என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி.
#மய்யக்கொள்கைகள்
1. தமிழகம் புனரமைப்பு
2 . இல்லத்தரசிக்கு ஊதியம்
3 .மகளிருக்கு சமநிலை
4. அரசு இயந்திரம் ஊழல் இல்லாமல் செயல்படுதல்
5. அனைவருக்கு சமமான கல்வி
6 . பொது மருத்துவ சுகாதாரம்
7. வேலை வாய்ப்பு உறுதி செய்தல்
8. விவசாய நலன்
9. நீர் பெருக்கி விவசாயம் காப்பது
தேர்விலேயே ஆள் மாறாட்டம்,
முடிவுகளில் முழுக் குழப்பம்.
இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு,
உள் ஒதுக்கீடும் துறப்பு.
கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா?
கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள்.
அரசின் கடமைகளைச் சுட்டிக் காட்ட மக்கள் நீதி மய்யம் என்றுமே தயங்கியதில்லை.
கிராம சபைகளைக் கூட்ட வேண்டியதன் அவசியத்தை தமிழ்நாடு அரசிற்கு அறிவுறுத்த சென்னை உயர்நீதி மன்றத்தை மக்கள் நீதி மய்யம் அணுகியுள்ளது.
மக்கள் நலனுக்காக என்றும் குரல் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம்.