நேற்றைய தினம் தந்தி தொலைக்காட்சி ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் சாமானியராக பங்கேற்றேன்.
வாய்பளித்த @ThanthiTV தொலைக்காட்சிக்கு நன்றி.
https://t.co/cwYhHP14gU
நடைபெற இருக்கின்ற #மதுராந்தகம் , #தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணிக்கு #தமிழ்மாநிலகாங்கிரஸ் ஆதரவு.
60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அரசாக புதிய #தவெக அரசு விளங்குகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.9.2026), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை, திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார்.
#CMJosephVijay
இங்கிலாந்து, இலண்டனில் இன்று (14.09.2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில் தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதும் தனது விருப்பத்தைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. அவர்களிடம் தனது விருப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தது.
இந்நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட இந்த முதலீட்டைச் சாத்தியமாக்கவும், தமிழ்நாட்டில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகத் தமிழ்நாடு அரசு அந்நிறுவனத்திற்கு உறுதியளித்தது.
#CMJosephVijay
நாடக கம்பெனி திமுக!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து சென்றதை விமர்சிக்கும் உத்தம சிகாமணிகளே!
2022-ல் அரசு செலவில் துபாய் சென்றபோது, கொளத்தூர் கொத்து பரோட்டா தனது குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றதை மட்டும் வசதியாக மறைக்கும் இந்த வெட்கங்கெட்டத்தனம் எதற்கு?
துபாய்க்கு அரசுமுறைப் பயணமா? குடும்பச் சுற்றுலாவா? என்று பயணத்தின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் இயல்பாகவே இந்தக் கேள்வி எழும்.
அரசுப் பணத்தில் குடும்பமே சொகுசு சுற்றுலாச் சென்று குதூகலித்து விட்டு, தனி விமானப் பயணம் வேறு!
பயணச் செலவு மற்றும் விவரங்கள் குறித்து RTI மூலம் கேட்கப்பட்டபோது, எங்கே உண்மைகள் அம்பலமாகிவிடுமோ என்ற பயத்தில் பதிலளிக்க மறுத்து ஓட்டம் பிடித்த வீர(ண)ர்களே!
Photoshoot நடத்துவதும், sunrise பார்ப்பதுமாக இருந்துவிட்டு, “ஈர்த்த முதலீடுகள் எங்கே? உருவான வேலைவாய்ப்புகள் எங்கே?” என்று கேட்டால் வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பிக்கும் அறிவு இருக்கிறதே… அடடா! அடடா!
சரி…
வெளிநாடு முதலீடா?
இல்லை… வெளிநாட்டில் முதலீடா?
கட்டுமரக் கதைகளைக் கட்டாமல், உண்மையைச் சொல்லத் திராணி இருக்கிறதா?
தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.
எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.
மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?
எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.
உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது.
பல cut-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன.
கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் வாகை சூடும் வரலாறு படைத்த தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய கூட்டணிக்கு,
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி
எனப் பெயர் சூட்டப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் இக்கூட்டணியின் தலைவராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
#Secular_Social_Justice_Victory_Alliance
#TVKVijay
#மதச்சார்பற்ற_சமூகநீதி_வெற்றிக்_கூட்டணி
#தமிழக_வெற்றிக்_கழகம்
17வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
சபையை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த, மக்கள் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கும் முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது நன்றிகள்.
இக்கூட்டத்தொடர் குறித்து தங்களது கருத்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 🙏
பேரவை நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகையாளர்கள், சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாராட்டுகளாக இருந்தாலும், ஆலோசனைகளாக இருந்தாலும், விமர்சனங்களாக இருந்தாலும் — அனைத்தையும் மதிக்கிறேன். குறிப்பாக குறைகளைச் சுட்டிக்காட்டும் விமர்சனங்கள், என்னை மேலும் சிறப்பாக செயல்படவும், தேவையான இடங்களில் என்னை திருத்திக்கொள்ளவும் உதவும்.
சட்டப்பேரவை என்பது ஜனநாயகத்தின் குரல் ஒலிக்கும் இடம். அந்தக் குரல்கள் அனைத்திற்கும் உரிய மதிப்பையும் வாய்ப்பையும் வழங்குவது எனது கடமை.
தொடர்ந்து உங்கள் கருத்துகளையும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்.
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! 🙏
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதோடு, நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்!
ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்!
#CMJosephVijay
#TeachersDay
அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay