மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்றிய மகிழ்ச்சியான தருணம்!
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி, மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, அச்சரப்பாக்கம் ஒன்றியம் கீழாமூர் ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளான ருக்மணி (42) மற்றும் செல்வகுமார் (50) ஆகியோரை சந்தித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, புதிய வாகனங்கள் வழங்குவதாக உறுதியளித்தார்.
அதன்படி, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இன்று அவர்கள் இருவருக்கும் பேட்டரி மூலம் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி மகிழ்வித்தார்.
மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பயணத்தை எளிதாக்கி, அவர்களின் வாழ்வில் தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்நிகழ்வில் மாண்புமிகு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களும் உடனிருந்தார்.
@TVKVijayHQ
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும், கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,
பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
இன்று (14.11.2026), தேனி மாவட்டம், அரண்மனைப்புதூர் விலக்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தியபோது...
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வ. சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா (கம்பம்) அவர்கள், திரு. க. சபரிஐங்கரன் (பெரியகுளம்) அவர்கள், திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டி (மதுரை மேற்கு) அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் முதல் பிரதமரும், குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டவருமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், என் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், ஜனநாயக மாண்புகளைப் பாதுகாத்தல், சமூக நீதியை நிலைநாட்டுதல், மதச்சார்பின்மையைப் பேணுதல் எனப் பல்வேறு துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருமைக்குரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆவார்.
“இன்றைய குழந்தைகளே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள்” என்ற பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் சிந்தனைக்கேற்ப, குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும், உரிய களத்தையும் அமைத்துத் தந்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, வெற்றி வானில் உலாவரச் செய்வோம்! வளமிக்க தமிழகத்தையும்,
ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்கிடுவோம்!
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
#CMJosephVijay
#ChildrensDay
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே...
இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி.
ந.க.எண் :7781/எ1/2025
நாள் : 14/02/2026
அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
#ஊழல்_முன்னேற்றக்_கழகம்
#மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
இன்று (05.11.2026), மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சி.புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.486.88 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளான சி.புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாகக் கட்டப்பட்டுள்ள எட்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம், தோப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம், பெரிய ஆலங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையக் கட்டடம், திருப்பரங்குன்றத்தில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு மற்றும் அலுவலகக் கட்டடம் மற்றும் மதுரை மாநகராட்சி, மண்டலம் 5, வார்டு எண் 94, திருநகரில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தின் கூடுதல் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்த போது...
இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டியன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இன்று (05.11.2026), மதுரை மாவட்டம், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி, பைக்காரா பகுதியில், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கணவனை இழந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது...
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையில், கடந்த 27.10.2024 அன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான “வெற்றிக் கொள்கைத் திருவிழா” மிகச் சிறப்பாக நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மாநாட்டின் நினைவாக, விக்கிரவாண்டி வி சாலையில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, அதில் மாநாடு குறித்த விவரங்கள் அடங்கிய கல்வெட்டு நிறுவப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கொடிக்கம்பத்தில் இருந்த கல்வெட்டு சேதமடைந்துள்ள தகவல் கிடைத்ததும், அதனை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான திரு. @BussyAnand , MLA அவர்கள், இன்று (05.11.2026) வியாழக்கிழமை விக்கிரவாண்டி வி சாலைக்கு நேரில் சென்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருவுருவப் படம் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டினை நிறுவினார். மேலும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் திரு.A.வடிவேல் அவர்கள், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பரணி பாலாஜி அவர்கள், விழுப்புரம் வடகிழக்கு மாவட்ட செயலாளர் திரு.S.சக்திவேல் அவர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று (04.11.2026), மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் (DISHA) கலந்து கொண்டபோது...
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகள், அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களைச் சென்றடையும் விதம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்கள், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டி அவர்கள், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. அ. கல்லாணை அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.வி. கருப்பையா அவர்கள், மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் திரு. மதார் பதூருதீன் அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.எம். கோபிசன் அவர்கள், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ம. விஜய் அவர்கள், மாநகராட்சி துணை மேயர் திரு. தி. நாகராஜன் அவர்கள், மாநகரக் காவல் ஆணையர் திரு. எஸ். ராஜேந்திரன், இ.கா.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. கௌரவ் குமார், இ.ஆ.ப., அவர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. ந. தேவநாதன் அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு. ரேவ்தி ரமன், இ.வ.ப., அவர்கள், உசிலம்பட்டி சார் ஆட்சியர் திரு. உட்கர்ஷ் குமார், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் திரு. சா. சதீஷ் பாபு அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று (04.11.2026), தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.4.97 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற 9 புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூ.11.83 கோடி மதிப்பீட்டில் 333 புதிய கட்டமைப்புப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 7,029 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.71.37 கோடி மதிப்பிலான வங்கி நிதி இணைப்புக் கடன்களுக்கான காசோலைகள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 2,409 பயனாளிகளுக்கு ரூ.1.51 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி...
தொடர்ந்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்று, காவலர் பணிக்குத் தேர்வான 12 வெற்றியாளர்களைப் பாராட்டி கௌரவித்த போது.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வ. சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., அவர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. க. சபரிஐங்கரன் (பெரியகுளம்), திரு. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா (கம்பம்), திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டி (மதுரை மேற்கு) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ப. ராஜகுமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை ஆண்டுதோறும் பாராட்டி, வாழ்த்தி, கௌரவித்து வருகிறார்.
இதன் முதல்கட்டமாக இன்று சென்னையில் நடைபெற்ற தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் பாராட்டி, பரிசு வழங்கி வாழ்த்திச் சிறப்பித்தார்.
(1/3)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (2.11.2026) புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், 68 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவிலான 44 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 11 கோடியே 72 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 70 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 13,676 பயனாளிகளுக்கு 62 கோடியே 73 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay inaugurated 44 completed projects worth Rs.68.31 crore, laid the foundation stone for 70 new projects valued at Rs.11.72 crore, and distributed welfare assistance totaling Rs.62.73 crore to 13,676 beneficiaries at a government function held in Pudukkottai today (02.11.2026).
#CMJosephVijay
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
#CMJosephVijay