க அவர்கள் தங்களுடைய அரசியல் நகர்வுகளை பின்னோக்கி எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அதனுடைய விலைதான் இன்றைக்கு ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினராக ராஜினாமா செய்து கொண்டு வருகிறார்கள்.
இதன் எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக அகில இந்திய அரசியல் உலகில் மிக நம்பிக்கைக்கு பாத்திரமான மதிமுக தலைவர் அண்ணன் வைகோ அவர்கள் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். நான் முதல்வரை 27 ஜூன் அன்று சந்தித்தேன். நாங்கள் இருவரும் தனியாக ஒரு மணி நேரம் பேசினோம். திராவிட முன்னேற்ற கழகத்தின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்ற அந்த இரண்டு பேரை ராஜனாமா செய்ய சொல்லுங்கள். இடைத்தேர்தல் வரும். நான் வந்து பிரச்சாரம் செய்து வெற்றி பெற செய்கிறேன் என்று முதல்வர் திரு விஜய் சொன்னதாக வைகோ அவர்கள் பகிரங்கமாக சொல்லி இருக்கிறார். இது குதிரை பேரம் இல்லையா.? இதற்கு விலை போனது என்ன.? எவ்வளவு பணம் கைமாறியது.? இதையெல்லாம் தவெக கட்சியில் இருக்கிறவர்கள் மறந்துவிட்டு இன்று திமுக வை பார்த்து குற்றம் கூறுகிறார்கள்.
29ஆம் தேதி தவெகவினுடைய ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்ததாக சொல்லுகிறார்கள். காவல் துறையினுடைய செய்தி குறிப்பில் இந்த தொலைபேசி தொடர்புகள் எந்த தேதியில் ஏற்பட்டது என்பதை இதுநாள் வரை சொல்லவில்லை. ஆனால் 29ஆம் தேதி புகார் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த புகார் பெறுவதற்கு முன்பே திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த என்று சொல்லப்படுகிற நபர்களுடைய வீட்டுகளுக்கு சென்று ரைடு செய்ததாக சொல்லுகிறார்கள். புகார் வாங்குவதற்கு முன்பே எப்படி இவங்க ரைடு போறாங்க.? 29ஆம் தேதி புகார் பெற்ற உடனே திருவல்லிக்கேணி காவல் துறையினர் வந்து கைது செய்கிறார்கள் என்று சொன்னால் திரு.வைகோ அவர்கள் சொன்ன வாக்குமூல அடிப்படையில் நாங்கள் கொடுத்திருக்கின்ற அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுத்து லஞ்ச ஒழிப்பு துறை ஏன் இதுரவரை வைகோவை விசாரிக்கவில்லை. இப்போ திமுகவின் இந்த புகாரின் அடிப்படையில் வைகோ அவருடைய பேச்சின் அடிப்படையில் No.1 குற்றவாளி தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள். இதையெல்லாம் மூடி மறைப்பதற்காக திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது சேற்றைவாரி வீசுவதற்காக இது போன்ற பொய் நரேட்டிவ் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்து 54 நாட்களில் என்ன நிர்வாகத்தை இவர்கள் கொடுத்திருக்கிறார்கள். இவர்களுடைய அமைச்சர் மேல் போதை பவுடரை பயன்படுத்திய குற்றச்சாட்டு உள்ளது. இதுநாள் வரை விஜய் வாய் திறக்கவில்லை. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது நேரடியாக விஜயினுடைய ரசிகையாக இருக்கக்கூடிய அந்த அம்மையார் குற்றம் சுமத்தி இருக்கிறார். அது குறித்து இதுவரை விஜய் வாய் திறக்கவில்லை. ஏன் இன்றைக்கு போதை ஊசிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு இளம் பெண்களும் இளைஞர்களும் மரணமடைந்து வருகிறார்கள். அதை பற்றி இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதை பற்றி இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. அரிசியினுடைய விலை இன்றைக்கு ஏறி இருக்கிறது. அதை பற்றி இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. கஞ்சாக்களை வண்டி வண்டியாக கடத்துகிறார்கள். தவெக நிர்வாகிகளே இந்த குற்ற செயல் ஈடுபட்டதாக ஆதாரப்பூர்வமாக ஊடங்களில் வந்திருக்கிறது. இது குறித்து தவெக தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. இப்படி இவர்கள் நிர்வாக திறனற்ற ஆட்சியால் ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த அவலங்களை எல்லாம் மூடி மறைப்பதற்காக திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது இத்தகைய பழிகளை குற்றங்களை சுமத்துகிறார்கள். ஆட்சி திறனற்ற பதவி போதையில் இருக்கும் ஒரு முதலமைச்சரின் இயலாமையை மூடி மறைக்க இந்த நாடக்கங்களை நடத்துகிறார்கள். கண்டென்டக்காகவும் , ரீல்ஸ்காகவும் சோசியல் மீடியாவில தினமும் இவர்கள் வைரலாக வேண்டும் என்பதற்காகவும் வாய்க்கு வந்தததை எல்லாம் மாண்புமிகு அமைச்சர்கள் பேசி கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு நாள் இவர்கள் சினிமா தியேட்டரில் பிளாக் டிக்கெட் வித்திருக்கலாம். ஆனால் இன்று இவர்கள் மாண்புமிகு அமைச்சர்கள் அதன் மாண்பறிந்து நடந்து கொள்ள வேண்டும்.
ஒரு அமைச்சர் பொறுப்பு என்பது ஆதாரத்தோடு பேச வேண்டும். நேற்று நிர்மல் குமார் அவர்கள் வாய்கிழிய பேசுகிறாரே எங்களுடைய தலைவர் அரசியலிலிருந்து ஒதுக வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியாக ஒதுங்கி வந்தவர்தான் தான் நிர்மல் குமார். பாஜாக, அதிமுக, அமமுக என கடைசியாக இன்றைக்கு தஞ்சம் புகுந்து தவெக வில் இருக்கிற திரு. நிர்மல் குமார் அவர்கள் எல்லாம் எங்களுடைய தலைவரை பற்றி பேச துளியும் அருகதை இல்லை தகுதியும் இல்லை. ஆட்சி உங்களுக்கு
கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி நிர்வாகத்தை செய்து மக்களிடத்திலே திட்டங்களை கொடுத்து உங்களுடைய பேரை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது நீங்கள் குற்றம் சுமத்துவீர்களேயானால் இது போன்ற தவறான செய்திகளை பரப்புவீர்களேயானால் உங்களுக்கு எங்களுடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவருடைய திரைக்கதை வசனம் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது அரண்மனை நாயே அடக்குடா உன் வாயை என்கின்ற வசனத்தை நான் நிர்மல்குமார் அவர்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.
விஜய் அவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினராக ராஜினாமா செய்வதற்கான காரணத்தை விளக்க வேண்டும். மேதகு ஆளுனர் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு சபாநாயகரை அழைத்து பேசி இருக்கிறார். அப்போது திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து புகார் வருகிறது. எதிர்கட்சிகளிலிடமிருந்து புகார் வருகிறது. மக்களிடத்திலிருந்து புகார் வருகிறது. தினந்தோறும் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜிராமா செய்வதனுடைய நோக்கம் என்ன.? என விளக்கம் கேட்டதாக தகவல்கள் வருகின்றன.
சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதை நார்மலைஸ் செய்கிறார்கள், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களாக ராஜினாமா செய்கிறார் என்று சொன்னால் இது சாதாரணமான நிகழ்வாக கடந்து போக முடியாது. இது தமிழ்நாட்டினுடைய ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய ஒரு தாக்குதல். விஜய் அரசாங்கத்திற்கு என்ன ஒரு டவுட் என்றால் இன்று ஆதரவு கொடுத்துள்ள கட்சிகளின் ஆதரவெல்லாம் எத்தனை நாளைக்கு இருக்கும் என்ற சந்தேகம் விஜய்க்கு இருக்கிறது. எனவே தனக்கு தேவையான பலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கிறார். இன்னும் சொல்லப்போனால் பாஜக வடிவமைத்து கொடுத்த ஸ்கிரீன் பிளேயை தான் இன்றைக்கு விஜய் செய்து கொண்டிருக்கிறார். பிஜேபினுடைய ஒரு ட்ராப் இது.
இவர்கள் ஒருவேளை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பலம் படைத்துவிட்டால் இவங்களை எல்லாம் கழட்டி விட்டுட்டு விஜய் பிஜேபி பக்கம் நிற்பதற்காகத்தான் இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தமிழ்நாடு அரசாங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி எதிர்த்தோம். பிஜேபி ஆளுகிற மாநிலங்கள் மூன்று மாநிலங்கள் எதிர்த்து கடிதம் எழுதி இருக்கின்றன. ஆனால் சத்தமில்லாமல் திரு.விஜய் அவர்கள் 25 ஜூன் அன்று ஒரு அரசாணை போட்டு அதை நடைமுறைப்படுத்தி உள்ளார். ஒருபக்கம் பாஜக சொல்லுகிற கட்டளைக்கு அடிபணிவது இன்னொருபக்கம் தமிழ்நாட்டில் ஒரு செக்குலர் முகத்தை முன்நிறுத்துவது. இதுபோன்ற அரசியல் நாடகத்தை நடத்தி வருகிற விஜய் அரசாங்கம் மக்கள் மத்தியில் எக்ஸ்போஸ் ஆகி வருகிறது. இன்றைக்கு இளம் தலைமுறைகள் எல்லாம் ஏன் இந்த அரசாங்கத்துக்கு ஓட்டு போட்டோம் என நொந்து போய் வீடியோ போட ஆரம்பிச்சிட்டாங்க. இதெல்லாம் ஒரு மிகப்பெரிய ஒரு அலையாக உருவாகி இடைத்தேர்தலில் இவங்க மண்ணை கவ்வக்கூடிய ஒரு சூழல் ஏற்படுமோ என்கின்ற அச்சத்தின் காரணமாகத்தான், இது போன்ற அரசியல் சித்து விளையாட்டிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
காவல்துறையை வைத்துக்கொண்டு பொலிட்டிக்கல் ஸ்டேட்மெண்ட் கொடுக்குது இந்த கவர்மெண்ட். எந்த கவர்மெண்டும் செய்யாத ஒன்று, எந்த கவர்மெண்டும் மீறாத ஒரு மரபு, எந்த கவர்மெண்டும் மீறாத ஒருவரைமுறையை இந்த அரசாங்கம் மீறி உள்ளது. நாங்கள் இதன் மூலமாக நாங்கள் காவல்துறை தலைவருக்கு சொல்லிக் கொள்வது. ஆதராப்பூர்வமாக நடந்த வற்றை மட்டும் தான் காவல்துறை வெளியிட வேண்டுமே தவிர பொத்தாம் பொதுவாக அரசியல் ஸ்டேட்மெண்ட் விடுவது சட்டப்படி தவறு. நேற்று காவல்துறை கைது பண்ணீய மூன்று பேர் தொடர்பாக வெளியிட்ட பிரஸ் ஸ்டேட்மெண்ட்ல திருநாவுக்கரசும் அந்த மற்றொருவரும் திரு செந்தில் பாலாஜியினுடைய தம்பியை சந்தித்து பேசியதாக நீங்கள் சொல்றீங்க. எந்த வித ஆதாரமும் இல்லாமல் அதற்கான முகாந்திரமும் இல்லாமல் வெறும் அரசியல் நோக்கோடு அந்த ஸ்டேட் மண்ட் வெளியிடப்பட்டிருக்கு. இது போன்ற ஒரு தவறான ஸ்டேட்மெண்ட் போலீஸ் தரப்பிலிருந்து இனி வரும் என்றால் திராவிட முன்னேற்ற கழகம் காவல்துறை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு தயாராக இருப்போம் என்பதை இதன் மூலமாக எச்சரித்துக் கொள்கிறோம்.
அதோடு, விஜயின் பொலிட்டிகல் அட்வைசர்ஸ் கேபினெட் மீட்டிங்ல உட்கார வேண்டிய அவசியம் என்ன கேபினெட் மீட்டிங்ல உட்காருவதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொண்ட முதலமைச்சர் அவர்கள் துறைக்கு அரசுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் எப்படி தன் பக்கத்தில அனுமதிக்கலாம். இதையெல்லாம் திராவிட முன்னேற்ற கழகம் கேட்டிருக்கிறது. இந்த கேள்விகளுக்கெல்லாம் தவெக அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அந்த பதில் சொல்லக்கூடிய தைரியமோ அதற்கான சரியான ஆதாரமோ அவர்களிடம் இல்லை. எனவேதான் ஒவ்வொரு நாளும் ஒரு நரேட்டிவை செட் பண்ணி இதை திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது மடை மாற்றுகிற அரசியல் செய்கிறார்கள். இவர்கள் டைவர்ஸிவ் பாலிடிக்ஸ் தான் செய்கிறார்களாவே தவிர நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல அரசியலையும் இவர்கள் முன்னெடுத்தவில்லை எனவே தான் இது விஜய் சர்க்கார் அல்ல இது குதிரைபேர சர்க்கார் என கூறுகிறோம்.