வழக்கமா சாலையில் இருந்து படிக்கட்டு வைத்து வீட்டு உள்ளே செல்வோம். ஆனால் பாருங்க தமிழகத்தில் திமுக அதிமுக ஆட்சிகள் செய்த சாதனையால் வீட்டில் இருந்து படிக்கட்டு வைத்து சாலைக்கு செல்கிறோம்.
இதை தடுக்க திராணியற்ற ஆட்சி நடத்திய முந்தைய ஆட்சியாளர்கள் போல இல்லாமல், தவெக ஆட்சியில் சாலை உயரங்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் நடவடிக்கை எடுப்பார்களா?
சாலை உயரங்கள் அதிகரித்ததால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு அறிவிக்குமா? அந்த இழப்பீட்டை தவறாக சாலை அமைத்த ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்குமா?
உங்கள் பகுதியில் சாலை உயரங்களால் ஏற்பட்ட பாதிப்பை ஆவணப்படுத்துங்கள். இந்த https://t.co/ybX0o0gohd இணைப்பில் பதிவு செய்யுங்கள்.
சாலை உயரங்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய அறப்போர் வாட்ஸப் குழுவில் https://t.co/G36QHwVWAP இணைந்து கொள்ளுங்கள்.
படங்கள் மூலம் ஆவணப்படுத்த இந்த appஐ https://t.co/DeUlRNWQsG பயன்படுத்துங்கள்.
@TVKVijayHQ@tnmaws@CMOTamilnadu@AadhavArjuna@chennaicorp@CMDA_Official
Party Fund விஜயபாஸ்கர்
👉சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
👉சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
👉RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா மிஸ்டர் விஜய்?? @TVKVijayHQ #Vijayabaskar
"உடம்பு முடியலன்னு என்னோட லீவ நான் எடுத்தா காசு கேக்குறாங்க.. நான் காசு கொடுக்கலன்னு சொன்னதால 3 பேர் சேர்ந்து செம அடி அடிச்சுட்டாங்க.." பெண் தூய்மை பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கிய மேற்பார்வையாளர்கள்.. காயமடைந்த பெண் கண்ணீருடன் பேட்டி.!
#Chennai | #Woman | #PolimerNews
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு!
ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சும்மா கத்துறவரா? இல்லை மக்களுக்காக குரல் கொடுக்குறவரா?
'
'
அண்ணன் சீமான் கடந்த காலங்களில் செய்த போராட்டங்கள் சில miss ஆனாலும் ஓரளவுக்கு தொகுத்து அருமையா பேசிருக்காங்க சகோதரர்...
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில் 29 பேர் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான துயர நிகழ்வில் அதில் பயணித்த 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களில்
இந்திய பாதுகாப்புத் துறை வெடிமருந்து தொழிற்சாலையில் பணியாற்றி வந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த சகோதரர் காமராஜ், அவருடைய மனைவி கார்குழலி, அன்புமகன் தமிழ்வேந்தன், உறவினர்கள் மயூரன் மற்றும் சவுபாக்கியவதி ஆகிய ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்
என்பது துயரத்தை மேலும் அதிகரிக்கிறது. நீரில் மூழ்கியபோதும் 4 வயது மகனை அணைத்தபடி மரணித்துள்ள தாயின் புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.
இந்திய துணைக்கண்டம் முழுதும் கோடைக்காலம் மற்றும் பள்ளி விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாத்தலங்களில் மக்களின் கூட்டம் பன்மடங்கு அதிகரிக்கும் நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தொடர்புடைய மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
மத்தியபிரதேச மாநில படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
நெல்சன் எனும் திராவிட பாஞ்சில்ரையாளர் நெல்சன் கேவலமான உடல் மொழியுடன் கேட்ட குதற்கமான கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்த நாதக விக்னேஷ்👍
காணொலியின் கடைசியில் நெல்சன் உதிர்த்த வார்த்தைகளை கேளுங்கள்!!