Watch | "தவெகவுக்கு ஓட்டு கேட்டு, இதே ஏரியால தெருத் தெருவா போயிருக்கேன். இன்னைக்கு எங்களோட வாழ்வாதாரத்துக்கே ஆபத்து வந்துருக்கு.."
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு
#SunNews | #TVK | #TNSecretariat | #ForeshoreEstate
தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?
காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா,, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.
இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.
கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளில் கழக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் இ.பரந்தாமன், வழக்கறிஞர் திருமதி எஸ்.சுகன்யா ஆகியோர் இன்று (10.9.2026), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின்,எம்.எல்.ஏ., திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சட்டம் - ஒழுங்கின் நிலை படுபாதாளத்தில் செல்கிறது; முதலமைச்சர் இதனை சீர்செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வைத்தபோது, அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு - என சட்டப்பேரவையில் ரீல்ஸ் பேசிக்கொண்டிருந்தார் முதலமைச்சர் விஜய்.
ஆனால் தலைநகர் சென்னைநாளுக்கு நாள் கொலை நகரமாக மாறி வருகிறது.
காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் (28) எனும் இளைஞரிடம் “‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே பேட்டி அளித்த நிலையில், நேற்றிரவு முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
காவல் நிலையங்களை அணுகும் மக்களை மனிதநேயத்துடன் நடத்தி அவர்களை பாதுகாப்பதும், சட்டம் ஒழுங்கைக் காப்பதுமே தமிழ்நாடு காவல்துறையின் வேலை.. ஆனால் இன்று தமிழ்நாட்டில் அந்த நிலை இருக்கிறதா?
இதற்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும், ரீல்ஸ் வெறியர், டம்மி முதலமைச்சர் @cmotamilnadu என்ன சொல்லப் போகிறார்?
பெரும்பாலும் அரசியல் பழிவாங்குறதுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுறதுங்கிறது, இங்கு இருக்கிற எல்லாருக்குமே நல்லா தெரியும். உங்களுக்கு தெளிவா சொல்லணும்னா, உங்க கூட்டணியில இருக்கிற காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மேல கூட அமலாக்கத்துறை பல வழக்குகளை போட்டிருக்கு இதெல்லாம் ஒன்றிய அரச கொள்கை எதிரியா சித்திரிக்கிற உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு?
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல; அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.
வரலாறு, தியாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், சமூக வலைதளங்களில் பொய்யையும் அவதூறையும் வாந்தியெடுக்கும் Abuser பொறுக்கிகள் நடத்தும் கட்சிதான் தவெக என்பதை மறுபடியும் தாங்கள் எடுத்த வாந்தியால் நிரூபித்து இருக்கிறார்கள்.
மூளையும் மூஞ்சியும் இல்லாமல், தந்தையின் தயவால் சினிமாவில் வளர்ந்து, ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசி, 'டூப்' வைத்துச் சண்டை போட்ட இந்தத் தற்குறிக்கு, சிறைக் கொட்டடியில் MISA கைதிகள் போலீசாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டுச் சிந்திய ரத்தத்தின் மதிப்பு எப்படித் தெரியும்?
பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்திக்கத் துப்பில்லாமல், சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுரைக்கு மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, கேமரா முன்னால் கத்தி, கதறி நடிக்கும் தற்குறிக்கு நிஜ வலிகளின் உணர்வு எப்படிப் புரியும்? மிசா தியாகம் என்பது, சினிமாவில் நடிப்பது போல, பின்னாடி கையை வைத்து தடவிக்கொண்டு பஞ்சு மெத்தையில் உருள்வதல்ல; அது கொள்கை உறுதி மாறாமல், சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்கிடையே ரத்தம் சிந்திய நிஜம்!
Call sheet காப்பியையும், வருமானத்தை மறைத்து வாங்கிய 'IT Raid' காப்பியையும், வசனகர்த்தாக்கள் எழுதிக்கொடுக்கும் Script பேப்பரையும் மட்டுமே பார்த்துப் பழகிய மூளையே! உனக்கு எமர்ஜென்சி காலத்தில் நடந்த மிசா கொடூரங்களை ஆவணப்படுத்திய இஸ்மாயில் கமிஷன் அறிக்கை எனும் வரலாற்று ஆவணத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் வக்கு எங்கே இருக்கப் போகிறது?
முத்தமிழறிஞர் கலைஞர் அணிந்திருந்த 'மஞ்சள் துண்டு', இந்த மாநிலத்தின் சமூகநீதியைக் காத்த சுயமரியாதைக் குறியீடு! ஆனால், இந்த 'டம்மி' முதலமைச்சரின் மேக்கப்பை கலைத்துவிட்டால், உள்ளே மிஞ்சுவது வெற்று அரசியல் சூனியமும், நிர்வாகத் திறமையின்மையும்தான்.
நீங்கள் விமர்சிக்கும் அந்த 'கட்டுமரம்', இந்தியாவின் பல அரசியல் சுனாமிகளையே நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டு தமிழ்நாட்டைக் காத்தது மாபெரும் வரலாறு! அதில் ஒன்றுதான் எங்கள் தலைவரும் கழக உடன்பிறப்புகளும் MISA சிறைவாசத்தை எதிர்கொண்ட எமர்ஜென்சி எனும் நெருக்கடி நெருப்பாறு.
கொள்கை, சித்தாந்தம் எதுவும் இல்லாமல், தியாகிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் உங்கள் அநாகரிகச் சாக்கடையிலேயே, தவெக எனும் காகிதக் கப்பல் மூழ்கும்.
இதோ அந்த எமர்ஜென்சி காலத்து மிசா சிறைவாசம் தொடர்பான வராலற்று ஆதாரங்கள். குரைக்கும் விலங்குகளே கவ்விக் கொண்டு ஓடுங்கள்.
வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள்.
காரணம், இந்த ஆவணங்களில் உள்ள பதிவுகளை அவர்கள் தங்கள் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள்.
பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!
கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!
நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்!
அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்! 🇮🇳
#IndependenceDay