நாம் தமிழர் கட்சி - புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி வெ.குணசேகரன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா நா.மு.வெள்ளைச்சாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா நா.மு.வெள்ளைச்சாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
தவெகவின் 100 கோடி ஊழல்..
கடந்த ஆட்சியில் Fixed இவ்வளவு கொடுத்திருப்பாங்க
இந்த ஆட்சியில் Flexible கொடுக்கிறதை வாங்குகிறார்கள்..
சாட்டை துரைமுருகன் அவர்களின் சிறப்பு நேர்காணல்
👇
https://t.co/DLWd5oTqgQ
#SattaiDuraimurugan#Interview#EngalDesamOfficial
நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அறப்போராளி சோனம் வாங்சுக்குடன் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அவரது உடல் நலனை உறுதி செய்வதோடு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.
நாம் தமிழர் கட்சி - புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்றத் தொகுதி, அரிமளம் நடுவண் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி வெ.முருகேசன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா கரு.வெள்ளைச்சாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா கரு.வெள்ளைச்சாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
10 லட்சம் கோடி கடன்.
-- பாட்டாவே பாடினார் சீமான் அண்ணன்.
இலவசங்களால் தான் இவ்வளவு கடன்.
-- தேர்தல் பிரச்சாரத்தில் இதனால் நான் இலவசம் தரமாட்டேன் என சொன்னார் சீமான் அண்ணன்..
போக்குவரத்து துறையில் 75000 கோடி கடன்.
-- கடனில் துறை இருக்க யார் கேட்டார்கள் இலவச பேருந்து என கேட்டார் சீமான் அண்ணன்.
மின்சாரவாரியத்தில் 2.75 லட்சம் கடன்.
-- இவ்வளவு கடனில் எதற்கு இலவச மின்சாரம் என கேட்டார் சீமான் அண்ணன்.
பிறக்கும் குழந்தை தலையில் 1 லட்சம் கடன் இருக்கிறது.
-- நாமெல்லாம் பிறக்கும் பொழுதே கடனாளிகள் என சொன்னார் சீமான் அண்ணன்.
இதற்கு எதற்கு வெள்ளை அறிக்கை சீமான் அண்ணனின் தேர்தல் பிரச்சார காணொளிகள் பார்த்தாலே தெரியும்.
நாம் தமிழர் கட்சி - பேராவூரணி சட்டமன்றத் தொகுதி, வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சு.ந.ஆறுமுகம் அவர்களின் தாயார் அம்மா ந.ஜானகி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ந.ஜானகி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
அன்னையர் நாள் வாழ்த்துகள்!
'சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!' என்கிறார் இறைதூதர் நபிகள் நாயகம்!
'என் வாழ்க்கையில் நான் கற்ற மிகப்பெரிய பாடங்கள் என் தாயிடமிருந்தே வந்தவை!' என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.
'என்னுடைய எல்லா சாதனைகளுக்கும் காரணம் என் தாய்தான்!' என்கிறார் அபிரகாம் லிங்கன்.
'தாயின் அன்பை விட உயர்ந்தது உலகில் எதுவுமில்லை!' என்கிறார் வில்லியம் ஷேக்ஸ்பியர்.
'அம்மாவின் அன்பும் தியாகமும் குழந்தையின் வெற்றிக்கான முதல் விதை!' என்கிறார் நம்முடைய ஐயா அப்துல்கலாம்.
ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்!
ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை!
எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்! ஆனால், தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது!
மனிதனுக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் புனித உறவு தாய் மட்டும்தான்!
வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்!
கண்கள் இல்லாமல் பார்த்தேன்!
காற்று இல்லாமல் சுவாசித்தேன்!
கவலையில்லாமல் வாழ்ந்தேன்!
என் தாயின் கருவறையில்!
கோயிலில் ஒரு கருவறை இருக்கிறது அது நாம் உருவாக்கியது; தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது, அது நம்மையே உருவாக்கியது!
நாம் எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போனாலும் நம்மைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உலகத்தில் உண்டென்றால், அது நம்மைப் பெற்றெடுத்த அன்னையே!
உலகத்தில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயின் பேரன்பை மற்றொரு தட்டிலும் வைத்தால்; தாயின் பேரன்பு இருக்கும் தட்டுதான் தாழ்ந்து இருக்கும்!
தாய்மையைப் போற்றுவோம்!
தாய்மையை வணங்குவோம்!
நம் தாய்மார்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் நாள் வாழ்த்துகள்!
பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் வயிற்றில் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக இருந்தபோதிலும், தம்முடைய வலிகள் யாவையும் தாங்கிக்கொண்டு, களத்தில் பாயும் புலியாக மிகத்தீவிரமாக பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் களத்தில் சிறிதும் சோர்வின்றி அவர் காட்டிய வேகமும், கடுமையான உழைப்பும் கண்டு பாபநாசம் தொகுதி மக்கள் செல்லும் இடமெங்கும் பேராதரவை தந்தனர். பெருகும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சம் கொண்ட திமுகவைச் சேர்ந்த முரடர்கள், தேர்தல் நாளான நேற்று பாபநாசம் தொகுதி வேட்பாளர் என்ற அடிப்படையில்
அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட சென்ற தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக முரடர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்த தங்கையின் நிலை கண்டு மனம் மிகவும் வேதனையடைந்தது.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற நினைப்பது வெட்கக்கேடானதாகும்.
ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகாலமும் பள்ளிப் படிக்கும் சிறுமிகள் முதல் வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிகள் வரை பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி, பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது திமுக அரசு. தற்போது 5 ஆண்டுகால ஆட்சியும் முடிந்த பிறகும், பெண்கள் மீதான தாக்குதல்களை திமுக முரடர்கள் தொடர்வது அதிகார மமதையின் உச்சமாகும்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? தமிழக காவல்துறையை கட்டுப்படுத்துவது யார்? திமுகவா? அல்லது தேர்தல் ஆணையமா? அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் கூறப்போகிறது? தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து நேற்றே நாம் தமிழர் கட்சியினர் புகாரளித்தும் இதுவரை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யாதது ஏன்? தேர்தல் ஆணையம் எதனை மூடி மறைக்க முயல்கிறது? யாரை காப்பாற்ற நினைக்கிறது? சனநாயகத்தையே குழிதோண்டி புதைக்க செய்யும் இதுபோன்ற அட்டூழியங்களை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கைப்பார்த்தால், பாமர மக்களுக்கு சனநாயகம் மீது எப்படி நம்பிக்கை வரும்?
ஆகவே, தமிழ்நாட்டின் காவல்துறையையும், சட்டம் ஒழுங்கையும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள தேர்தல் ஆணையம், பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து
இன்று மாலைக்குள் கைது செய்ய வேண்டும்.
இல்லையென்றால் நாளை பாபநாசத்தில், தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்கின்ற
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..!
நாளை(23-04-2026) வாக்குப்பதிவு நாள்!
மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட நம் நாட்டில் மக்களுக்கு இருக்கும் கடைசி மதிப்புமிக்க உரிமை என்பது வாக்குதான். வாக்கு ஒரு வலிமைமிக்க ஆயுதம்! அந்த ஆயுதத்தை அநீதிக்கு எதிராக நாம் தூக்க வேண்டும். இங்கே அறிவை வளர்க்கும் ஆசிரியர் பெருமக்கள், மருத்துவர்கள், சட்டம் படித்த வல்லுநர்கள், இந்திய குடிமைப் பணிபுரியும் ஆட்சியர்கள், கற்றறிந்த சான்றோர்கள், வரலாற்று ஆய்வறிஞர்கள் உள்ளிட்ட பெருமக்கள் நிறைந்து வாழ்கிற நம் நாட்டில் தவறாமல் நாம் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும்.
நாம் ஏன் வாக்கு செலுத்த வேண்டும் தவறான எண்ணம் நம்மில் எவருக்கும் எவருக்கும் தோன்றக்கூடாது. நாம் ஒருவர் வாக்கு செலுத்தி என்னவாகப் போகிறது? அதனால் ஏதேனும் மாறிவிடப் போகிறதா? என்கிற எண்ணம் எவருக்கும் வரக்கூடாது. ஒரே ஒரு வாக்கில் வென்ற நிகழ்வும் உண்டு. ஒரே ஒரு வாக்கில் தோற்ற நிகழ்வும் உண்டு. தனிமரம் தோப்பாகாது, சரிதான்; ஆனால், தனித்தனி மரங்கள் சேர்ந்துதான் தோப்பாகிறது! என்பதையும் மறந்துவிடக்கூடாது.
எவ்வளவு பெரிய கோலமாக இருந்தாலும், ஒரு புள்ளியில் இருந்துதான்
தொடங்க வேண்டும். எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் ஒரு விதையிலிருந்துதான் முளைக்க வேண்டும். எவ்வளவு பெரிய காவியமாக இருந்தாலும் ஒரு எழுத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். எவ்வளவு பெரிய கடலாக இருந்தாலும் ஒரு துளியிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பது போல, ‘மாறுதல்’ என்பதும் நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் இருந்துதான் உருவாக முடியும். மண்ணில் புரட்சி வருவதற்கு முன்பு மக்களின் மனங்களில் புரட்சி உருவாக வேண்டும். அண்ணல் காந்தியடிகள் அவர்கள், ‘உலகில் எப்படிப்பட்ட மாறுதல் உருவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதை உன்னிலிருந்தே தொடங்கு’ என்கிறார். நான் என்னில் இருந்து தொடங்குகிறேன்.
நீங்கள் உங்களிலிருந்து தொடங்குங்கள். நாம் நம்மில் இருந்து தொடங்குவோம்.
வாக்கு செலுத்துவது என்பது மக்களாட்சி நாட்டில் ஒரு மகத்தான பொறுப்பு. அமெரிக்காவில் கருப்பின மக்கள் வாக்குரிமையைப் பெற 200 ஆண்டுகாலம் ஆனது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் பெண்கள் வாக்குரிமையைப் பெற 250 ஆண்டுகாலம் ஆனது. நம் நாட்டிலும் தொடக்கத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், சொந்தமாக நிலமோ, சொத்தோ இருப்பவர்கள் மட்டும்தான் வாக்களிக்க முடியும், படித்து பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதையெல்லாம் மாற்றி இன்றைக்கு குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம் என்ற உயர்நிலையை நாம் எட்டியுள்ளோம். இந்த நாட்டின் முதல் குடிமகனாகிய குடியரசுத் தலைவர் முதல், கடைக்கோடியில் வாழும் கடைசி குடிமகன் வரை அனைவருக்கும் ஒற்றை வாக்குதான். ‘சனநாயக நாட்டில்
நாம் அனைவருமே சமம்’ என்ற சமத்துவ தத்துவத்தைப் போதிக்கும் ஒரு வலிமைமிக்க பேராயுதம்தான் நம் கையில் ஏந்தும் வாக்கு என்பதிலிருந்து, வாக்குரிமை எத்தனை மாண்புமிக்கது, மதிப்பிற்குரியது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு; அந்த அரசை தீர்மானிப்பது அரசியல். அதற்கான ஒரு அரிய வாய்ப்புதான் தேர்தல். நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகால எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிற தலைமையை தேர்வு செய்கிற வாய்ப்பை நம் நாட்டின் மக்களாட்சி அரசமைப்பு நமக்கு வழங்கியுள்ளது. அந்த அரிய வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாம் பெற்ற பிள்ளைகளுக்கு மணமகன், மணமகளை பார்த்து, பார்த்து, தேடித்தேடி தேர்வு செய்கின்றோம். சாப்பாடு, துணி, கைக்கடிகாரமா, கால் செருப்பா, எதுவொன்றிலும் நாம் நல்லதை, சரியானதைத்தான் தேர்வு செய்கின்றோம். அதுபோல, நாட்டை ஆள நல்ல தலைவரை தேர்வு செய்கின்ற வாய்ப்பு நமக்கு வந்துள்ளது. அதனை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே என் அன்புச் சொந்தங்கள் அனைவரும் தவறாமல் வாக்குச் செலுத்த வேண்டும். இதில் நாம் பொறுப்பற்று, அலட்சியமாக இருக்கக்கூடாது. நம்முடைய தாத்தாக்கள் காமராசர், கக்கன், ஜீவானந்தம், முத்துராமலிங்கத்தேவர் என்று தூய்மையானத் தலைவர்களை தேர்ந்தெடுத்தது மக்கள்தான். மக்கள் அக்கடமையிலிருந்து விலகும்போது அயோக்கியர்கள் அந்த பதவிகளுக்கு தேர்வாகின்றனர். குண்டு வைத்து கொலை செய்வது, ஊழல் செய்வது, இலஞ்சம் வாங்குவது, முறைகேடாக சொத்து சேர்ப்பது வருமான வரி கட்டாமல் இருப்பது இவை தான் தேசத்துரோக குற்றம் என்று நீங்கள் நினைத்துள்ளீர்கள். இவை மட்டும் தேசத்துரோகமல்ல. (1/2)
தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞரும், முன்னணி இயக்குநரும், தமிழ் மீதும், தமிழர் நலன் மீதும் பெரும்பற்று கொண்ட தமிழ்த்தேசியவாதியுமான பெருமதிப்பிற்குரிய ஐயா வி.சேகர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், தமிழ்த்திரையுலகினருக்கும், இனமானத் தமிழர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
உறவுகளின் மதிப்பைப் பேசும் குடும்பத் திரைப்படங்களை இயக்கி, எளிய மக்கள் மனங்கவர்ந்த ஐயா வி.சேகர் அவர்கள் கலையுலகோடு தன்னை சுருக்கிக் கொள்ளாது, தமிழ், தமிழர் எனும் களங்களில் தீவிரமாகச் செயலாற்றியவராவார். இத்தோடு, தமிழ் மறையோன் வள்ளுவப்பாட்டன் பெயரில் திருவள்ளுவர் கலைக்கூடம் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, நல்ல படைப்புகளைத் தயாரித்து இயக்கினார். ஐயா அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவரது படைப்புகள் மூலமாகவும், மக்களுக்கான செயல்பாடுகள் மூலமாகவும் எப்போதும் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.
ஐயாவுக்கு என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
கர்நாடக மண்ணின் மகள், மரங்கள் வளர்த்து மண்ணை காத்த அன்னை, சுற்றுச்சூழல்
ஆர்வலர், போற்றுதற்குரிய தாய் சாலுமரதா திம்மக்கா தன்னுடைய 114 ஆம் வயதில் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
நூற்றாண்டுக்கு முந்தைய மூட வழக்கப்படி கல்வி கற்க விடாது, குழந்தைப்பருவத்திலேயே திருமணமும் செய்து வைக்கப்பட்டச்சூழலில்,
திருணமாகி குழந்தை இல்லாத அம்மா சாலுமரதா திம்மக்கா தம் கணவருடன் இணைந்து ஆலமரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கினார். ஒன்று, இரண்டு என்று தொடங்கிய அவருடைய ஆலமரக் குழந்தைகளை வளர்க்கும் நெடும்பயணம் கர்நாடக மாநில நெடுஞ்சாலையில் 5 கி.மீ தூரத்திற்குள் (இன்றைய அளவில் 1.5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்ட) 385 ஆலமரங்களை நட்டு வளர்த்தெடுத்து யாராலும் முடியாத தனிமனிதப் பெருஞ்சாதனைப் படைத்துள்ளார் அம்மா சாலுமரதா திம்மக்கா, அவைதவிர 8000 மற்ற மரங்களையும் வளர்த்த பெருமைக்குரியவர்.
தம்முடைய மரம் நட்டு மண் காக்கும் மகத்தான பணிக்காக இந்தியாவின் உயரிய விருதுகள் பல பெற்ற அம்மா சாலுமரதா திம்மக்கா அவர்கள் பன்னாட்டு சுற்றுச்சூழல் அமைப்புகளாலும் போற்றப்பட்டவர். இந்தியாவின் பல மாநிலங்களில் மரம் நடும் திட்டங்களுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது அவருடைய அரும்பணிக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும்.
'ஆலமரங்களின் தாய்' என போற்றப்பட்ட அம்மா சாலுமரதா திம்மக்கா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தண்ணீர் மாநாடு - 2025
ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி!
பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி!
நீரின்றி அமையாது உலகு!
நினைவில் நிறுத்திப் பழகு!
என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடக்கவிருக்கிறது.
தண்ணீரின் தேவை என்ன? இன்றைக்கு தண்ணீர் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது? ஒரு மிக உயர்ந்த விற்பனை பண்டமாக, நிறைய பொருளீட்டுகின்ற, இலாபம் குவிக்கின்ற ஒரு சந்தை பண்டமாக மாற்றி இருப்பது எவ்வளவு பெரிய பேராபத்தான போக்கு என்பதையெல்லாம் எடுத்து விளக்குகிற மிக மிக அவசியமான ஒரு மாநாடு இந்த தண்ணீர் மாநாடு - 2025.
நாள்: 15-11-2025 சனிக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு
இடம்: வீரப்பெரும்பாட்டன் கரிகால் பெருவளத்தான் திடல்
பூதலூர் திருவையாறு தஞ்சை மாவட்டம்
என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்!
தண்ணீர் மாநாடு சிறக்க வேண்டும்!
நன்றி! வணக்கம்!
நேற்றிரவு கோவை பிருந்தாவன் காலனியில் கல்லூரி பயிலும் தங்கைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபானக்கடையை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சியினர்.
தம்பி @Perarivalan02 கேட்டது போல, "எவ்வளவு பெரிய கொடுமை நடந்திருக்கு,
விடிய விடிய மதுவித்துட்டு இருக்கீங்க?"
திராவிட மாடலின் கோரமுகம் இதுதான்
எவன் செத்தா என்ன? நமக்கு சரக்கு விக்கனும்.
கோவை வானூர்தி நிலையம் அருகே கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
கோவை மாநகரம் வானூர்தி நிலையம் அருகே நேற்றிரவு (02-11-2025) ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள செய்தி அதிர்ச்சியையும், பெரும் கோவத்தையும் ஏற்படுத்துகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை நிகழாத நாளே இல்லை என்ற அளவிற்குப் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுகிறது. பட்டப்பகலில் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், வீடு புகுந்து தாக்குதல், சாலையில் செல்வோர் மீது தாக்குதல், சிறு வியாபார கடைகளைத் தாக்கி உடைப்பது, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருக்கும் கட்டுக்கடங்காத கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் என மக்கள் பாதுகாப்பாக நடமாடமுடியாத அளவிற்கு தமிழ்நாடு மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. பள்ளி சிறுமிகள் முதல், 80 வயது பாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெருந்துயரங்கள் நாளும் அரங்கேறுகின்றது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுநிகழ்வு நாட்டையே உலுக்கிய நிலையில், அதன் பிறகும் திமுக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்காததே தற்போது கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள அவலம் நிகழ அடிப்படை காரணமாகும்.
அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க முடியாமல் இந்த குற்றங்களை ஒழிக்கவே முடியாது. மதுவையும், போதைப்பொருட்களையும் ஒழிக்கக்கூடிய அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு முதலமைச்சர் உறுதிமொழி மட்டும் எடுத்துக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
மதுவை விற்கும் அரசால் குற்றங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? போதைப்பொருட்களை ஒழித்து சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டிய காவல்துறை ஆளும் கட்சியின் அதிகாரக் கண்ணசைவுக்குச் சேவை செய்யும் ஏவல்துறையாகச் செயல்பட்டு எதிர்க்கட்சியினரை, அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களை, சமூக ஆர்வலர்களை அடக்கி ஒடுக்கி பொய் வழக்கு புனைந்து சிறைப்படுத்துவதையே முழு மூச்சாக செய்து வருகிறது. பெண்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்டு இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட திமுக அரசு காரணமாகப்போகிறது? இதுதான் பெண்களின் வாழ்வை முன்னேற்றும் திமுக அரசின் செயல்முறையா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
ஆகவே, கோவை வானூர்தி நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
என் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழும் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மாற்றம் என்பது சொல் அல்ல செயல்!
இது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு!
இது நம் இனத்தின் திருவிழா!
எல்லோரும் கூடுவோம்!
தீய ஆட்சிமுறை ஒழிய
தூய ஆட்சிமுறை மலர
கேடுகெட்ட பணநாயகம் ஒழிய
மாண்புமிக்க ஜனநாயகம் மலர...
அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
புரட்சி எப்போதும் வெல்லும்,
நமது வெற்றி அதைச் சொல்லும்!
திருச்சியில் திரள்வோம்!
தீந்தமிழ் இனததீரே!
பேரன்பின் அழைப்பில்
உங்கள் சீமான்
நாம் தமிழர் கட்சி - தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு மண்டலம், தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி கா.வெங்கட்ராமள் அவர்களின் தந்தை ஐயா காந்தி கலியராயர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி
வெங்கட்ராமன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா காந்தி கலியராயர் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!
இன்று 04-10-2025 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே அமலி நகர் மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடி படகு மூலம் மீனவச் சொந்தங்களுடன் கடலுக்குள் சென்று மீன் பிடித்தபோது,