இணையோடு இணைந்து இருப்பதைவிட பிணைந்து இருங்கள்... அதாவது இணையின்மீது அதிக விருப்பம் கொள்ளுங்கள்.. அது கலவியை இனிமையாக்கும். நிறைவைத்தரும்... இடைவெளி குறைத்து உறங்குங்கள்...
ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வது கட்டுப்பாடு அல்ல... அதுதான் மனித இயல்பு.. இக்கோட்பாடு சில விலங்கு பறவை இனங்களில் கூட உண்டு.. ஒருவரை ஒருவர் நன்கு உள்வாங்கிய இருவர் இணையும்போதுதான் பேரின்பம் கிட்டும்... அப்போது கிட்டுவது பேரின்பம், சிற்றின்பம் அல்ல..
பல இணை கலவி என்பது வெரும் விந்துநீர், கருமுட்டைநீர் வெளியேற்றம் மட்டுமே நடக்கும் ஒரு வெற்றுப் புணர்ச்சியே ஒழிய கலவி ஆகாது. ஒருவனுக்கு ஒருத்த��� என இணைதலே பேரின்பக் கலவி கொடுக்கும்.
கலவிக்கு எதிரி கோபம். நீங்கள் எதிர்பார்க்கும் அளவு கலவ�� கிடைக்காவிட்டால் கோபம் அடையாதீர்கள். கோபம் இணை மீது பாயும், இல்லையேல் அவநம்பிக்கையாக மாறும். பொறுமைகாத்தால் நற்கலவி கிட்டும்
எவ்வளவு நேரம் கலவி கொள்ள இருக்கிறோம், கலவி சிறக்குமா என்கிற ஐயம், கலவிக்கு உடல் ஒத்துழைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் என்பது போன்ற எந்த எண்ண ஓட்டமும் இல்லாமல், இணையை விருப்பத்துடன் நெருங்கினால் பேரின்பம கலவி கிட்டும்.
பல இணைகளுடன் உடற்சேர்க்கையில் ஈடுபடுதல் என்பது வெறும் புணர்ச்சியே. ஒற்றை இணையுடன் கருத்தொருமித்து அன்புடன் புணர்வதே கலவி என்ற பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும்.
அடிக்கடி வீட்டில் சண்டை என்றால் இணைகள் அடிக்கடி கலவி கொள்ள அவை குறையும். கலவியினால் மனது இலகுவாக்கும்போது மனம் விரிவடைகிறது. ஆதலால் மன்னிக்கவும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதோடு நிறுத்திக்கொள்ளும் மனப்பக்குவம் வளர்கிறது.