கரூர் சம்பவத்தின் முழு பரிணாமம் இது தான்!!!
(சற்று நீண்ட பதிவு... ஆனால் படித்து முடித்த பின்னர் ஒரு முழுமையான புரிதல் கிடைக்கும்)
நடந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை கூறுவதற்கு முன்னால், செப்டம்பர் 27 அன்று மாலை பலர் மயக்கம், சிலர் மரணம் என்ற நிலை உருவாகியவுடன் அதற்கு முன்னர் இரண்டு வாரங்களாக தமிழகத்தின் சில பகுதிகளுக்கு சென்ற நடிகர் விஜய்க்கு ஏகோபித்த ஆதரவு கிடைப்பதையும், காசில்லாமலேயே கூட்டம் கூடுவதையும் கண்டு பயந்திருந்த திமுக அந்த மரணங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் அவர்கள் கூற விரும்பியது 10 ஆயிரம் பேர் தான் கூடுவார்கள் என கூறிவிட்டு 30 ஆயிரம் பேரை கூட்டியதால் தான் இந்த மரணங்கள். மேலும் @TVKVijayHQ தாமதமாக வந்ததால் மக்கள் பசி-தாகத்தில் மயக்கமடைந்தார் என்ற இரட்டை குற்றச்சாட்டுக்கள்.
இப்போது தவெக மீது பழியை போட வேண்டும்...எப்படி செய்வது?!
தங்களது கூலிப்படையாகவும் அதே நேரத்தில் பத்திரிக்கையாளர் என்ற போர்வையிலும் உள்ள சிலரிடம் அவசர அவசரமாக தவெக 23/09/2025 அன்று அனுமதி கோரி கொடுத்த கடிதத்தின் ஸ்கேன் செய்த நகல் அவர்களுக்கு அனுப்பப்படுகிறது.
10000 பேருக்கு தான் அனுமதி கோரினார்கள், ஆனால் வந்தது சுமார் 30000 என்பதால் தவறு தவெகவினருடையதே என்பதே அவர்கள் எடுத்து வைக்க விரும்பிய வாதம். ஆனால் அவசரத்தில் அதில் உள்ள மற்ற கோரிக்கைகளை அவர்கள் கவனிக்கவில்லை. தவெக கேட்டது பெரிய மற்றும் மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதி. அங்கே முன்னர் பழைய பேருந்து நிலையம் இருந்தது, இன்று அது மாற்றப்பட்டுள்ள நிலையில் மிகவும் வசதியான மற்றும் பலவகை கடைகள் உள்ள பகுதி அது. அதனால் மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வசதியாக இருக்கும்.
அவர்கள் கேட்ட பகுதில் தர மறுத்தது காவல்துறை. காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது?! பொதுவாக தமிழகம் முழுவதும் அது ஸ்டாலின் தலைமையில் இயங்குவதாக எடுத்துக் கொண்டாலும் கரூரை பொறுத்தவரையில் அது செந்தில் பாலாஜி தலைமையில் தான் இயங்குகிறது என்பதே பொதுவாக மக்கள் நம்புவது. அது உண்மையென்றால் தவெக கேட்ட இடத்தில் கொடுக்க மறுப்பதும் அதன் காரணமாகவே இருக்கலாம்.. நிற்க!!!
அடுத்த கேள்வி... சம்பவம் நடந்தபோது கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எங்கிருந்தார் என்பது யாருக்காவது தெரியுமா?! நிச்சயமாக அவர் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வரவே இல்லை. சுமார் 30000 மக்கள் கூடியுள்ள பகுதிக்கு கரூர் மாவட்ட காவல்துறையின் தலைமை பீடத்தில் இருப்பவர் வராமல் இருப்பது எப்படி சாத்தியம் . அதிலும் குறிப்பாக ஒரு பெரும் எண்ணிக்கை தண்ணீர் கூட இல்லாமல் கஷ்டப்பட்டபோது இவர் நீரோ மன்னரை போல அங்கே எப்படி இருந்தார்.
அன்று டேவிட்சன் தேவாசீர்வாதம் அங்கு முன்கூட்டியே வந்துவிட்டாரா?! ஒருவேளை வந்திருந்தால் ஏன் வந்தார்?! ஒருவேளை விஜய் கூட்டத்தை பற்றிய விஷயங்கள் குறித்து அலசி ஆராய வந்திருந்தால் அவர் மாவட்ட எஸ்பி உடன் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்திருக்கலாமே?!
இந்த இடத்தில் அனுபவம் இன்மையால் தவெகவினர் பல தவறுகளை செய்தனர். குறிப்பாக தாக்கம் தீர்க்க தண்ணீர், காத்திருக்கும் தொண்டர்களுக்கு உண்ணும் வகையில் ஏதேனும் ஏற்பாடு செய்திருக்க முடியும். குறைந்தபட்சம் பிஸ்கட், குடிநீர் என ஏற்பாடு செய்திருக்கலாம்.
ஒருவேளை பழைய பேருந்து நிலையம் அருகே இந்த அனுமதி தரப்பட்டு இருந்தால் மக்களே சுற்றி உள்ள நான்கு பக்கங்களுக்கும் சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இருப்பார்கள். அதற்கு வாய்ப்பை மறுத்தது காவல்துறை. அவர்கள் மறுக்க காரணம் அவர்களுக்கும் மேலே உள்ள ஏழுமலையான்.
ஏழுமலையான் உத்தரவின்படி இடம் மாற்றப்படுகிறது. அது ஒரே சாலை. ஒரு பகுதியில் மக்கள் போடப்பட்டுள்ள தடைகளை தாண்டி செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டு முழுமையாக மறைக்கப்பட்டுவிட்டது. ஒருபக்கம் தான் சற்றே செல்ல முடியும். அங்கும் கூட்டம் வந்துகொண்டே இருப்பதால் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் வந்தவர்கள் தங்கள் உள்ள இடங்களை விட்டுத்தர தயாராக இல்லை.
அனுமதி கடிதத்தில் கொடுக்கப்பட்ட நேரம் 3 முதல் 10 வரை. மக்கள் அதிகாலையிலேயே வரத்துவங்கிவிட்டனர். காவல்துறை நினைத்தால் அவர்களுக்கு வேண்டுகோளும் வைக்க முடியும், விரட்டியும் அடிக்க முடியும். இரண்டுமே செய்யப்படவில்லை. அங்கே அவர்களை ஒன்றுகூட காவல்துறை அனுமதித்தது.
விஜய் வீட்டில் இருந்து புறப்பட்டதே 8.45 என்பது காவல்துறைக்கு தெரியும். அதன்படி பார்த்தால் திருச்சிக்கு விமானம் மூலமாக வந்து, நாமக்கல்லில் கூட்டத்தை முடித்துக் கொண்டு கரூர் வர 6 மணி ஆகிவிடும் என்பது மக்களுக்கு தெரியுமோ இல்லையோ காவல்துறைக்கு தெரியும். இப்போது அங்கே மக்களை முன் கூட்டியே கூட விட்டது யார் தவறு?!
மக்களுக்கு தண்ணீரை போன்றவை வழங்கப்படவில்லை!!! அப்படி மக்கள் ஒரு பகுதியில் 34-35 டிகிரி வெளியில் அமர்ந்திருந்தால் என்ன ஆகும் என்பதும், மரணம் கூட நேரலாம் என்பதும் காவல்துறைக்கு தெரியும். இங்கே ADGP டேவிட்சன் கொடுத்த புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டித்தான் ஆக வேண்டும். அவர் கொடுத்த புள்ளி விவரங்களின்படி ஒவ்வொரு ஊரிலும் மயக்கம் நடந்துள்ளது, அவர் கொடுத்த விவரங்கள்: Multiple road accidents occurred in cities where Vijay campaigned, including Karur (114 injuries), Villupuram (42 injuries), Madurai (14 injuries), and Tiruchirappalli (12 injuries). Incidents included motorcycles colliding while following Vijay’s convoy.
ஆக தொடர் அசம்பாவிதங்களை அறிந்தும் மேலும் அசம்பாவிதங்கள் நடக்க அனுமதித்தது யார். சம்பந்தப்பட்ட தவெகவினரை கூப்பிட்டு அந்த கூட்டத்தை தடை செய்தும் கூட இருக்க முடியும். ஆனால் இந்த கூட்டம் நடக்க வேண்டும், அது குறுகலான பகுதியில் நடக்க வேண்டும், அதன் மூலமாக மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் என்ன விஜயின் பெயர் கெடும் அல்லவா?! நான் கூறும் சதி இந்த அளவில் விஜய்யின் பெயர் கெட வேண்டும் என நடத்தப்பட்ட சதி!!! ஆனால் துரதிருஷ்டவசமாக மக்கள் மாண்டனர்.
அதற்கு வெயில், தாகம், பசி ஆகியவை காரணமாக இருக்கலாம், ஆனால் இவை அனைத்துமே தவிர்த்து இருக்கக் கூடியவை. குறிப்பாக அனுபவமற்ற தவெகவினரை பேசியும், மிரட்டியும் பணிய வைத்து இருக்க முடியும். விஜய்க்கே தகவல் தெரிவித்து இந்த சூழ்நிலையை தவிர்த்து இருக்க முடியும். இது எதுமே நடக்கவில்லை. மாறாக, பொறுப்பில் இருக்க வேண்டிய எஸ்பி அந்த பகுதியில் எங்குமே தென்படவில்லை. டேவிட்சன் கரூரில் இருந்ததாக கூறப்படுவதும் இதில் கவனிக்கத்தக்கது.
இதில் செந்தில் பாலாஜியின் பங்களிப்பு என்னவாக இருக்க முடியும்?!
இங்கே சில அனுமானங்களை நாம் உருவாக்கிக் கொள்ளலாம். ஒருவேளை டேவிட்சன் கரூரில் இருந்திருந்தால் அவர் பாலாஜியுடன் தான் இருந்திருக்க வேண்டும். ஒருவேளை அவர் பாலாஜியுடன் இருந்திருந்தால் எஸ்பியும் அவருடன் தான் இருந்திருக்க வேண்டும். அவ்வளவு பெரிய கூட்டம் தண்ணீர் கூட இல்லாமல் இருப்பது குறித்து மற்ற காவல் அதிகாரிகள் எஸ்பிக்கு கூறியிருக்க மாட்டார்கள் என்பது நம்பக்கூடிய வாதமாக இருக்காது என்பதால் அதை நாமே புறம் தள்ளிவிடுவோம். அப்போது எஸ்பிக்கு அந்த நிலை தெரியும். அதையும் மீறி அவர் கவலை அடையவில்லை, கடைசி வரை வந்து பார்க்கவில்லை. காரணம்?!
நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு நினைவேந்தலுக்கு உத்தமபாளையம் சென்றேன். எனது பாதுகாப்பிற்கு சுமார் 100 போலீசார் குவிக்கப்பட்டனர். காவலுக்கு பொறுப்பாக அந்த தேனி மாவட்ட ஏஎஸ்பி (டிஎஸ்பியை விட உயர்ந்த பதவி) வந்திருந்தார். அது ஒரு தனிமனிதனுக்கு தரப்படும் பாதுகாப்பு. இங்கே 30000 பேர் இருக்கிறார்கள் எஸ்பி அங்கே இல்லை. ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளதா?!
இங்கே பாதுகாப்பிற்கு தலைமை டிஎஸ்பி மட்டுமே!!! எங்கோ பெரிய தவறு நடக்கிறது என்பதற்கு இதுவும் ஆதாரம். சம்பந்தப்பட்ட எஸ்பி, ஜோஸ் தங்கையா ADGP டேவிட்ஸனின் உறவினர் என்பது கொசுறு தகவல். செந்தில் பாலாஜிக்கு உதவவே அவர் சிறப்பாக கரூருக்கு நியமிக்கப்பட்டார் என்கிறது நான் அறிந்த வட்டாரங்கள். நிற்க!!! பாதுகாக்கப்பட வேண்டிய மக்கள் வெயிலில் வாடும்போது எஸ்பி இல்லை. மக்கள் மயக்கம் அடையும்போது எங்கோ டெல்லியில் அமர்ந்துள்ள பத்திரிக்கையாளர் எனப்படும் அரவிந்த் குணசேகர் Delhi JNU nnn
கைவசம் தவெகவினர் எஸ்பிக்கு அனுமதி கோரி கொடுத்த கடிதம் செல்கிறது. முதலில் மரணம் அறிவிக்கப்பட்டது கிட்டத்தட்ட மாலை 8 மணி. சரியாக 8,47ற்கு அரவிந்த் குணசேகர் தனது ட்வீட்டர் ( எக்ஸ்) தளத்தில் அதை பதிவிட்டு இந்த சம்பவங்களுக்கு காரணம் தவெகவினரே என்ற பொருள்படும் விதத்தில் பதிவிடுகிறார்.
எஸ்பி கைவசம் உள்ள அல்லது அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டு கீழே உள்ள அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் எப்படி டெல்லியில் உள்ள நபருக்கு செல்லும்?!
இந்த அரவிந்த் குணசேகர் NKKP ராஜா என்ற, ஊழல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு கருணாநிதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டு விரட்டப்பட்ட முன்னாள் அமைச்சரின் (இரண்டாவது மனைவியின்) நெருங்கிய உறவினர். சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி. Delhi JNU ஜெஎன்யுவில் படித்தவர். தற்போது திருமணம் நடக்க உள்ளது. மாதம் 6 லட்சம் சம்பளம் வாங்குவதாக (உண்மையா ?! எந்த நிறுவனம் ?!) கூறி சுயஜாதியிலேயே ஒரு பணக்கார பெண்ணை தேர்ந்தெடுத்த முற்போக்குவாதி (பொதுவாக JNU வில் படிப்பவர்கள் முற்போக்கு என கூறிக்கொண்டு ஏதேனும் ஒரு வட இந்திய பெண்ணை திருமணம் செய்வது வழக்கம். அரவிந்த் சொந்த ஜாதியில் திருமணம் செய்வது ஒரு பெரும் ஆச்சரியம்... திருமணம் விரைவில்). அப்படிப்பட்ட பெரும் சமூக சீர்த்திருத்தவாதியாகிய அரவிந்த் குணசேகரிடம் இந்த கடிதம் தரப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது.
ஏன் அரவிந்த்?!
அவர் பத்திரிக்கையாளர், அதுவும் டெல்லி பத்திரிக்கையாளர் என்பதால் அவர் திமுகவை சேர்ந்தவராக இருக்க முடியாது. வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல, டெல்லி பத்திரிக்கையாளர் பொய் சொல்லமாட்டார் என்ற பிம்பத்தை கட்டமைக்க இந்த முயற்சி.
இப்படி வெளியிடுவதன் மூலம் அவர்கள் கூற வரும் குற்றச்சாட்டுகள் மூன்று...
1. பெரிய கூட்டத்தை கூட்டினார்கள்.
2. காலம் கடந்து விஜய் வந்தார்
3. அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
அதற்கான பதில் ள் இதோ...
1. புதிய கட்சியை கட்டமைக்கும் தவெகவினரால் எவ்வளவு கூட்டம் வரும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது. (அவர்கள் கடிதத்திலேயே 50 ஆயிரம் பேருக்கான வசதியை லைட்ஹவுஸ் அருகிலேயே செய்ய முடியும் என்று கூறியுள்ளனர்). அதே நேரத்தில் எப்படிப்பட்ட கூட்டம். எந்த அளவில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களின் அணுகுமுறைகள் எப்படி உள்ளன. அவர்களை யாரால், எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பதை அறிந்தவர்கள் காவல்துறையினர் மட்டுமே!!! காவல்துறையின் பயிற்சிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பயிற்சியும் ஒருபகுதியே!!!
2. விஜய் காலம் கடந்து தான் வருவார் என்பது காவல்துறைக்கு நன்றாகவே தெரியும். அதற்குத்தான் உளவுத்துறை இருக்கிறது. காவல்துறை நினைத்திருந்தால் 3-4 மணியளவில் கூட அந்த கூட்டத்தை அப்புறப்படுத்தி இருக்கலாம் அல்லது விஜயுடன் / அமைப்பாளர்களுடன் பேசி கூட்டத்தை ரத்து செய்து இருக்கலாம். இதை இப்படி எல்லாம் செய்யலாம் என முடிவெடுக்க வேண்டிய எஸ்பி அங்கே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3. தண்ணீர் / சிற்றுண்டி / பிஸ்கட் ஏற்பாடுகளை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் காவல்துறையே செய்ய முடியும். பலமுறை செய்துள்ளனர், செய்வதற்கான சூழ்நிலையை நிகழ்ச்சி அமைப்பாளர்களுடன் பேசி உருவாக்க முடியும். அமைப்பாளர்களுக்கு போதிய அனுபவம் இல்லை என்பதை காவல்துறையினர் அறிவார்கள். ஒரு புதிய கட்சியின் நிலை இதுதான் என்றால் அனுபவரீதியில் ஆலோசனை வழங்குவது அவர்களின் கடமைகளில் ஒன்று.
இவை எதையும் செய்யாமல், அசம்பாவிதம் துவங்கிய அடுத்த நிமிடம் அரவிந்த் குணசேகரனிடம் கடித நகலை அனுப்பி போடச் சொன்னது யார்?!
இது விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு மோசமான சூழ்நிலையை வாளாயிருந்து உருவாக்கிவிட்டு பின்னர் தவெகவினரை குற்றம் சாட்ட டெல்லியில் உள்ள பத்திரிகையாளனை துணைக்கு அழைப்பது கயமையின் உச்சம். இது நடந்த விதம் அவர்களின் சதி திட்டத்தையே காட்டுகிறது. அரவிந்த் குணசேகரனுக்கு அந்த கடித்தை அனுப்பிய நபர் தான் சதித்திட்டத்தை தீட்டியவர் அல்லது அதில் பெரும் அங்கம் வகித்தவர். அந்த நபருக்கு இது இப்படி நடக்க வேண்டும் என்ற கற்பனை இருந்துள்ளது. இந்த சதித்திட்டம் மக்கள் கஷ்டப்பட்டு விஜய்யை திட்டினால் போதும், அதற்கு பிறகு வரும் கூட்டங்களை நாமே மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தடுத்துவிடலாம் என்ற நப்பாசையில் சதித்திட்டம் தீட்டியவர் செய்திருக்கலாம்.
அது இவ்வளவு விபரீதமாகும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். விபரீதம் ஆன பிறகு அதை தங்களுக்கு சாதகமானதாக மாற்ற முயற்சித்து இருக்கலாம். எது உண்மையென்றாலும் எதோ ஒரு அடிப்படை சதி நடந்தது உண்மை. அது அடிப்படையாக விஜய்யின் பெயரை கெடுக்கும் முயற்சி என்பதை நாம் கண்டுகொள்ளலாம்.
மரணங்களை கண்ட பின்னர் அவர்களின் திட்டங்கள் மாறின.
ஒழிந்தான் விஜய் என்ற புரிதலுடன் அவசர அவசரமாக அரவிந்த் குணசேகர் போன்றோரின் உதவியை நாடினர். ஆனால் அவர்களது முயற்சி தோற்றது. மேலும் மேலும் வெளிவந்த பல உண்மைகள் யார் சந்தேகத்திற்கு உரியவர்கள் என காட்டத் துவங்கின. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்திற்கு கொஞ்சமும் கவலை இல்லாமல் செல்வதை தவிர்த்த முதல்வரும், ஊரிலேயே அன்று இல்லாமல் துபாயில் இருந்த துணை முதல்வரும் ஓடோடி வந்தனர். மூன்று மணிக்கு 30 பிணங்களை வரிசைப்படுத்தி மலர் வளையம் வைத்து, 10 லட்சம் நிவாரணம் அறிவித்து, ஒரு நபர் விசாரணை ஆணையத்தையும் முதல்வர் அறிவித்தார். அவற்றிற்கு அவசியம் என்ன?!
ஒரு பெரும் சந்தேகம்:
கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருப்பவை போஸ்ட் மார்ட்டம் செய்ய மூன்றே மூன்று அறைகள். போஸ்ட் மார்ட்டம் செய்ய 3-4 மணி நேரம் ஆகும். அதிவேகமாக செய்தால் கூட 2 மணி நேரம் ஆகும். கரூரில் 3-4 மருத்துவர்களே உடற்கூறு ஆய்வாய் செய்யும் தகுதிப்படைத்தவர்கள். அவற்றை முழுமையாக வீடியோ எடுக்க வேண்டும் என்கிறது முந்தைய தீர்ப்புகள்.
8 மணிக்கு சடலங்கள் வரத்துவங்கின. அப்போதே உடற்கூறு ஆய்வுகள் துவங்கியதாக எடுத்து கொள்வோம். அதிவேகமாக 2 மணி நேரத்தில் செய்வதாகவே வைத்துக் கொள்வோம். 10 மணியளவில் 3 உடல்கள் முடியும். 12 மணியளவில் 6, 2 மணியளவில் 9 சடலங்களுக்கு உடற்கூறு ஆய்வுகளை நடத்தி இருக்க முடியும்.
சுமார் 3 மணியளவில் 30 உடல்கள் வெள்ளை துணி போர்த்தப்பட்டு வெளியே வைக்கப்பட்டிருக்க, முதல்வர் 30 சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இது எப்படி சாத்தியம். ஒருவேளை 5 அறைகளை உபயோகித்து, 5 உடற்கூறாய்வு பயிற்சி பெற்ற மருத்துவாட்கள் வந்திருந்தால் கூட 15 சடலங்களை தான் செய்திருக்க முடியும்.?!
இவர்கள் காட்டிய அவசரத்தில் தவெகவினரை குற்றம் சுமத்தும் வேகம் இருந்தது என்பதே உண்மை.
ஒரு நீண்ட பதிவை, உண்மையை, உண்மைகளை ஆணித்தரமாக கூற வேண்டும் என்ற எண்ணத்தில் கூறியுள்ளேன். உலகின் மூத்தகுடி இந்த சதிகார பதர்களுக்கு 2026 தேர்தலில், உரிய பாடம் புகட்ட வேண்டும்
12.7.1986-ம் ஆண்டு அகில உலக எம்ஜிஆர் மன்ற மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது...
அந்த நிகழ்ச்சியில் கழக கொள்கை பரப்பு செயலாளர் ஜெயலலிதா அவர்கள் விழா மேடையில் புரட்சித் தலைவரிடம் செங்கோல் வழங்கினார்..!!
RIP iPhone.
The Galaxy S25’s AI features just made the iPhone 16 look outdated.
Here are 09 insane things the Galaxy S25 can do that iPhone simply can't
(Don’t miss #4)
பட்டா மற்றும் சிட்டா – அதைப் பற்றிய முழுமையான விளக்கம்
நமது நாட்டில் நிலம் என்பது மிக முக்கியமான சொத்து. ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு உள்ளது, அந்த நிலம் எப்படி பயன்படுகிறது என்பதனைப் பதிவு செய்வதற்காக அரசு சில முக்கிய ஆவணங்களை வழங்குகிறது. அதில் முக்கியமான இரண்டு ஆவணங்கள் தான் பட்டா மற்றும் சிட்டா. இவை இரண்டும் எதற்கென்ன என்பது பற்றி தெளிவாகப் புரிந்து கொள்வோம்.
---
1. பட்டா (Patta) என்றால் என்ன?
பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமையை அரசு அங்கீகரிக்கும் சட்டபூர்வ ஆவணம்.
அதாவது, அந்த நிலம் யாருக்கு சொந்தம் என்று பதிவு செய்யப்பட்டு இருக்கும் முக்கியமான ஆவணம் இது.
பட்டாவில் அடங்கும் தகவல்கள்:
● நில உரிமையாளர் பெயர்
● நிலத்தின் பரப்பளவு (Acre / Sq.ft / Hectare போன்ற அளவுகள்)
● நிலம் அமைந்துள்ள இடம் – கிராமம், வட்டம், மாவட்டம்
● Survey Number மற்றும் Sub-division Number
● நிலம் விற்பனை ஆனால் புதிய உரிமையாளருக்கு பெயர் மாற்றம் செய்யலாம்
பட்டாவின் முக்கியத்துவம்:
● சொத்து உரிமையை சட்டபூர்வமாக நிரூபிக்க உதவும்
● கடன் பெற, வீடு கட்ட அனுமதி பெற, பட்டா முக்கிய ஆவணம்
● அரசு நலத் திட்டங்களில் பயனடைய பயன்படும்
● நீதிமன்றத்தில் உரிமை தொடர்பான வழக்குகளுக்கு ஆதாரமாக இருக்கும்
---
2. சிட்டா (Chitta) என்றால் என்ன?
சிட்டா என்பது நிலத்தின் வகை மற்றும் வருவாய் விவரங்களை குறிக்கும் ஆவணம்.
நிலம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது (உழவுக்கா, வீடுகளுக்கா?) என்பதை இதில் பதிவு செய்கின்றனர்.
சிட்டாவில் உள்ள விவரங்கள்:
● நிலம் உழவு நிலமா (Wetland) அல்லது உலர்நிலமா (Dryland)
● நிலத்திற்கு யார் வரி செலுத்துகிறார்கள் என்பதைப் பதிவு செய்திருக்கும்
● நிலத்தின் பயன் நிலை – பயனடைகிறதா அல்லது வெறிச்சோடிய நிலமா
● கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்படுகிறது
● அரசுக்கு நில வரி செலுத்தும் பதிவுகள் இதில் அடங்கும்
சிட்டாவின் முக்கியத்துவம்:
● நிலத்தின் பயன்பாட்டை தெரிந்து கொள்ள
● நில வரி கணக்கீட்டில் உதவும்
● அரசு திட்டங்களில் நில வகை அடிப்படையில் உதவிக்கான தகுதியைப் பெற
● நில நிலைமையை நிரூபிக்க பயன்படும்
முடிவாக:
பட்டா மற்றும் சிட்டா இரண்டும் நிலம் தொடர்பான இரண்டு முக்கிய ஆவணங்கள். ஒரு நிலத்தின் உரிமையை நிரூபிக்க பட்டா தேவைப்படும் போது, அந்த நிலம் எப்படி பயனடைகிறது என்பதைப் புரிந்து கொள்ள சிட்டா பயன்படுகிறது. இவை இரண்டும் ஒரே நிலத்திற்காகவே இருந்தாலும், அவை வெவ்வேறு நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம்
#பட்டா #சிட்டா
#நில_ஆவணங்கள்
#LandRecordsTamil
#PattaChitta
I don't understand why people don't use AI to turn hours of work into minutes.
97% of people don't know about this secret.
10 AI tools to finish months of work in 1 week: ↓
நேற்று நடந்த ஒரு கருத்தரங்கத்தில் நான் பேசினேன், இன்று மெய்ப்படுத்தப் பட்டிருக்கிறது
எல்லா அரசுகளும் பொதுக் கட்டமைப்புப் பணிகளில் செலவழிப்பதை 'முதலீடு' என்றும் 'வளர்ச்சி' என்றும் கொண்டாடுகிறார்கள்
ஓரளவு உண்மை தான். இந்த முதலீடு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சி விகிதத்தை (GDP %) உயர்த்துகிறது
ஆனால், கட்டமைப்பின் தரத்தைப் பொறுத்துத் தான் அந்த முதலீடு வளர்ச்சியா அல்லது வீண் செலவா என்று தீர்மானிக்க வேண்டும்
கட்டமைப்புத் தரமாக இருந்தால் கன்னவுஞ் (உ. பி.) ரயில் நிலையத்தில் கட்டப்படும் பயணிகள் காத்திருக்கும் அறை ஏன் நேற்று குலைந்து விழுகிறது, பலர் அந்த இடிபாட்டில் சிக்கித் தவிக்கிறார்கள்?
பாலங்கள் ஏன் இடிந்து விழுகின்றன?
புதிய நெடுஞ்சாலையில் ஏன் பள்ளங்களும் விரிசல்களும் ஏற்படுகின்றன? தேவகோட்டையில் சுமார் 15-20 ஆண்டுகளுக்கு முன் கட்டிய நூலகக் கட்டிடம் ஏன் பாழடைந்து இருக்கிறது?
1800 ஆண்டுகளுக்கு முன் கரிகாலனால் கட்டிய கல்லணை உறுதியாக நிற்கிறதே? 1631-1648 ஆண்டுகளில் கட்டப்பட்ட தாஜ் மகால் கம்பீரமாக நிற்கிறதே?
தரத்தைப் பொறுத்துத் தான் ஒரு கட்டமைப்பு வளர்ச்சியா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்