வாழ்வெனும்
தேடலில் கனவுகளோடு
தொடங்கிய பயணம்!
ஒருபோதும்
தொய்வடைய
போவதில்லை!
அவை
எதிர்பார்ப்பு
இல்லாது அன்பெனும் நம்பிக்கையின் சக்கரத்தில்
தடைகளை கடந்து
பயணிக்கின்றன...
#மௌனகுரு
இரை தேடி
சென்ற பறவை!
வெகுநேரம் ஆகியும்
கூடு திரும்பவில்லை!
பசியோடு
இங்க குஞ்சுகள்
தவிக்கின்றன...
சூழலின் நிர்ப்பந்தத்தால்!
சுற்றியுள்ள
மரங்களும், கிளைகளும் அவைகளை பாதுகாக்க மட்டுமே முடியும்!
பசியை ஆற்ற முடிவதில்லை!
#மௌனகுரு