இன்று தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, எனது இணையர் ஆதிரை, மகன்கள் பைந்தமிழ் வளவன் மற்றும் செந்தமிழ் திலீபன் ஆகியோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் தமிழ்நாட்டின் தனித்துவமான சமூக நீதி களத்தை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் என்றும் துணையாக இருப்போம் என்று மாண்புமிகு முதலமைச்சரிடம் உறுதி அளித்தேன்.
@CMOTamilnadu@thirumaofficial
"வரும் போதே முதலமைச்சர் கனவுல வர்றாய்யா..
போராளிதான் வேண்டும்.. நடிகர்கள் ஏமாற்றுவர்கள்.. கலாசார சீரழிவு செய்வார்கள்” - திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு
#MRKPanneerselvam | #DMK | #Viluppuram | #ElectionWithPT
தற்குறிகளின் தலைமையும் தற்குறியா?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பெரம்பூர் தொகுதியில் #தவெக#TVK தலைவர் திரு.விஜய் @TVKVijayHQ போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், அந்த தொகுதியிலிருந்து தனது பரப்புரையை தொடங்கவிருப்பதாகவும், ஊடகங்களில் செய்தி வெளியானது. அதற்காக பெரம்பூர் தொகுதியில் விஜய் பரப்புரை வாகனத்தில் சென்று மக்களை சந்திக்கவும், முக்கிய சாலை சந்திப்பு ஒன்றில் 3000 பேர் வரை கூட்டி தெருமுனை பரப்புரை கூட்டம் நடத்துவதற்கும் அனுமதி கேட்டு தவெக சார்பில் தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
கடந்த திசம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையருக்கு கடிதம் ஒன்றை எழுதினார் நடிகர் விஜய். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டங்களுக்கு தவெக நிர்வாகிகளையும் அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். சட்டமன்ற தேர்தலை நடத்துவது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அலுவலகம் கொண்டுள்ள 'தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி'. மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவது கோயம்பேடு எதிரே அலுவலகம் கொண்டுள்ள 'தமிழ்நாடு தேர்தல் ஆணையர்'. நடிகர் விஜயோ தமிழ்நாடு தேர்தல் ஆணையரின் அலுவலக முகவரியை குறிப்பிட்டு, அவருக்கும் அந்த கடிதத்தை அனுப்பியிருந்தார் என்பது தான் வேடிக்கை செய்தி.
இப்போது அதே போன்ற வேடிக்கையான, ஆனால் திட்டமிட்டு விஷமத்தனமான நடவடிக்கையில் நடிகர் விஜய் ஈடுபட்டுள்ளார்.
தனது பெரம்பூர் தெருமுனை தேர்தல் பரப்புரை கூட்டத்துக்கான அனுமதியை திமுகவின் 'காபந்து அரசு' தாமதித்து, மறுத்துவிட்டது என்று நேற்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். 'ஜனநாயகத்தின் மீது பாசிசத் தாக்குதல்' என்று அவருக்கு தெரிந்த 'பாயாசத்தை' அவரது தற்குறி தொண்டர்களுக்கு கிண்டியுள்ளார். அவர்களும் தங்கள் தலைவரின் பரப்புரையை திமுக அரசு திட்டமிட்டு தடுத்து வருகிறது. எங்களைப் பார்த்து திமுக அரசு பயந்துவிட்டது என்று இப்போதே வெற்றி மிதப்பில் இருக்கின்றனர்.
'காபந்து அரசு' என்றால் என்னவென்று தவெக தொண்டர்களுக்கு தெரியுமா? மார்ச் 15ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 'தேர்தல் நடத்தை விதிகள்' (Model Code of Conduct) அமலுக்கு வந்துவிட்டன. இதன் பிறகு மாநில அரசினால் எந்தவொரு உத்தரவையோ, நடவடிக்கையோ எடுக்க முடியாது. முழுவதும் இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை சென்றுவிடும். தலைமை செயலாளர் உள்பட IAS & IPS அதிகாரிகள் தொடங்கி அனைத்து நிலை அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தான் நடைமுறைப்படுத்த வேண்டும்.
நேற்று மாலை காஞ்சிபுரம், தஞ்சாவூர், பெரம்பலூர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைபடுத்தும்படி இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதான் 'காபந்து அரசு' செயல்பாட்டில் இருக்கும்போது இருக்கும் நடைமுறை. தேர்தல் ஆணையத்தின் உத்தரவிலோ, தேர்தல் நிர்வாக நடைமுறைகளிலோ நடிகர் விஜய் சொல்வது போன்று திமுகவால் தலையிட முடியாது. அப்படி தலையிடுவதை ஒன்றிய பாஜக அரசின் கூலிப்படையாக செயல்படும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அமைதியாக வேடிக்கை பார்ப்பாரா? மறந்துகூட இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதோ அதன் அதிகாரிகள் மீதோ எந்தவொரு குற்றச்சாட்டையும் விமர்சனத்தையும் நடிகர் விஜய் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு ஐபிஎல் கிரிக்கெட் கொண்டாட்டத்தின் போது நெரிசலில் மக்கள் இறந்ததையடுத்து, பொது கூட்டங்களை நடத்துவதற்கு உரிய நெறிமுறைகளை வகுத்து தனி சட்டம் கொண்டு வந்தது கர்நாடக அரசு. அரசியல் கட்சி கூட்டங்களை நடத்துவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரி தவெக நீதிமன்றத்தை அணுகியது. கர்நாடக அரசு போன்று தமிழ்நாடு அரசும் 5000 பேருக்கும் அதிகமாக கூடும் நிகழ்வுகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வகுத்தது. கரூரில் தனது பரப்புரை கூட்டத்தில் 41 உயிர்கள் பலியான போது, பனையூர் பங்களாவுக்குள் ஓடி பதுங்கிக் கொண்டார் நடிகர் விஜய். அடுத்தடுத்து மக்களை சந்திக்க திராணி இல்லாத நடிகர் விஜய் அதை மறைப்பதற்கும், தற்குறி தொண்டர்களை திசைதிருப்புவதற்கும், நீதிமன்ற வழிகாட்டுதல்படி தமிழ்நாடு அரசு கொண்டுவந்த நடைமுறைகள் மீது குற்றச்சாட்டை வைத்தார். தனது கட்சி கோரிய வழிகாட்டு நடைமுறைகளுக்கு எதிராகவே மீண்டும் உயர் நீதிமன்றம் சென்றார் நடிகர் விஜய். இந்த வழக்கு பிப். 26ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, 'தமிழக அரசின் வழிகாட்டு விதிகளில் என்ன தவறு? என்று தவெக தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதெல்லாம் தவெக தொண்டர்களுக்கு தெரியுமா?
சென்னை மாவட்டத்தின் தேர்தல் அதிகாரி திரு.குமரகுருபரன் IAS அவர்கள் நேற்று காலை ஊடகச் சந்திப்பின்போது, 'அரசியல் கட்சியினர் தங்கள் பொது கூட்டங்கள், பரப்புரை நிகழ்வுகளுக்கு 'Suvidha' இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும், அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிடுவது நடைமுறை அல்ல. குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பாக காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறையினர் பிறப்பித்த தடையில்லா சான்று (NOC) உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இருந்தால் 3-4 மணிநேரத்துக்குள் ஒப்புதல் வழங்கப்படுகிறது. அனுமதி மறுக்கப்பட்டால் அதற்குரிய காரணங்களும் அதே தளத்தில் தரப்படுகிறது' என்று தெளிவாக விளக்கினார். ஆனால் நடிகர் விஜயோ தம்மீது உள்ள தவற்றை மறைக்க, வழக்கம் போல தற்குறி கூட்டத்தை ஏமாற்ற இல்லாத புது கதையை அவிழ்த்துவிட்டார்.
தேர்தல் ஆணைய நடைமுறைக்கு திமுகவை குற்றஞ்சாட்டி நடிகர் விஜய் நடத்திய நாடகம் ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்கவில்லை.
பெரம்பூர் பரப்புரை நிகழ்வுக்கு தடை ஏற்படுத்த அந்த சாலையில் அரசால் பள்ளம் தோண்டப்பட்டது என்ற விஜயின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி, 'சென்னை குடிநீர் வாரியத்தால் குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பை சரிசெய்ய மிகக் குறுகிய பரப்பளவில் பழுதுபார்க்கும் பணி' மட்டுமே நடைபெற்றது, வேறு எந்த புதிய பணிகளும் நடக்கவில்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும், பெரம்பூரில் 3000 பேர் கூடும் பரப்புரை கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் காரணத்தை விரிவாக குறிப்பிட்டு தவெக மாவட்ட செயலாளருக்கு பெரம்பூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி அளித்த பதிலின் நகலும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நகலில், தவெக தரப்பில் விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரப்பட்ட முல்லை நகர் சந்திப்பு என்பது சிறிய அளவு பரப்புரைக்கான இடம் என்று தேர்தல் ஆணையத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தில் 3000 பேர் கூடுவதற்கு அனுமதி தர இயலாது' என்று அப்பகுதி காவல்துறை அளித்த அறிக்கையின்படி தான் தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்துள்ளார். மாற்று இடம் ஏதேனும் தந்தால் அவற்றை பரிசீலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தொகுதியில் எந்தெந்த இடங்களில் அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் வாகன பரப்புரை செய்யலாம், எந்த இடத்தில் ஊர்வலமாக செல்லலாம், தெருமுனை பரப்புரை கூட்டங்களை நடத்தலாம், அந்த இடங்களில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்படுவர் போன்றவை தேர்தல் ஆணையத்தால் முன்கூட்டியே திட்டமிட்டு அறிவிக்கப்படும். அதனடிப்படையில் தான் அரசியல் கட்சிகள் பரப்புரையை திட்டமிடுவர். ஆனால் தவெக தரப்போ தங்கள் தலைவர் விஜயின் இயலாமையை மறைப்பதற்கு திமுக மீதும், அதிகாரிகள் மீதும் கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஜோஸ் தங்கையா அவர்களை மாற்ற வேண்டும் என்று மார்ச் 16 மதியம் பாஜக அண்ணாமலை பேட்டியளிக்க, அன்று மாலையே கரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை மாற்றியது தேர்தல் ஆணையம். பாஜக போன்று பொய்யான அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தவெக @TVKPartyHQ அழுத்தம் கொடுக்கிறது.
தவெக தொண்டர்கள் தற்குறிகளாக இருக்கிறார்கள் என்று பலரும் விமர்சனங்களை வைத்தனர், ஆனால் தலைமையே தற்குறியாக இருப்பது அம்பலமாகியுள்ளது. அரசியலுக்காகவும்
சுய மகிழ்ச்சிக்காகவும் ரசிக கும்பலை தற்குறிகளாக வழிநடத்துவது தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் பேராபத்தாகும்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
28.3.2026
#WATCH | Chennai: VCK MLA SS Balaji says, "This is a very routine exercise. Whenever elections are around the corner, we need to get applications from the party functionaries who intend to contest in the elections. The party high command will decide, and our leader will decide who is being fielded in the elections. This process has started today The process will go on until the 24th. Today, we are collecting applications from our party functionaries in nine districts. The application fee is fixed at Rs 5000 for all..."
On VCK's alliance with DMK, he says, "This alliance is not a newly formed alliance or one that has been formed ahead of the elections. We have been traveling together for quite a few years.. the situation here, the number of seats, everything is definite. It is not going to change in a single day. In that case, the talks happening now are not going to finalize things... Each party has its own set of wishes... At the end of the day, we will have to look into the larger interest of the party and cadres... Things will probably be announced in a day or two. The chief minister, the leader of this alliance, is carrying out the exercise of interviewing his party cadres, and this will be finished in a day or two..."
#எச்சரிக்கை#RSS ன் பினாமி கம்பெனியான
#தவெக சார்பில் இன்று மூன்று பிரச்சனைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் திரு. @AadhavArjuna பேசும் போது,
விடுதலைச்சிறுத்தைகளையும்
எமது தலைவர் #தொல்காப்பியன்_திருமாவளவன் அவர்களையும்
மிகுந்த தரக்குறைவாக பேசியிருப்பது உள்நோக்கமுடையதாகவே உள்ளது.
திரு.ஆதவ் கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பாகவே
விடுதலைச் சிறுத்தைகள் தலைவரிடம் மீடியேட் செய்தார்.
எத்தனை தொகுதி,
எப்படி மீடியேட் செய்தார் என்பதை அவரது மன சாட்சிக்கே விட்டு விடுகிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்த பிறகும் அதே வேலையை தொடர்ந்தார் என்பதால் தான் இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இன்றைக்கு இந்தளவுக்கு
#திமுக வெறுப்பை கக்கும்
திரு.ஆதவ் தான்
அன்றைக்கு (2024)ஒரே ஒரு நாடாளுமன்ற சீட்டுக்காக
விடுதலைச் சிறுத்தைகளிடமும்
திமுகவிடமும் மன்றாடினார்.
ஒரு வேளை ஆதவ் கேட்ட தொகுதி கிடைத்திருந்தால்
இப்படியான வன்மத்தை கக்கியிருக்க வாய்ப்பில்லை.
ஆகவே,அவரது திமுக வெறுப்பு என்பது தனிப்பட்ட ரீதியானதே தவிர, கோட்பாட்டு அடிப்படையிலானதல்ல.
தற்போது,
விடுதலைச்சிறுத்தைகளை சீண்டுவதற்கு காரணம்
விடுதலைச் சிறுத்தைகள் மீதான வெறுப்பின் அடிப்படையில் அல்ல;
திமுகவுடன் பயணிப்பதால் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
திரு.ஆதவ் மட்டுமல்ல;
திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் அத்தனை பேருக்கும்
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்
@thirumaofficial அவர்கள் தான் டார்கெட் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
அதற்கு காரணம்,
திமுக கூட்டணியில் போராட்டக்குணமுள்ள
வலிமை மிகுந்த கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் என்பதை நாடே அறியும்.
இப்போது புரிகிறதா
விடுதலைச் சிறுத்தைகள் மீதான அவதூறுகளை?
எத்தனை அவதூறுகளை வன்மங்களை கொட்டினாலும்
சனாதன அரசியலுக்கு
எதிராக
#எழுச்சித்தமிழர் தலைமையில்
சமரசமற்று
தொடர்ந்து களமாடுவோம்!
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
12.3.2026
⚠️ URGENT COMPLAINT
@sunnewstamil பெயரில் போலி கணக்கு உருவாக்கி, விசிக தலைவர் திருமாவளவன் அவர்களை கீழ்த்தரமாக விமர்சித்து பொய் செய்தி பரப்புகின்றனர்.
இது மக்களை தவறாக வழிநடத்தும் செயல் மற்றும் திட்டமிட்ட தவறான தகவல் பரப்பல்.
Please Take action
@tnpoliceoffl@tncybercrimeoff
⚠️ URGENT COMPLAINT
@sunnewstamil பெயரில் போலி கணக்கு உருவாக்கி, விசிக தலைவர் திருமாவளவன் அவர்களை கீழ்த்தரமாக விமர்சித்து பொய் செய்தி பரப்புகின்றனர்.
இது மக்களை தவறாக வழிநடத்தும் செயல் மற்றும் திட்டமிட்ட தவறான தகவல் பரப்பல்.
Please Take action
@tnpoliceoffl@tncybercrimeoff
#களத்தில்_வன்னி
மக்களுக்கு ஓடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அது காவல்துறையாகவே இருந்தாலும்
போர்க்குனம் கொண்டு களத்தில் நிற்பவர் தான் அண்ணன் போராளி @VanniTamizhVCK அவர்கள்!
நடிகை @trishtrashers அவர்களின் தனிப்பட்ட
வாழ்வை
இழிவுபடுத்தி பேசிய
#பாஜக மாநில தலைவர் திரு.@NainarBJP போக்கு
வன்மையான கண்டனத்துக்குரியது மட்டுமல்ல;
அருவருப்பானது.
பாஜகவின் இயல்பே இது தான்.
பெண்களை இப்படித்தான் சனாதனக்கோட்பாட்டின் அடிப்படையில் பாஜக தலைவர்கள் இழிவுபடுத்தி வருகிறார்கள்.
இந்த அருவருப்பான செயலை எமது தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டித்தனர்.
இதை கண்டிக்காத ஒரே தலைவர்
நடிகர் @actorvijay அவர்கள் தான்.
கொள்கை தலைவராக வீரமங்கை வேலு நாச்சியார் படத்தை மட்டும போட்டு அரசியல் செய்யும் விஜய் அவர்கள்
பெண்ணை தொடர்பு படுத்தி இழிவு படுத்தும் போது கள்ள மவுனம் காப்பது ஏன்?
கொள்கை எதிரி பாஜக என வீராவேசம் பேசும் விஜய் அவர்கள்,
இதுவரை பாஜகவின் எந்த கொள்கையையும் விமர்சித்ததாக கூட தெரியவில்லை.
பாஜகவின் கொள்கையை
எதிர்க்க திராணி இல்லையென்றாலும்,
தன்னை சம்மந்தப்படுத்தி
ஒரு பெண்ணை இழிவுபடுத்துவதை எப்படி வேடிக்கை பார்க்கிறார் விஜய்?
பாஜகவை கண்டிக்க அவ்வளவு அச்சமா?
தன்னை ஆளாக்கிய சினிமாவுக்கும்
தன்னுடன் நடித்த நடிகைக்குமே எதுவும் செய்யாத விஜய் அவர்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கா நல்லது செய்யப்போகிறார்?
@AadhavArjuna@TVKVijayHQ
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
16.2.2026
விழ விழ எழுவோம்
வீழ்ந்து விட மாட்டோம்!
விடுதலை பாதை விட்டு
விலகிட மாட்டோம்!
- விடுதலைப்பாவலர்
காசி ஆனந்தன்
சனாதன-
சாதி ஒழிப்புக்களத்திலும்
தமிழ்த்தேசியக்களத்திலும்
சமரசமற்று களமாடி வரும்
விடுதலைச் சிறுத்தைகளின்
கருத்தியலை எதிர்கொள்ள
முடியாத சனாதன கோழைகள்
போலி ஐடிகளை வைத்து
வன்மத்தை கக்கி வந்தது.
எந்த சதியையும் முறியடிக்கும் வலிமை விடுதலைச்சிறுத்தைகளுக்கு உண்டு என்பதை நிரூபித்து வருகிறோம்.
காவல்துறையின் மூலம் fake ஐடி தற்போது முடக்கப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்த சென்னை பெருநகர ஆணையர் @chennaipolice_ திரு.அருண் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் மற்றும்
சமூகநீதியில் அக்கறையுள்ள தோழர்கள் அத்தனை பேரும்
இந்த தளத்தை பின் தொடர வேண்டுகிறேன்.
தடைகளை சூது- சூழ்ச்சிகளை
முறியடித்து நமது இலக்கை அடைவோம்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
15.2.2026
கரூர் கொடுந்துயரம்:
---------------------
கடும் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்!
உயிருக்குப் போராடுவோரைக் காப்பாற்றிட அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!
-------------------------------------------
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்
விஜய் அவர்களின் பரப்புரை பயணத்தில் இன்று கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது.
கடும் நெரிசலில் சிக்கி மிதிபட்டு மூச்சுத் திணறி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது ஆற்றவொண்ணாப் பெருந்துயரமாகும். மேலும், பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் கவலையளிக்கிறது. அவர்கள் அனைவரையும் காப்பாற்றும் வகையில் உயர் சிகிச்சை அளித்திட தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளைப் போர்க்காலச் சூழலின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன், உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த வருத்தங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.பத்து இலட்சம் இழப்பீடாக வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவிப்புச் செய்துள்ளது. எனினும், அத்தொகையைக் குறைந்தது தலா ஐம்பது இலட்சம் என வழங்கிட முன்வரவேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் .காயமடைந்தோர் அனைவருக்கும் உரிய இழப்பீடுவழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்:
தொல். திருமாவளவன்.
@CMOTamilnadu@mkstalin@actorvijay