என்னை மதித்து பதில் கூறியதற்கு நன்றி🙏, ஆனால் நீங்கள் கொடுத்த சான்றுகள் அனைத்துமே தவறானது❗ மேலும் நான் என்ன சொல்கிறேன் என்பதையே நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்று சொன்ன கதையாக இருக்கிறது உங்கள் காணொளி🤷
@vickneswarang
மானாமதுரை அரசு தொழிற்பேட்டையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள அரசு தொழிற்பேட்டையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் உயிருக்கும், உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய ஆலையை மக்கள் எதிர்ப்பையும் மீறி அமைக்க முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே விருதுநகர் மாவட்டம் முக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட இதே மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக அந்த ஆலை மூடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அத்தகைய ஆலையை மீண்டும் மானாமதுரையில் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? மக்களின் எதிர்ப்பால் ஒரு பகுதியில் கைவிடப்பட்ட திட்டத்தை மற்றொரு பகுதியில் திணிப்பதுதான் அரசின் மக்கள் நல ஆட்சியா?
மருத்துவமனைகளிலிருந்து சேகரிக்கப்படும் மனித ரத்தம் படிந்த பொருட்கள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருத்துவக் குழாய்கள், நோய்த்தொற்று அபாயமுள்ள கழிவுகள் உள்ளிட்டவற்றை முறையாகச் சுத்திகரிக்கத் தவறினால், அவை மிகப்பெரிய பொதுசுகாதாரப் பேரிடராக மாறும். குறிப்பாக, குளோரின் கலந்த மருத்துவக் கழிவுகளை முறையற்ற வகையில் எரிப்பதால் டையாக்ஸின்கள், பியூரான்கள் உள்ளிட்ட நச்சு வேதிப்பொருட்கள் காற்றில் கலந்து, புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
நச்சுப்புகை மற்றும் நுண்துகள்களால் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் பாதிப்புகள், நுரையீரல் நோய்களும் ஏற்படக்கூடும். அதுமட்டுமின்றி, மருத்துவக் கழிவுகளை எரித்த பிறகு வெளியேறும் சாம்பல் மற்றும் நச்சுக் கழிவுகள் முறையாகக் கையாளப்படாவிட்டால் மண்ணிலும், நிலத்தடி நீரிலும் கலந்து சுற்றுச்சூழலை நஞ்சாக்கும் பேராபத்து உள்ளது. இதன் பாதிப்பு ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களின் மக்களையும், விவசாய நிலங்களையும், கால்நடைகளையும் எதிர்காலத் தலைமுறையினரையும் பாதிக்கும்.
மக்களின் வாழ்வாதாரத்தையும், உடல்நலத்தையும் பலிகொடுத்து யாருடைய நலனைக் காப்பாற்றுவதற்காக இத்தகைய ஆலை அமைக்கப்படுகிறது? மருத்துவக் கழிவுகளைச் சுத்திகரிப்பது அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதற்காக மக்கள் வாழும் பகுதிகளையும், அவர்களின் குடிநீர் ஆதாரங்களையும், சுற்றுச்சூழலையும் அழிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் உயிருக்கு, உடல் நலனுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் நச்சு ஆலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மக்களின் நல்வாழ்வினை விடவும் எந்தத் தொழிற்சாலையும், எந்தத் தனியார் நிறுவனத்தின் லாபமும் பெரிதல்ல!
எனவே, மக்களின் நலன் கருதி மானாமதுரை தொழிற்பேட்டையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்தி, திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்விடங்களை நச்சுக் கிடங்குகளாக மாற்றும் இத்தகு கொடுந்திட்டத்தை, மக்களின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து முன்னெடுத்தால், மானாமதுரை மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
"படிச்சி சொன்னா கேட்க மாட்டாங்க; நடிச்சிட்டு சொன்னா தான் கேட்பாங்க போல. இனி நான் நடிக்கப் போகிறேன்" – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#Seeman | #NTK | #Cinema | #PuthiyathalaimuraiTV
என் கணவரை விட அவரைத்தான் பிடிக்கும்' எனப் பெண்கள் திரும்பத் திரும்பப் பேசுவதும், அதைச் சம்பந்தப்பட்ட தலைவர் தடுத்து அறிக்கை விடாமல் இருப்பதும் தவறானது. முன்பு ஒரு மேடையில் பெண் ஒருவர் இவ்வாறு கூறியபோது, 'உங்களுக்கு உடை, உணவு, வீடு, குழந்தைகள் என எல்லாமே உங்கள் கணவர்தான்; அவரை விட உலகில் சிறந்தது எதுவுமில்லை, நான் ஒரு நடிகன் என்னை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்' என நடிகர் ஷாருக்கான் அறிவுரை கூறினார்; ஆனால் இங்கே அத்தகைய பண்பாடு இல்லாமல் போவது வேதனை அளிக்கிறது!"
- தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
அடிச்சி ஆடியே ஆகணும், கடைசி 6 பந்து தான் இருக்கு. எல்லா பந்தும் 6 அடிச்சாவது வென்றுடணும்..
அம்பாசமுத்திரத்தில் நான் பொதுவேட்பாளரா? யார் சொன்னது? பொது வேட்பாளர் என திமுக சொன்னதா? அதிமுக சொன்னதா? - அண்ணன் சீமான் கேள்வி
"என் புருஷனை விட விஜய் தான் பிடிக்கும்னு சொல்றாங்க.. எல்லா பெண்களும் எதுக்கு இப்படி சொல்றீங்க..? இவர்களை சொல்லி குற்றம் இல்லை.. இவர்களோடு ஒருத்தன் வாழுறான் பாரு அவனை தான் தேடணும் - சீமான் பேச்சு
நடிகர் ஷாருக்கானையும் சுட்டிக்காட்டி சீமான் சொன்ன கருத்து
#Nellai | #NTK | #Seeman | #CMVijay | #ActorShahRukhKhan | #PolimerNews
இன்று நடந்த இந்த நிகழ்வை எந்த தமிழ்நாட்டு ஊடகமாவது காண்பித்துள்ளார்களா?
சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பணம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார் நாதக அண்ணன் @Seeman4TN சீமான் அவர்கள்❤️
#Seeman#NTK
தேசியத் தலைவர் படத்தை வைக்கவே முடியாது என்று ஒரு காலம் இருந்தது, சீமானும் சீமான் தம்பிகளும் அதை உடைத்து இன்று தெருவெங்கும் தேசியத் தலைவர் படத்தை வைத்திருக்கிறோம் - அண்ணன் புதுக்கோட்டை ஜெயசீலன் பேருரை !
#தேசியத்_தலைவர்72