காவல்கிணறு அருகே குவியும் டாரஸ் லாரிகள்! திருநெல்வேலியை கன்னியாகுமரி வழியாக கேராளாவிற்கு விற்கும் முதல்வர் ஸ்டாலினின் சிறப்பு சட்டவிரோத கல்குவாரி திட்டம் !
எப்படி பப்ளிக்கா இதெல்லாம் பண்றானுங்க.? எதிர்த்து கேள்வி கேக்க யாருமேயில்லைன்ற தைரியமா?. இல்ல எல்லாரும் முட்டாளுங்கன்னு நெனைக்கிறாங்களா?.
#BJPFailsIndia
எப்போவாச்சும் கண்ணீர் வரும் படம் பாக்கறப்ப.. அப்டி நேரங்கள்ல தான் அட இன்னும் உணர்ச்சிகள்லாம் இருக்கு போலயே நமக்கும்னு தோணும்..
#Dude interval stretch was one such instance 🤣😭
Vintage Rajni trope always gets me 💙
Best Interval block in 2025 (Tamil) 🔥
செல்வகணேஷ் ஆணவக் கொலைக்கு பிறகு காதல் திருமணங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று அறிவித்தோம்.
அதன்படி கடந்த ஒன்றரை மாதத்தில் #CPIM அலுவலகங்களில் 104 சாதி, மத, சடங்கு மறுப்பு காதல் திருமணங்களை நடத்துள்ளது.
சாதி மறுப்பு காதல் திருமணங்களுக்கு எப்பொழுதும் எங்கள் அலுவலகம் திறந்து இருக்கும்.
26 வயது பழங்குடி இளைஞர் மணிமாறனை அடித்துப் படுகொலை செய்த Gripwell Multi tech pvt. ltd கம்பெனியின் முதலாளி கலீல் ரஹ்மான், அவருடைய மகன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இரும்புக் கடை செல்வம். 8 மணி நேரம் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து படுகொலை செய்து உடலை முட்புதருக்குள் வீசிய கொடூரம்.
watch full video on Neelam Social
Link : https://t.co/RsZNNzw3fU
#ManimaranMurder | #JusticeForManimaran | #tngoverment | #neelamreports
இதுதான் துரைப்பாக்கம் எழில் நகர் மக்களின் இன்றைய அவல நிலை. எங்கெங்கோ வீடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக இவ்வளவு குறைகள் நிறைந்த அடுக்குமாடி கட்டடத்தில் குடி பெயர்த்து விட்டு,"ஏகப்பட்ட வீடுகள் உள்ளன, எங்களால் ஒவ்வொரு இடமாகத்தான் சரி செய்ய முடியும்" என்றும், "அது வரை பொறுத்துக் கொள்ளவேண்டும்" என்றும் சொன்னால் அது எப்படி சரியான ஆட்சிமுறை ஆகும்?
மழைக்காலம் வருகிறதென்று தெரிந்தும், சரியான திட்டமிடல் இல்லாமல், எழில் நகர் 11ஆம் ப்ளாக்கில், cool tiles போடுவதற்காக மொட்டைமாடியின் தரையை மொத்தமாக பெயர்த்து எடுத்து விட்டாகி விட்டது. அடுத்த வேலை தொடங்குவதற்குள் மழை வந்தாகி விட்டது. இந்த குடியிருப்புகளின் கட்டுமானத் தரமோ மிக மோசமாக உள்ளதால், தண்ணீர் சுவர் வழியாக கசிந்தும், ஒவ்வொரு மாடியிலும் உள்ள முற்றம் வழியாக கொட்டியும், மிகுந்த இடைஞ்சலை மக்களுக்குத் தருகிறது. சிலரின் வீடுகளுக்கு உள்ளும் எப்படி தண்ணீர் புகுந்து உள்ளது என்பதை நீங்கள் வீடியோவில் காணலாம்.
இவ்வளவு அவலங்களுக்கு இடையில், TNUHDB செயற்பொறியாளர் திரு.மகேந்திரனிடம் அந்த ப்ளாக்கில் குறை தீர்க்கும் சங்கம் நடத்தும் பிரேம் என்பவர் புகார் அளித்தபோது, இது போன்ற பதிவுகளை குறிப்பிட்ட ஒரு வாட்ஸ்அப் குழுவில் அனுப்பக்கூடாது என்றும், இது போல இனி அனுப்பினால், போலீசிடம் புகார் அளித்து விடுவேன் என்றும் மிரட்டல் வேறு விடுகிறார். இவ்வளவு மோசமான நிலையில் வாழும் மக்கள் குறை கூறினால், இவர்களுக்கு கோபம் வேறு வருகிறது. இவர்கள் யாராவது இங்கு வந்து பணி முடியும் 6 மாத காலம் வரை தங்கி, வழிந்து கொண்டே இருக்கும் தண்ணியை அப்புறப்படுத்திக் கொண்டே இருப்பார்களா!?!
அமைச்சர் தா. மோ.அன்பரசன் மற்றும் சமூக நீதி பேசும் முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இங்கு வந்து ஒரு நாள் தங்குவாரா? ஏழை மக்கள் என்றால் மட்டும் ஏன் வருகிறது இந்த மெத்தனம், அலட்சியம் மற்றும் பாரபட்சம்!!! இந்த மக்கள் போலீசிடம் நேற்று போய் முறையிட்டதும் , தற்காலிக நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக கூறுகின்றனர் மக்கள். மக்களுக்காக தான் அரசு. "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்" என்று வசனம் மட்டும் பேசிக்கொண்டு மக்களை இவ்வளவு மோசமான நிலையில் வைத்து இருக்கிறது TNUHDB.
@CMOTamilnadu@TNUHDB_Official@thamoanbarasan
நிலக்கோட்டை அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த இராமச்சந்திரன் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கொடுஞ்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்! சாதி ஆணவப்படுகொலை தடுப்பு சிறப்பு சட்டத்தை இயற்றிடாத திமுகவை வன்மையாகக் கண்டிக்கிறோம். திமுக அரசே, நடப்புக் கூட்டத் தொடரில் சிறப்புச் சட்டத்தை இயற்றிடு! பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசுப் பணியையும், நீதியையும் வழங்கிடு! - மே பதினேழு இயக்கம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை-வத்தலகுண்டு அருகே இராமசந்திரன் என்ற பிற்படுத்தப்பட்ட (நாயுடு) சமூகத்தை சேர்ந்த இளைஞரை, காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட (தேவர்) சமூகத்தை சேர்ந்த பெண்ணின் குடும்பத்தார் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிக்குரிய செய்தி வெளியாகியுள்ளது. சாதி ஆணவப்படுகொலை என்ற இந்த கொடுஞ்செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இது, சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்கத் தவறிய திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது. பட்டியல் சமூகத்தை சாராத ஒருவர் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டுள்ளது, சாதி ஆணவப்படுகொலையை தடுப்பதற்கான தனி சிறப்பு சட்டம் தேவை என்பதை உணர்த்துகிறது.
பால் வியாபாரியான 24 வயதான இராமசந்திரனும் 22 வயதான ஆர்த்தி என்பவரும் நீண்டகாலமாக காதலித்து, கடந்த ஜூன் மாதம் ஆர்த்தியின் பெற்றோர் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர். ஆர்த்தி குடும்பத்தினரின் அச்சுறுத்தல் காரணமாக திருமணத்தின் போதே காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு சென்றுள்ளனர். அப்போது காவலர்கள் ஆர்த்தியின் குடும்பத்தினரை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். அதன்பின்பு, ஆர்த்தியின் அப்பாவும், அண்ணனும் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இந்த அச்சுறுத்தல் குறித்து இராமசந்திரன்-ஆர்த்தி தம்பதியினர் காவல்துறையில் புகாரளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 12ம் தேதி இராமசந்திரன் பால் கறந்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்த போது, ஆர்த்தி குடும்பத்தினர் அவரை அரிவாளால் கடுமையாக வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த சாதி ஆணவப்படுகொலை காவல்துறையின் மெத்தனப்போக்கினால் நிகழ்ந்துள்ளது. குற்ற சம்பவத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண்ணின் குடும்பத்தாரும் நண்பர்களும் உறவினர்களும் ஈடுபட்டுள்ள நிலையில், பெண்ணின் தந்தை சந்திரன் மட்டும் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். கணவர் கொலையில் தொடர்புடையவர்கள் என பத்து பெயர்களை காவல்துறையிடம் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததல், தனக்கு நீதி வேண்டி கணவரிடன் குடும்பத்தாருடன் இணைந்து மனைவி போராடி வருகிறார். அவரது அண்ணன் கொலை மிரட்டல் விடுத்த ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது குற்றத்தில் குடும்பத்தினரின் தொடர்பை உறுதிப்படுத்துகிறது.
சாதி ஆணவப்படுகொலைகள் சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடந்தேறுவது அவமானகரமானதாகும். சாதியின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ள தமிழ்ச் சமூகம் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது காட்டுமிராண்டித்தனமாது. பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாவிட்டாலும் இருவேறு சாதியினர் காதலித்து திருமணம் செய்தால், சாதிவெறி கொண்ட கூட்டம் இந்த கொடுஞ்செயலில் செயலில் ஈடுபட்டுள்ளது. இது போன்ற சாதி ஆணவப்படுகொலைக்கு அதிகார வர்க்கம், குறிப்பாக காவல்துறையினர் துணைபோவது வெட்கக்கேடானது. காவல்துறையினர் உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இராமசந்திரன் ஆணவப்படுகொலை தடுக்கப்பட்டிருக்கும். ஆணவப்படுகொலையை தடுப்பதற்கான தனி சட்டமும், சாதிமறுப்பு திருமணம் செய்வோருக்கான சட்டப்பாதுகாப்பும் இல்லாததால் இந்த கொலை நடந்தேறியுள்ளது. இந்த ஆணவப்படுகொலை முழுக்க முழுக்க திமுக அரசின் தோல்வியினால் நிகழ்ந்த ஒன்றாகும்.
இராமச்சந்திரன் ஆணவப்படுகொலையில் ஈடுபட்ட அனைவரும் சமூகக் குற்றவாளிகளாக கருதப்பட வேண்டும். ஆணவப்படுகொலையில் ஈடுபட்ட பெண்ணின் குடும்பத்தினர் மட்டுமல்லாது, இந்த ஆணவப்படுகொலை தொடர்புடைய அனைவரையும் உடனடியாக திமுக அரசு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. புகாரளித்தும் பாதுகாப்பு அளிக்கத் தவறிய காவலர்களையும் குற்றத்திற்கு உடந்தையானவர்களாகக் கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இராமச்சந்திரன் குடும்பத்தினருக்கும் அவரது மனைவிக்கும் உரிய இழப்பீடு வழங்குவதோடு, தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள அரசுப் பணி வழங்கிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், அவர்களது எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டுமெனவும் கோருகிறோம்.
சாதி ஆணவப்படுகொலையை தடுப்பதற்கு தனி சிறப்பு சட்டம் தேவை என்பதை மே பதினேழு இயக்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. இராமசந்திரன் போன்ற பட்டியல் சமூகத்தவரல்லாதவர் சாதி ஆணவப்படுகொலை செய்யப்படும் போது, (தொடர்ச்சி அடுத்த இழையில்)
கடந்த 10 வருஷத்தில் ஜாதியின் பரிமாணங்கள் வெகுவாக மாறியுள்ளது.
அதிகமான நகரமயமாக்கல் பொருளாதார மாற்றங்கள் ஜாதியை பலவீனப்படுத்தும் என பலரும் நினைத்த போது ஜாதி ஒரு வைரஸ் போல தன்னை மாற்றிக்கொண்டது.
எந்த ஜாதியும் இன்னொரு ஜாதிக்கு சமம் இல்லை , அது obc ஜாதியாக இருந்தாலும் MBC ஜாதிகளாக இருந்தாலும் SC பட்டியலில் இருந்தாலும் ஒரு ஜாதி இன்னொரு ஜாதியை சமமாக பார்ப்பதில்லை. பட்டியலுக்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் மேலும் கீழுமாக தான் பார்க்கிறார்கள்.
MBC உள்ளே இருக்கும் வண்ணார் நாவிதர் எல்லாம் அதிலே இருக்கும் வன்னியர் தேவர் மக்களால் கீழாக தான் நடத்தப்படுகிறார்கள்.
இங்கு BC இல் இருக்கும் நாய்டு MBC தேவரால் கொல்லப்பட்டுள்ளார்.
“The impact of casteism in modern society lifestyle” - Explained by Mari Selvaraj
Completely in awe of this man’s articulation skills..🫡🙏
கிராமம் vs நகர வாழ்க்கை பற்றி ஆயிரம் பேர் பேசியிருப்பாங்க.. ஆனா மாரி இதுல இன்னும் in-depth ஆ ஒரு layer ல பேசிருக்காரு..
40 வருடங்களாக குப்பை மேடாக இருந்து நாம் மீட்டெடுத்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பிக்காஜியப்பா ஏரிக்கு தண்ணீரை கொண்டு வர நாங்கள் எடுக்கும் முதல் கட்ட போராட்டம்!
வெளி மாநிலங்களில் நீர்நிலைகள் சீரமைக்கிறீர்கள், வெளி நாடுகளில் நீர்நிலைகள் சீரமைக்கிறீர்கள், ஏன் நம்ம ஊரில் நீர்நிலைகள் சீரமைக்கவில்லை என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள், என் பதிவுகளில் கேள்வி எழுப்புகிறார்கள், என் மீது கோபப்படுகிறார்கள்.
அதற்கு எல்லாம் ஒரே பதில் தான்.
என்னால் வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில் சுலபமாக வேலைகள் பார்க்க முடிகிறது, காரணம் என்னை அங்கே வேலைகள் செய்ய அனுமதிக்கிறார்கள். இங்கே எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது, என்னை வேலைகள் செய்ய விடுவதில்லை பல்வேறு காரணம் காட்டி. கிட்டத்தட்ட 50 நீர்நிலைகளுக்கு மேல் அனுமதி கிடைக்காமல், இந்த மழை காலத்திற்கு முன் பணிகள் செய்ய முடியாமல், இந்த மழையையும், ஆற்று நீரையும் சேமிக்க முடியாமல் போனது. அனுமதி கிடைத்திருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டிற்குள் மட்டும் 20 இடங்களிலாவது பணிகள் நடந்து கொண்டிருக்கும் என்பது தான் உண்மை!
💔
விசாரணைக்கு அழைத்துச் சென்றார்களாம். வண்டியில் போகும்போது பீடி வேண்டுமென்று தினேஷ் கேட்டாராம். இறக்கிவிட்டார்களாம், உடனே தினேஷ் ஓடிப்போய் கால்வாயில் விழுந்து செத்தாராம் !
தம்பி அஜித்திற்குக் குரல் கொடுத்த சமூகம் தினேஷிற்குக் குரல் கொடுக்கவில்லை. ஜனநாயகவாதிகள் குரல் கொடுங்கள்.
கழிவு நீர்களைய அகற்ற தொழில்நுட்ப இயந்திரங்களை இப்பணிக்காக பயன்படுத்தப்படும் என்று @mkstalin இத்தனை கொலை நடந்தும் செயல்படுத்த முடியவில்லை
இந்த விஷ வாயுவால் இன்னும் எத்தனை உயிர்களை தான் பலி கொடுக்கப் போகின்றோம் என்று தெரியவில்லை ..
அரியலூர் அருகே பொதுப்பாதையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்ட #CPIM & பொதுமக்கள் 150 பேர் கைது. கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்ட டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க #CPIM மாவட்ட காவல் துறைக்கு வலியுறுத்தல். #Land#CPIMProtest#TNPolice#Ariyalur More: https://t.co/YCi9MZuCxw