கொழும்பு "அரகலய" போராட்டத்தில் ஒன்று சேர்ந்து நின்ற சிங்கள, தமிழ் முற்போக்காளர்களுக்கு இடையில் இன்று திலீபன் வழிபாடு விரிசலை உண்டாக்கி விட்டுள்ளது. புலிகளை விமர்சிக்க மறுக்கும் தமிழ் முற்போக்காளர்களும், புலிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள முற்போக்காளர்களும் போர்க்கா��த்தில் இனப்படுகொலைக்கு ஆளான தமிழ்ப் பொது மக்களுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்து நின்றனர். அந்த ஒற்றுமையை குலைப்பதற்கு அரசு கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் திலீபன் வழிபாடு.
சிறிலங்கா புலனாய்வுத்துறையும், அரச ஒட்டுக்குழுவான TNPF ம் திட்டமிட்டு, இந்த வருடம் வடக்கு கிழக்கு பகுதிகள் முழுவதும் திலீபன் நினைவேந்த���் ஊர்தியை கொண்டு சென்றனர். இதன் மூலம் இனங்களுக்கு இடையில் பிளவுகளை உண்டாக்கும் அரசின் நிகழ்ச்சி நிரல் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும், முஸ்லிம்களும் இதனை புலிகளை மகிமைப்படுத்தும் நிகழ்வாக கருதினார்கள். இதன் உச்சகட்டமாக திருகோணமலையில் சிங்கள பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப் பட்டதும் பலர் அறிந்ததே. அதன் விளைவாக இரண்டு பக்கமும் இனவா�� பிரச்சாரங்கள் முடுக்கி விடப் பட்டன. "பார்த்தீர்களா? சிங்களவர்கள் இப்போதும் தமிழர்களை கொன்ற இராணுவமாக இனவெறியுடன் அலைகிறார்கள்..." என்று தமிழ்த் தரப்பிலும்,
"பார்த்தீர்களா? தமிழர்கள் இப்போதும் சிங்களவர்களைக் கொன்ற புலிப்படையாகவே இருக்கிறார்கள்" சிங்களத் தரப்பிலும் பிரச்சாரங்கள் நடைபெற்றன.
தமிழர் தரப்பு என்ன தான் திலீபனை ஒரு காந்தியவாதி என்று பரப்புரை செய்தாலும், சிங்க���, முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் திலீபன் எப்போதும் ஆயுதமேந்திய புலி தான். அதனால் அவர்களுக்கு திலீபன் படத்தைக் க���ட்டினால் அதை ஒரு ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக கருதுவார்கள். நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, இனங்களுக்கு இடையில் பகை முரண்பாட்டை உண்டாக்க அது ஒன்றே போதும். இந்த விடயத்தில் பேரினவாத அரசும், அதன் ஒட்டுக்குழுவான TNPF ம், மிகச் சரியாக கணிப்பிட்டு காய் நகர்த்தி உள்ளன.
அது மட்டுமல்ல, நீதிமன்றம், நகர சபை போன்ற அரச நிர்வாக கட்டமைப்பு முழுவதும் திலீபன் வழிபாட்டை ஊக்குவித்தன. தெற��கில் ஒரு சில பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டம் கூடினாலே உடனடியாக தடையுத்தரவு போடத் தயங்காத நீதிமன்றம், வடக்கில் திலீபன் நினைவேந்தலுக்கு தடைபோட மறுத்து வந்தது.
நல்லூர் கோயிலருகில் ஒரு பொது இடத்தில் திலீபன் நினைவுத்தூபி உள்ள இடம் அலங்காரங்களுடன் விழாக் கோலம் பூண்டுள்ளது. ஒலிபெருக்கிகளில் புலிகளின் புகழ் பாடும் கானங்கள் ஒலிபரப்பாகின்றன. இப்போதும் புலிகளின் ஆட்சிக்காலத்தில�� வாழ்வது போன்ற பிரமையை உண்டாக்குகிறது. வீதியில் ரோந்து சுற்றிக் கொண்டிருக்கும் பொலிஸ், இராணுவம��� கண்டும் காணாத மாதிரி கடந்து செல்கின்றன.
முன்னொருபோதும் இல்லாதவாறு நடைபெறும் திலீபன் வழிபாட்டு நிகழ்வுகளுக்கு பின்னால் சிங்கள பேரினவாத அரசு இல்லை என்று நீங்கள் நம்புவீர்களேயானால், உங்களை விட அடி முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது. யுத்தம் முடிந்த பின்னரும் துப்பாக்கி இல்லாத புலிகளின் இருப்பு அரசுக்கு தேவைப் படுகிறது. எதிரி இல்லாவிட்டாலும் ஒன்றை உருவாக்கி விட்டு, அதைக் காட்டி மக்களை அடக்கி ஆள்வது தான் பேரினவாத அரசியல்.
திரை மறைவில் ரணில் தனது பிரித்தாளும் சூழ்ச்சி வெற்றிகரமாக நிறைவேறிய மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
திலீபன் ஜெயவேவா!
#அறிவோம்ஈழம்
#அறிவோம்_தமிழீழம்
ஊரில இருக்கிறவன் நல்லா உண்டியலிலையையும், தட்சனையும் போடுறாங்கள். நீங்கள் வெளிநாட்டுக்காரர் டொலர் கொடுக்க தேவையில்லை, ஆனால் நிறைய போடலாம். நாங்களும் கனடா போய் உதை பார்ப்பம்
Another year of grieving for you, anna. 💔
Lt Col Thileepan, who passed away this day in 1987, fasting unto death on the grounds of the Nallur Kandasamy temple, demanding that the rights of the people of Tamil Eelam be respected.