அறிவிக்கப்படாத தொடர் மின் வெட்டால் வெந்து பொசுங்கி வீதிக்கு வந்து போராடிக் கொண்டி இருக்கிறார்கள் விஜய்க்கு வாக்களித்த எளிய மக்கள்.
அவர்களைப் பார்த்து இந்த எலைட் அறிவு ஜீவிகள் எவ்வளவு ஆணவமாக பதில் அளிக்கிறார்கள் எனப்பாருங்கள்…!🤯
@Actor_Mahendran is a predator on the vulnerable…
இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்கேன். கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!!!!
*மாணவர்களின் உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும்!*
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையிலான #DravidianModel ஆட்சியின் போது, கோடை வெயிலைக் கருத்தில்கொண்டும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்றும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது .
இம்முறையை தற்போதைய அரசும் தொடர வேண்டும். வெயிலின் தாக்கம் குறையும் வரையில், வகுப்புகளைத் தொடங்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். மாணவர்களின் நலன் மிக முக்கியம்! 🏫
தவெக ஆட்சியில் நடக்கும் தினம் ஒரு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை!
2021 ஆம் ஆண்டில் TANGEDCO நுகர்வோர் சேவை மையமான "மின்னகம்" திமுக ஆட்சியில் தொடங்கி வைத்து செயல்பட்டு வருகிறது.
அதனை தவெக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டம் போல் பேட்டி கொடுக்கிறார் அமைச்சர்.
நீங்க பேட்டியில் கொடுத்த போன் நம்பர் ஆல்ரெடி 5 ஆண்டுகளாக மக்களிடம் இருக்கிறது சாரே.. 😅
#TVKLies
தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும் அபாயம் உள்ளது. காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகிவிடும்.
sofa model ஆட்சி நடத்தும் முதல்வரே தூக்கத்தை விட்டு எழுந்து மக்களின் துக்கத்தை போக்க முயற்சி செய்யுங்கள்.
#TVKFails
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களைக் கொடூரமாக தாக்கி கைது செய்துள்ளது விஜய் அரசு. இனி மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடந்தால் திமுகவும், தமிழ்நாடும் வேடிக்கை பார்க்காது. எந்த எல்லைக்கும் சென்று போராடவும் தயங்க மாட்டோம் Reels முதல்வரே..
#TVKFails
இதே போல, இனி மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி - சமஸ்கிருதத்தோடு குலக்கல்வியை திணிக்கும்
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு விருப்பமில்லை..
ஆனால், ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா அபியான்) நிதி விடுவிப்போம் என ஒன்றிய அரசு சொல்வதால் மட்டுமே அதனை ஏற்றுக்கொண்டோம் என சொல்வீர்களா?
இதற்குப் பெயர் என்ன தெரியுமா?
#TVKFails
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 💐
95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். @Anbil_Mahesh அவர்கள் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்!
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை!
#12thResults #ExamResult
தமிழக வெற்றி கழகத்தின் ராயபுரம் எம்எல்ஏ விஜய் தாமு ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுனர்
மிக எளிய பின்னணியில் இருந்து வந்த ஒருவருக்கு பெரிய வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள் என்றெல்லாம் கடந்த இரண்டு தினங்களாக தகவல் வந்தது
ஆனால் நேற்று பெரிய வாளால் கேக்கை அவர் வெட்டிய போது அவரது உடல் மொழி எல்லாம் கவனித்த பொழுது ஏதோ ஒன்று இயல்பாக இல்லாதது மாதிரி இருந்தது
வேட்பு மனு தாக்களின் போது அவர் தனது சொத்து விவரங்களை சமர்ப்பித்திருக்கிறார்.
இன்னோவா கார், மோட்டார் சைக்கிள் இருக்கிறது ஆனால் ஆட்டோ ஓட்டுனர் என பிரபலப்படுத்தப்பட்டவரிடம் ஒரு ஆட்டோ கூட சொந்தமாக இல்லை
வாடகைக்கு எடுத்து ஓட்டுபவர் என நினைக்கலாம் ஆனால் அப்படி இருக்கக்கூடியவரிடம் இனோவா கார் எப்படி இருக்க முடியும்?
Vijay the liar, fabricator.
கடைசி வரை கரூர் மக்கள் கிட்ட பொதுவெளியில சின்ன மன்னிப்பு கூட கேட்காத விஜய்க்கு தேர்தல் முடிவின் மூலமா, தமிழ்நாட்டு மக்கள் நாளைக்கு பதில் சொல்லுவாங்க.🔥
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் @mkstalin அவர்களின் மக்கள் நலன் சார்ந்த திராவிட மாடல் ஆட்சியின் ஈர்ப்பால், அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தா.பழூர் மத்திய ஒன்றியம், நடுவலூர் ஊராட்சியைச் சேர்ந்த 150 மாற்றுக்கட்சித் தோழர்கள், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கழக தோழர் எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களின் ஏற்பாட்டில் நமது முன்னிலையில் தங்களை கழகத்தில் பெருமகிழ்ச்சியோடு இணைத்துக் கொண்டனர்.
இந்தச் சிறப்பான நிகழ்வில், தா.பழூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் அண்ணாதுரை அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
புதிய கழக உடன்பிறப்புகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.
அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் லதா பாலு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த போது.