#எலிக்கு வந்த சோதனையா 🤣🤣🤣 பாவம் இந்த எலி மூச்சு புடிச்சு அரை மணி நேரம் பேசி என்ன பிரயோஜனம் லாஸ்ட்டா பார்த்தா பூனை ஒரு இந்திக்கார போனேன் அதுக்கு எப்படி தமிழ் தெரியும் அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சது 🤣🤣🤣
#இனிய_காலை_வணக்கம்.
திமுக வின் தோல்விக்கு அதன் ஐடி விங் படை ஒரு முக்கிய காரணம் ! மாற்றுக் கருத்துகள், விமர்சனங்களை கட்சி தலைமை கூட ஏற்றுக் கொள்ளும் ! ஆனால் இவர்கள் கூட்டமாய் சேர்ந்துவிட்டால் முடிந்தது கதை ! ஒரு நேரேட்டிவ் செட் செய்து தாக்குதல் துவங்குவார்கள் ! தற்குறி, ஜாம்பி கூட்டம் எல்லாம் இவர்கள் துவங்கியதே. ஒரு கட்சி புதிதாக துவங்கியதை இவர்களால் ஏற்க கூட முடியவில்லை. அவர்கள் குறைந்த பட்ச அங்கீகாரத்தைக் கூட பெற்றுவிடக் கூடாது என இவர்கள் துடித்தார்கள். இரவு பகலாக இவர்கள் தவெக மீது தொடுத்த ஒரு இணையப் போர் தான், அவர்கள் மீதான முதல் கவனத்தை பெற்று தந்தது.
பிறருக்கான ஒடுக்கப்பட்ட தகுதிகளை பெற்றுத் தருவது தானே திராவிடம் ! சக மனிதர்களை 'ஜாம்பிகள்' என்றும் 'தற்குறிகள்' என்றும் முத்திரை குத்தி, அவர்களுக்குச் சிந்திக்கும் திறனே இல்லை என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முனைந்தது திராவிடம் பேசிய 'சமத்துவத்திற்கு' நேர் எதிரானது. எந்த சூழ்நிலையிலும் ஒரு ஓட்டு கூட தவெகவிற்கு கிடைத்து விடக் கூடாது என எத்தனை இழிவுரைகள், நையாண்டிகள். ஒரு வாழ்த்து பதிவு எழுதினால் கூட எத்தனை வசவுகள். இந்த மிரட்டலும், ஒடுக்கலும் பண்ணையார்தனம் அன்றி வேறு என்ன ! இது கலைஞர் இருந்தவரை ஒரு போதும் நிகழ்ந்ததில்லை ! ஆனால் இந்த வெறியாட்டத்தை தலைமை தடுக்காமல் வேடிக்கை பார்த்தது.
ஒடுக்கப்பட்டோருக்காகப் பேசுவதுதான் திராவிடம் என்றால், மாற்றுக் கருத்தை முன்வைப்பவனை மனிதத்தன்மை அற்றவனாகச் சித்தரிப்பது எந்த வகை அரசியல்? அன்பால் வெல்ல வேண்டிய இடத்தில் அதிகாரத் திமிரைக் காட்டியதுதான் வினையாக முடிந்தது.
தவெக வின் பெரும் வெற்றி என்பது ஒரு நட்சத்திர ஈர்ப்பால் மட்டும் நிகழ்ந்தது அல்ல, திமுக வெறுப்பாலும் தான் ! அதுபோலவே திமுகவை சிதைத்தது எதிர் கட்சியினர் அல்ல, உங்கள் பெயரால் இணையத்தில் வன்மம் விதைத்த உங்கள் சொந்த நிழல்களே!
Nantri @sudha rahavendran
குன்றுகள் தோறும் குடி கொண்ட குமரா குறைகள் தீர்க்க வந்த குணசீலா உன்னை நாடி வந்தவர்களுக்கு வாரிவள்ளம் வாரி வழங்கும் வடிவேலா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
#முருகாசரணம்#சத்தாபரணம்_🙏