உன் சௌரியத்துக்கு வண்டிய ஓட்டுவியா?
வண்டிய மொத புது பஸ்டாண்டுக்கு வுடு...
பேருந்து நிலையத்திற்குள் வராமல் சென்ற பேருந்து நடத்துனரை கேள்வியால் துளைத்த நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு.
"ஏர்போர்ட்-க்கு பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசு தான்" - மத்திய அமைச்சர் பேட்டி
இந்த செய்தியை மறைக்கதான் அண்ணன் சீமான் வீட்டில் அத்துமீறி நுழைந்த காவல்துறை!
பாசிச திமுக அரசு!
#parandhur | #airport | #thanthitv
அன்னாள் காந்தி நினைவு அரசு மருத்துவமனை, திருச்சி மிகவும் மோசமான மருத்துவமனை.. கர்ப்பிணி பெண்கள்op சீட்டு வாங்க ஒரு நாள் மருத்துவர் அணுக ஒரு நாள் மருத்துவர் எழுதிக் கொடுக்கும் ரிப்போர்ட் 2 நாள்கள் ரிப்போர்ட் வருவதற்கு முன் குழந்தை கையில் .
@Arappor@CMOTamilnadu@Subramanian_ma
"அடிப்பது போல் அடிப்பதும் எதிர்ப்பது போல் எதிர்ப்பதும்...."
"நாடகம் போதும்.. "
இளவல் கூட்டம் விழித்துவிட்டது என்பதை பறைசாற்றும் விதமாக
#GetOutModiandStalin#200K More.....
https://t.co/qlhI4BIg8V
சில நாட்களுக்கு முன்பு தான் கனிமவள கொள்ளையை எதிர்த்த ஜெகபர் அலி கொல்லப்பட்டார். மதுரையில் ஞானசேகரன் தாக்கப்பட்டார். தற்பொழுது இளையான்குடியில் சமூக ஆர்வலர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
கனிமவள கொள்ளை என்பது தமிழ்நாட்டின் மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாறிவிட்டது. ஆட்சியாளர்கள் கனிமவள மாபியாவிடம் லஞ்சத்தை வாங்கி விட்டு மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்று நினைக்கும் அவலம் தான் இன்று நிலவி வருகிறது.
@mkstalin@pkanamarla
https://t.co/qlhI4BIg8V
சில நாட்களுக்கு முன்பு தான் கனிமவள கொள்ளையை எதிர்த்த ஜெகபர் அலி கொல்லப்பட்டார். மதுரையில் ஞானசேகரன் தாக்கப்பட்டார். தற்பொழுது இளையான்குடியில் சமூக ஆர்வலர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
கனிமவள கொள்ளை என்பது தமிழ்நாட்டின் மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாறிவிட்டது. ஆட்சியாளர்கள் கனிமவள மாபியாவிடம் லஞ்சத்தை வாங்கி விட்டு மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்று நினைக்கும் அவலம் தான் இன்று நிலவி வருகிறது.
@mkstalin@pkanamarla
@Collectortnv உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🎉 இப்படிக்கு தனியார் சோலார் நிறுவனங்களால் பதிக்கப்பட்ட விவசாய மகன் 😢 மானூர் தாலுகா தடியம்பட்டி சர்வை 10/3 ன் ஆக்கிரமிப்பு
இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் பரப்புரைக்குத் தடையை உருவாக்கினார்கள். தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை இருந்திருக்க வேண்டும் ஆனால் காவல்துறை கட்டுப்பாட்டில் தான் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இருந்தனர். சென்ற முறை அனுமதித்தது போல் எந்த ஒரு பரப்புரைக்கும் இந்த முறை அனுமதிக்கவில்லை. கூட்டம் போடுவதற்கான இடங்கள் எதுவென்று கடைசிவரை அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. அனுமதி கேட்ட இடங்கள் எல்லாம் மறுக்கப்பட்டது. அதுவும் கடைசி நேரத்தில் மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டோம்.
ஒவ்வொரு நாள் கூட்டமும் கடைசி நொடி வரை சண்டை போட்டுதான் மேடை அமைத்தோம். கூட்டத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டு மேடை போடக்கூடாது என்று தடுத்தனர். பல கூட்டங்கள் தற்காலிக மேடையில் தான் நடந்தது. எந்தக் கூட்டமும் ஒழுங்கான நேரத்திற்குத் தொடங்கமுடியாதபடி பார்த்துக்கொண்டார்கள். கூட்டத்திற்கான நேரமும் வேண்டுமென்றே குறைக்கப்பட்டுத் தினமும் அதை மீறியதாக வழக்குப் போட்டார்கள். 8 நாள் பரப்புரைக்கு 8 வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது.
பரப்புரையின் நடுவே ஒரு நாள் சாலையின் நடுவே வாகன நெரிசலில் தலைமை ஊடக வாகனமும் ஒரு டாடா ஏஸ் வாகனமும் நகர்வத்தில் வந்த சிக்கலில் தலைமை அலுவலகப் பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுத் திட்டமிட்டுத் தலைமை அலுவலகப் பரப்புரை வாகனம் (டெம்போ) சிறைபிடிக்கப்பட்டது . வழக்கு கொடுத்தவர் வாபஸ் வாங்கிய பின்னரும் ஒரு நாள் முழுக்க அலைக்கழிக்கப்பட்டுத் தலைமை அலுவலகப் பணியாளர்களை 15 நாள் ரிமாண்ட் செய்யப்பட்டுத் தேவையில்லாமல் பரப்புரை வாகனமும் வழக்கில் சேர்க்கப்பட்டு முழுவதுமாக முடக்கப்பட்டது. உயர் அதிகாரிகளிடமிருந்து வந்த உத்தரவின் பெயரில் காவல்துறையின் நோக்கம் பரப்புரை வாகனத்தை முடக்குவதில் தான் இருந்தது .
சென்ற முறை பட்டியில் அடைந்ததைப் போல் இந்த முறை திமுகப் புதுவிதமாக மக்களை மந்தையாக மாற்றித் தெருத்தெருவாக நடக்கவிட்டுப் பணம் தந்தது. அப்படி கூட்டம் கூட்டமாக நடக்கும் மக்களிடம் கொடியோ சின்னமோ இல்லை. காரணம் எந்தவித அனுமதியும் இல்லாது அதைத் திமுக மேற்கொண்டது. அப்படி நடந்த மக்களை வேண்டுமென்றே நாம் தமிழர் கட்சி கூட்டம் நடக்கும் இடங்களில் அனுமதித்துச் சிக்கலை உருவாக்கியது. அப்படி நடந்து சென்றவர்களில் குழந்தைகள் இருந்தனர் அதையும் படம் எடுத்துப் புகார் அளித்தோம் . அதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.
சென்ற முறை அனுமதித்ததைப் போல அண்ணனின் வாகன பரப்புரைக்கு இந்த முறை அனுமதி மறுக்கப்பட்டது. கடைசிக் கட்ட பரப்புரைக்காவது அனுமதிக்க வேண்டும் என்று சண்டையிட்ட பின் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் பகல் நேரத்தில் அனுமதித்தனர். கடைசி நாள் பரப்புரை 6 மணி வரை என்று தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னரும் 5 மணி வரை மட்டுமே அனுமதித்து அதற்குப் பின்னரும் பேசியதாக மேலும் ஒரு வழக்கை போட்டனர் .
பகலில் பரப்புரை செல்லும் பொழுது கண்கூடாகப் பார்க்கும் படியாக இருந்தது திமுகவினரின் பணப்பட்டுவாடா. கூட்டம் நடக்கும் 100 அடிக்கு அருகிலயே பணம் விநியோகித்தனர். கூட்டத்தை வளைத்து வளைத்து வீடியோ எடுத்த தேர்தல் ஆணையத்தினரும் காவல்துறையினரும் அந்தத் திசை பக்கம் திரும்பவேயில்லை. பலமுறை தேர்தல் பறக்கும்படை வாகனத்தை நிறுத்தி தெரிவித்தபின்னரும் அதிலிருந்த அதிகாரிகள் கடந்து சென்றனர். அனால் ஒருநாள் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்த பிறகும் மேடை அமைக்க மறுத்த பொழுது சாலை மறியலில் ஈடுபட்டு அதே வாகனத்தை மறித்ததற்காக நாம் தமிழர் கட்சி மீது வழக்குப் போட்டார்கள்.
பணம் கொடுப்பது ஊடகங்களில் வந்த செய்தி ஆதாரத்தோடு வாக்கு சாவடியை கைப்பற்றிக் கள்ள ஓட்டு போட திமுகத் திட்டமிடுகிறது எனவும் அதிகக் காவலுக்குத் துணை ராணுவமும் வாக்குசாவடியை கண்காணிக்க முழுக்க CCTV பொருத்தப்பட்டு அது மக்கள் பார்வைக்கு அளிக்கப்பட்டடவேண்டும் எனத் தேர்தல் நாளுக்கு முதல் நாள் தமிழ்நாடு தலைமை தேர்தல் அகிகாரியை சந்தித்துப் புகார் அளித்தது நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை. உடனடியாகத் தலைமை தேர்தல் அதிகாரி தமிழக டிஜிபிக்கு உத்தரவாகப் பிறப்பித்தார் . ஆனால் எதுவும் நடைமுறைப்படத்தப்படாமல் திமுக நினைத்ததை நிறைவேற்றியது ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் கள்ளஓட்டுப் போடப்பட்டது . ஊடகங்களில் ஆதாரத்தோடு செய்தியாக வந்தது . மாலை 5 மணி அளவில் வீரப்பன்சாவடி வாக்ககத்தில் 40 ஓட்டுக்கள் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் வெறும் பூத் ஸ்லிப் வைத்துப் பதியப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டு சென்று தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டோம். அங்கே இருந்த திமுகக் குண்டர்கள் நாம் தமிழர் கட்சினரை சூழ்ந்து கொண்டு கோஷமிட்டு தாக்க முயன்றனர். நாம் தமிழர் கட்சியினரை அந்த இடத்தை விட்டு நகர்த்த முயற்சித்த காவல்துறை அவர்களிடம் எந்தக் கடுமையும் காட்டவில்லை. கள்ள ஒட்டு போட்டது மட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சியினர் கள்ள ஒட்டு போட முயன்றனர் என்று கூசாமல் பொய் சொல்லி பேட்டி கொடுக்கும் வரை காவல்துறை அனுமதித்தது. நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த இருவரை கைது செய்து அழைத்துச் சென்றனர் ஆனால் அவர்களைப் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்ததனர்.
இத்தனை அடக்குமுறையையும் மீறி நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலை விட 123% அதிக வாக்குகளைப் பெற்று முன்னேறியிருக்கிறது. இது சீமான் அண்ணனின் அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டதற்கான அறிகுறி, நாம் தமிழர் வெற்றிக்கான அடித்தளம்.
பெஞ்சல் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி எடுத்த குடும்பத்தினரை தேடித்தேடி கைது செய்யும் காவல்துறை.
ஒரு மாதம் கழித்து பொங்கல் பண்டிகைக்கு முன் ஒரு நாள் கைது நடவடிக்கை.
#FengalCyclone#Ponmudi#Tamilnadu#Villupuramdistrict#arrested