வெற்றி பெற்றவர்களோடு நிற்பது என்பது வெறும் பணம் அதிகாரபதவிகளுக்காக...
வெற்றியை இழந்தவர்கள் பக்கம் நிற்பதும் அவர்களோடு தோளோடு தோள் கொடுத்து உறுதுணையாக இருப்பதும்...
உண்மையில் நாம் யார் என்பதை உலகுக்கு தெரியபடுத்துவது..🔥🔥
மீண்டு வருவோம்...
மீண்டும் வருவோம்...✌
@EPSTamilNadu
காவிரி விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம்! உதய் கொடுத்த யோசனைக்கு விஜய் ஆதரவு.
ஏன் கடுமையாக கோபப்பட்டார் EPS?
வெளிநடப்பு செய்து, கவன ஈர்ப்பை கொண்டு வந்து, அதை செய்தியாக்கி, ஏன் பிரச்சனை பண்ணனும்?
ஏனென்றால், இந்த வீடியோவில் EPS சொல்லும் கீழ்ப்படுகை மாநிலம் vs மேல்ப்படுகை மாநிலம் சம்மந்தமாக உச்சநீதிமன்றம் நமக்கு கொடுத்த தீர்ப்பை சட்டரீதியாக Challenge பண்ணும் நேரத்துக்காக கர்நாடக அரசு காத்திருக்கிறது. இந்த நிலையில் புதிய நடுவர் மன்றத்தை அமைப்பது, அவர்கள் பிளானை எளிமையாக்கிவிடும்.
அனுபவமற்ற உதய்க்கும், விஜய்க்கும் இதன் தீவிரத்தன்மை புரியாது என்பதே EPS யின் கோபம்.
கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன்.
இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தை தற்போது எங்கு திரும்பினும் பாலியல் குற்றங்கள், சட்டம்-ஒழுங்கு சீரழிவு, கொலை, கொள்ளை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என வன்முறைக் காடாக மாற்றிய நிர்வாகத் திறனற்ற #பொய்க்கால்_குதிரை_அரசு
ஆட்சி அதிகாரம் கைக்கு வந்து ஒரு மாதம் கூட முழுமையடையாத நிலையில், ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் அதிகாரபோதையில் தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தனது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளையே கட்டுப்படுத்த முடியாத 'பொய்க்கால் குதிரை' அரசின் முதல்வர், எட்டுக்கோடி மக்களின் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
பெண்கள் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் அதிரடிப்படை' அமைக்க உள்ளோம் என வாய்கிழிய வெற்று வசனங்களைப் பேசுவதை விடுத்து, அதல பாதாளத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்தி, தமிழக மக்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க முயற்சியாவது செய்யுங்கள். @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
சென்னை கோயம்பேடு பகுதியில் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது உடன் இருந்த 17 வயது சிறுமியும் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன.
“டாஸ்மாக் மூடிவிட்டேன்” என ஒரு பச்சைப் பொய்யை திருச்சியில் கத்திய இன்றைய முதலமைச்சர், இந்த மன்னிக்க முடியாத கொடூரத்திற்கு என்ன பதில் வைத்துள்ளார்?
21 வயது நிரம்பாதவருக்கு எப்படி மதுபான பாரில் அனுமதி வழங்கப்பட்டது? பெண்கள் மீது கார் ஏற்றி கொலை செய்யும் அளவிற்கு சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கை எப்போது தான் இன்றைய முதல்வர் சீர் செய்வார் என எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்
தான் வெற்றி பெற்ற தொகுதி எது என்பதைக் கூட அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மற்றொருவர் வெற்றி பெற்ற திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று
தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார். தனது தொகுதி எல்லை எது என்று கூடத் தெரியாத அளவிற்கு அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் அமைச்சர்களாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை சந்திக்க முதலமைச்சர் சார்பில் நேரம் கேட்கப்படவில்லை.
அமைச்சர் @CTR_Nirmalkumar சொல்வது உண்மைக்கு மாறான தகவல்.
- கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. கே.பி. முனுசாமி அவர்கள்
கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம், பணமோசடி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என ஒட்டுமொத்த குற்றவாளிகளின் கூடாரமாக உருமாறி நிற்கிறது தமிழக வெற்றிக் கழகம். இது ஒரு அரசியல் கட்சியா அல்லது குற்றவாளிகளின் புகலிடமா?
#பொய்க்கால்_குதிரை_அரசு