திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டும் மற்றொரு பெரிய சம்பவம் - முதல்வராக இருந்த திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கடந்த திமுக அரசு நடத்திய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்.
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக கடந்த 22.03.2025 அன்று, அன்றைய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில், அன்றைய துணை முதல்வர் பேசும் பொழுது, இரண்டு சூழ்நிலைகளைக் குறிப்பிட்டு தொகுதி மறுவரையறை தொடர்பான பாதகங்களை எடுத்துரைக்கின்றார்.
முதலாவது சூழ்நிலை குறித்து பேசும்பொழுது, தற்போது தென் மாநிலங்கள், 163 தொகுதிகளுடன், 30 சதவீத எம்.பி.க்களைப் பெற்றுள்ளது. 2026ஆம் ஆண்டின் உத்தேச மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் 133 தொகுதிகளாகக் குறைந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 24 சதவீதமாகக் குறையும் என்று கூறுகிறார்.
இன்னொரு சூழ்நிலை குறித்து கூறும்பொழுது, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 848ஆக அதிகரிக்கப்பட்டால், நமக்கு கூடுதலாக சில தொகுதிகள் கிடைத்தாலும் ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம் மீண்டும் 30 சதவீதத்தில் இருந்து 24.7 சதவீதமாகக் குறையும் என்று தெரிவிக்கின்றார்.
மேலும், இந்தத் தொகுதி மறுசீரமைப்பானது, நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை குறைக்கும் அதே வேளையில் உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற சில மாநிலங்களுக்கு நியாயமற்ற முறையில் கூடுதல் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து, அவர்களுக்குத் தேவையற்ற சாதகத்தை அளிக்கும் என்றும் கூறுகிறார்.
ஏழு தென் மாநிலங்களுக்கு 65 தொகுதிகள் கிடைக்கும் அதே வேளையில், மேற்சொன்ன நான்கு மாநிலங்களுக்கு மட்டும் 150 தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கும். விவசாயம், தொழில்கள், வேலைவாய்ப்புகள், பிராந்திய வளர்ச்சி குறித்த தேசியக் கொள்கைகள் ஒருசில மாநிலங்களால் தீர்மானிக்கப்பட்டு, நமது தேவைகள் புறக்கணிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கின்றார்.
மேலும், இந்த தொகுதி மறுவரையறையானது, கூட்டாட்சி அமைப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகும், எனவே நாம் அனைவரும் விரைவாகச் செயல்பட வேண்டும், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதிகளுக்கான தடையை 2026-க்குப் பிறகும் நீட்டிக்க நாம் வலியுறுத்த வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் கட்சிப் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமல்லாமல், தொகுதி மறுவரையறை தொடர்பாக இன்னும் பல கேள்விகளையும் கேட்டுள்ளார்.
தற்போது நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
தொகுதி மறுசீரமைப்பிற்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ள தி.மு.க. அன்றைய கூட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்துவிட்டதா?
அந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குறிப்பிட்டு பேசியுள்ளார், அப்படியென்றால் அந்த அநீதிகள் அனைத்தும் நியாயமாகப் படுகிறதா? தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையா?
இதுக்கெல்லாம் திமுக தலைவர் பதில் சொல்வாரா?
ஆட்சியில் இருக்கும் போது வீர ஆவேசமாகப் பேசிவிட்டு, ஆட்சியில் இருந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டவுடன் பாஜகவுடன் சரணாகதி அடைவதுதான் திமுகவின் கொள்கை என்பதை மக்கள் பல முறை பார்த்து இருக்கிறார்கள்.
தந்தையும் மகனும் மாறி மாறிப் பேசி இரட்டை வேடம் போட்டு ஏமாற்றி வருவதை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள், உங்களுக்கு தொடர் தோல்விகளை மட்டுமே பரிசாக வழங்குவார்கள்.
#DMKBetrayedTN
1969ல் கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்பட்டபோது கை கட்டி வேடிக்கை பார்த்துவிட்டுப் பின்னால் சமாதான வியாக்கியானம் பேசியதுதான் தி.மு.க.
1974ல் கச்சத்தீவைத் தாரை வார்த்தபோதெல்லாம், ஒன்றிய அரசு தகவல் சொல்லியும், அமைதியாக இருந்துவிட்டு, கடைசியில் பத்திரிகை பார்த்துதான் தங்களுக்கே தெரியும் என்று மற்றவர்கள் மீது பழிபோட்டு தகிடுதத்தம் ஆடியதுதான் தி.மு.க.
1924 காவிரி ஒப்பந்தம் 1974ல் மறு ஆய்வு செய்யப்படாமல் காலாவதி ஆனதற்குக் காரணமே திமுகதான். அதைப்பற்றி இப்போது கேட்டாலும் குதர்க்க வாதம் பேசிக் குழ்ப்புவதுதான் தி.மு.க..
பல ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒன்றிய அரசில் பேரம் பேசி பதவிகளை வாங்கி, அதிகாரத்தைச் சுவைத்துவிட்டு, காவிரி உள்ளிட்ட விவகாரங்களுக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் தமிழக நலன்களைச் சக்கையாகத் துப்பியதுதான் தி.மு.க.
2021ல் ஆட்சிக்கு வந்தபோது சட்டசபைக்கு உள்ளேயே தமிழ்த்தாய் வாழ்த்தை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியதுதான் தி.மு.க.
ஆங்கிலம் ஒரு பக்கம் இந்தி மறு பக்கம் என இந்திய அரசியல் சாசனம் புத்தகத்தை 1996ல் எம்.எல்.ஏ.க்களுக்காக வாங்கியதுதான் தி.மு.க.
27 ஆண்டுகளுக்கு முன்பே பா.ஜ.க.வுடன் ஒன்றியத்திலும் மாநிலத்திலும் கூட்டணி அமைத்துக் குதூகலம் கண்டதும் தி.மு.க.தான்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது கறுப்பு பலூன் விட்டுவிட்டு, ஆளும் கட்சியானதும் பா.ஜ.க.விற்கு வெள்ளைக் குடை பிடித்து கூன் விழும் அளவிற்குக் குனிந்து கும்பிடு போட்டதுதான் தி.மு.க.
தேர்தல் காலத்தில் தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதுபோல நாடகம் ஆடிவிட்டு,
இப்போது பதவி எதிர்பார்ப்பில் பா.ஜ.க.விடம் மண்டியிட்டு, தொகுதி மறுவரையறைக்குத் துதி பாடுவதுதான் தி.மு.க.
தமிழக மக்களின் நலன்களுக்காகப் போராட வேண்டிய நேரத்தில் வாளாவிருப்பதும் தி.மு.க.தான். தமிழகத்திற்குக் கெடுதல் வருகிற போதெல்லாம் தங்களைக் காக்கும் சுயநலக் கேடயம் தூக்குவதும் தி.மு.க.தான்.
தி.மு.க. என்றாலே தில்லுமுல்லு.
தி.மு.க. என்றாலே திருகுதாளம்.
தி.மு.க. என்றாலே பகல் வேடம்.
தி.மு.க. என்றாலே கபடநாடகம்.
தி.மு.க. என்றாலே சுயநலம்.
தி.மு.க. என்றாலே அரசியல் சூதாட்டம்.
#DMKBetrayedTN
“டெல்லி அணியா தமிழ்நாடு அணியா?” ; “பா.ஜ.க.வை எதிர்க்கும் ஒரே கட்சி நாங்கள்தான்” ; “பா.ஜ.க.வுடன் ஒட்டோ உறவோ இல்லை” “கறுப்புக்கொடி ஏத்தி டெல்லி ஆணவத்த எதிர்ப்போம்” “தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பதுதான் நமது சுயமரியாதை. தேர்தல் எல்லாம் பிறகுதான்” என்றெல்லாம் வாயால் வடை சுட்டதுதான் தி.மு.க.வும் அதன் தலைமையும்.
ஆனால், இந்த பஞ்சரான பஞ்ச் வசனங்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அவிழ்த்துவிட்டவை. இப்போது, தமிழக மக்கள் அவர்களை ஆட்சியில் இருந்து விரட்டி விட்டதால் அவர்களின் வசனங்கள் எல்லாம் எப்படி மாறி உள்ளன என்பதைப் பார்த்து உலகமே உமிழ்நீரைத் தூவிச் சிரிக்கின்றது.
பா.ஜ.க.வின் தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதுதான் சுயமரியாதை என்று சொன்னவர்கள், இப்போது அதே பா.ஜ.க.வின் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு வரவேற்றுள்ளனர். அதற்கு திமுக சொல்வது என்ன தெரியுமா?. “திட்டங்கள் சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே?” என்று கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சொல்லி தங்களின் சரிவுக்கு சாய்வுக்கும் சப்பைக் கட்டு கட்டுகிறது தி.மு.க.
“இது இன்றைக்கு எடுக்கப்பட்ட முடிவல்ல” என்றும் திமுக ஓர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது. நம் வெற்றித் தலைவர் தேர்தல் பிரசாரத்தின்போதே சொன்னதுபோல, பா.ஜ.க.வின் காலடியில் தி.மு.க. கவிழ்ந்துள்ளது. இது தேர்தல் தோல்வியின்போதே எடுக்கப்பட்ட முடிவு என்பதைத்தான் “இது இன்றைக்கு எடுக்கப்பட்ட முடிவல்ல” என்று திமுக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.
“We maintain full consistency” என்று தனது இன்னொரு முகமூடியையும் தி.மு.க. கழற்றிக் காண்பித்து, தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது. பா.ஜ.க.வுடன் மறைமுக உறவில் இருந்து இன்று நேரடி உறவிற்கு வந்துள்ளதைத்தான் maintaining full consistency என்று தி.மு.க.வே ஒப்புக்கொண்டு உள்ளது.
நாங்கள் எப்போதும் இப்படித்தான். ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சைப் பேசுவோம். ஆட்சியில் இருந்து விரட்டப்படும்போது வேறு பேச்சைப் பேசுவோம். இப்படி வெட்கமே இல்லாமல் வேடம் போடுவதுதான் எங்கள் வாடிக்கை. இது குறித்து கேள்வி கேட்கவே, “what is your problem?” என்று மக்களைப் பார்த்துக் கேட்டுள்ளது.
1999ல் இருந்தே நாங்கள் பா.ஜ.க.வின் மறைமுகக் கூட்டில்தான் இருந்து வந்துள்ளோம். அது தெரியாத அப்பாவிச் சிறுபான்மை சகோதரர்கள்தான் எங்களை நம்பி ஏமாந்து எங்களுக்கு வாக்களித்து வந்தனர். ஆனால், அவர்கள் நம்பினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய?. நாங்கள் எப்போதும்போல எங்கள் சுயநல மற்றும் ஆதாய அரசியல் குணத்தின்படியே கடபடதாரிகளாகத்தான் இருந்து வருகிறோம். எங்களுடைய இரட்டை வேடத்திலோ ஆதாய அரசியலிலோ ஒருபோதும் “No Deviation and no departure at all” என்றும் பெருமையாக வெளிப்படையாகக் கூச்சநாச்சமே இல்லாமல் ஒப்புக்கொண்டுள்ளது.
“அதிமுகவின் ரிங் மாஸ்டராக பிரதமர் மோடி செயல்படுகிறார்” என்று பேசிய தி.மு.க. தலைமை இப்போது பா.ஜ.க.வின் காலடியில் வீழ்ந்துள்ளதன் மூலம் தங்களுக்கும் ரிங் மாஸ்டர் பா.ஜ.க.தான் என்பதை முழுமனதுடன் ஒப்புக்கொண்டுள்ளது.
இப்படி ஓர் அரசியல் சூதாட்டம் ஆடுவதற்குப் பெயர்தான் கொள்கையா?. இப்போது எங்கே போனது பெரியாரின் சுயமரியாதை?. இப்போது எங்கே போனது அறிஞர் அண்ணாவின் திராவிட சிந்தனையைப் பின்பற்றுவது?. இப்போது எங்கே போனது திமுகவின் கெத்து?. இப்போது எங்கே போனது திமுகவின் தெம்பு திராணி?. உங்களின் சுயநல ஆதாயத்திற்குத்தான் பெரியார், அண்ணாவின் பெயர்களா?. இப்படி செய்வதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காதே. சிறுபான்மை சகோதரர்களும் தமிழக மக்களும் மன்னிக்கவே மாட்டார்கள்.
இத்தனை மோசடிகளையும் செய்துவிட்டு, “எப்போதெல்லாம் வாள் எடுக்க வேண்டும் ; எப்போதெல்லாம் கேடயம் எடுக்க வேண்டும் என்று தங்களுக்குத் தெரியும்” என்று தி.மு.க. தலைமை சொல்லி உள்ளது. தமிழக மக்களுக்கும் தென்னிந்திய மக்களுக்கும் அவர்தம் நலன்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எதிராக தி.மு.க. தங்களின் முனை மழுங்கிய மொக்கை வாளை எடுத்துச் சுழற்றத் தொடங்கி உள்ளது. தங்கள் குடும்பத்திற்கும் தங்கள் அமைச்சர்களுக்கும் எதிராக உள்ள ஊழல் வழக்குகளில் இருந்து காப்பதற்காக சுயநலக் கேடயத்தையும் எடுத்துள்ளதை தி.மு.க.வே அம்பலபடுத்திக் கொண்டு விட்டது. இவை அத்தனையையும் பா.ஜ.க.வின் காலடியில் விழுந்து வணங்கி செய்கிறது என்பதை மக்கள் பார்த்துகொண்டுதான் உள்ளனர். இதற்கான பரிசாக, இனி வருகிற எல்லா தேர்தலிலும் திமுகவிற்கு அதலபாதாளத் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
#DMKBetrayedTN
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட இருப்பதாக செய்திகள் வரத்தொடங்கி உள்ளன. இந்த நேரத்தில், தி.மு.க. என்ன செய்யப் போகிறது?.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாடகம் ஆடுவதுபோல எந்தத் திசைத்திருப்பலும் மடைமாற்றமும் செய்யாமல், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மனசாட்சியுடன் வெளிப்படையாக ஒரே நிலைப்பாட்டை எடுத்து அறிவிக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கையும் நல்லிணக்கத்தையும் பேணும் உறுதியான சூழல் நிலவுவது குறித்து கடந்த மூன்று நாள்களாக வாய் திறக்காமல் எந்த முட்டுச் சந்தில் நின்று திமுகவும் அதன் தலைமையும் முனகிக் கொண்டிருந்தது என்று தெரியவில்லை. இப்போது வந்து சுத்தம் சுயம்பிரகாசம்போல சுருதி கூட்டி சுயபுராணம் பாடுகிறது.
பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டும் சூழ்ச்சி அரசியல் செய்வதில் தமிழக வெற்றிக் கழகத்திற்கோ எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கோ ஒருபோதும் உடன்பாடில்லை.
திமுக தலைமைபோல, தொகுதி மறுவரையறை விவகாரத்தில், இரட்டை நிலைப்பாட்டில் உறுதியோடு இருக்கிறோம் என்று கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல், மனசாட்சி இல்லாமல் ஆதாய அரசியல் ஆடும் மதில்மேல் பூனையோ பூனைமேல் மதிலோ இல்லை எங்கள் த.வெ.க.
அரசியலுக்காகக் கொள்கை வேடம் போடுவது ; அரசியல் ஆதாயத்திற்காக ஜால்ராவை மாற்றி அடிப்பது என அப்பட்டமான அசிங்கமான அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதுதான் தி.மு.க.வின் குணம். அதன் தலைமையின் குணம்.
அண்ணா உருவாக்கிய இயக்கத்தின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது தெரியுமா?. குரங்கு கையில் பூமாலை போலத்தான் இருக்கிறது என்று மக்களே சொல்கின்றனர்.
தி.மு.க.வின் கொள்கையே தில்லுமுல்லு செய்வதும் திருகுதாளம் போடுவதும்தான். இப்போதும் தி.மு.க. பற்றி மக்கள் சொல்வது இது ஒன்றே ஒன்றைத்தான்.
தி.மு.க.விற்கு மக்கள் சவால் விடுகின்றனர். நீங்கள் நிஜமாகவே கொள்கை வேடம் போடவில்லை என்றால், உண்மையாகவே கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா வருகிறபோது ஆதரிக்கவே மாட்டோம். எதிர்த்து மட்டுமே வாக்களிப்போம் என்று நிரூபிக்க வேண்டும்.
மாறாக, நடுநிலை வகிக்கிறோம், வெளிநடப்பு செய்கிறோம், நாங்கள் சொன்ன திருத்தங்கள் இருக்கின்றன என்றெல்லாம் சொல்லி சால்ஜாப்பு சொல்லி சப்பைக்கட்டுக் கட்டினால் அது பா.ஜ.க.வின் காலைக் கழுவி சரணம் பாடுவதற்குத்தான் சமம்.
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் நலன்களில் உண்மையான அக்கறை உள்ளவர்களா? அல்லது அரசியல் ஆதாயத்திற்காக எதையும் துறந்துவிட்டு சுயநலப் பாடல் பாடும் சூழ்ச்சிக் கூட்டமா?. இந்த இரண்டில் தி.மு.க. எது என்று நிரூபித்துவிட்டு மற்றவர்கள் மீது குற்றம் குறை சொல்ல வேண்டும். அதற்கு முன்னால், வாயைத் திறந்து பேசவே தி.மு.க.விற்கும் அதன் தலைமைக்கும் வக்கோ வகையோ இல்லை.
சமீப காலமாக, துயில் எழுந்து காமெடியாகக் கதறி, பெண்களின் பாதுகாவலனே தான்தான்(?) என்பதுபோல ரீல் விட்டுக்கொண்டு சுற்றி வருகிறார் ரீபோஸ்ட்நிதி.
Who are you என்று பவரில் இருந்தபோது பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, இப்போது பஞ்சரானதும், பம்மிப் பதுங்கி, மண்ணோடு மண்ணாகத் தவழ்ந்து சென்று மனுகொடுத்து மன்றாடியும் வருகிறார். மண்டையை ஆட்டி ஆட்டிப் பேட்டிக் கொடுத்தும் பீலாவிட்டுப் பிதற்றி வருகிறார். மக்கள் அவருடைய பேட்டியை ‘நாங்கள் சினிமா செய்திகளே பார்ப்பதில்லை’ என்ற ரீதியில் சுண்டுவிரலால் டச் ஸ்க்ரீனில் தள்ளிவிட்டுத் தவிர்த்து வருகின்றனர்.
டம்மி வாரிசான டகால்ட்டிநிதியின் ‘பெண்கள் பாதுகாவலன் வேடம்’ தாறுமாறாகக் கிழியும் வகையில் திமுக எம்.எல்.ஏ. ஒருவரே செயல்பட்டு உள்ளார். அந்த எம்.எல்.ஏ. வேறு யாருமல்ல. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. திரு.வசந்தம் கார்த்திகேயனே. அதாவது, பெண்கள் முன்னிலையிலேயே ஆபாசமாகப் பேசி அலறவிடும் டம்மி டாடியின் ஆபாசக் கொள்கைப் படையில் அணிவகுப்பவர் என்று சொன்னால், அவர் யாரென்று இன்னும் ஆழமாகப் புரியும்.
தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் பெண் அதிகாரி திருமிகு. அ.லலிதா அவர்களை வசந்தம் கார்த்திகேயன் தகாத வார்த்தைகளில் மரியாதைக் குறைவாகப் பேசி இருக்கிறார்.‘தான் யார் என்று தெரியுமா?’ என்று கேட்டுத் தன் அதிகாரத் திமிரைக் காட்டி மிரட்டி இருக்கிறார். இது குறித்து, அந்தப் பெண் அதிகாரி கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் புகார் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, புகாரின் அடிப்படையில், அதிகாரத் திமிரோடு பெண் அதிகாரியை மிரட்டிய தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது தியாகதுருக்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் திருமிகு.லலிதா அவர்களும் பெண் அதிகாரிதான் என்பது, பெண்களுக்காக வாதாடுவதுபோல வேடம் போடும் வக்கற்ற வாரிசான வக்கிரநிதிக்குத் தெரியும்தானே?. பெண் அதிகாரி ஒருவரை, திமுகவின் ரத்தத்தில் ஊறிப்போன பண்ணையார்த்தன அதிகாரத் திமிருடன், தகாத முறையில் பேசி மிரட்டித் துன்புறுத்தியதற்காகத் தங்கள் எம்.எல்.ஏ.வை உச்சிமேல் வைத்து மெச்சப் போகிறாரா இந்த ஒப்பாரிநிதி?.
வகையற்ற வாரிசான உதறல்நிதி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?. துப்புக்கெட்ட வாரிசான டுமீல்நிதி இதுபற்றித் துப்பறியுமாறு எந்தத் தபால்காரரைப் பார்க்க, தன் அடிப்பொடிகள் அணிவகுக்கத் தரையில் உருண்டு போகப் போகிறார் இந்தப் புலம்பல்நிதி?.
மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் இந்த எடுபடாத வாரிசான இயலாமைநிதி, பெண் அதிகாரி ஒருவரைத் துன்புறுத்தியதற்காக தங்கள் கட்சி எம்.எல்.ஏ.வைத் தாமாக முன்வந்து அழைத்துக்கொண்டுபோய் நீதிமன்றத்தில் நிறுத்துவாரா?. இல்லையெனில், துப்பட்டாவைத் தலையில் கட்டிக்கொண்டுத் தும்மி விட்டு, அடுத்தவர் மீது அவதூறு பரப்பி, தங்கள் எம்.எல்.ஏ.வை ‘என் அன்பிற்கினிய அதிகாரத் துஷ்பிரயோகத் திலகம் வாழ்க’ என்று போற்றிப் புகழப் போகிறாரா?. அல்லது வழக்கம்போல தி.மு.க. என்றாலே வக்கிரமும் வன்மமும் நிறைந்த ஆபாசக் கூட்டம்தான் என்று எண்ணி மகிழ்ந்து, குப்புறப்படுத்துக் கொண்டு கும்பகர்ணத் தூக்கத்தை தொடரப் போகிறாரா?.
என்னதான் செய்யப் போகிறார் இந்த எடுபடாதநிதி?. வழக்கம்போல முன்பே தயார் செய்த கேள்வி-பதில் நாடகத்தை நடத்திவிட்டு, அந்நாடகத்தையும் தொடர முடியாமல் மரத்தின் பின்னால் சென்று மறைந்துகொள்ளப் போகிறாரா இந்த மழுப்பல்நிதி?.
எது எப்படி இருந்தாலும், பெண்களைத் துச்சமாக மதிப்பதுதான் திமுகவின் மரபணு என்பதை மக்கள் மனதில் இருந்து அகற்றவே இயலாது. இதை வக்கற்ற, வகையற்ற, துப்புக்கெட்ட, தூங்குமூஞ்சியான டம்மி வாரிசு டப்பாநிதி டபராசெட்நிதி உணர்ந்தால் சரி.
உங்கள் மகிழ்ச்சிக்காக இரண்டு குடும்பங்கள் சோகத்தில் மூழ்க வேண்டுமா?.ஆபாசநிதி”
வாணியஞ்சத்திரத்தில் உங்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகப் பேனர் அமைக்கும்போது இரண்டு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த இரண்டு குடும்பங்களின் கதறல் உங்கள் காதுகளுக்குக் கேட்கவில்லையா? இரண்டு குடும்பங்களின் வீட்டில் மரண ஓலம்.
உங்கள் பிறந்தநாள் பேனருக்காக இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. ஒரு குடும்பத்தின் எதிர்காலமே இருண்டுவிட்டது.
கொண்டாட்டத்தை விட மனித உயிர் பெரிது. இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?
"ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்று கேட்ட பேரறிஞர் அண்ணாவின் திமுகவை கபளீகரம் செய்து, குடும்பக் கட்சியாக மாற்றிய மண்ணாங்கட்டிப் பரம்பரை, தாங்கள் கொள்கைக் குன்றுகள் என்று மேடைக்கு மேடை முழங்குவதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் என்பதை இன்றைய ஆளுநர் சந்திப்பின் மூலம் நிரூபிக்கிறது.
ஆட்சியில் இருந்தவரை ஆளுநரைப் பேசவிடாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரித்துவிட்டு, இப்போது "ஆபத்பாந்தவனே" என்று ஆளுநரின் காலில் விழவும் தயாராகிவிட்டனர்.
"கலைஞரின் ஆசி பெற்ற சின்னம் தாமரை" என்ற வரலாறு மீண்டும் அரங்கேறப் போகிறது. அதற்கான அறிகுறிதான், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உதயநிதி தலைமை நிர்வாகியாக இருக்கும் முரசொலியில் பாஜகவின் மாநிலத் தலைவரின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது.
பாசிசப் பாயாசம் பருகக் கொத்தடிமைகள் தயாராக இருக்கையில், மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு கொள்கையாவது, கொய்யாக்காயாவது என்ற மனநிலைதான் !
அன்று போலவே பாஜகவைத் தமிழ்நாட்டில் வளர்க்கும் பணியை திமுக தலைமையேற்று நடத்தவிருக்கிறது.
திமுக ஒரு தீயசக்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு வாழ்த்துகள் !
பொறுப்பேற்ற 7 மாதங்களில் முதலீடுகளை ஈர்த்ததோடு, அவற்றைச் செயலாக்கத்திற்கும் கொண்டு வந்துள்ளது தவெக அரசு!
மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற 200 நாட்களுக்குள் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 74.1% ஒப்பந்தங்கள் செயலாக்க நிலையை எட்டியுள்ளன. 8 நிறுவனங்கள் அடிக்கல் நாட்டும் நிலைக்கும் முன்னேறியுள்ளன.
மக்கள் வரிப்பணத்தில் முதலீடுகளை ஈர்க்கப் போகிறேன் என்று குடும்பத்தோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த சித்தரஞ்சன் சாலை மூர்த்தி, அங்கே சைக்கிள் ஓட்டியும், போட்டோஷூட் நடத்தியும், ஷூட்டிங் வீடியோக்களை வெளியிட்டும் குதூகலித்ததுதான் மிச்சம்! இதில், துபாய் பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணமா அல்லது குடும்பச் சுற்றுலாவா என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு மக்களை மலைக்க வைத்தது தனிக்கதை.
எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன? என்று கேள்வி எழுந்தபோது, Senior Generational Abuser-ன் எடுப்பு வெள்ளை அறிக்கையைத் தூக்கிக் காண்பித்து, சொல்லிக்கொள்ளும்படியாக எதுவுமில்லை என்பதை ஒப்புக்கொண்ட நிகழ்விற்கு வரலாற்றில் நீங்கா இடமுண்டு.
வெறும் வாய்ச்சவடால் பேசி, வெட்டிப் பந்தா காட்டுவதற்கு இது Dummy Daddy-யின் காலமல்ல; இளைஞர்களின் நலனை முன்னிறுத்தி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் வெற்றித் தலைவர் விஜய்யின் காலம்!
#VettriTamilNadu
தமிழகத்தில் முதலீடுகள்… பெருகும் வேலைவாய்ப்புகள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் தலைமையிலான தமிழக அரசின் முதலீட்டாளர் மாநாடுகள் மூலம் தொழில் வளர்ச்சியில் புதிய மைல்கல்!
🔹 8 நிறுவனங்களின் ₹4,627 கோடி முதலீட்டுத் திட்டங்கள் வெறும் 4 மாதங்களில் அடிக்கல் நாட்டும் நிலையை எட்டியுள்ளன.
🔹 இதன் மூலம் 14,420 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
🔹 பிரேசில் நாட்டின் WEG நிறுவனம் தர்மபுரியில் ₹2,000 கோடி முதலீட்டில் 100 ஏக்கரில் புதிய தொழிற்சாலை அமைக்கவுள்ளது. இதன் மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
புதிய முதலீடுகள், புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள்… மாவட்டங்கள் தோறும் பரவும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி!
#VettriTamilNadu
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் சட்டத் திருத்தம்!
இதுவரை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிரப்பப்பட்டு வந்த பணியிடங்களை இனி TNPSC மூலம் நிரப்பும் வகையில், Tamil Nadu Public Service Commission (Additional Functions) Act, 2022-ல் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதன்மூலம் 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளில் அரசியல் தலையீடு மற்றும் சிபாரிசுகளுக்கு இடமின்றி, தகுதியின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் பணியாளர் தேர்வு நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பணம் கொடுத்து வேலை பெறும் பின்வாசல் நியமனங்களைத் தடுத்து, தகுதியுள்ள இளைஞர்களின் அரசு வேலைக் கனவுக்கு வழிவகுக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது இளைஞர் நலன் பேணும் தவெக அரசு!
வானில் உயரமாக சென்று வெடிக்கும் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கை பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்கக் கூடாது.
பட்டாசு வெடிப்பதில் அலட்சியம் வேண்டாம்! பாதுகாப்பே முதன்மையானது!
உலகிலேயே AI தொழில்நுட்பத்தில் ஊழல் செய்து சாதனை படைத்த தி.மு.க!
'Artificial Intelligence Corruption' DMK (AIC - DMK)
பகுத்தறிவு - சுயமரியாதை - சமுகநீதியை தன் இறுதி மூச்சுவரை தமிழ்நாட்டிற்குக் கற்பித்தவர் நம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார். அவர் வழியில் வந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், "மாநில சுயாட்சி" என்ற கொள்கையோடு தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆட்சியை ஏற்று நடத்தினார். ஆனால், அவர்கள் வழியில் வந்ததாகச் சொல்லிக்கொண்டு, அவர்கள் பெயரை மட்டும் தன் ஆட்சிக்கு முகமூடியாக போட்டுக்கொண்டு, முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு துறையிலும் செய்ததெல்லாம் ஊழல்! ஊழல்! ஊழல் மட்டும்தான். இதைத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் சொல்லிக் கொண்டிருந்தோம்.
இறுதியில் தந்தை பெரியாரின் பெயரில் அமைந்த நூலகத்திற்கு வாங்கிய புத்தங்களிலும் AI முறையில் ஊழல் செய்து 'உலக ஊழல் சாதனை'யைப் படைத்து நம்மையே திகைக்க வைத்துள்ளார்; தமிழ் அறிவுலகத்தை அவமானத்தில் கூனிக்குறுக வைத்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.
உலகிலேயே AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முதலில் ஊழல் செய்து Artificial Intelligence Corruption DMK (AIC - DMK) என்னும் சாதனையும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் தி.மு.க படைத்துள்ளது. இதன்மூலம், டிஜிட்டல் ஊழல், AI ஊழல் எனக் காலத்திற்கு தகுந்தவாறு ஊழல் செய்வதில் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டிருக்கிறது தி.மு.க. இதுதான் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒரே சாதனை! தமிழ்நாட்டை பிடித்த தீராத வேதனை!
இப்படிப்பட்ட ஊழலால் உருவான போலியான - குப்பையான - ஒன்றுக்கும் உதவாத சக்கைகளை புத்தகங்களாக தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கொள்முதல் செய்ததாகக் கணக்குக்காட்டி பல கோடிகளைச் சுருட்டியுள்ளது திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையின் கீழ் செயல்பட்ட ஊழல் கும்பல்!
மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமே இங்கு பிரச்சினை இல்லை; மாறாக, முந்தைய தலைமுறையின் அறிவுஜீவிகளை ஏமாற்றி, இன்றைய தலைமுறையின் அறிவுஜீவிகளின் மூளையை மழுங்கடித்து, வரவிருக்கும் நாளைய தலைமுறை அறிவுஜீவிகளின் எதிர்காலத்தை சூனியத்தில் தள்ளும் படுபாதகத்தைச் செய்துள்ளது திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான முந்தைய அரசு.
ஒரு நாளைக்கு மூன்று அறிக்கைகளை வெளியிட்டு த.வெ.க. அரசை விமர்சித்து வந்த மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தப் பிரச்சினை வெளியானது முதல் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பதே தெரியாமல் பம்மிக் கொண்டிக்கிறார். இப்போது வெளியிட வேண்டியதுதானே ஒரு அறிக்கையை? ஏன் இன்னும் இந்த விவகாரம் பற்றி அவரிடம் இருந்து எந்த அறிக்கையும் வெளி வரவில்லை?
பெரியார் அறிவுலகத்தைப்போல், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும், இன்னும் தமிழ்நாட்டில் உள்ள எத்தனை நூலகங்களில் இதுபோன்ற ஊழல் புத்தகங்கள் புதைந்து கிடக்கிறதோ, அவையெல்லாம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு களையெடுக்கப்பட வேண்டும். அதோடு, பெரியார் அறிவுலகத்தில் புத்தகம் வாங்கியதிலேயே இவ்வளவு ஊழல் என்றால், பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக கட்டுமானத்தில் எவ்வளவு ஊழல் நடைபெற்றிருக்கும் என்பது பற்றியும் பொதுப்பணித்துறை வல்லுநர்களைக் கொண்டு ஆராய்ந்து உண்மைகள் விரைவில் வெளிக்கொண்டுவரப்படும்.
கழிப்பறையில் இருந்து கல்லறை வரை... சாக்கடையில் இருந்து மழைநீர் வடிகால்வாய் வரை... குப்பையிலிருந்து புத்தகங்கள் வரை என அத்தனையிலும் ஊழல் செய்த முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும், ஊழலில் பங்குப்போட்டுக் கொண்டு அவருடைய திருட்டுக் கூட்டாளிகளும் மக்கள் மன்றத்தில் தினம்தோறும் அவமானப்பட்டு வருகிறார்கள்; விரைவில் சட்டத்தின் பிடியில் அகப்படுவார்கள்; நீதிமன்றத்தில் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
இதற்கிடையில் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகம் கொள்முதல் செய்தததில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்க தி.மு.க. சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி இருக்கிறது தெரியுமா? முந்தைய காலங்களில் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் பிக்பாக்கெட் அடிக்கும் ஜேப்படித் திருடனை யாராவது கண்டுபிடித்து "திருடன்... திருடன்" என்று சத்தம் போட்டால், உடனே அந்த ஜேப்படித் திருடன் கொஞ்ச தூரம் ஓடிப்போய், அதே கூட்டத்தில் கலந்திருக்கும் தன் கூட்டாளியான மற்றொரு திருடனிடம் திருடிய பர்சை(Purse) கைமாற்றிவிட்டு, "திருடன் திருடன்" என்று இவனும் சேர்ந்து கூட்டத்தோடு கத்துவான். மக்களும் "இவன் திருடன் இல்லைபோல... அங்கே ஓடுகிற மற்றொருவன்தான் திருடன்" என்று நினைத்து இவனை விட்டுவிட்டு அவனைத் துரத்துவார்கள். ஆனால், அது அந்தக் காலம். அது மலையேறிவிட்டது. மக்கள் இந்தக் காலத்தில் விழிப்படைந்துவிட்டார்கள். அதனால், மக்களிடம் மாட்டிக் கொண்டதும் தி.மு.க போடும் ஜேப்படி திருடன் வேலை இனி எடுபடாது. அதைப் புரிந்துகொண்டு கொஞ்சமாவது தி.மு.க. திருந்த வழி பார்க்கட்டும்.
தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட எண்ணற்ற நம் தலைவர்கள் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவ சமுதாயம், மதச்சார்பின்மை கருத்துக்களை புத்தகங்கள் மூலமே இந்த மண்ணில் விதைத்தனர். ஆனால், முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்தப் புத்தங்களில் எப்படி ஊழல் செய்யலாம் என்ற நஞ்சையும், பல தலைமுறைகளின் சிந்தனையை அழிக்கும் விஷத்தையும் ஊழல் புத்தகங்களால் விதைத்துள்ளார்.
அந்தக் கொடிய விஷத்தை, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட உள்ள நேர்மையான விசாரணை மற்றும் தமிழக அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், சமூக அரசியல் அறிஞர்கள் துணையுடன் முறியடிப்போம்! ஆரோக்கியமான சமுதாயத்தைப் படைப்போம்! அறிவார்ந்த தலைமுறையை உருவாக்குவோம்!
யார் இந்த மகேஸ்வரி ஸ்டாலின்
யார் இந்த பவித்ரா கருணாநிதி
யார் இந்த பவுனாம்பாள் கருணாநிதி
முக்கிய குறிப்பு
அன்பில் மகேஷ் மேல என்ன கடுப்போ , திமுக மேலும் ஒரு FIR போட லஞ்ச ஒழிப்புத்துறையில் மனு கொடுத்திருக்கு.
மானங்கெட்ட, துப்புகெட்ட,வெட்கம் கெட்ட, அறிவுகெட்ட தனமாகக் கட்சி நடத்துகிறவர்கள் ஒவ்வொரு துறையிலும் மாபெரும் ஊழல் செய்துவிட்டு இப்போது ஓவர் லாஜிக் பேசுவதுபோல ஊளையிடுகின்றனர். தீயசக்தியின் ஆட்சியில் வெளியிட்ட ஆணையை வெளியிட்டும் அதை நாங்கள்தான் ஆணையாகப் பிறப்பித்தோம் என்று ஒப்புக்கொள்ள துப்பில்லை ; வக்கில்லை. ஆனால், பரந்தாமன்களை வைத்து ஆத்திரத்தை மட்டுமே கொட்டி வருகிறது.
குடவாசல் என்பதைக்கூட கொடவாசல் என்று குளறுபடியாக இருந்தது குடைசாய்ந்த ஆட்சியின் துப்புகெட்ட அறிவுகெட்ட மானம்கெட்ட உஷார்தனத்தின் உடைசல்தான் அது. கேவலமான அரசியல் செய்யவில்லை என்று கூறிக்கொண்டே அப்படிப்பட்ட அரசியலைத்தான் செய்து வருகின்றனர்.
தங்களது தத்தி அரசாங்கம், முட்டாள் கவர்மெண்ட்தான் அனைத்து ஆணைகளையும் வெளியிட்டது. அதனடிப்படையில்தான் குழுக்கள் அமைக்கப்பட்டும் வெளியிடப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே?. வெட்கம் கெட்ட வேலை வெட்டி அற்ற முதலமைச்சர் தலைமையில் நடந்த தீயசக்தி ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுக்கள் யாருடைய அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட்டது?.
நாங்கள் அமைத்த குழு நாங்கள் அமைத்த குழு என்று வார்த்தைக்கு வார்த்தைக்கு வாய்கிழியப் பேசும் தங்கள் பிரதிநிதி வாயிலாகவே தங்கள் குழு பரிந்துரைத்த, தேர்வு செய்த பதிப்பகங்கள் மற்றும் நூல்களின் பட்டியலை வெளியிட வேண்டியதுதானே?.
திமுக அறிவுடைய இயக்கம் என்று தனக்குத்தானே கூவிக்கொள்பவர்கள், தங்களின் தீயசக்தி திமுக ஆட்சியில் இருந்தது வரை தேர்வுச்பெய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலை வெளியிட்டு,, தவெக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதையும் நிரூபிக்கும் வகையில் பட்டியலை ஆதாரத்துடன் வெளியிட வேண்டியதுதானே?. அதைச் செய்யாமல், வழவழா கொழகொழா கேள்விகளை வக்கற்ற, வகையற்ற ஆட்களை வைத்து கேட்பது ஏன்?.
திமுக குறிப்பிடும் பெயர்களில் புத்தகங்கள் தெரிவு செய்ய 2025 நவம்பரிலோ அல்லது 2026 பிப்ரவரியிலோ யாருடைய ஆட்சி நடந்தது?. இதை துப்புகெட்ட,அறிவுகெட்ட,
கூறுகெட்ட வாதாடியை வைத்தே வாதிடலாமே?. அதை ஏன் திமுக செய்யவில்லை?. இல்லாத முகவரியில் ஆணை வெளியிட்டது துப்புகெட்ட,மானம்கெட்ட திமுக ஆட்சியில்தான் என்பதை ஒப்புக்கொள்ள தெம்பு இருக்கிறதா?. திராணி இருக்கிறதா?.
இல்லாத பதிப்பகங்களையும் இல்லாத எழுத்தாளர்களையும் வைத்து கொள்முதல் செய்து ஊழல் செய்துவிட்டு சீல் வைக்கப்பட்ட தேதியை வைத்து, அன்றுதான் கொள்முதல் செய்ததாகக் கூறும் கூமுட்டை அரைவேக்காட்டு ஆளை வைத்து பேசிப்பேசி திமுகவே மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு கேவலப்பட்டு நிற்கிறது.
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே...
இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி.
ந.க.எண் :7781/எ1/2025
நாள் : 14/02/2026
அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
#ஊழல்_முன்னேற்றக்_கழகம்
#மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.