மைதான DJ ஜெய் ஶ்ரீ ராம் பாட்டு போட்டது, பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து ரசிகர்கள் அந்த கோஷம் எழுப்பியது, மேக் மை டிரிப் நிறுவனத்தின் பொறுப்பற்ற விளம்பரம் என கிரிக்கெட் உலகம் மட்டுமல்லாது, பகுத்தறிவு கொண்ட எவருமே வெட்கப்படும் அளவுக்கான சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. 'அதிதி தேவோ பவ' என மேடைக்கு மேடை முழங்குகிறது ஒரு குழு. அதே குழு உலகக்கோப்பை போட்டிக்கு வந்த ஒரு விருந்தினர் தேசத்தின் வீரர்களை மோசமாக நடத்தியிருக்கிறது. கிரிக்கெட் உலகமே இதைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறது.
இந்தியா vs பாகிஸ்தான் போட்டி என்பது ஒரு கிரிக்கெட் ரைவல்ரி என்பதைக் கடந்து ஒரு அரசியல் யுத்தமாகவே பார்க்கப்பட்டுவருகிறது. உலகக் கோப்பை அரங்கில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவது, அதை வைத்து அரசியல் செய்வதற்கு தோதாகிப்போனது. அதிலும் இஸ்லாமிய வெறுப்பின் முகமாகவே மாறிப்போயிருக்கும் பாஜக இந்த போட்டியை வைத்து முடிந்த அளவுக்கு அரசியல் செய்துகொண்டிருக்கிறது. பிசிசிஐ, ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஐசிசி என அனைத்து கிரிக்கெட் நிர்வாகங்களும் கூட அதற்குத் துணை போய்க்கொண்டுதான் இருக்கின்றன.
#INDvPAK
https://t.co/yiZ3bzAece
Unleashing my @actorvijay na in a never seen before avatar 🔥💯
#LeoTrailer
Tamil: https://t.co/yVnAVolBUh
Telugu: https://t.co/ppRRPK6TLX
Kannada: https://t.co/zvrRp1yvB7
#LeoFromOctober19#LEO 🔥🧊