Yes, Sai had some privilege in entering the industry… But so did the sons of ARR, Vidyasagar, Harris! They also do music… In fact, they had even more privilege and access than Sai.
But privilege alone doesn’t make you successful. If it did, all of them would have become successful composers by now…
So stop complaining, start working
சட்டத்துறை அமைச்சர் இந்த அளவிலே தன்னுடைய பதிலை, விவாதத்தை கொண்டு போக விரும்புவார் என்றால், I can also pay you in the same currency.
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று நீங்கள் சொல்வீர் என்று சொன்னால், வேறு எந்த லாட்டரி மருமகனுக்காக புது விமான நிலையத்தை நீங்கள் கொண்டு போவீர்கள் என்று நான் கேட்க முடியுமா? நான் கேட்கவா?...
:: எப்பவுமே பொறுமையா பேசுற தங்கம் தென்னரசே...இன்னைக்கு நெட்டகாலன "லாட்டரி மருமவனேனு" தூக்கி ஒரே சொருவா சொருவிட்டாரு....
அவங்க அவங்க தொகுதிய பார்க்கவே நேரம் இல்லாத தவெக க்கு!!
ராஜினாமா பண்ண தொகுதி வேற பார்ப்பாங்களாம் 😂😂
Udhay oru kottu ✊
EPS oru kottu ✊
Sengo mama 😂😂😂
#TVKVijayFails
#WATCH | "இவ்வளவு நடந்த பிறகு கைவிடப்பட்டால், இனி எப்போது விமான நிலையம் வரும்? மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம் எப்படி சாத்தியம்? அங்கு இருக்கிற மக்களை எங்கே அனுப்புவீங்க?"
பேரவையில் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்ட தங்கம் தென்னரசு
#SunNews | #Parandur | @TThenarasu
#WATCH | "இப்படிதான் சட்டத்துறை அமைச்சர் விவாதிப்பார் என்றால் நானும் பேசுவேன்.. நான் இப்படி கேக்கவா?"
அமைச்சர் நிர்மல் குமார் பேச்சுக்கு தங்கம் தென்னரசு கொடுத்த பதிலடி
#SunNews | #NirmalKumar | #ThangamThennarasu | #TNAssembly
Vanakkam Tamilnadu! ❤️
We are thrilled to announce that the most loved BETHLEHEM KUDUMBA UNIT is releasing worldwide in TAMIL on 4th SEPTEMBER .
FUTURE RUNUP FILMS is bringing this beautiful story to you with lots of love.
See You Soon !
@_mamithabaiju@BhavanaStudios@FutureRunup
#BethlehemKudumbaUnit #TamilCinema #FutureRunupFilms #WorldwideRelease #September4 #BKUTamil
Parandur Airport is not merely an airport project—it is a strategic investment in the next 50 years of Chennai and Tamil Nadu.
With a planned ultimate capacity of 100 million passengers a year, Parandur was envisioned to strengthen Chennai’s position as a global aviation, manufacturing, logistics and investment hub. It would support the movement of passengers, cargo, imports and exports, while creating opportunities for industrial corridors, warehousing, services and employment.
The project had already received Site Clearance from the Government of India in 2024 and In-Principle Approval from the Ministry of Civil Aviation in 2025.
Yes, the concerns of farmers, water bodies, rehabilitation and the environment must be addressed with the utmost sensitivity. Development cannot come at the cost of people’s livelihoods. But the answer should be better planning, fair rehabilitation and stronger safeguards—not abandoning Chennai’s long-term aviation needs.
Chennai’s existing airport is also being expanded, but that alone cannot substitute for the strategic need for additional long-term aviation capacity.
Tamil Nadu should not lose a vital infrastructure opportunity because of short-term political considerations.
Governments may change. Political slogans may change. But infrastructure decisions shape generations.
Tamil Nadu needs vision, connectivity, investment and jobs—not development held hostage to politics.
#ParandurAirport #TamilNadu #Chennai #Infrastructure #Development
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கித் தள்ளிவிடும் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு
“சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், தமிழ்நாடு அரசால் கைவிடப்படும். விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில், புதிய விமான நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, புதிய விமான நிலையத்துக்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்” என சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கித் தள்ளும் முதலமைச்சரின் இந்த அறிவிப்பானது கடும் கண்டனத்திற்குரியது. பொருளாதார வளர்ச்சியில், நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிற்கு, புதிய விமான நிலையம் என்பது மிகமிக அத்தியாவசியமானது. ஏற்கெனவே பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்கள், சென்னை விமான நிலையத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.
ஒரு அரசால் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டு, இடம் தேர்வு செய்யப்பட்டு, பெரும்பகுதி நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, அந்தத் திட்டத்தைக் கைவிடுவது மிக மோசமான முன்னுதாரணமாகும். இவ்வாறு செய்தால், தமிழ்நாட்டில் முதலீடு செய்தால், ஆட்சி மாறியதும் அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த முடியாது என்ற அச்சம் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும். இது தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகளை வெகுவாகப் பாதிக்கும்.
தற்போது அனைத்து மாநிலங்களுமே போட்டிபோட்டுக்கொண்டு முதலீட்டாளர்களுக்கு வலைவீசி வருகின்றன. இந்தச் சூழலில், @TVKPartyHQ அரசின் செயல்பாடு என்பது, இருக்கும் முதலீட்டாளர்களையும் வெளியேற்றிவிடுமோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது.
புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு விமான நிலையம் அமைப்பது என்பது எளிதான காரியம் அல்ல. விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு இல்லாமல் தமிழ்நாட்டில் 6,000 ஏக்கர் நிலம் கிடைப்பது கண்டிப்பாக சாத்தியப்படாது. விமான நிலையம் அமைக்கப் புதிய இடத்தைத் தேர்வு செய்து அறிவித்தால், அங்கும் விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள். அந்தப் போராட்டம் பரந்தூரைவிட மிகவும் வீரியமானதாகவே இருக்கும்.
எனவே, “ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடினோம்” என்ற ஒரே காரணத்திற்காக அந்தத் திட்டத்தை ரத்து செய்வது சரியானது அல்ல. எனவே, முதலமைச்சர் @TVKVijayHQ தனது ‘ஈகோ’வை கைவிட்டு, பரந்தூரிலேயே விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தைத் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். புதிய விமான நிலையம் அமைக்க சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். அந்த இடங்களின் விவரங்களையும் உடனடியாக வெளியிட வேண்டும்.
புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு விமான நிலையம் அமைக்கப்படும் வரை, தற்போது உள்ள சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இதனால், சென்னைக்கு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு புதிய விமான நிலையம் வராது என்ற அச்சம் தொழில்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதை உணர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் செயல்பட வேண்டும். பரந்தூரிலேயே விமான நிலையத்தை அமைக்க வேண்டும்.
@CMOTamilnadu
#TamilNadu Economy at disaster
Decision to drop Parandur Airport project is a Real disaster for Tamil Nadu.
This will push us back the Tamil Nadu a decade even further.
@sumanthraman Sir : This is looking more and more like a Tughlaq Government
#Parandur
இன்றைய தினம் சட்டப்பேரவையில், தமிழக முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்கள், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக வேறு சில இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், புதிய இடம் எது என்பதையும் முதலமைச்சர் அறிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில், இரண்டாவது விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்வு செய்யத் தாமதப்படுத்துவதால், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறைந்தது 10 ஆண்டுகள் தாமதிக்கும் அபாயம் உள்ளது.
பரந்தூர் திட்டத்திற்கு மாற்றாக வேறு இடத்தில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு நிர்வாக ரீதியாக முடிவெடுத்தாலும், புதிய இடத்தைத் தேர்வு செய்வது, மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட சட்டப்பூர்வமான அனுமதிகளைப் பெறுவது, ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது, நிலம் கையகப்படுத்துவது, தேவையான உரிமங்கள் பெறுவது என, விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் மற்ற மாநிலங்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளப்படும்.
இன்றைய தேவைக்கே சென்னை விமான நிலையம் போதுமானதாக இல்லை என்பதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சென்னை விமான நிலையத்தின் பரப்பளவு சுமார் 1,300 ஏக்கர். ஆனால், ஹைதராபாத் விமான நிலையம் சுமார் 5,500 ஏக்கர், பெங்களூரு விமான நிலையம் 4,000 ஏக்கர், நவி மும்பை விமான நிலையம் 2,866 ஏக்கர், டெல்லி விமான நிலையம் 5,100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன.
இவ்வளவு குறைந்த பரப்பளவில் இயங்கும் சென்னை விமான நிலையம், குறைந்தபட்சம் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும். ஆனால், விமான நிலையத்தில் தரையிறங்கும் பகுதியில் இருந்து வெளியே வந்து, உள்ளூர் போக்குவரத்தை அடைவதற்கே பயணிகள் இன்று பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சென்னை, இன்று விமானப் பயணிகள் கையாளும் திறனில் 5-வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட சென்னை விமான நிலையத்தை விட டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்கள் முன்னிலையில் உள்ளன.
மேலும், சென்னை விமான நிலையத்தில் போதுமான டாக்ஸிவேக்கள் மற்றும் ஏர்பிரிட்ஜ்கள் இல்லாத காரணத்தால், பெரிய விமானங்களைக் கையாளும் திறன் கொண்ட Code F விமான நிலையமாக சென்னை விமான நிலையம் வகைப்படுத்தப்படவில்லை. இதனால் A380 போன்ற மிகப்பெரிய விமானங்கள் தரையிறங்க, சென்னை விமான நிலையம் ஏற்றதாக இல்லை. தென்னிந்தியாவில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் பெரிய விமானங்களை கையாளும் Code F விமான நிலையங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சிகள் வரலாம், போகலாம். ஆட்சிகள் மாறலாம். ஆனால் இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டு மக்கள் திரும்பிப் பார்க்கும்போது, தொலைநோக்குப் பார்வையற்ற நிர்வாகத்தின் காரணமாக, ஒரு தரமற்ற கட்டிடத்தை விமான நிலையம் என்று அழைக்கும் நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று வருந்தக்கூடாது. எனவே, தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான பொருத்தமான இடத்தை உடனடியாகத் தேர்வு செய்து, விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.
மேலும், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான செய்திகளின்படி, பரந்தூர் விமான நிலையத்திற்குத் தேவையான 5,746 ஏக்கரில் சுமார் 1,700 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஏற்கனவே கையகப்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பரந்தூர் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில், அந்த 1,700 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு இனி என்ன செய்யப் போகிறது? இதற்கான தெளிவான பதிலையும் தவெக அரசு, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.