தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட��ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலி���் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெ��ுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ
அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture
தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜெய் பீம்!
உறைந்த சாதியமும் அதை உருக விடாத சுப. வீரபாண்டியன்களும்:
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கருஞ்சட்டைத் தமிழர் இணைய இதழில் இன்று எழுதியுள்ள குறும் கட்டுரையில், த.வெ.க பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியிருக்கும் பிரதிநித்துவத்தை பாஜக வழங்கியிருக்���ும் பிரதிநித்துவத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார். “இவற்றை நாமும் பாராட்டுகிறோம்” என்று ஒரு வரியில் குறிப்பிட்டுவிட்டு, அந்த மாற்றத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆதங்கமும் அதில் வெளிப்படுகிறது.
நீதிக்கட்சி காலத்திலிருந்தே, வெள்ளாளர் மற்றும் இடைநிலைச் சாதிகளிடம் குவிந்து கிடக்கும் அதிகாரத்திற்கு எதிராக நாம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். அதன் நீட்சியாகத்தான் திம���கவையும் விமர்சிக்கிறோம். திமுக என்பது ஒரு தேர்தல் அரசியல் அதிகாரம். நம் விமர்சனத்தை அவர்கள் வெளிப்பட��யாக ஏற்றுக்கொள்ளாதது போல தோன்றினாலும், அந்த விமர்சனங்கள் அவர்களது அரசியலில் தாக்கம் ஏற்படுத்தாமல் போவதில்லை. குறிப்பாக இந்தத் தேர்தலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், பழைய திமுக அரசியலுக்கு ஒரு முக்கியமான படிப்பினையாக அமைந்துள்ளன. பழைய குறுநில மன்னர் அரசியலைத் தாண்டி, பிரதிநித்துவ அரசியலை மேலும் விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு உருவாகியுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டின் OBC அரசியலை சமூகநீதி அரசியலாக முன்வைத்து வந்த பல முற்போக்கு வட்டாரங்கள், அந்த அரசியலின் எல்லைகளை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் தற்போதைய த.வெ.க பிரதிநித்துவத்தை கூட, நேரடியாக எதிர்கொள்ளாமல் பாஜக அரசியலோடு ஒப்பிட்டு பேச வேண்டிய நிலை உருவாகிறது.
சுப.வீரபாண்டியன் அவர்களிடம் சில கேள்விகள்:
பிரபஞ்ச அளவில் ஒப்பிட்டுப் பார்த்தாலும், “எங்கள் சமூகநீத��யே சிறந்த சமூகநீதி” என்று நம்பும் திமுக, ஏன் இதுவரை இப்படியான பிரதிநித்துவத்தை சாத்தியப்படுத்தவில்லை?
தேசிய காங்கிரஸ் கட்சி, அகில இந்திய தலைவராக ஒரு தலித்தை தேர்வு செய்து அவருக்கு உரிய ��திகாரத்தையும் வழங்கியிருக்கிறது. ஆனால், திராவிட இயக்க அரசியலில் தலித்துகள் தலைமை நிலைக்கு வருவது ஏன் இன்னமும் சாத்தியப்படவேயில்லை?
தேசிய காங்கிரஸ் தன் குடும்பத்திற்கு வெளியிலிருந்து பல பிரதமர்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் குடும்பத்திற்கு வந்த அதிகாரம், ஏன் அங்கேயே தேக்கம் கண்டிருக்கிறது?
அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ��ட்சியில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்கள் உட்பட ஐந்து துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் திமுகவில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மட்டுமே துணை முதல்வராக முடிகிறது. இது எந்த வகையான ஜனநாயக மாதிரி?
கருணாநிதி மாவட்ட அளவில் தலித்துகளுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கும் திருத்தத்தை கொண்டு வந்தார். ஆனால் அந்த அமைப்பிலிருந்து, துரைமுருகன், பொன்முடி, MRK பன்னீர்செல்���ம், ஐ. பெரியசாமி, எ.வ.வேலு, கே. என்.நேரு, ஆவுடையப்பன், கீதா ஜீவன், தங்கம் தென்னரசு, கதிர் ஆனந்த், கௌதம சிகாமணி, த.மோ அன்பரசன், பெரியகருப்பன் , RD சேகர், சேகர் பாபு போன்ற மாநிலம் முழுக்க அறியப்பட்ட ஆளுமைகள் உருவானது போல, எத்தனை ஆளுமைமிக்க வட்டார தலித் தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள்?
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க பங்காக இருக்கும் பட்டியலின மக்களிலிருந்து, 72 மாவட்ட செயலாளர்களில் பத்து பேரைக் கூட திமுக தொடர்ந்து உருவாக்க முடியவில்லையென்றால், ��ந்தக் கட்சியின் சமூகநீதி அரசியல் யாருக்காக செயல்படுகிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இது போன்ற ஏராளமான கேள்விகளை வரலாற்றின் பல பக்கங்களில் இருந்து முன்வைக்க முடியும். அவற்றை ஆரோக்கியமான விமர்சனமாக எடுத்துக்கொண்டு, ஆதிக்கச் சாதிகளிடம் குவிந்து கிடக்கும் அதிகாரத்தை உடைத்து, புதிய மாற்றங்களை நோக்கி நகர வேண்டிய தேவை இருக்கிறது.
பாஜகவை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்��ி எல்லா விமர்சனங்களையும் திசைதிருப்பும் அரசியல் நீண்ட காலம் நீடிக்காது. நேர்மையான விமர்சனங்களையும், புதிய தலைமுறையின் பிரதிநித்துவக் கோரிக்கைகளையும் ��திர்கொள்ள வேண்டிய காலம் இது.
முன்முடிவுகளற்ற ஒரு புதிய பிரதிநித்துவ அரசியல் உருவாகத் தொடங்கியுள்ளது. அதுவும் இத்தனை ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களின் விளைவே. அந்த மாற்றங்களை வளர்த்தெடுக்க வேண்டும். முற்போக்கு அரசியலுக்குள்ளேயே உறைந்து கிடக்கும் சாதி மனநிலைகளை, புதிய தலைமுறை உருவாக்கும் மாற்றங்கள் கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியிருக்கின்றன.
பாரதிய ஜனதா என்கிற ஒ���ு வார்த்தையை நீக்கி விட்டால், உங்கள் கட்டுரை ஆதிக்கச் சாதியின் குமுறல் மட்டுமே, அதன் பொருட்டே இந்த ஒப்பீடு உங்களுக்கு தோன்றுகிறது என்பதை லட்சக்கணக்கான தலித் இளைஞர்கள் அறிவர். அவர்களது நம்பிக்கையை பெற முன்முடிவுகளற்று பேசும் நேர்மையை பெறுங்கள்.
"அமைப்பாய் திரண்டோம், அதிகாரம் பெற்றோம்"
வன்னி அரசு அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழக்கமிட்டு மரியாதை செலுத்திய விசிகவினர்...
#VCK#VanniArasu#Thirumavalavan#VCK#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
அந்த System ah நம்மலே சரி பண்ணுவோம்ணே💥 #ஆட்சி_அதிகாரத்தில்_பங்கு எழுச்சித் தமிழர் அவர்களின் போர் படை தளபதி அண்ணன் @VanniTamizhVCK அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணே💙❤️
Remembering Pandit Iyothee Thass - one of the earliest anti-caste intellectuals, Buddhist revivalists, and social reformers of modern India.
Born on 20 May 1845 in Madras (now Chennai), Iyothee Thass challenged caste hierarchy decades before it became part of mainstream national debate.
At a time when untouchability was treated as normal, he openly questioned caste oppression, historical erasure, and the denial of dignity to oppressed communities.
He believed education, self-respect, and reclaiming history were essential for liberation.
In 1898, he embraced Buddhism and founded the Sakya Buddhist Society, seeing Buddhism as a path toward equality and social justice.
In 1907, he launched Oru Paisa Tamizhan (“One Paisa Tamilian”), a revolutionary Tamil publication that gave oppressed communities a voice during a time of deep exclusion.
Long before Ambedkar transformed the national conversation on caste, Iyothee Thass was already laying the intellectual foundation for anti-caste thought in South India.
A thinker ahead of his time.
A voice history tried to erase.
A legacy that still speaks.
#IyotheeThass #AntiCaste #DalitHistory
What happened on May 8 and May 9?
Why did Thol. Thirumavalavan delay the decision to support TVK government?
What did the DMK-AIADMK propose?
A deep-dive into what happened within the VCK and Thirumavalavan's journey from an activist to a politician
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் சர்வதேச இனப்படுகொலை நாள் கூட்டம் இன்று அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ஜுனா அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரை...
சாதனத்தை எதிர்த்து சாதிய பாகுபாட்டை எதிர்த்து திமுகவோ அல்லது ஸ்டாலினோ எதாவது மக்களுக்கிடையே பேசியதுண்டா இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதுண்டா!!...
எதாவது ஒரு வீடியோ இருந்தா காமிங்க... ����
On this day in 1936, Dr. B. R. Ambedkar published Annihilation of Caste - one of the most influential anti-caste texts ever written.
The work was originally prepared as a speech for the annual conference of the Jat-Pat-Todak Mandal in Lahore, a Hindu social reform organisation. However, after reading the contents of the speech, the organisers objected to Ambedkar’s criticism of caste and Hindu scriptures and eventually refused to let him deliver it in its original form.
Instead of altering his words, Ambedkar decided to publish the speech himself at his own expense. The first edition reportedly consisted of 1,500 copies and was sold for 8 annas.
In the text, Ambedkar argued that social reform must come before political reform and that caste was fundamentally incompatible with liberty, equality, and human dignity. He criticised the religious foundations of caste and called for the complete destruction of the system rather than superficial reform.
Nearly 90 years later, Annihilation of Caste continues to shape conversations around social justice, equality, democracy, and human rights across India and beyond.
#ThisDayInHistory #DrBRAmbedkar #AnnihilationOfCaste #jaibhim
ஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்தில் ���ேதகு அண்ணன் பிரபாகரன் அவர்களின் பெயர் உச்சரிக்கபட்டுள்ளது.இத்தகைய செயல்களை எல்லாம் சிறுத்தைகளால் மட்டுமே செய்ய இயலும்.
அண்ணன் @VanniTamizhVCK 🔥
ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும் ❤️🔥