Heartbroken 💔 @actorvijay Anna.. as a brother I’m standing with you as one among the millions of brothers beside you. You don’t need a date.. you are the opening. Whenever that date is.. Pongal only starts then. #istandwithvijayanna
ப்பா.. நேரடி மிரட்டல்🥵🥵🔥🔥
நாங்க ஒரு ஜனநாயக அமைப்பா இருக்குற வர தான்டா உங்களுக்கு நல்லது..
தேர்தலாவது மயிராவதுனு தூக்கி போட்டு இறங்குனோம்.. ஒரு தியேட்டர்லையும் ஒரு படமும் ஓடாது🥵🥵🔥🔥
One last warning..! #Kingdom
Stop Screening of the Film 'Kingdom,' which Insults Eelam Tamils!
I was deeply shocked to learn that the recently released movie Kingdom includes scenes that portray Eelam Tamils in a highly negative and criminal light. Under the guise of "freedom of expression," no one can be allowed to distort or misrepresent the history of the Tamil national race. The portrayal in the film that Eelam Tamils oppressed Hill Country Tamils is a gross historical distortion and a serious act of deception. Depicting something that never happened as if it were fact — and portraying Eelam Tamils in such a derogatory manner — is completely unacceptable.
The #TamilEelam liberation struggle is the unparalleled heroic history of martyrs who sacrificed life itself to achieve the noble aspiration of a Tamil Eelam Socialist Republic. The LTTE (Liberation Tigers of Tamil Eelam), unlike any other liberation movement in the world, waged a disciplined and principled struggle guided by dignity, ethics, and humanitarian war codes. Even in the final phase of the war, they did not act with revenge or target Sinhala civilians or their settlements. They remained committed to righteousness till the end.
By contrast, the Sinhala military relentlessly bombed Tamil civilian homes, places of worship, hospitals, and schools, violating every war convention. They used banned chemical and cluster bombs, committed mass sexual violence against Tamil women, seized Tamil lands, turned Tamil territory into cremation grounds, and unleashed genocidal terror. The Sinhala state and military, without following any rules of war, brutally massacred nearly 200,000 Tamils in a genocidal onslaught.
Even 15 years after the end of the Eelam war, justice has not been served for the atrocities committed against the Tamil people. The United Nations and the international community have not delivered any resolution. Tamil people are still fighting to bring attention to the genocide, demanding international war crimes investigations against Sinhala rulers and calling for a referendum to decide on forming a separate nation.
At a time when we are raising global awareness of the unspeakable injustice and genocide committed against our race, and when we are carefully communicating our legitimate stand to other national races of the world, we cannot accept a film like Kingdom, which contains scenes that demean the dignity of our people and the pain of Eelam Tamils.
Any depiction that insults the greatness of our national leader Hon. Velupillai Prabhakaran, our sacred martyrs of the Liberation Tigers of Tamil Eelam, our valiant liberation struggle, and our umbilical kin — the Eelam Tamils — will never be tolerated.
Therefore, on behalf of the Naam Tamilar Katchi, I strongly urge that the film Kingdom, which degrades the Eelam Tamils, be completely withdrawn from screening in Tamil Nadu in respect of Tamil sentiments. Failing which, we warn that we will lay siege to theatres and stop the screening of the film.
- #Seeman | Chief Coordinator | #NTK
#BanKingdomMovie | #ProtectTamilDignity
#BoycottKingdom | #KingdomInsultsTamils #RespectTamilSentiments | #NTK
#StopScreeningKingdom | #Seeman
#AntiTamilCinema | #TamilGenocide
#TamilStruggle | #EelamTamils | #LTTE
இப்படி ஒரு மானங்கெட்ட முதல்வரை எங்காவது பார்த்தது உண்டா?
பெங்களூரில் நடக்கும் தமிழ்மொழிக்கெதிரான இனவெறியாட்டத்தைக் கண்டித்துப் பேச வக்கற்ற ஸ்டாலின், பெங்களூர் கிரிக்கெட் அணி வெற்றிப் பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார்.
Dear Kannadigas, whether you like it or not, the fact is Tamil is one of the oldest surviving languages in the world. Our literature dates back to 300BCE(Sangam), even our PM Modi confirmed this fact in multiple forums. In comparison, Kannada literature began developing only around 9th century CE. So there is no comparison on which language Tamil or Kannada came into existence first.
Whether Kannada was derived from Tamil or Sanskrit is an argument that can be debated, but please don't be silly debating which language came into use first. The same rule applies to Telugu as well.
'தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்ற வரலாற்று பேருண்மையை கூறியதற்காக
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா?
தக் லைஃப் (Thug life) படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், உலகநாயகன் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் 'தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்ற வரலாற்று உண்மைய�� கூறியதற்காக அவரது படங்களை கர்நாடாகவில் திரையிட விடமாட்டோம், அவரை கர்நாடகாவில் நுழையவிடமாட்டோம் என்றெல்லாம் ஒருசில கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுப்பதும், மன்ன��ப்பு கேட்க வேண்டும் என்று அடிபணியவைக்க நினைப்பதும், தக் லைஃப் திரைப்படத்தின் பதாகைகளைக் கிழித்து அவமதிப்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மொழிகளுக்கு மட்டுமல்ல
உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ்மொழிதான்
என்பது உலக மொழியியல் அறிஞர்கள் ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட வரலாற்றுப் பேருண்மையாகும். அந்த வரையறைக்குள் கன்னட மொழியும் அடங்கும் ��னும்போது அதை ஏற்பதில் கன்னட அமைப்புகளுக்கு என்ன சிக்கல்? அதிலும் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் நாமெல்லாம் சகோதர மக்கள் எனும் பொருள்படும்படியாகவே அக்கருத்தினை அந்த இடத்தில் தெரிவித்திருந்ததை, அவரது பேச்சை முழுமையாக உள்வாங்கும் அனைவராலும் எளிதாக
உணர முடியும்.
ஆனால், தமிழ்மொழி தோன்றி வளர்ந்த பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, அதிலிருந்து கிளைத்த மொழி கன்னடம் என்ற வரலாற்று உண்மையை ஏ���்க மனமில்லாத கன்னட வெறியர்களே, இத்தனை வன்முறை பேச்சுக்களையும் மிரட்டல்களையும் விடுக்கின்ற��ர். அதனை கர்நாடகத்தை ஆளும் காங்கிரசு அரசும் கண்டித்து தடுக்காது ஊக்குவிக்கின்றது என்பதுதான் பெருங்கொடுமையாகும்.
தமிழிலிருந்து கன்னடம் உருவானது என்பது கன்னட மொழிக்கு பெருமைதானே தவிர சிறுமை அல்ல; ஒருவேளை அந்த கருத்தில் கன்னட அமைப்புகளுக்கு மாற்றுக்கருத்து ஏதேனும் இருந்தால், தமிழைவிட கன்னடம்தான் மூத்த மொழி என்பற்கான வரலாற்று ஆதாரங்களை, இலக்கியச் சான்றுகளை, மொழியறிஞர்களின் ஆய்வு முடிபுகளைத் தந்து அறவழியில் மறுக்க வேண்டும்; ஆக்கப்பூர்வமான வாதங்களை முன்வைக்க வேண்டும்!
அதையெல்லாம் விடுத்து, அண்ணன் கமல்ஹாசனை கர்நாடகாவில் நுழையவிடமாட்டோம், அவரது படங்களைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?
தமிழ் படங்கள்தான் கர்நாடாகவில் திரையிடப்படுகிறதா? கன்னட படங்கள் தமிழ்நாட்டில் திரையிடப்படவே இல்லையா? அண்ணன் கமல்ஹாசனின் தக் லைஃ���் படத்தை அங்கே திரையிட அனுமதிக்காவிட்டால், ஒரு கன்னட திரைப்படத்தைக்கூட தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று பதிலுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தை முன்னெடுத்தால் அது ஆக்கப்பூர்வமானச் செயலாக இருக்குமா? காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்று ��ொன்ன கன்னட திரைக்கலைஞர்களின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் திரையிட தமிழர்கள் நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே? இன்னமும் அந்த நடிகர்களின் திரைப்படங்கள் தமிழ் நாட்டில் திரையிடப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன? தமிழர்கள் அதனை அனுமதித்துக் கொண்டுதானே இருக்கின்றோம்? கலையை கலையாகப் பார்க்கக்கூடிய அத்தகைய அறச்சிந்தனை கன்னட அமைப்புகளுக்கு ஏன் இல்லை?
ஒருவேளை தமிழர்கள் அறச்சீற்றம் கொண்டு அப்படங்களை எல்லாம் தடுக்க முனைந்தால் தமிழ்நாட்டில் ஒரு கன்னடப் படத்தைக்கூட திரையிட முடியாதச் சூழலை ஏற்படுத்த முடியும். அவற்றைத்தான் கன்னடவெறி அமைப்புகள் விரும்புகின்றனவா? அப்படி ஒரு எதிர் போராட்டத்தை முன்னெடுக்கும் நிலைக்கு தமிழர்களை கன்னட அமைப்புகள் தள்ளமாட்டீர்கள் என்று
நான் நம்புகிறேன்.
ஏற்கனவே, காவிரி நதிநீர் போராட்டத்தின்போது மாண்புமிகு தம���ழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், இறுதி மரியாதை செய்தும் கன்னடவெறி அமைப்புகள் அவமதித்தபோது எவ்வித எதிர்வினையும் ஆற்றாது தமிழ்நாடு அரசு அமைதியாக கடந்துபோனதைப்போல, தற்போதும் கடந்துபோகக்கூடாது. உண்மையறியாது போராடும் கன்னட இனவெறி அமைப்புகளுக்கு ஆதரவாக கர்நாடக மாநில முதல்வர் ச���த்தராமையா, தமிழ்த்திரையின் பெருமைமிக்க கலை அடையாளம் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை என்று அவமதிக்கின்றார். ஆனால், அதற்கு பதிலடி தரவேண்டிய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இதுவரை வாய்திறவாமல் அமைதியாக இருப்பது ஏன்? கள்ள அமைதியை கடைபிடிப்பதன் மூலம் அண்ணன் கமல்ஹாசன் அவர்களை மட்டுமல்ல, அன்னை தமிழையே அவமதிக்கின்றீர்கள். எனவே, கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரசு அரசிடம் பேசி, போராடும் கன்னட அமைப்புகளைக் கட்டுப்படுத்தி தேவையற்ற பதற்றத்தைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
(1/2)
இவரை தான் அண்ணா அறிவாலய முஸ்லிம் அடிமைகள் பாஜகவின் பி டிம் என பிரச்சாரம் செய்கின்றனர்..
இந்த விடியோவை முழுவதும் பாருங்க பாஜகவை இந்த கிழி கிழித்து யாராவது கிழித்து தொங்கவிட்டு இருப்பார்களா ?
மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட
நாம் தமிழர் கட்சிக்கு #விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்து��்ளது.
#வெல்லப்போறான்_விவசாயி
மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-25 அன்று அறிவித்துள்ளது.
#திரும்ப_வந்துட்டேன்ன��_சொல்லு
நேர்மையின் அடையாளம் ஐயா சகாயம் அவர்களுக்கானப் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
@CMOTamilnadu | @mkstalin
முன்னாள் இந்தியக் குடிமைப்பணி அதிகாரி நேர்மையின் பெரும் அடையாளம் பெருமதிப்பிற்குரிய ஐயா சகாயம் அவர்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியிருப்பதும், அவருக்குப் பாதுகாப்பின்மை இருப்பதுமான செய்திகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. ஐயா சகாயம் அவர்கள் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியராக பணியாற்றியபோது மாநிலத் தொழில் துறையின் முதன்மைச் செயலருக்கு எழுதிய கடிதத்தின் வழியே, 2012ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி மிகப்பெரிய கிரானைட் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். அதில் மதுரை மாவட்டத்தில் இயங்கும் பல கருங்கல் (கிரானைட்) குவாாிகள் சற்றொப்ப 16,000 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தாா். அதன் விளைவாக, தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (TAMIN) அதிகாரிகள் சிலர், கிரானைட் நிறுவனங்களின் விதிமீறல்களுக்குத் துணைபோனதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப்பட்ட மணல் மற்றும் கிரானைட் சுரங்க நிறுவனங்களின் உாிமையாளா்கள் பலா் கைதும் செய்யப்பட்டனர்.
கருங்கல் (கிரானைட்) மற்றும் கனிம மணற்கொள்ளை பற்றி விசாரிக்க ஐயா சகாயம் அவர்களின் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர் நீ���ிமன்றம் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று உத்தரவிட்டது. ஐயா சகாயம் அவர்கள் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதமே தன்னைக் கொலை செய்யப் போவதாக மிரட்டல்கள் வருவது குறித்துத் தமிழ்நாடு தலைமைச் செயலாளரைச் சந்தித்து முறையிட்டார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதைக் கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு ஆயுதமேந்திய தனிப்படையைப் பாதுகாப்புக்காக அளித்திருந்தது. திமுக அரசு 2023ஆம் ஆண்டு மே மாதம் இதனைத் தன்னிச்சையாகத் திரும்ப பெற்றுக் கொண்டது ஏனென்று புரியவில்லை. திமுகவை ஆதரித்து வலையொளி நடத்தி அண்டிப் பிழைக்கும் பிழைப்புவாதிகளுக்கெல்லாம் துப்பாக்கி ஏந்திய காவலர்களது பாதுகாப்பினைக் கொடுத்திருக்கும் மாநில அரசு, ஐயா சகாயம் போன்ற உயரிய ஆளுமைகளைக் கைவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
2014ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விசாரணைக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்வது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதத்தில் நீதிமன்ற அழைப்பாணை வந்த நிலையில், அண்மைக்கால அச்சுறுத்தல்களின் காரணமாகவே நேரில் செல்ல மறுத்திருக்கிறார் ஐயா சகாயம். வளக்கொள்ளையை தடுக்கப் போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, நெல்லையைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாகிர் உசேன் போன்றவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களைக் கண்ட பிறகே, விசாரணைக்குழுவின் பதிலைத் தாக்கல் செய்வதற்கு ஐயா சகாயம் அவர்கள் தயக்கம் காட்டியிருக்கிறார். தமிழர் அறத்தின் அடையாளமாகத் திகழும் ஐயா சகாயம் அவர்கள் தமிழினத்தின் சொத்து; போற்றிப் பாதுகாக்க வேண்டிய நேர்மையின் ஒப்பற்ற அடையாளம். அவருக்கானப் பாதுகாப்பை உறு���ிசெய்ய வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும்.
வளக்கொள்ளைகளைத் தடுத்து இயற்கை வளங்களைக் காக்க வக்கற்ற திமுக அரசு, அதற்கெதிராகக் களத்தில் நிற்கும் சூழலியல் ஆர்வலர்களது பாதுகாப்பினைக்கூட உறுதிப்படுத்த முடியாத இழிநிலையில் இருப்பது வெட்கக்கேடானது. தன்னுடைய பணியையும் ஒழுங்குடன் செய்யாமல், செய்பவர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யாமல், அடிப்படை ஆட்சித்திறன்கூட இன்றி செயல்ப��ும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டிருக்கிறது என்பதற்கு இதுவே சரிநிகர் சான்றாகும். மக்களுக்கான பெரும் பணிகளைத் தொடரவும், வளக்கொள்ளைக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடவும் ஐயா சகாயம் அவர்களுக்கு தமிழர்கள் நாங்கள் உறுதுணையாகவும், பாதுகாப்பு அரணாகவும் எப்போதும் உடன் நிற்போம் என இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐயா சகாயம் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவருக்கு சிறப்புப்பாதுகாப்பை உடனடியாக வழங்குவதோடு, வளக்கொள்ளைக்கு எதிரான அவரது சட்டப்பூர்வ செயல்பாடுகளுக்���ு அரசு முழுமையாகத் துணைநிற்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி