பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நி���ுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#TNDIPR
பெண்களின் பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கையும் மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐஜி தலைமையில் “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படையை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. 🔥
முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் இந்த படை, பெண்களின் பாதுகாப்பில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். ✊🏻
March 2026 இல்..1 மாதம் முன்
ஆளுநர் பதவியேற்பு விழாவில்..
Vande Matarm
தேசிய கீதம்
தமிழ்.. மொத்தமாகவே புறக்கணிப்பு 😮😮😮
திமுகவின்..தமிழின திரோகம் அம்பலம் 😮😮😮😮
திமுக அரசின் நடைமுறையையே இன்று ஆளுனரின் கட்டுப்பாட்டில் இருந்த அரசு பின்பற்றியதா😮
https://t.co/qneeTYYEZb
நேற்று இரவு 1 மணிக்கு நடந்த கார் ஃபயர் விபத்தை நேரடியாக ஓடி வந்து சரி செய்த ராயபுரம் தமிழக வெற்றி கழக எம்ல்ஏ ஆட்டோ ஓட்டுனர் விஜய் தாமு 👏👏👏🇪🇸
இவரு cake cut பண்ணதுக்கு கடிச்ச மீடியா இந்த நியூஸ் இன்னும் போடல..
தூத்துக்குடி மாணவிக்கு கொடுமை நடந்து மூன்று நாட்களாகியும் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் இன்னும் வரவில்லை ஆனால் கரூரில் மட்டும் 41 பேர்களின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்களும் ஒரே இரவில் வந்தது எப்படி???
சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நட��்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க ப��டம் புகட்டப் போவது நிச்சயம்!
அமைச்சர் சேகர் பாபு தூண்டுதல் பேரில் கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் தாக்கிய திமுக ரவுடிகள் !
இதுவரை தாக்கியவர்���ள் மீது புகாரை பதிவு செய்யாத காவல்துறை !!
இந்த மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் - @CTR_Nirmalkumar
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும்.
இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்!
சென்னை அடையாறு பகுதியில், சாக்குமூட்டையில் பீகார் மாநில இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட செய்தி அடங்குவதற்குள��, அவரது இரண்டு வயதுக் குழந்தையின் உடலும் மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாயமான அவரது மனைவியின் உடலும் தேடப்பட்டு வரும் நிலையில், பிழைப்பு தேட�� வந்த ஒரு குடும்பமே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கும் இந்தச் சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்திற்கு கூலி வேலைக்காக
வந்த ஒரு குடும்பத்தையே கும்பல் ஒன்று நாசம் செய்திருப்பதாக வரும் செய்திகள் நெஞ்சைப் பதற வைக்கிறது.
சிசிடிவி கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்துப் பணிகள் நடைபெறும் என்று சொல்லப்படும் தலைநகர் சென்னையிலேயே, குற்���வாளிகள் எவ்வித பயமுமின்றி இத்தகைய கொடூரங்களை அரங்கேற்றுவது, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதற்குச் சான்றாகும். போராட்டங்களை ஒடுக்குவதில் காட்டும் தீவிரத்தைக் காவல்துறையினர் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்துவதில் காட்டுவதில்லை. வெறும் விளம்பரங்களால் மட்டுமே ஒரு மாநிலத்தை "அமைதிப் பூங்கா" என்று சித்தரித்துவிட முடியாது.
ஆட்சியின் இறுதிக்கட்டத்தில��� கூடத் தமிழக அரசு ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிப்பதாகத் தெரியவில்லை. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் விடப்போவதில்லை , இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வசனம் பேசிய முதல்வர் அவர்கள் குறிப்பிட்ட இரும்புக்கரம் எங்கே என்று தமிழக மக்கள் கேள்வி
கேட்கின்றனர். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான சம்பவங்கள் நாள்தோறும் தொடரும் நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி என்று வாய் கூசாமல் பொய்களை மேடைக்���ு மேடை முதல்வர் அவர்கள் பேசி வருகிறார். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசை அகற்றினால் மட்டுமே, தமிழக மக்களுக்கு உண்மையான பாதுகாப்பு கிடைக்கும்.
என் நெஞ்சில் குடியிருக்கும்
அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் வி��ில்.
தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத்
தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி.
ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழை��்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.
நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில்.
நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.
ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.
���ட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.
வெற்றிச் சின்னம் விசில்.
வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.
விசில் போடுவோம்.
All the talks about him being done and dusted but the response came from bat, people can talk, but the response is there in hardwork and God’s will. Great to see you replying the critics with the bat. All the best for upcoming matches! @imVkohli#AsiaCup2022#ViratKohli