அறிவை வளர்த்துக்கொண்டிருக்கும் ஹோமோசெப்பியன்;மானமும் அறிவும் மனிதற்கு அழகு;
belongs to Dravidian stock; அண்ணல், பெரியார், பேரறிஞர், கலைஞர் வழி தொடர்பவன்;
ரஜினி ஒருமுறை கமல் பற்றி பேசும் போது நான் தொட்டதெல்லாம் அவரும் தொட்டார் , ஆனா அவர் தொட்டதை நான் தொடல்ல என சொன்னார் . சமகாலத்து உச்ச கலைஞர்களில் இது போல இருவரை பார்க்கலாம் . எம் ஜி ஆர் வகையறா படங்களை சிவாஜி செய்ய முடியும் . ஆனால் ஒரு பாகப்பிரிவினையோ , தில்லானா மோகனம்பாளோ எம் ஜி ஆரால் செய்ய முடியாது . ஜேசுதாஸ் மேதமையைக் காட்டும் வகையான பாடல்களை எஸ் பி பியால் பாட முடியும் . ஆனால் இளமை இதோ இதோ பாடலை ஜேசுதாஸ் பாடினால் சரிப்படாது . அது போல சுசீலா என்ற குயில் பாடிய வகையான பாடல்களை ஜானகியும் எத்தனையோ பாடியிருக்கிறார் . ஆனால் நேத்து ராத்திரி பாடலை சுசீலா பாடினால் சரிப்படாது . நேத்து ராத்திரியும் பாட முடியும் .. மாதா உன் கோவிலில் , சிங்காரவேலனே தேவா வும் பாட முடியும் . ஜானகி ஒரு பெண் எஸ் பி பி . எஸ் பி பி ஒரு ஆண் ஜானகி .
“செந்தூரப் பூவே”
“அழகிய கண்ணே”
“ஊரு சனம் “
“சிப்பி இருக்குது “
“சுந்தரி கண்ணால் ஒரு சேதி”
“இஞ்சி இடுப்பழகா”
“சுந்தரி நீயும்”
“ராசாவே ஒன்ன நம்பி”
“மவுனமான நேரம்”
பாடகிகளில் சகலகலா வல்லி ஜானகி !
காற்றில் உந்தன் கீதம் எந்நாளும் நிலைத்திருக்கும் !
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
நீங்கள் ஒன்றைக் கவனித்தீர்களா..??? எதிர்பாராத தேர்தல் தோல்விக்குப் பிறகு, #திமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்களில் கிட்டத்தட்ட யாருமே கட்சியை விட்டு வெளியேறவில்லை. மிகவும் காயப்பட்டு, கிட்டத்தட்ட மனமுடைந்திருந்தாலும், அனைத்தையும் சரிசெய்ய அவர்கள் தங்கள் முயற்சிகளைத்
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
திமுக தேர்தல் தோல்விக்கு காரணங்களையும் , இனிமேல் கைக்கொள்ள வேண்டிய உக்திகளையும் குறித்து பொதுவாக கருத்து கேட்பது , கட்சியின் குழு ஆராய்வது இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் . இதை விட உபயோகமான வழியாக நான் நினைப்பது . நீங்கள் தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி போட்டு , இத்தனை வாக்களர்களை இவரிவர் தொடர்பில் வைத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் சொன்னீர்கள் . தேர்தலுக்கு முன் அவை அனுமானங்கள் . தேர்தலுக்கு பின் Form20 என்ற booth data எல்லோர் கையிலும் இருக்கிறது . நீங்க வச்சிருக்கிற PEN , PENCIL , அழி ரப்பர் குரூப்கள்லாம் வியூகம் வகுக்கிறோம் , கணிப்பு எடுக்குறோம் என்ற எந்த ஆணியும் புடுங்க வேண்டாம் . அவங்களை Form20
Data வை வைத்து ஒரு ரிப்போர்ட் மட்டும் கொடுக்கக் சொல்லுங்க .
திமுக 60% மேல் வாக்கு வாங்கிய பூத்கள் எவை ? அந்த பூத் பொறுப்பாளர்களை கூப்பிட்டு பாராட்டி நீங்க என்னப்பா செஞ்சீங்க ? என்ன உக்தியை கடை பிடித்தீங்கண்ணு கேளுங்க . அது போல 35% க்கு கீழே , 25% க்கு கீழே 15% க்கு கீழே வந்த பூத் பொறுப்பாளர்களை கூப்பிட்டு வாக்குப்பதிவுக்கு முன் இருந்த நிலவரம் என்ன ? வாக்குப்பதிவில் என்ன நடந்தது ? வாக்குகள் இடம் மாறுவதை கணிக்க எது தடையாக இருந்தது ? உங்கள் பூத்களில் வாக்கு இந்தளவுக்கு சரிய என்ன காரணம் என கேட்டு குறித்து எது செய்திருக்க வேண்டும் , எது தவறாகப் போனது என தரவுகளின் அடிப்படையில் கண்டறிவது தான் உண்மையான நடவடிக்கையாக இருக்கும் . பூத் வாக்குகள் சொல்லும் எண்ணிக்கையை விடுத்து பெறப்படும் கருத்துகள் அவரவர் அனுமானங்களே தவிர அறிவியல் பார்வை ஆகாது .
@mkstalin@arivalayam
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
ஏன் திமுகவுக்கு ஓட்டு போடல்லண்ணு இப்ப தினுசு தினுசா வர்ற செய்திகளைப் பார்த்தால் காலங்காலமாக திமுக மட்டும் ஏன் மத்தளம் போல ரெண்டு பக்கமும் அடி வாங்குதுண்ணு ஆச்சரியமா இருக்கு .
மகளிர் உரிமைத்தொகை வாங்குறவங்க யார் வந்தாலும் குடுக்கத்தான் போறாங்கண்ணு போடல்லியாம் . மகளிர் உரிமைத்தொகை வாங்காதவங்க எதுத்த வீட்டுக் காரிக்கு மட்டும் மாசம் 1000 ரூபா , அதுவும் கடைசி நேரத்துல சுளையா 5000 ரூபாயாண்ணு கடுப்பாகி விசிலுக்கு போட்டாங்களாம்.
அரசு ஊழியர்லாம் அநியாயத்துக்கு வேலை வாங்குறாங்கண்ணு போடல்லியாம். எதித்த வீட்டுக்காரங்கள்லாம் அரசு ஊழியர் வேலை பார்க்காம அதிக சம்பளம் குடுக்குறாங்கண்ணு கடுப்புல விசிலுக்கு போட்டாங்களாம் .
இலவச பஸ்ல போறவங்க பேரன் சொன்னான், மாற்றம் வரட்டும்ண்ணு போட்டாங்களாம் . எதித்த வீட்டு கார அம்மா ஆ ஊண்ணா இவ ஃப்ரீ பஸ்ல போறா . வேலைக்கு வேற போறா . இவளுக்கு வந்த வாழ்வ பாருண்னு திமுக மேல கடுப்பாயி விசிலுக்கு போட்டாங்களாம் .
இலவச லாப்டாப் வாங்கின பொண்ணு ஸ்டாலின் படத்தை கிழிச்சிட்டு விஜய் படத்தை ஒட்டிட்டு விசிலுக்கு போட்டுச்சாம் . எதிர்த்த வீட்டுக்காரங்க இவ கெட்ட கேட்டுக்கு லேப்டாப் வேறண்ணு திமுக மேல கடுப்பாகி விசிலுக்கு போட்டாங்களாம்.
திமுக காரங்க வீட்டுல நம்ம ஆட்சியிண்ணு தான் பேரு , மேல்மட்டத்துல எவனும் கண்டுக்கிறதில்லை , எதிர்கட்சிக்காரன் தான் இன்னும் காரியம் சாதிக்கிறான்ணு கடுப்புல விசிலுக்கு போட்டாங்களாம் . எதிர்த்த வீட்டு காரங்கள்லாம் இவன் ஆட்சியிண்ணு என்னா ஆட்டம் போடுறான் பாருண்ணு கடுப்புல விசிலுக்கு போட்டாங்களாம் .
அடங்கொய்யால !
தற்குறி முண்டங்கள்.
ஹிண்டு வெளியிட்ட fact check video தேசிய அளவில் வைரல் ஆனதால, தற்குறி எகோசிஸ்டம் கதறிக்கொண்டிருக்கிறது.
அந்த வீடியோல சொன்னது பொய்யா இருந்த அதைச் சொல்லனும். அதான் முடியாதே. அல்பலப்பட்டுட்டானுக😂 அதான் இந்த மாதிரி ரைட்டப்புகள்.
அதே கணக்குல, ஆதவ் லாட்டரி மார்டின் - லீமா ரோஸ் மருமகன். அதனால தவெக கட்சியும், தவெக அரசும் மார்டின் பேமிலி கட்டுப்பாட்டில் செயல்படுதுன்ன்ய் வச்சிக்கலாம்ல..
ஒரு ஆணவ படுகொலை நடந்திருக்கிறது. இதுவரை ஏதாவது போலி dalit போராளிகள், முதலமைச்சர் விஜய் ஏன் அந்தக் குடும்பத்தை சென்று பார்க்கவில்லை என்று கேட்டுள்ளனரா?
இதே திமுக ஆட்சியில், திருநெல்வேலி கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட பொழுது, திமுக அமைச்சர்கள் Anitha ராதாகிருஷ்ணன் KN Nehru(1/3)
#NEET – Never Been Neat:
இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க.
ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்!
ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும்.
மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu
கான்ஸ்பிரசி தியரிகள், அநியாயமான பழிகள், அபாண்டமான பொய்கள், நடக்கவே நடக்காத கற்பனைகள் இவைகளைதான் இந்த தலைமுறை நின்று பார்க்கிறார்கள்.
இதையெல்லாம் செய்ய திமுக சரிப்பட்டு வராது.
காலை உணவை நிறைவாக சாப்பிடும் குழந்தையின் மகிழ்ச்சி, மாதாமாதம் உதவித்தொகைப் பெறும் ஏழை மாணவனின் நிறைவு, மக்களைத் தேடி மருத்துவம் சென்றதால் பிழைத்திருக்கும் கிழவனின் புன்னகை இதெல்லாம் ரீல்ஸ் வடிவில் சென்றபோது, "கிரிஞ்ச்" என புறந்தள்ளி சென்றுவிட்டது இந்தத் தலைமுறை.
இனி, எதிர்கட்சியாக இருந்து திமுக அடிக்கப் போகும் சிக்ஸர்களுக்கு எப்படி கைத்தட்டப் போகிறார்கள் என்பதை பாருங்கள்.
இவர்களுக்குத் தேவை ஆக்ஷன், பைட், டான்ஸ் மட்டும்தான். வலுவான வெற்றிக் கதைகள் அல்ல.
ரோமானிய பேரரசுகள் கொலிசியம் வைத்து மக்களின் கவனத்தை தாங்கள் விரும்பும் திசையின் வைத்திருந்ததின் காரணம் இப்போது புரிகிறது.
மெஜாரிட்டி இல்லாத பிறவி கிரிமினல்களின் ஆட்சி என்பது ஆர்கனைஸ்டு மாபியாவின் வேட்டைக்காடு! அதைக்கொண்டு வருவதற்கு பிரம்மப் பிரயத்தனங்களில் ஈடுபடுகின்றனர்.
At any cost இதைத்தடுக்க வேண்டும் என்ற will உருவாக முடியாத அளவுக்கு குட்டை குழப்பப்பட்டிருக்கிறது. மிக ஆபத்தான காலகட்டம்.
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
#bison#blockbuster
நெஞ்சுக்கு நீதி படத்துல மயில்சாமி கேட்பாரு
எல்லாரும் சமம் னா யார் sir ராஜா ?
——அரண்மனை நுழைவு வாயில்----
தாமிரபரணி கரையில் பொறையூர் bus stop la இறங்கி, வயக்காடு வாய்க்கா ஓட பொடி நடையா ஒன்றரை கிமீ நடந்தா , 50 மீட்டர் இட வெளியில புளியமரமத்த ஒட்டி இரண்டு குடிசை குடியிருப்பு
அதுல இருந்து ஒரு 500 மீட்டர்ல , சாதிய அடக்குமுறைகளை பல நூற்றாண்டா பார்த்து , புலம்பி விழுதுகள் விட்ட பெரிய ஆலமரம் ஒன்னு , அதான் பாண்டிய ராஜாக்களின் நுழைவு வாயில் !
அந்த நுழைவு வாயில உடைச்சிட்டு , பரியேறும் பெருமாளா வீதிக்கு வந்தவன் தான் மாரி
செல்வராஜ் . 25 வருஷமா போகாம விட்டு , மறந்து போன ஊர , வாய்க்கால , செம்மன் கூர வீட்ட பலருக்கு கண் முன்ன நிறுத்துனவன் ..
மிக எதிர்ப்பார்ப்புடன் கர்ணன்.. பாத்துட்டு , மனசு சுக்கு நூறா உடைஞ்சிடுச்ச. பல வருஷத்துக்கு அப்புறம் வந்த தூதுவன் மாரியும் , பாண்டிய அரண்மனைல ஒருத்தனாயிட்டானேன்னு ..
படம் முழுக்க வலுக்கட்டாயமாக பாண்டிய வம்சம் டா நாங்கன்னு , பரம்பரை மன்னர் வாள் , மீன் சடங்குன்னு , already எரிஞ்சிட்டுறுக்கிற கொள்ளில petrol ஊத்துன கதையா ..
----மாமன்னன் -----
மாமன்னன், இந்த தடவை ஊருக்கு வெளியே இருக்கிற புளியமரத்தின் கதை களம் .
சமூக நீதிக்குன்னே அளவு எடுத்த செஞ்ச மாதிரியான படம் யா னு , நமக்கு தெரிஞ்ச முற்போக்கு circle ல புகழ்றாங்க ..
எல்லாராலும் ஒதுக்கப்பட்ட , அருவருப்பான பன்றினு வச்சிருந்தத, உதயநிதி அவர்களின் சட்டை பையில் ஏஞ்சலாய் ..
பன்னிய பார்க்கும் போதல்லாம் , எங்களுக்கு மட்டும் கம்பளி பூச்சி ஊற மாதிரி உணர்வு .
அது பன்னி மேல் இருக்கும் கோவம் இல்ல , அது என்ன பன்னுச்சு பாவம்..
பன்னியோ , கழுதையோ ..எங்க மேல வலுக்கட்டாயமாக புகுத்தப்பட்ட சாதி இழி தொழிலின் நினைவுச் சின்னங்கள்!
கஷ்டப்பட்டு படிச்சு , ஊர மாத்தி, அடையாளத்த மறைச்சு, சொந்தத்துக்கெல்லாம் ஒரு கும்புட போட்டு , உங்க பொங்கலும் வேண்டாம் பொங்கச்சோறும் வேண்டாம் னு , வாழ்ந்து கிட்டிருக்கிருந்தா ..
மாரி மறுபடியும் முற்போக்குனு பேர்ல தூக்கிட்டு வந்து , தலையில திணிக்கிறான் ..
பன்னி பாவமில்லையா னு இந்த முற்போக்கு முண்டங்க வேற..
நீ பன்னிய பெருமைப்படுத்துன்னா , ரத்னவேல் கைல கொடுத்துருக்கணும் ..
எப்படி அதி வீரன் கைல மறுபடியும் கொடுக்கலாம்னு யாரும் கேட்கல ..
மாறா பொது சமூகம் அத கொண்டாடுது ..
இத யாராவது விமர்சனம் பண்ண மாட்டாங்களானு வலை தளம் முழுக்க தேடிய நியாபகம் .. ஒன்னும் கிடைக்கல ..
இங்க கருத்து acknowledge ஆவதற்கு கூட, பெரும்பாண்மை ல பிறந்துருக்கணும் !
-----காளமாடன்——-
மணத்தி கணேசன் கதை னு தெரிஞ்ச உடனே முடிவு பண்ணிட்டேன். வீரம் , வம்சம் , பாண்டியரு னு உருட்ட போறானு..
ஆனா மாறா , பாண்டிய நுழைவு வாயில முக்காவாசி கதவ முட்டி உடைச்சு எறிஞ்சிட்டான் மாரி !
சாதி கயிற cut பண்ணஆரம்பிச்சதிலிருந்து ,
அமீர வச்சே ..சுய சாதி பெருமை பேசிறவன் , அவனுக்கு கீழ உள்ள மக்கள மிதிப்பானுக னு சொன்னது
சுய சாதி அரசியல் கும்பல்ல தலைவனா தூக்கிப் பிடிச்சா , சிக்கி சிதைச்சிடுவாங்கன்னு சொன்னது,
வேலிய உடைக்கிறது மட்டுமல்ல , வேலியே போட முடியாத இடத்துக்கு போறதும் வெற்றி ..
ன்னு மிரட்டிட்டான் ..
இப்ப சொல்லுங்க ,
எல்லாரும் சமம் னா யார் sir ராஜா ?
-—— எல்லாரும் சமம் னு நினைக்கிறவன் "பாண்டிய ராஜா" னு... வந்து நிக்குறான் மாரி .
எல்லாரும் சமமா இருக்கிறதுக்கு , எதுக்கு sir ராஜா ?
——— என்கிற சமத்துவ இடத்தை நோக்கி , மாரி இனி வரும் படங்களில் , ஒட்டு மொத்த சமூகத்தையும் நகர்த்துவதற்கு ஒரு catalyst ஆக இருப்பாருனு, #bison நம்பிக்கை கொடுத்துருக்கு.
சமத்துவத்தை நோக்கி நகர்வோம் , அனைவரும் ஒன்றிணைந்து !
@VijayRaghavavan@HansScholl412@VasanthanVellai@ThanosTheEnd_
எத்தனை வல்லூறுகளுக்கு இடையே இந்த குருவி பறக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சின்ன சாம்பிள்.
எடுத்த உடனேயே இவர்களுக்கு கேட்கும் முதல் கேள்வியே இதுதான்.
எல்லா கோவில்களிலும் 100% இட ஒதுக்கீட்டுடன் அர்ச்சகர்களாக இருக்கிறார்களே அவர்கள் எல்லோருமே கோட்டாதான். அதை என்றாவது கேட்டு இருக்கிறார்களா?
அதிகம் இல்லை 50 ஆண்டுகள் மட்டுமே கல்வி பயில வாய்ப்பு கிடைத்து எல்லோரும் முன்னேறி வந்தவுடன் அவர்களுடன் போட்டி போட முடியாமல், EWS என பத்து சதவீத கோட்டா வாங்கி தானே தற்போது ஒன்றிய அரசு பணிகள் மற்றும் வங்கிப் பணிகளில் மீண்டும் நுழைய பார்க்கிறீர்கள்? ஏன் பொது கேட்டகிரியில் நெஞ்சை நிமிர்த்தி உள்ளே வர வேண்டியதுதானே?
ஒவ்வொருவன் சாதித்து வரும்போதும் இந்த கேள்வியை கேட்டு அவனை முடக்கத்தானே பார்க்கிறீர்கள்?
வீராதி வீரர்கள் எத்தனையோ பேர் தென்னாபிரிக்க அணியில் இருந்தும், தோற்றுக் கொண்டே தானே இருந்தீர்கள்? டெம்பா பவுமா வந்து தானே அவர்களுக்கும் சேர்த்து கோப்பையை வாங்கித் தர முடிந்தது?
வரலாறு முழுக்க எத்தனை டெம்பா பவுமாக்கள் கிரிக்கெட் ஆட மறுக்கப்பட்டு இருப்பார்கள்?
ஒரு காலத்தில் கிரிக்கெட் என்ற ஒன்று இருப்பதே தெரியாமல் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். அது தெரிய வந்ததும் கிரிக்கெட் மட்டையை தொட முடியாமல் கட்டுப்படுத்தப்பட்டார்கள்.
ஆனால் தடைகளை எல்லாம் தாண்டி வந்து அவர்கள் தான் உங்களுக்கு கோப்பையை வாங்கித் தர வேண்டி இருக்கிறது.
அதுபோல இந்தியா, தொழில்நுட்பத்தில், பொருளாதாரத்தில் அடைய முடியாத சிறப்புகளை எல்லாம் எங்கள் டெம்பா பவுமாக்கள் தான் வாங்கித் தருவார்கள்.
https://t.co/fBHlnkh20l, M.S, Ph.D போன்ற படிப்புகளுக்கு IIT களில் பெரும் பிரயத்தனப்பட்டு சேரும் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், நிறைய சோதனைகளை தங்கள் வாழ்வில் கடந்து வந்திருப்பார்கள். நல்ல மெச்சூரிட்டியான மனதுடனும் இருப்பார்கள். ஆனால் அவர்களையே அங்கே அசைத்துப் பார்த்து விடும் சிஸ்டம் இருக்கிறது.
நிறைய பேர் தங்கள் படிப்புகளை கைவிட்டு வந்திருக்கிறார்கள்.
அப்படியாப்பட்ட சூழலில், https://t.co/CpBUfWAa7j படிப்பு என்பது இன்னும் பல மடங்கு கடினமான சூழலை கொடுக்கும். சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, தங்களுடைய அறிவை மட்டுமே மூலதனமாக கொண்ட மாணவர்கள் அந்த சிஸ்டத்தில் பயணிக்கும் போது ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்.
சக மாணவர்களின் பொருளாதார நிலை மற்றும் மிகப்பெரும் பின்புலம், அவர்களுடைய ஆட்டிடியூட், பேராசிரியர்கள் மாணவர்களிடம் காட்டும் ஆட்டிட்யூட் என ஏகப்பட்ட மனச்சிக்கல்களை உருவாக்கும் இடம் அது.
அதிலிருந்து மேடேறி வர ஒரு mentorship & ஆறுதலான eco system நிச்சயம் தேவைப்படும்.
சென்னை ஐஐடியில் நான் பார்த்தவரை, ஆந்திரா மற்றும் கேரளா மாணவர்கள் அந்த ஈகோ சிஸ்டத்தை தங்கள் மாநில மாணவர்களுக்கு தேடிப்பிடித்து விரும்பி கொடுத்து உதவுவார்கள். ஆந்திர மாணவர்கள் யுகாதி பண்டிகை கொண்டாடும்போது ஒருவரையும் விட்டுவிட மாட்டார்கள். போலவே ஓணம் பண்டிகையின் போது கேரள மாணவர்கள். இதுபோல அவர்களாகவே பல சோசியல் கேதரிங் நிகழ்வுகளை அங்கே உருவாக்கி நீ தனியாள் இல்லை நாங்கள் இருக்கிறோம் என்கிற மாரல் சப்போர்ட்டை கொடுப்பார்கள்.
வட மாநில மாணவர்களும் அப்படித்தான். திடீரென்று பார்த்தால் ஒரு கேரிபேக்கில் சில பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள். ஏதாவது ஒரு ரூமில் ஒரு அட்டைப்பெட்டியில் பொரி பாக்கெட்டுகள் ஏராளம் வைத்திருப்பார்கள். எல்லோரும் கூடி பேல் பூரி செய்து சாப்பிடுவார்கள். அது கொடுக்கும் ஒரு மாரல் சப்போர்ட்டை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.
ஆனால் சென்னை ஐஐடி பி டெக் தமிழ் மாணவர்களிடம் அப்படி ஒரு பற்றை காண முடியாது. ஏனென்றால் சிறுவயதில் இருந்தே வலுவான பின்புலத்துடன் கோச்சிங் சென்டர் களில் எட்டாம் வகுப்பில் இருந்தே பயின்று உள்ளே வருபவர்கள் ஒரு டீமாகவும், மற்ற மாவட்டங்களில் இருந்து கஷ்டப்பட்டு வருகிறவர்கள் தனித்து விடப்படும் இருப்பார்கள். ஒரு செட்டிற்கு ஒன்றிருவர் வருவதே அதிசயம். அவர்களால் இயல்பாக, வலுவான பின்புலத்துடனும் பெரிய ஆட்டிட்டியுடுடனும் வருபவர்களுடன் இணைய முடியாது. எனவே பெரிய உளச் சிக்கல்களை சந்திப்பார்கள்.
தற்போது @naan_mudhalvan திட்ட மூலம் நிறைய கிராமப்புற மாணவர்களை நாம் ஐஐடி, என்ஜடி களுக்கு அனுப்ப துவங்கியிருக்கிறோம். அறிவில் யாருடனும் குறைந்தவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் அந்த சூழலுக்கு அடாப்டாக நிறைய முயற்சி தேவை.
முதல் படியாக, உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாக இருக்கும் தமிழ்நாட்டவர்களை அவர்களுக்கு மென்டர்ஷிப் செய்ய கோரிக்கை வைக்க வேண்டும். போலவே அந்தந்த நிறுவனங்களில் பயிலும் PG, PhD மாணவர்களையும் கண்டறிந்து இணைத்து, அவர்களுக்கு மனரீதியாக சப்போர்ட் செய்து ஒரு ஈகோ சிஸ்டம் உருவாக்க வேண்டும்.
ஓரிரண்டு ஆண்டுகள்தான். அதன்பின் அவர்கள் தெளிவடைந்து விடுவார்கள். ஆனால் அந்தக் காலத்தில் நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஒரு செட் வெற்றிகரமாக வெளிவந்து விட்டால் நமக்கு ப்ளூ பிரிண்ட் கிடைத்துவிடும். அதன்பின் எளிதாக நம் மாணவர்களை அங்கு வெற்றிகரமான மாணவர்களாக உருவாக்க முடியும்.
அதற்கு முதற்படியாக தற்போது ஐஐடி என்ஐடி களில் நான் முதல்வன் திட்டம் மூலம் சென்றிருக்கும் மாணவர்களை இரண்டு ஆண்டுகளாவது நாம் சப்போர்ட் செய்ய வேண்டும்.